Sunday, July 23, 2006

பன்னேர்கட்டாவும் என் புகைப்படப் பொட்டியும்

Bannerghatta National Park, Karnataka

- - 0 0 O O = O O 0 0 - -

நல்லாத்தான் படமெடுத்து ஆடிக்கிட்டு இருந்தேன். இப்ப என்பேர்லயும் நாலஞ்சு போலியாம்! ஹிம்... சொந்தப் பேருலயே வெளிய தலகாட்ட முடியலை :(

- - 0 0 O O = O O 0 0 - -

சொன்னாக் கேளுங்கப்பு... வலைப்பதிவு விவாதம்னா இப்படி ஆளுக்கு ஒரு திசையா முதுகைத் திருப்பிக்கிட்டுத்தான் பேசனும்னு இல்ல!


- - 0 0 O O = O O 0 0 - -

இன்னைக்கு யாரு எங்க "பொதுமாத்து" வாங்கறாங்கன்னு இன்னும் கண்டுபுடிக்க முடியலையே! எப்படித்தான் ஆபீசுல பொழுத ஓட்டப் போறமோ?!


- - 0 0 O O = O O 0 0 - -

ஏனுங்க.. நான் சொல்லலை? அந்த 47.89% பின்னுட்டக் கயமைத்தனம் செய்யறவன்னு... அங்க நிக்கறாம் பாருங்க... கொஞ்சம் நல்லா "கண்"காணியுங்க...


- - 0 0 O O = O O 0 0 - -

சொன்னா நம்புங்கய்யா! எனக்கு இயற்கையாவே இப்படித்தான். வலைப்பதிவு வெவாதத்துல கெடைச்ச சூடெல்லாம் இல்லை...


- - 0 0 O O = O O 0 0 - -

ஹிம்.. எட்டிப்பார்த்தவன் ஏழு வருசம் உள்ள போன கதையா போயிடிச்சே! (நன்றி: வரவணையார் ) வலைல துணுக்குமூட்டை படிக்கறதோட நிறுத்தியிருந்திருக்கனுமோ?!


- - 0 0 O O = O O 0 0 - -

வலைப்பதிவு இலக்கியவாதிகள்: நம்ப பலம் தண்ணில தான்னு தெரியாம கரைக்கு வந்தா நேத்து மொளைச்ச பயக எல்லாம் பிரிச்சி மேயறானுவ... எல்லாம் நேரம்!


- - 0 0 O O = O O 0 0 - -

எந்தக் கம்மனாட்டிப் பயடா அங்க? "கால்" கழுவறதையெல்லாம் போட்டோ எடுக்கறவன்?!


- - 0 0 O O = O O 0 0 - -

நானும் க.க:3 படிச்சி தலையெல்லாம் சீவி முகமெல்லாம் கழுவி பளிச்சுன்னுதான் இருக்கேன்! ஆனா ஒரு புள்ளையும் திரும்பிப் பார்க்க மாட்டேங்குது! :( வாத்தியாரு கவுத்துட்டானா?!


- - 0 0 O O = O O 0 0 - -

எந்தப் பக்கமும் சாயாம "பேலன்ஸ்"டாதான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது... எனக்கும் "நடுநிலைவியாதி" முத்திரை குத்தியிருக்காங்கன்னு!


- - 0 0 O O = O O 0 0 - -

--(வகை:புகைப்படம்)

Friday, July 21, 2006

மரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06

Photobucket - Video and Image Hosting


'மரணம்'னு தலைப்பு கொடுக்கலாம்னு நினைச்சப்ப நம்ப மக்கா கிட்ட எனக்கு நல்ல மண்டகப்படி உண்டுன்னு நினைச்சேன். ஆனா நீங்க மானாவாரியா பதிவுகளப் போட்டு புல்லரிக்க வைச்சிட்டீங்க!

வாங்கய்யா வாங்க! வந்து புடிச்ச படைப்புகளுக்கு உங்க பொன்னான ஓட்டுக்களை அள்ளி விடுங்க!

வாக்குப்பதிவுக்கு முன்னாடி போஸ்டரு, கொடி கட்டுன ஜீப்புல மின்னல் வேக ரவுண்டப்பு போறாப்புலையும், பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங்கெங்க வைச்சிருகோம்னு போட்டு வைச்ச மாஸ்டரு லிஸ்டை ஒரு லுக்கு விட்டுக்கற மாதிரியும் இருக்கட்டும்னுதான் இத ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க 80 பதிவுக...

ஒவ்வொன்னுலையும் மிகச்சிறந்த, கதைக்கு அழுத்தம் கொடுக்கற, ஒரு திருப்பம் வைச்சிருக்கற, சொல்ல வந்த உணர்வுகளை அழுத்தமாச் சொன்ன, கண்ணுல தண்ணி வரவைச்ச, வாய்விட்டு சிரிக்க வைச்ச, கொஞ்ச நேரம் "ங்கே" ன்னு விட்டேத்தியா யோசிக்க வைச்ச, எனக்குப் பிடிச்ச வரிகளை மட்டும் இங்க கொடுத்திருக்கறேன்! எல்லாத்தையும் ஒரு எட்டு பார்த்துட்டு பிடிச்ச அத்தனை ஆக்கங்களுக்கும் குத்தித் தள்ளிருங்க!

படைப்பாளிகளுக்கு, வாக்களிக்கற இடத்துல மறக்காம உங்க பதிவுக்கு ஒரு ஓட்டு போட்டுட்டு(பின்ன? அந்த தன்னம்பிக்கை கூட இல்லைன்னா எப்படி? ) பிடிச்ச, ரசிச்ச மத்த படைப்புகளுக்கும் உங்க பொன்னான ஓட்டுக்களை போடுங்கப்பு(பின்ன? ஒரு படைப்பாளியா சக படைப்பாளியை அங்கீகரிக்கும் கர்வம் கூட இல்லைன்னா எப்படி?)

இந்த பதிவு எழுதறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சி! 16, 34 ஆகி இப்ப 80ல நிக்குது! நினைச்சா சிரிப்பாத்தான் வருது! தனக்கு ஆப்படிக்க முலாம்பழத்தோட வந்தவன்கிட்ட, அடுத்தவனுக்காக ஒருத்தன் பலாப்பழத்தோட நிற்கறதைப் பார்த்து சிரிச்ச கதையாத்தான் இருக்கு இப்போ என் நிலைமை! அடுத்த வின்னரு கோச்சுக்காதிங்கப்பு! :)

படிக்கற மக்கா இதுபோக இந்த பதிவுல விட்டுப்போன உங்களுக்கு மிகப்பிடித்த வைரவரிகளை இங்க சுட்டிகளோட போட்டிங்கன்னா, ஜொலிஜொலிக்கற ஆரமா மாத்திடலாம்! வாக்கெடுப்பு முடியற வரைக்கும் நாலு பேரு வாறப்போக நல்ல வெளம்பரமாவும் அமையும் தானே!

மேல உள்ள போட்டாவைப் பார்த்தீங்களா? எல்லாம் விட்டில் பூச்சிகளுக்கு கிடைத்த புதையல்! இதுக்காகவாவது இனி வர்றப் போட்டில போட்டுத்தாக்குங்க! :) புத்தகப்பட்டியல் கீழே...


ஆதவன் சிறுகதைகள்

எழுத்திலக்கணக் கோட்பாடு

கல்யாண்ஜி கவிதைகள்

கி.ராஜநாராயணன் கதைகள்(முழுத்தொகுப்பு)

கோபல்லபுரத்து மக்கள் (சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்)

நகுலன் கவிதைகள்

விக்ரமாதித்யன் கவிதைகள்(முழுத்தொகுதி)

காதலை காதலென்றும் சொல்லலாம்

போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்! வாக்களிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்!!

========================================


போட்டியில் வாக்களிக்க இங்கே சொல்லுங்க.


போட்டியில் பங்கேற்கும் படைப்புகள்:


========================================


மரணம் - நாமக்கல் சிபி

"என்ன கற்றுக் கொண்டாய்?இதுவரை? " - என்றது.மரணம்"நான் முடிவு செய்வதல்ல"என்றேன்.

"வாழ்க்கையைக் கற்றுக்கொண்டாய்!வந்த வேலை
முடிந்தது!புறப்படு"என்றது!


மரணம்! - சிறுகதை - கப்பி பய


"நீங்க இல்லைனா அன்னைக்கே போய் சேர்ந்திருப்பான் சார்...ரொம்ப தாஙக்ஸ் சார் அன்னைக்கு அவனை பத்திரமா டாக்டர்ட்ட சேர்த்து விட்டதுக்கு"
நண்பன் - நிர்மல்

மறந்து போனதாய்

நினைக்கையில்

நள்ளிரவின் திரைசிலை அசைவுகளில்

அவன் பேச்சுகேட்கிறது.

வலிக்கிறது -நிர்மல்

உனக்கெல்லாம் சாவு வலி தெரியல.அதான் இப்படி பேசற.எந்த பிரச்சனைக்கும் 4 பொணத்தை வச்சி தீர்ப்பு சொல்ல முடியாது.
ரத்தமும் சதையும் - chameleon - பச்சோந்தி

முழுமைக்கு இரண்டு பக்கங்கள். பிறப்பு - இறப்பு, இறந்த காலம் - நிகழ்காலம். என்னால் ஏதாவது ஒன்றில் தான் நிலைக்க முடிகிறது. நான் என்பது இந்த நான்கில் ஏதோ ஒரு இரண்டு - வேறுவேறு விகிதங்களில்.
பூவும் புஸ்தகமும் - மகேஸ்


"இன்னைக்கி புத்தகம் இல்லாதவங்க எல்லோரையும் டீச்சர் கை தூக்கச் சொன்னாங்கமா""அப்படியா? உனக்குத்தான் புத்தகம் இருக்குதே""ஆனா ராம் கை தூக்குனாம்மா. அப்புறம் டீச்சர் என்னுடைய புத்தகத்தை ராமையும் சேர்ந்து வாசிக்கச் சொன்னாங்கம்மா."
கிருஷ்ணா + அனிதா + காதல் + கல்யாணம் + லாரி + தெருநாய் + தறுதலை - LuckyLook

எப்பொதும் நன்றியுணர்ச்சிக்காக தன் வாலை மெதுவாக ஆட்டும் நாய்.... அப்போது ஏனோ கொஞ்சம் கோபமாக வாலை ஆட்டிக் கொண்டிருந்தது... சரியாக 10.00 மணிக்கு தெருநாய் என்ற
பாகுபாடெல்லாம் பார்க்காமல் தனக்கு உணவு வைக்கும் கிருஷ்ணா அன்று ஏனோ காணவில்லை..... வரட்டும்... அவனைப் பார்த்து நாலு குரை குரைக்கலாம்....
உயிர் நண்பன் -தேசிகன்

ராஜாராமன் பதில் சொல்லவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமா, குற்ற உணர்ச்சியா?. யாரிடம் கேட்பது, என்ன செய்வது. உளவியல் ரீதியாக ஒரு பெரும்
மனச்சிக்கல் ஏற்பட்டது. அருவருப்பா, பயமா, வெட்கமா?. இந்த நினைப்பு வரும்போது எல்லாம் வேர்த்து கொட்டியது. .........

ராஜாராமன் கண்சிமிட்டாமல்
ஜெயராமனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
மரணத்துடன் ஒரு நேருக்கு நேர் ... ! - GoviKannan

ஏற்றத் தாழ்வு என்னிடம் இல்லை என்று உறக்க கேட்கும் படி மணியடித்திருக்கிறேன். தூங்குவது போல் நடிப்பவர்களே, கேட்காதது போலவும் நடிக்கின்றனர். எங்கே சென்று விடுவார்கள் ?பிறப்புடன் சேர்ந்தே பிறப்பெடுக்கிறது மரணம் !
கொட்டுச்சத்தம் -கே.வி.ராஜா


மாலையில் அடக்கம் முடிந்து சுடுகாட்டில் இருந்து திரும்பி வந்துகொண்டு இருக்கும்போது தான் நிறைமாத மனைவி நினைவுக்கு வந்தாள். மணிக்கு பறையை கையில்
எடுத்துவிட்டால் வீடு, உறவு, பசி எல்லாமே மறந்துபோகும். காசும் சாராயமும் வந்துகொண்டு இருந்தால் போதும், ஓயாமல் கொட்டுச்சத்தம் கேட்கும். மனைவியின் நினைவு
வந்ததும் வழியில் இருந்த பூக்கடையில் கொஞ்சம் கதம்பம்(3) வாங்கலாம் என்று சென்றான்.

ஒரு தற்கொலையும், துரத்தும் நினைவுகளும் - சோழநாடன்

சுயநினைவு வந்ததும் என்னை விளித்து "டேய் நான் சாக போறேன். பொழைக்க வைக்க பாக்குறியா" என்று சிரித்தபடி மீண்டும் சுயநினைவிழந்தான். இப்போது அவன் உடல் அசாதாரணமாய் முறுக்கேறி என் முதுகை பிடித்து அழுத்த நான் வண்டியின் மேல்
கிட்டதட்ட படுத்து விட்டேன். அந்த நாட்களில் நான் அவனை விட கொஞ்சம் பலமானவன்தான். சாதாரணமாக அப்படி அழுத்தினால் என்னால் தாக்குபிடிக்க முடியும். ஆனால் இப்போதைய பிடி அசுர பலத்தில் இருந்தது.

மரணலோகத்திலிருந்து ஓர் மடல் - sabaratnam suthesh

இங்குவந்தபோது இல்லாதவேதனை இப்போது
உயிர் பலி - - தியாகி - Imsaiarasan

ஒரு உயிர் நன்றாக வாழ, மற்றொரு உயிரை அழிப்பதாக பேரம் பேசியிருக்கிறார்கள் முப்பாத்தம்மனிடம், அதுவும் சம்மந்தப் பட்ட என் அனுமதி யின்றி! என் உலகமே இவர் கள்தான் என்று என்னை நம்பவைத்தது இப்படிக் கழுத்தறுக்கத்தானா? மனம்; வெதும்பியது...
சீட்டு மாளிகை - பினாத்தல் சுரேஷ்

200 பயணிகளின் விதி அறிய 500 பேராவது கூடியிருந்தார்கள். அழுகைச்சத்தம் இடக்கரடக்கி விசும்பல்களாய். ஒரு பிணம்கூட இல்லாத இந்தச்சூழலில் இழவு வீட்டைவிட அதிக மரணவாடை
அடித்தது.
மரணம் உதவும் - யேழிசை நரஹரி

இவ்வளவுக்கும் நடுவில் அவன் அலுத்துக் கொண்டு நான் பார்த்ததே இல்லை.இந்த ஒரு சமயத்தில் தான் அவன் வருந்தி நான் பார்த்தேன்.அழுதும் விட்டான். அம்மா என்னை விட்டுப் போய் விடுவாளா என்று.

காலதேவனை வேண்டியபடி - இளா

தோற்ற என்னை

சில நேரங்களில்

எள்ளி நகையாண்டாலும், என்றுமே

ஜெயிக்க விட்டதில்லை

மழை நீரில் நீ விட்ட கண்ணீர்.


ஆன்மா சாந்தியடையுமா? - RamachandranUsha

"சிரிக்கிறதா அளுவுறதான்னு தெரியலே. ஆத்துமான்னு இருந்தா ரெண்டுக்கும் திருப்தி இருக்காது இல்லே?"
மரணம் - SenthilK

மரணம் நீக்கினால்இறையைத் தேடியிருப்பானா
மரண கதைகள்- 1 - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்

யோசித்துப் பாருங்கள்? நாம் எதைச்செய்தாலும், காரண காரியங்களை ஆராய்ந்து, நல்லது கெட்டது பார்த்து செய்கிறோமா?நம் பிள்ளையும், நம்மை நசிகேதன் தன் தந்தையைப் பார்த்த
அதே, கண்களோடுதான், அதே கேள்விகளோடுதான் பார்ப்பான்/ள்.அதனால் பொறுமையாய் பதில் சொல்லுங்கள், குழந்தைகள் கேள்வி கேட்டால்; நம்பும்படியாக, அவர்களுக்குப்
புரியும்படியாக!

கி.பி. 2106: மரணத்தை வெல்லும் மருந்து - வெங்கட்ரமணி

'மரணத்தை வென்ற மாபெரும் அறிஞன்' என்று தன் பெயர் "வரலாற்றில்"

ஹாஜியார் - அபுல் கலாம் ஆசாத்

இன்னமும் சேர வேண்டிய இலக்கு வெகுதொலைவில் இருக்கின்றது. பயணத்தின் முதல் அடியைத் துவங்கிவிட்டேன்.


சந்திரா அத்தை - பொன்ஸ்

அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.

மரணத்தின் மரணம் - புதுமை விரும்பி

எல்லார் சாவிற்கும் தவறாமல்சென்றுவந்தாலும் அனாதையாய்அது கிடந்தது..


கருவறையே கல்லறையாக - விழியன்

என்ன அம்மா செய்ய உங்களுக்கு பக்குவம் இருக்கும் அழாமல் இருப்பீர்கள், எனக்கு ஏது பக்குவம் கருவறையில் இருந்து இன்னும் மனிதர்கள் எவரையும் பார்க்கவில்லையே.

மரணம் - கட்டுரை - அஹமது சுபைர்

தர வேண்டிய பலனை தராததால், மாடு இறந்த அன்று துக்கம் கொண்டோமோ?பலன் தந்தால் மட்டுமே வாழ்க்கையா?


இரட்டை மரணங்கள்! - நயனி

இந்த மனிதர்களின் வாய்கள் பிடிப்பின்றிக் கிடக்கின்றன. அதற்கொரு பற்றில்லை. பிடிப்பும் பற்றும் இல்லாததால் வாய்கள் ஊஞ்சலாடுகின்றன.வேளைக்கொன்று கிளக்கின்றன.
பெரும்பாலும் உளறல்கள்.இவர்களின் வாய்களில் துர்நாற்றம்
வீசுகின்றதாம். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஏனெனில்,இவர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்களே
எபப்டி?


மரணமில்லாப் பெருவாழ்வு! - SK

மரணமென்பது மாண்டுபோவதா?இல்லை, இல்லை, இல்லவே இல்லை!மனிதத்தை மறப்பதே மரணம்!

ஜனனம் - நிலா

ஏந்தாயி, இம்புட்டுக்காணம் இருந்துக்கிட்டு எம்புட்டுத் தெகிரியம் வச்சிருக்க நீயி... அதுல இந்தா இம்புட்டூண்டு குடேன் ஆத்தாளுக்கு" நரம்பாக் கெடக்க கையைக் குமிச்சு புள்ள கண்ணு முன்னால ஆட்டுதா ஆத்தா.


மரணம்- குட்டிக் கவிதைகள்! - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்

அடக்கம், அமரருள் உய்க்கும்!- அந்தஅமரரும், அமரராய் அடக்கம்!அடக்கம் செய்யப்பட்டார்,அமைதியாய் அமரரானார்!


சாமியாண்டி - Dubukku

"ஏழப் பொழப்பு…பாவப்பட்ட பொழப்பு...மவ மாசமா கிடக்கா, மூத்தது பொட்டப் புள்ள...தாயில்லா புள்ளையா ஆகிடக்கூடாதுங்க...சாமீ பாவத்துக்கு நாங்க ஆளாகக் கூடாதுங்க..." அவன் எதிர்பார்க்காத தருணத்தில் கம்பிகளுக்கு வெளியே தலைக்கு மேல்
கைகளைத் நீட்டித் தூக்கி கும்பிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் சாமியாண்டி.

மாண்டவன் கதை - செல்வராஜ்

ஈரப்பஞ்சின் நீரைப் பிழிந்தது போல் நினைவுகள் விடுபட்டுக் கொண்டே இருக்கின்றன.


பந்தல் போட்டுப் பாடை கட்டிக் கொண்டிருக்கையில் இன்னும் சற்றுத் தொலைவை
உணர்கிறேன்.


மரணம் இனிக்கிறது - தெக்கிக்காட்டான்

யாருக்குமே சுமையா இல்லாம, சத்தமில்லாமலே வந்து, சத்தமில்லாமலே வாழ்ந்து போயிருக்குது, நெனச்சுப்பார்த்தா மரணத்தை இந்த கிழவியை விட யாருமே அனுபவிச்சு
தழுவியிருக்க முடியாதோ அப்படின்னு தோணுது.


மரணமே நான் தயார் - தியாகராஜன்

"அவளால் தரப்பட்ட புன்னகையும்

தரப்படாத சம்மதமும்

சேர்த்துபுதைப்பதெனில்"

மரணம் - தியாகராஜன

செத்தபின் சொர்க்கமே நரகமோவேண்டுமுன் பிராத்தனைகள் சரியேவாழ்வில் பிடிசோறுதான் பெரிதுதெனும்பேரிகை கொட்டி நீ ஆரம்பி!

'மரணக் கதைகள் - 2 காதல் : சாதல் 50:50 !! - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்

அக்கணமே இறந்து போனாள்! இறப்பிலும், அவள் பார்க்க அழகாகவே இருந்தாள்!


மரணம் ‍ - தமிழ்ப்பிரியன்

நினைவுகளில் நீ நிறைந்து வாழும் பொழுது,மறிப்பதெல்லாம் மரணமாகுமா??


தொடரும் கேள்விகள்...(சிறுகதை) - மதுமிதா

நாய் மட்டும் மூன்று முறை வண்டியைச் சுற்றி வந்து பெருங்குரலெடுத்து ஊளையிட்டது. வண்டியின் பின்னே சற்று தூரம் ஓடி விட்டு வீட்டுக்கு திரும்பி விட்டது. இரவிலிருந்தே சாப்பிடவில்லையாம்.


எல்லாமே சமமாச்சு... - மதுமிதா

எல்லாமே சமமாச்சு
எல்லாம் கடந்த பின்பு


மரணத்தின் வலி - நடராஜன் ஸ்ரீனிவாசன்

"இப்ப உங்க பாஷையில ஒரு கவிதை சொல்லப்போகிறேன்"."ம், சொல்லு".

"என் கண்கள் மேயும் வழியில்

Z_CHINT(-) 50 ல் குத்திட்டு நிற்கிறது

X Y எல்லாம் ஏதோ இருக்கட்டும்

அடுத்த SP, SP max தான்".


மரணம் - சில எண்ணங்கள். - இப்னு ஹம்துன் (பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்)

மனிதர்கள் மரணத்தை விரும்புவதாயில்லை. பின்னங்கால் பிடறியில் பட மரணத்திலிருந்து தப்ப முடிகிற வழிகளைத் தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் வாழ்நாள்
முழுதும். துருப்புச்சீட்டாக சக மனிதர்களைத் தரவும் அவர்கள் தயங்குவதில்லை.


அசைவு - சிறுகதை - பினாத்தல் சுரேஷ்

ஒரு வேளை இந்தச்சிறையிலிருந்து தப்பித்தாலும் என் வாழ்நாளில் எனக்கு அழுகை வரப்போவதில்லை.

இப்போது நான் செய்யும் பொம்மைகளுக்கும் அவற்றின் மூலங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

மரணம் பற்றிய என் கோர்வையில்லா சிந்தனைகள்... - SenthilK

மத்தவங்க உடலளவிலும் மனசளவிலும் கஷ்டப் படுத்தாம இருக்குறான்தான் அவனோட வாழ்க்கையை ஒழுங்கா வாழ்ந்தான்னு சொல்லலாம்.

மரணம் என்பது என்ன - ஜெயபால்

பிறக்கும் போது கூடவே பிறக்கும் பிறழாக் கணக்கு மரண வழக்கு

மரணம் தண்டனையா - ஜெயபால்

மரணம் தண்டனையா யாருக்குத் தண்டனை தவறு செய்தோர்க்கா அவனைச் சார்ந்தோர்க்கா அளிக்குஞ் சான்றோர்க்கா சாகடிக்குஞ் சேவகர்க்கா

மரணம் - செந்தழல் ரவி

ஆக்சிடென்ட் - பாடி - சீக்கிறம் எடுத்திடனும் - இல்லைன்னா வீச்சம் வந்திடும் என்று நான் பேசுவதை அதிர்ச்சியோடு கலங்கிய கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கிறான் பிரபா...


மரணம் - ஒலிவடிவில் ஒரு கானா - அபுல் கலாம் ஆசாத்

பேறுக்குன்னு பொருளு தொட்டதில்ல!பாசத்துல முல்ல! - இப்போ படுத்துக்கினான் இன்னாத்த சொல்ல!கானாவும் வல்ல!


மரணம் லிவிங் ஸ்மைல்

செருப்புக்கடியில் தன்மானத்தை
ஒரு மலமென்றே மிதித்தபடி


மரணப் போட்டி ஜெஸிலா

நிறுவனம் நிரப்பியிருந்தது
என் இடத்தை
குடும்பத்தில் ஈடுகட்டமுடியுமா
என் இடத்தை?


கண்ணுக்குள் நீ... - மதுமிதா

மரணத்தின் பாஷை உணர்ந்தஇருவரின் கண்ணீரும் இருவரின் கரங்களையும் நனைத்துக் கொண்டிருந்தன


எதிர்நீச்சல் - முத்து(தமிழினி)

நான் எதுவும் பேசவில்லை.புத்தியை மனசு வெல்லும் தருணங்கள் நுணுக்கமானவை. வாழ்வின் அர்த்தம் புரியும் அந்த தருணங்களை, அந்த கணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எந்த அளவுகோலில் அளப்பது?


ஆம்புலன்ஸ் - பட்டணத்து ராசா

முழுசா உள்ள போனவர் வரும்போது ஒரு சின்ன பொட்டலமா என் கையில் எனக்கு நிஜமாகவே அழுகை வந்தது.

'நானேநானா' - ஜி கௌதம்

அந்த ஹால்தான் எங்களுக்கு எல்லாமுமே! ஒரு மூலையில் அப்பாவும் அவரது கட்டிலும் நிரந்தரமாக வாசம். எஞ்சியிருக்கும் சொச்ச இடம் எங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது பச்சோந்தியாக மாறிப் பயன் தரும்.


மரணம் - சில சந்திப்புகள் - சித்தார்த்

இக்கணம் பொங்கியெழும் என் வன்மமெல்லாம் இயலாமையின் புள்ளியை சென்று முட்டி, இரயில் கம்பத்தில் உறைந்திருந்த குருதியை கொண்டு, இனி வரப்போகும் என் கனவுகளுக்கு நிறம்
கொடுக்கக் காத்திருக்கிறது.


இதுவும் அதுவும் - சனியன்

இதுஇல்லாதிருந்தபோதுஇல்லாதிருந்ததைவிட,இருந்த போதுஇருந்ததைவிட,இருந்து விட்டுஇல்லாமல் போனபோதுவருந்தும் மனம்.

அசட்டு மனிதர்கள் - சிறுகதை - msvmuthu

இவர்களுக்கு இதே வேளையாகப் போய்விட்டது. அசட்டு மனிதர்கள்.


மரணம் தொட்ட தருணம்! - வெளிகண்ட நாதர்

ஆகா இன்று நம் கதை முடிந்து விட்டது எனக் கூனிக்குறுகி அத்தனை ரயில் பெட்டிகளும் தன்னை கடந்து செல்லும் அந்த தருணம் தான் மரணத்தை தொட்டுக் கொண்டிருப்பது போன்ற ஒரு
பிரம்மை!


மரணம் - ஒரு ஃப்ளாஷ்பேக் - டி.பி.ஆர்.ஜோசஃப்

அந்தப் பிறவியின் பொருள்தான் என்ன என்று அர்த்தம் புரியாமல்...


மரணக் குறியேடு! - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்

உன்னுள் தேடு; உன்-உள் தேடு


மரணம் என்றொரு நிகழ்வு - அருள் குமார்

எவ்வளவு பெரிய துயரத்தையும், 'இது எனக்கு ஒரு விஷயமே இல்லை' என்பதாய்ப் புறந்தள்ளி நடக்கிற காலத்தை வியந்தபடி...


மரணத்தில் ??? - விபாகை

எண்ணங்களின் மரணத்தில்

தெளிவு


மரணக் குறி - U.P.Tharsan

மந்தைகளாய் ஓடி ஆடி இளைத்த

மனிதர்களுக்கு இறைவன் சொன்ன மந்திரம்

அம்மா வருவா - Murali Daran

நான் மட்டும் போகும்பொழுது என்னை உலுக்கிவிட்டுச் சென்ற அம்மாவை நினைத்துமனதிற்குள் சிரித்துக்கொண்டேன்


நேற்று இது நடந்திருந்தால்…. - அயன்

ஒருவன் மட்டும் அழுகிற நேரங்களில் கூட இவள் மேல் விடுத்த வக்கிரப் பார்வையை இவள் கவனிக்கத் தவற வில்லை.

மரணம் - thott4u

போர் களக்
குருதிக் குளங்களில்
எப்போதும்
சின்னஞ்சிறு
மொட்டுக்கள்...


ஓடிப்போனவளது வீட்டின் மரணம் - குந்தவை வந்தியத்தேவன்

அவர்களுக்கு மரணம் வேண்டும், தங்களை அவர்களாக பாவித்து ஒரு தலைமுறை வாழ்ந்து மடிவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம், அவர்களின் சோகங்களுக்கு அழுது, சந்தோஷத்தில் சிரித்து, மரணத்தில் தங்கள் நினைவுகளை அழித்து மீண்டும் நினைவில்லாமல் பிறப்பதில் சுகம் காண்பவர்கள்.


மரணத்தை நாளை ஏற்பேன் - அபுல் கலாம் ஆசாத்

சா!என்று விண்ணவனும் கூறும் வேளை..
சற்றேயென் தலைதூக்கி மடியில் வைத்து,
தாயென்று மனையாளே தாங்கிக் கொண்டால்...


மரணம் - அனந்த கிருஷ்ணன்

பூக்கசக்கும் பூவுலகோர்


மரணம் - Vaik

"இப்ப நெசமாவே பறக்க போறியா""ஆமாம் அப்படியே அமெரிக்கா போகப் போறேன், பறவைக்கென்ன விசாவா வேனும்"


மரணம் - SenthilK

உன் விதி எழுதுவதைத் தவிர வேறு வேலை இல்லையா இறைக்கு?


மகிழ்வாய் ஒரு மரணம் - நெல்லை சிவா

'ம்..பண்ணுங்க..பண்ணுங்க...எங்க டெக்னாலஜி வளர்ச்சி உங்களுக்கும் உதவுதா, அப்படியே இந்த போலிகள் நடமாட்டத்துகுக்கும் ஏதாவது பண்ணுங்களேன்' என்றேன்.

ஒரு மரணித்தவனின் டைரி … - Vignesh

எனக்கொன்றும் அவளைப்பார்த்தவுடன் காதலெல்லாம் வரவில்லை. ஆனால் கூட இருந்த நண்பர்கள் அவள் எனக்கு சரியான ஜோடியாயிருப்பாளென்று திருப்பி திருப்பி சொல்ல நானும் அவளை நோக்கி திரும்பாலானேன்.


காத்தான் - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்

அதனாலதான் நான் அவர் வாக்கைக் காப்பாத்த வேலையச் செஞ்சு முடிச்சேன். அங்க பாருங்க, இப்பதான் அவருக்கு வெச்ச நெருப்பு நல்லா பத்திகிட்டு எறியுது!


தெரியாத பெண்ணின் மரணம் - மதுரா

அவர்கள் பார்க்கவே இல்லை நான் அந்த தோழியிடம் பார்த்த மனித்ததன்மையின் ஒரு புதிரான வெளிப்பாட்டை.


கருப்பய்யா - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன

எனக்கு நஷ்டக் கணக்க ஈடுகட்டவாச்சும் நீ கொஞ்ச நாள் உயிரோட இருந்து வேல செய்யணும். நான் இங்கதான் எங்காச்சும் தொங்கிகிட்டு இருப்பேன்; முடிஞ்சா என் பணத்தக் குடு


தாய்ப்பாசம் - டி.பி.ஆர்.ஜோசஃப்

ஆனால் யாருக்குமே அவனுடைய மனைவிக்கு தகவலளிக்க வேண்டுமென்று தோன்றவில்லையே என்று நினைத்துப் பார்க்கிறேன்..

இறந்தால் வா - யோசிப்பவர்

போறதுக்கு முன்னாடி இங்க இருக்கற ஹையர் அதாரிடீஸ் எல்லாரையும் ஒரு தடவை நேர்ல போய் பாத்துரு.


இதுவும் மரணம் தான்.... - நாகை சிவா

டிஸ்கி: இத தேன்கூடு போட்டிக்கு அனுப்ப போறேன்


உயிரே போச்சு - ஜி கௌதம்

"டேய்...செத்து ஒரு கழுதையும் ஆகப் போறதில்ல. உன்னை நேர்ல பார்த்து நாலு சாத்து சாத்தணும் அதுக்காகவாச்சும் உயிரோட இருக்கப் போறேன்டா படுபாவி ராஸ்கல்...''

காற்றுக் குமிழி - முத்துகுமரன்

நிச்சயம் எல்லாம் நடக்கவிருக்கிறது. எல்லோருக்கும் நடந்தது என் அப்பாக்கும் அம்மாவுக்கும் நடந்தது எனக்கும் நடக்கப்போகிறது.

கண்ணாலதான் சொல்லனும். ஆனால் கண்ணீர்த்திரை தாண்டி அது போகுமா?

பிணங்களின் மரணங்கள் - ஜி கௌதம்

அடச்சீ செத்த பொணத்த எத்தன வாட்டிடா கொல்லுவீங்க. எம் புள்ளை மேல கையவச்சிங்க... அவ வாழ்க்கயயும் கெடுக்க நினச்சீங்க... வக்காலி, அம்புட்டு பேரயும் வெட்டிச் சாச்சுருவேன்... தைரியம் இருந்தா வாங்கடா..

Tuesday, July 11, 2006

இதெல்லாம் ஆவறதில்லைங்க...

Image Source: http://wwwiaim.ira.uka.de

Image Source: http://wwwiaim.ira.uka.de தேன்கூடு போட்டில பரிசு வாங்குனதால தமிழோவியம் இணையவார இதழுக்கு இந்த வாரம் சிறப்பாசிரியராக இருக்கனும்னு கணேஷ் சந்திரா கேட்டுக்கிட்டாங்க! அங்க எல்லாம் வலைப்பதிவுக மாதிரி நம்ப இஸ்டத்துக்கு எழுதப்படாது.. நாலு பெரிய மனுசருக்கு வந்து எழுதற படிக்கற எடம்.. அப்படின்னு தெரிஞ்சதால நானும் ஏதாவது உருப்படியா கதை, கவிதைனு எழுதலாம்னு முடிவு செஞ்சேன்! அப்பறம் தான் தெரிஞ்சது நம்ப திறமை!

ஆமாங்க... யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். அங்க இங்க ஏதாவது வெசயம் கெடைக்குமான்னு நெட்டுல மாஞ்சு மாஞ்சு மேய்ஞ்சும் பார்த்தேன். ஒரு நோட்டுப் புத்தகத்த கையில வைச்சுக்கிட்டு மூடி கழற்றிய பேனாவை கண்ணத்துல வைச்சுக்கிட்டு கழுத்தை 30 டிகிரி வளைச்சு தலைய 45 டிகிரிக்கு திருப்பி அரைமணி நேரம் சிந்திச்சும் பார்த்தேன். போன் ரிசீவரை காதுல வச்சிக்கிட்டு முழு இட்டிலி அப்படியே உள்ளேபோய் வெளியே வரும் அளவில் வாயைத்தொறந்து சிரிச்சுக்கிட்டு மேலாக்க விட்டத்தை பார்த்தபடியும் ஒரு மணி நேரம் ஒக்கார்ந்து பார்த்துட்டேன். சாயங்கால வேளைல மொட்டை மாடிக்குப்போய் பெட்சீட்டை விரிச்சு மல்லாக்கப் படுத்துக்கிட்டு பறங்கற காக்கா குருவிங்களை ரசிச்சும் பார்த்துட்டேன். சமுதாய நிகழ்வுகளை கவனிக்கலாம்னு மடிவாலா மார்க்கெட்ல ரெண்டு மணி நேரம் சுத்துனேன். உணர்ச்சி வசப்பட்டா ஏதாவது பொறி கிடைக்கும்னு தினத்தந்தி செய்திகளை ஒருமுறைக்கு நாலுமுறை வாய்விட்டும் படிச்சுட்டேன். ஒரு வேளை பசியின் கொடுமையறிந்தால்தான் இலக்கியம் வருமோன்னு ஒரு நா மத்தியானம் வரைக்கும் பட்டினி கெடந்தேன். அதுக்கப்பறமா ருசியின் அனுபவத்தில் ஏதேனும் கிடைக்கலாம்னு கோரமங்களா இம்பீரியல்ல காயின் பரோட்டா, கிக்கன் கடாய், பிரியாணி, கசாட்டான்னு ரவுண்டு கட்டியும் பார்த்தேன். ஒரு கோட்டரையாவது உட்டுப்பார்க்கலாம்னா என் கடந்தகால Watersports கருத்தாய்வு அனுபவங்களும், வருங்கால வயிற்றுப்பாடும் பற்றிய பயமுமே நெனப்புக்கு வருது.

ம்ஹீம்! வேலைக்கே ஆவலை! :( கதை எழுதலாம்னா ரெண்டாவது பத்திக்கு மேல கதை மாந்தர்கள் வேட்டைக்குப்போன இம்சை அரசனுக்கு கரடி கொடுத்த மரியாதை மாதிரி செய்யறாங்க. கவிதை எழுதலாம்னா ரெண்டாவது லைனுக்கு அப்பறம் கண்ணுக்கு சாத்தான்குளம் அண்ணாச்சிதான் தெரியறாரு.

கடைசியா ஒன்னுமட்டும் தெரிஞ்சது! எழுதியே ஆகனும்னு கட்டாயத்துல ஒக்கார்ந்தா எனக்கு இந்தக்காலத்துல மட்டுமில்லை.. எந்தக் காலத்துலயும் எழுத முடியாதுங்கறது!

ஆகவே... வழக்கம்போலவே கடைசிநேரத்துல நமக்கு கைவந்த கலையான கொசுவத்தி சுத்தறதையே அங்கயும் செஞ்சுட்டேன். ஹிஹி... என் இம்சையை பொறுத்துக்கொண்ட கணேஷ் சந்திராவுக்கு என் நன்றிகள்!

1. என் பெயர் இளவஞ்சிங்க!

2. முதல் புகைப்படப் போட்டி!

3. இரண்டு திரைப்படங்கள்

4. சிறப்பு ஆசிரியர்கள் - 1

5. சிறப்பு ஆசிரியர்கள் - 2

இதுபோக , போன வார பெங்களூரு சந்திப்பு பற்றி விழியனும், பிரகாசும் பதிவு போட்டிருக்காங்க! அதனையும் ஒரு எட்டு பாருங்க...

1. பிரகாஷ்

2. விழியன்

Friday, July 07, 2006

பெங்களூர் வலைப்பதிவாளர்கள்/எழுத்தாளர்கள் சந்திப்பு!!!

வலைப்பதிவர் சமுதாயமே! வலைத்தமிழின் வாழ்விடங்களே!!

அலைகடலென திரண்டு வாரீர்!!
Photobucket - Video and Image Hosting



நேரங்காலம் :
தேதி 9 ஜூலை ஞாயிறு காலை நேரம் 10 மணிக்கு

சந்திக்கும் இடம்:
லால்பார்க்கில் மெயின்கேட்டைத் தாண்டி உள்ள மொட்டைப்பாறைக்கு முன்னால் (சொன்னமாதிரியே சூட்கேசுடன் வந்துடுங்க!
கோட்வேர்டு: தீப்பெட்டி-கருப்பட்டி-வெறும்பொட்டி )

நிகழ்ச்சி நிரல்

வரவேற்பு உரை :ஷக்திப்ரபா

தமிழ் வணக்கம் பாடல் :ஷைலஜா

வந்தவர்களைப் பற்றிய அறிமுகம் :அவரவர்களே!

விருந்தினர் அறிமுகம் :ஐய்யப்பன் (Jeeves)

விருந்தினர் உரை :திலகபாமா

வலைப்பதிவாளர்கள் உரை :அனைவரும் தங்கள் வலை அனுபவங்களைப் பற்றி பேசுதல்

உருப்படியான ஒரு செயல் திட்டம் :தேடல் எனும் தலைப்பிலும் பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றினைப் பற்றியும் 3 நிமிடக் கவிதைகள் எழுதிக் கொண்டுவந்து விருப்பமுள்ளோர் வாசிக்கலாம்

மதிய உணவு : ( ஷைலஜாவின் கைவண்ணத்தில் ) 1 மணிக்கு (கண்டிப்பாக 1 மணிக்கு மட்டுமே! அதுவும் கோட்வேர்டு சரியாச் சொன்னவங்களுக்கு மட்டுமே! :) )

அப்பறம்?! :அரட்டை அல்லது விளையாட்டு (தூங்கப்படாது ஆமா!!)

நன்றிஉரை: நண்பர்களில் யாராவது

நடுநடுவுல கொறிக்கறதுக்கு அவங்கவங்க ஏதாவது வாங்கிக்கிட்டு வந்துருங்கப்பு. செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயலாம். கோக்கு பாண்டா அலவ்டு! சோமசுரா பானங்களுக்கு தடா! (மனம் தளராதீங்க! இளஞ்சிங்கங்களே! நன்றி உரைக்கு அப்பறம் விருப்பப்பட்டவுக தனியா கழண்டுக்கலாம்! :) )

பங்கேற்பாளர்கள்:

இதுவரை வர்ரேன்னு சொன்னவங்க சுட்டிகள். லைட்டா எல்லாத்தையும் ஒரு எட்டு பார்த்துக்கிட்டு வந்துட்டீங்கன்னா நிறைய ஹிஹி க்களை தவிர்க்கலாம்! விடுபட்டவர்கள் இங்கே ஒரு பின்னூட்டம் போடுங்க! அல்லது மின்னஞ்சல் போடுங்க - iyappan_k@yahoo.com.

Kongu Rasa --- http://raasaa.blogspot.com
Iyappan --- http://iyappan.blogspot.com, http://kaduveli.blogspot.com, http://payananggal.blogspot.com ( Shared with ilavasakoththanar )
Viziyan(Umanath Selvan ) --- http://vizhiyan.wordpress.com, http://vizhiyan.wordpress.com
Vibagai --- http://www.manidham.com, http://www.rajfm.com, http://vibagai.blogspot.com
Ravindaran Antony --- http://tvpravi.blogspot.com ( Senthazal Ravi)
Udhay --- http://soundparty.blogspot.com
Sudharshan Gopal --- http://konjamkonjam.blogspot.com
Ilavanji --- http://ilavanji.blogspot.com
Thilagabama --- http://mathibama.blogspot.com
Maravandu ganesh --- http://ilakkiyam.wordpress.com
Balasundaram --- http://ta.wikipedia.org ( some part of aRiviyal part )
Harikrishnan --- http://www.harimozhi.com
Ramachandiran --- http://raamcm.blogspot.com
Lalitha Ram --- http://classical-music-review.blogspot.com
Desigan --- http://www.desikan.com/blogcms
புகைப்படம்: போன மாதம் லால்பார்க் போனபோது எடுத்தது...

Blog Widget by LinkWithin