முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பன்னேர்கட்டாவும் என் புகைப்படப் பொட்டியும்

Bannerghatta National Park, Karnataka

- - 0 0 O O = O O 0 0 - -

நல்லாத்தான் படமெடுத்து ஆடிக்கிட்டு இருந்தேன். இப்ப என்பேர்லயும் நாலஞ்சு போலியாம்! ஹிம்... சொந்தப் பேருலயே வெளிய தலகாட்ட முடியலை :(

- - 0 0 O O = O O 0 0 - -

சொன்னாக் கேளுங்கப்பு... வலைப்பதிவு விவாதம்னா இப்படி ஆளுக்கு ஒரு திசையா முதுகைத் திருப்பிக்கிட்டுத்தான் பேசனும்னு இல்ல!


- - 0 0 O O = O O 0 0 - -

இன்னைக்கு யாரு எங்க "பொதுமாத்து" வாங்கறாங்கன்னு இன்னும் கண்டுபுடிக்க முடியலையே! எப்படித்தான் ஆபீசுல பொழுத ஓட்டப் போறமோ?!


- - 0 0 O O = O O 0 0 - -

ஏனுங்க.. நான் சொல்லலை? அந்த 47.89% பின்னுட்டக் கயமைத்தனம் செய்யறவன்னு... அங்க நிக்கறாம் பாருங்க... கொஞ்சம் நல்லா "கண்"காணியுங்க...


- - 0 0 O O = O O 0 0 - -

சொன்னா நம்புங்கய்யா! எனக்கு இயற்கையாவே இப்படித்தான். வலைப்பதிவு வெவாதத்துல கெடைச்ச சூடெல்லாம் இல்லை...


- - 0 0 O O = O O 0 0 - -

ஹிம்.. எட்டிப்பார்த்தவன் ஏழு வருசம் உள்ள போன கதையா போயிடிச்சே! (நன்றி: வரவணையார் ) வலைல துணுக்குமூட்டை படிக்கறதோட நிறுத்தியிருந்திருக்கனுமோ?!


- - 0 0 O O = O O 0 0 - -

வலைப்பதிவு இலக்கியவாதிகள்: நம்ப பலம் தண்ணில தான்னு தெரியாம கரைக்கு வந்தா நேத்து மொளைச்ச பயக எல்லாம் பிரிச்சி மேயறானுவ... எல்லாம் நேரம்!


- - 0 0 O O = O O 0 0 - -

எந்தக் கம்மனாட்டிப் பயடா அங்க? "கால்" கழுவறதையெல்லாம் போட்டோ எடுக்கறவன்?!


- - 0 0 O O = O O 0 0 - -

நானும் க.க:3 படிச்சி தலையெல்லாம் சீவி முகமெல்லாம் கழுவி பளிச்சுன்னுதான் இருக்கேன்! ஆனா ஒரு புள்ளையும் திரும்பிப் பார்க்க மாட்டேங்குது! :( வாத்தியாரு கவுத்துட்டானா?!


- - 0 0 O O = O O 0 0 - -

எந்தப் பக்கமும் சாயாம "பேலன்ஸ்"டாதான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது... எனக்கும் "நடுநிலைவியாதி" முத்திரை குத்தியிருக்காங்கன்னு!


- - 0 0 O O = O O 0 0 - -

--(வகை:புகைப்படம்)

கருத்துகள்

  1. படம் அருமைங்க, அதைவிட உங்க விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. இளவஞ்சி படங்கள் அருமை.! ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி கமெண்ட் :)))
    1. தேடும் கண்பார்வை தவிக்க ... !(பாம்பு)
    2. முகத்தை திருப்பிக் கொண்டு ... கோஸ்டி பூசல்தான் காரணம் !(மூன்று புலிகள்)
    3.இந்த கலர் லிப்ஸ்டிக் நல்ல இருக்குன்னு வெளியில் உள்ளவங்க பேசிக்கிறாங்க ! (பிளமிங்கோ)
    4.பார்வை ஒன்றே போதுமா, பாய்ந்தும் காட்ட வேண்டுமா ?(சிறுத்தை)
    5.'சூடு' சொரணையை பார்த்துமா சந்தேகமா இருக்கு, பின்னால வந்து நின்னு சொல்லுங்க பார்போம் ! (வரிக் குதிரை)
    6.நான் ஆயுள் தண்டனை கைதிதான் ! மரண தண்டனை ? அது பக்கத்து கூண்டு சிங்கத்த நான் சீண்டாமல் இருக்குற வரைக்கும் தான் (குரங்கு) :(((
    7.தைரியம் இருந்தால் ஒன்டிக்கு ஒன்டி வா !(முதலையார்)
    8.அனாவிசியமாக என் மூக்கை எங்கேயும் நுழைப்பதில்லை, மீன் பக்கதில் ஓடினா கொஞ்சம் பாத்துச் சொல்லுங்கள் !(நாரை)
    9.டோனி ஹேர் ஸ்டைல் எனக்கு நல்லா இருக்கா ?(குரங்கார்)
    10.தீயது பக்கம் போகாதே - எஸ்ட்ஸ் ஒழிப்புக்கு ஒரு போஸ் (குரங்கார்)

    பதிலளிநீக்கு
  3. சூப்பருங்க. படமெல்லாம் தெளிவா அருமையா இருக்கு. ஒவ்வொரு படத்துக்கும் நீங்க குடுத்துருக்குற கமெண்டரி டாப் க்ளாஸ்.
    :)

    பதிலளிநீக்கு
  4. அங்கே கைப்பு கேமரா வாங்கி படம் போடுறாரு, இங்கே நீங்க.
    படம் போட்டு விளக்கம் சொல்லிட்டு இருக்கீங்க. என்ன இது புது பாணியா?
    ?

    பதிலளிநீக்கு
  5. சூப்பர்(தமிழன் இந்த வார்த்தையை சொல்லாம இருக்க முடியுமா)... படமும் அதற்கான விமர்சனங்களும்

    பதிலளிநீக்கு
  6. எல்லா படமும் சூப்பருங்க.
    அதிலும் நம்ம சொந்தக்கார படம் ரொம்ப அருமைங்க.
    உங்க சொந்தக்காரங்க(சிஷ்ய கோடிகள்) படமும் அருமைங்க.
    வாத்தி வச்சு இருப்பது சோனி மாதிரி தெரியும்து.....

    பதிலளிநீக்கு
  7. படங்கள் அருமை, கூடவே கலக்கல் கமெண்ட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. // குருவே சரணம் :-)) //

    குமரா வரணும்! :)

    ***
    துளசியக்கா,

    நன்றி!

    ****
    கோவி,

    உங்க கமெண்ட்ஸ் தனி ஸ்டைல்! நல்லாயிருக்கு :)

    ****
    கைப்ஸ்,

    நன்றி! படங்களுக்கு உங்க மேலான கமெண்டுகளை சொல்லாமப் போனா எப்படி? :)

    ****
    இளா,

    மேட்டரு வேற ஒன்னியும் இல்லை! ரெண்டு பேர்த்துக்கும் கையில கேமரா கெடைச்சிருக்கா! அதான் சொறிஞ்சவன் கையி சும்மா இருக்காதுங்கற மாதிரி.. ஹிஹி..

    ட்ரெண்டுன்னே வைச்சுக்கங்க... உங்க பொகைப்படங்கள எடுத்து விடுங்க :)

    பதிலளிநீக்கு
  9. குழலி,

    // தமிழன் இந்த வார்த்தையை சொல்லாம இருக்க முடியுமா //

    இது சூப்பர்! :)))

    ****
    இகோ,

    நன்றி!

    ****
    நாகை சிவா,

    சோனியேதான்! நல்ல வேளை! "வாத்தி சோனி மாதிரி தெரியுது"ன்னு சொல்லாம போனிங்களே! :)))

    ****
    தம்பி,

    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. படங்கள்ளாம் நல்லாத் தெளிவா வந்திருக்கு...உங்க கமெண்ட்டுந்தான்.....அது சரி...இந்தப் படங்கள்ல உங்க படம் எதுன்னு உங்களுக்குத் தெரியுமுல்ல ;-)

    பதிலளிநீக்கு
  11. ராகவன்,

    // இந்தப் படங்கள்ல உங்க படம் எதுன்னு உங்களுக்குத் தெரியுமுல்ல ;-) //

    எல்லாப் படமுமே நாந்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்! ஒன்னு தான் நானா?! :)))

    உடம்பு எப்படியப்பா இருக்கு? சீக்கிரமா வாங்க! பெங்களூரு பொண்ணுக "ஜீரா எங்க? ஜீரா எங்க?" ன்னு என்னை புடிச்சி நச்சறாங்க!

    பதிலளிநீக்கு
  12. நாம் எதை நினைத்துப் பார்க்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்...

    பதிலளிநீக்கு
  13. //வலைப்பதிவு இலக்கியவாதிகள்: நம்ப பலம் தண்ணில தான்னு தெரியாம கரைக்கு வந்தா நேத்து மொளைச்ச பயக எல்லாம் பிரிச்சி மேயறானுவ... எல்லாம் நேரம்! //

    என்ன விளையாட்டிது!!!

    அதுசரி, லால்பாக்கில் எடுக்கச்சொன்னதுக்குத்தான் முடியாதுன்னுட்டீங்க, இப்ப பன்னார்கெட்டாவில், லால்பாக்கை விட 100% சூப்பரா பாத்திருப்பீங்க, பொட்டியைக்கூட தட்டியிருப்பீங்க.

    பொதுவா வெளியிட மனமில்லைன்னா தனிமடலிடவும்.

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அத்தனையும் அருமை. படங்களக்கான டயலாக்ஸூம் அருமை. அதிலும்
    //எந்தப் பக்கமும் சாயாம "பேலன்ஸ்"டாதான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது... எனக்கும் "நடுநிலைவியாதி" முத்திரை குத்தியிருக்காங்கன்னு!//
    மிக மிக அருமை.

    முடிஞ்சா நம்ம பக்கம்
    http://kaninilam.blogspot.com/
    வந்து பாக்கரது...

    பதிலளிநீக்கு
  15. அதெப்படிங்க படத்தைப் பார்த்துட்டு அது சோனியா, பீமனான்னு கண்டு பிடிக்கறார்
    நாகை சிவா?

    நானும்தான் (எப்பவாவது) படமுன்னு போடறேன். யாராவது கேமராவைப் பத்தி எதாச்சும்
    சொன்னாங்களா?
    என்னது சோனி,ஸைபர்-ஷாட் 7.2 மெ.பி. ஹூம்....

    படங்கள் எல்லாம் நல்லா இருக்குன்னு கோபால் சொன்னார். அதைவிட காமெண்ட்ஸ்தான்
    சூப்பராம். அவரோட லேப்டாப்லே பார்த்ததாலே தங்க்லீஷ் ஊட்டமாப் போச்சு.

    பதிலளிநீக்கு
  16. உங்களைப் பிடிச்சு உள்ளே போடலியே :-)

    (படத்தின் அருகே உள்ள ஒரு வரி description ரசித்தேன்)

    பதிலளிநீக்கு
  17. படங்கள் நல்லாயிருக்கின்றன.

    //நானும் க.க:3 படிச்சி தலையெல்லாம் சீவி முகமெல்லாம் கழுவி பளிச்சுன்னுதான் இருக்கேன்! ஆனா ஒரு புள்ளையும் திரும்பிப் பார்க்க மாட்டேங்குது! :( வாத்தியாரு கவுத்துட்டானா?//குரங்குக்கு cleft paletஆ?

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் இளவஞ்சி

    நமக்கு தெரிஞ்ச பன்னேர்கட்டா, நம்ம ஆரக்கிள் ஆபிஸ் மட்டுந்தேன் :-((

    பதிலளிநீக்கு
  19. படமெல்லாம் நல்லாருக்கு ஸாரே, ஆனா என்னைவிட கொஞ்சம் ஒல்லியா ஒருத்தரு அங்கன இருப்பாரே. யானை யானை அல்லாரும் ஸொல்லுவாஹளே, அவர் போட்டோவப் போடலியே..............

    பதிலளிநீக்கு
  20. புகைப்படங்கள்
    *************

    ஒரு கலைஞன் உருவாகிறான்..(வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா)

    காமெண்ட்டுக்கள்
    ****************
    குத்திட்டான்யா குத்திட்டான்யா...

    பதிலளிநீக்கு
  21. // இளவஞ்சி said...
    ராகவன்,

    // இந்தப் படங்கள்ல உங்க படம் எதுன்னு உங்களுக்குத் தெரியுமுல்ல ;-) //

    எல்லாப் படமுமே நாந்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்! ஒன்னு தான் நானா?! :))) //

    இல்லைங்க...ஒரு படந்தான் ஒங்களுக்கு...ரொம்ப ஆசப்படாதீங்க....

    // உடம்பு எப்படியப்பா இருக்கு? சீக்கிரமா வாங்க! //

    ஒடம்பு முழுக்க வாசியாயிருச்சு. சனிக்கிழமை பைக்கத் திரும்ப எடுத்துட்டுக் கோயிலுக்குப் போயிட்டு அப்பிடியே அடையாறுல போய் ரெண்டு கிலோ மீனும் வாங்கீட்டு வந்துட்டேன்ல.

    // பெங்களூரு பொண்ணுக "ஜீரா எங்க? ஜீரா எங்க?" ன்னு என்னை புடிச்சி நச்சறாங்க! //

    ஒங்களத்தான...நச்சிருப்பாங்களே....பக்கத்துக்கு எலைக்குப் பாயாசம் கேக்குற பொண்ணுங்க ரொம்ப கூடிப் போயிட்டாங்க பெங்களூருல..ஹி ஹி...நான் இல்லாதப்ப இதெல்லாம் நீங்களே சமாளிக்கக் கூடாதா!!!! ஒங்களுக்குச் சொல்லித் தரனுமா?

    ஆகஸ்ட் கடைசீல திரும்பவும் பெங்களூரு இளவஞ்சி. back to bangalore.

    பதிலளிநீக்கு
  22. //வலைப்பதிவு இலக்கியவாதிகள்: நம்ப பலம் தண்ணில தான்னு தெரியாம கரைக்கு வந்தா நேத்து மொளைச்ச பயக எல்லாம் பிரிச்சி மேயறானுவ... எல்லாம் நேரம்!//

    :-))

    //எந்தப் பக்கமும் சாயாம "பேலன்ஸ்"டாதான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது... எனக்கும் "நடுநிலைவியாதி" முத்திரை குத்தியிருக்காங்கன்னு!//

    :-))
    என்னதான் தலையும் உடலும் "பேலன்ஸ்" ஆக இருந்தாலும் "வால்" ஒரு பக்கமா கீதே. அதையும் தூக்கி கம்பி மேல வச்சாத்தான் "நடுநிலைவியாதி"யஸ்தனோட கஷ்டம் புரியும்.

    பதிலளிநீக்கு
  23. ஒரே சிரிப்பு இளவஞ்சி படிச்சிட்டு .........

    உங்க கற்பனைவளத்துக்கு எல்லையே இல்லை. தொடர்க.

    பதிலளிநீக்கு
  24. படம் போடுறீங்க இளவஞ்சி!!!!

    அனைத்துப் படங்களும் அருமை..
    அதை விட அவற்றுக்கு உங்களின் விமர்சனம் மிகவும் அருமை...


    அன்புடன்...
    சரவணன்.

    பதிலளிநீக்கு
  25. என்ன வாத்தியார் பனேர்கட்டாவில் ஒரு யானை கூட இல்லையா?!!! :(

    கமென்ட்ஸ் அருமை:)

    பதிலளிநீக்கு
  26. உதய்,

    // நாம் எதை நினைத்துப் பார்க்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்... // சில நேரம் பிள்ளையார் பிடிக்கப்போய்... ஹிஹி...

    ****
    மோகன் தாஸ்,

    // பொதுவா வெளியிட மனமில்லைன்னா தனிமடலிடவும். //

    பொண்டாட்டி புள்ளையோட சுற்றுலா போனவனைப் பார்த்து கேக்கற கேள்வியா இது?! :) (காதை இப்படி கொடுங்க... வந்த பொகையையும் வயித்தெரிச்சலையும் தாங்கிக்கறதுக்கே பெரும்பாடாப் போச்சு! இதுல போட்டோ வேறயா? )

    ****
    கலை அரசன்,

    கட்டாயம் வாரேன்! பீர் பாட்டலை பீரங்கியா மாத்தற நீர் நிச்சயா கலை அரசன் தான்! :)

    ****
    துளசியக்கா,

    ஊக்கங்களுக்கு நன்றி!

    போட்டோவோட பேரு DSC ன்னு ஆரம்பிக்குது. அத வைச்சு சோனின்னு (DSC-H1 ) சொல்லியிருக்காரு போல! :)

    அண்ணாவை கேட்டதா சொல்லுங்க! :)

    பதிலளிநீக்கு
  27. பாலா,

    // உங்களைப் பிடிச்சு உள்ளே போடலியே :-) //

    6வது போட்டோ பார்த்தீங்க தானே? :)

    ****
    முகில்,

    வருகைக்கு நன்றி!

    // cleft paletஆ? // ஆமாங்க அப்படித்தான் தெரியுது! இல்லைன்னா வேற எங்க மூக்கறுபட்டதோ?! :)

    ****
    கானா பிரபா,

    //நமக்கு தெரிஞ்ச பன்னேர்கட்டா, நம்ம ஆரக்கிள் ஆபிஸ் மட்டுந்தேன் :-(( //

    நாங்கூட இங்க வந்து ஒரு வருசமா இப்படித்தான் இருந்திருக்கேன்! இப்பத்தான் தெரியுது.. பெங்களூருல பார்க்கறதுக்கு பெண்களையும் தவிர நிறைய இடங்க இருக்குன்னு! :))

    ****
    ம்யூஸ்,

    // யானை யானை அல்லாரும் ஸொல்லுவாஹளே, //

    நான் போன நேரம் வேளைகெட்ட வேளைங்க... யானைய பார்க்க வர்றதுக்குள்ள இருட்டிருச்சு! எம்பொழப்பே இப்படித்தான் போல! போன முறை மணப்பாறை போய் மாடு படம் புடிக்காம வந்தேன்! :(

    பதிலளிநீக்கு
  28. பொதுவா கொஞ்சம் நல்ல புகைப்படங்களைப் பார்த்துட்டா, ஒரு வாரத்துக்கு காமிராவை கையில் எடுக்க எனக்கு மனசு வராது (உனக்கெல்லாம் எதுக்குடா இந்த ஆசை அப்டின்னு மனசாட்சி சொல்றத கேக்குறதுனால அப்படி!). இந்த தடவை ரெண்டு வாரம் வரை தொடுறது மாதிரி இல்லை.

    பதிலளிநீக்கு
  29. முத்து,

    // ஒரு கலைஞன் உருவாகிறான்.. // அது சரி! :))) நல்லா படம் புடிக்கறவங்க எல்லாம் கோச்சுக்கப் போறாங்க! :)

    ****
    ஜீரா,

    // சனிக்கிழமை பைக்கத் திரும்ப எடுத்துட்டுக் //

    இந்த முறை தனியாத்தானே போனிங்க? :)

    // நான் இல்லாதப்ப இதெல்லாம் நீங்களே சமாளிக்கக் கூடாதா!!!! ஒங்களுக்குச் சொல்லித் தரனுமா? //

    ஏய்யய்யா! என்ன வெளையாட்டு இது? கொரங்குக கூண்டுக்குள்ள "ஒரு ஆம்பளைக் கொரங்குக்கு மூனு பொம்பளைக் கொரங்குகளா?"ன்னு கொஞ்சம் ட்ரேட்மார்க் இளிப்போட கேட்டதுக்கே வெனையாயுருச்சு!

    நீர் வேற எதையாச்சும் பத்தவைச்சிட்டு போகாதீரும்! :)

    ****
    பலூன் மாமா,

    ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து! :)

    // என்னதான் தலையும் உடலும் "பேலன்ஸ்" ஆக இருந்தாலும் "வால்" ஒரு பக்கமா கீதே. //

    ஒலகம் இந்த அளவுக்கு உன்னிப்பா கவனிக்குதுன்னா நெஜமாவே நடுநிலைவியாது கஷ்டம்தான் போல! :)

    ****
    செல்வநாயகி, சரவணன்,

    ஊக்கங்களுக்கு நன்றி!

    ****
    பொன்ஸ்,

    யானைய ஏன் எடுக்கலைன்னு ம்யூஸ் கிட்ட பொலம்பிட்டேன்!

    அடுத்தமுறை கண்டிப்பா...

    பதிலளிநீக்கு
  30. Nice pictures!
    Podes ver o meu blog que também tem fotografias...

    பதிலளிநீக்கு
  31. Verificare gli elefanti nel mio blog

    அதாவது வாத்தியார், க.க லேடீஸ் விங் லீடரா லட்சணமா (ஹி ஹி :), என்னைத் தவிர அதுல வேற யாராச்சும் இருக்காங்க?!) ட்ரெண்டைக் காப்பாத்தியிருக்கேன்.. வந்து பாருங்கன்னு.. (நன்றி: கூகிள் ;) - மொழி பெயர்ப்புக்கு மட்டும்)

    பதிலளிநீக்கு
  32. இப்போதெல்லாம் காமெராவும் கையும்தானா? படங்கள் அருமையாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  33. என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு கேட்டுட்டீங்க. முதல் ரெண்டு படத்தைப் பாத்து எனக்கு தோனுனது
    1. இந்த மனுசப் பயலுவலுக்கு படம் காட்டி நம்ம வயித்தக் கழுவறதுக்குள்ள முழி பிதுங்குதுடா சாமி!

    2. டேய்! நீ இந்த பக்கம் தேடு...நீ அந்தப் பக்கம் தேடு. மினி அந்தப் பய ஜீவாவோட ரொம்ப தூரம் ஓடியிருக்க முடியாது. புடிச்சு அவங்களைக் கண்டந்துண்டமா வெட்டனும்.

    பதிலளிநீக்கு
  34. MarcusAntónius, Emmanuelle,

    Agradecimentos para sua visita!
    Merci pour votre visite ! :)

    ****
    பொன்ஸ்,

    வந்துட்டேன்! பதில் போட்டுட்டேன்!

    ****
    மணியன்,

    இல்லைங்க! வாங்கி வைச்சு ரொம்ப நாளா அப்படியே கெடக்குன்னு கையில எடுத்திருக்கேன்!

    நான் என்னைக்கு ஒரு வேலைய முழுசா செஞ்சிருக்கறேன்! அப்பப்ப என்ன தோனுதோ அதது! :)

    ****
    சோம்பேறிபையன்.

    பயமா? உங்களுக்கா? மும்பை இருக்கறவங்க பயப்படுறாய்ங்கன்னா நம்பற மாதிரியா இருக்கு? :)

    ****
    கைப்ஸ்,

    அது! :)

    பதிலளிநீக்கு
  35. தருமி சார்,

    ஊக்கங்களுக்கு நன்றி! இந்த புகைப்பட இண்ட்டரஸ்டு இன்னும் எவ்வளவு நாளைக்கு ஓடும்னு தெரியலை! :)

    பதிலளிநீக்கு
  36. படங்களும்; நகைச்சுவைக் குறிப்புக்களும் மிக ரசிக்கக்கூடியவை! ரசித்தேன். கோவி. கண்ணன் தன் பின்னுட்டத்தில் 3ம் படத்திலுள்ள பறவையை பிளமிங்கோ எனக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இப்பறவை கனடிய வாத்து வகையைச் சேர்ந்தது. பிளமிங்கோவின் சொண்டு வித்தியாசமானது. அதன் கழுத்து;கால் மிக நீளமானது. அதை தமிழில் "செங்கால் நாரை" என்பர்.
    யோகன் பாரிஸ்

    பதிலளிநீக்கு
  37. நான் போட்ட பின்னுட்டத்த பப்ளிஷ் பன்னலயா...இல்ல நான் பின்னூட்டமே போடலயா ஒரே கன்பீசன்...

    நல்லா படம் வரைஞ்சு கதை சொல்றீங்க... :-)

    பதிலளிநீக்கு
  38. arambam ellam nallathan irukku ana phinising sari illaeppa

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு