முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திரைப் புலம்பல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருடன் போலீஸ்

வாழ்க்கையில் பலபன்னுக வாங்குனாலும் அசரப்பிடாதுங்கற வாழ்வியல்பாடத்தை திரையில் செய்துகாட்டியவகையில் நம்பப்பய தினேசு என்பதற்காகவும் செம்மகட்ட ராஜேந்திரியின் அப்பாவி அழகுக்கும் தான் திருடன்போலீசை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த மூக்குநடிகர் நரேன் ஒரேசீனில் அத்தனைபேரையும் தூக்கி சாப்ட்டுட்டாப்ல! கான்ஸ்டபிள் வேலையின் அவமான அலைக்கழிப்பில் நொந்துபோய் வேலையை ராஜினாமா செய்யறேன்னு கமிஷனர் நரேன்கிட்டபோய் தினேசு வாங்கிக்கட்டிக்கொள்ளும் சீன். அப்படியே புல்லரிப்புல நெஞ்சுமுடியெல்லாம் நட்டுக்கிச்சு! அதுவும் அதிகாரம் உள்ளோர் கொள்ளும் நேர்மை ஒரு கவுரவ ஏழ்மை. வறுமையல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டமிராது. ஆனால் சிலதுக்கு தட்டுப்படனும். போலீஸ் ரேஷனில் வரும் அரிசி பருப்புல வண்ட்டெடுத்து காயப்போடவேண்டி வரும். வீட்டுக்கு முன்னாடி ஜீப் இருக்கும். ஆனா சொந்தவண்டி பெட்ரோலுக்கு அளந்தளந்து ஓட்டனும். காய்ச்சவந்தா தனியார் ஆஸ்பத்திரிக்கு காசிருக்காது. இலவச PRS டாக்டரை பார்த்து நாலு கலர்மாத்திரை வாங்கி போட்டுக்கனும். கல்யாணங்காட்சில பிரிச்சுவிட்ட பேண்ட்டு லைனும் கணுக்காலுக்குமேல ஏறிநிக்கறது தெரியாம ...

நிம்போமேனியாக் ( Nymphomaniac )

நிம்போமேனியாக்குனு ( http://www.imdb.com/title/tt1937390 ) இரு பாகங்கள் கொண்ட ஐந்துமணிநேர ஒரு மெச்சூர்ட்ட் ஆடியன்ஸ் படம். காமத்தை வாழ்வாக கொண்ட ஒரு பெண்ணின் கதையை வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் சொல்வதாக செல்லும் கதை. சிறுவயது சுய இன்பம், பதின்ம அதீத காமவேட்கை, அடங்காக்காமம், வலியின்பம், பலதார உறவுன்னு கட்டுக்கடங்காத வாழ்க்கையை கட்டுக்கோப்பாக சொல்லும் கதையோட்டம். ஆரம்பத்தில் சீனுக்காக பார்க்க ஆரம்பித்து பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் அதை பிரித்து ஆராய்ந்து உண்மையை பட்டவர்த்தனமாக உணரவைக்கையில் அதிர்ச்சிமதிப்பீடுகள் எல்லாம் பின்னால் போய் முகத்தில் அறையும் உணர்வுகளின் நிஜங்களில் அடிபட்டு படம் முடியமுடிய வெறுமையுள் இழுபட்டு தேமேன்னு பார்க்கவைக்கும் கதை. ஒரு கட்டத்தில் சுய கருக்கலைப்பு அதிகுரூரமாக காட்டப்படுகிறது.அதாவது மக்கள்பேறு என்பதை அதி உன்னதமான உணர்வாகவும் வாழ்வின் கொடையாகவும் உணர்ந்துவாழும் வாழ்க்கையில் அதை வெறும் கருஅழிப்பாக சொல்லும் காட்சி. நானே செய்துகொண்டதால்தானே இத்தனை அதிர்ச்சி.. இதுவே மருத்துவர் எப்படி எப்படி செய்வார் தெரியுமா சிசுவின் தலையைப்பிடித்து இழுக்கும் கரு...

Aftershock - 2010

(  http://m.imdb.com/title/tt1393746/  ) "மாஸ்டர் டீச்மி குங்க்பூ" "நோ மை சன்!" "மாஸ்டர், ப்ளீஸ் டீச்மீ குங்பூ!! "நோமைசன்... நோ..." "வை மாஸ்டர் வை???" "பிகாஸ் ஐ டோண்ட் நோ குங்பூ!!" இந்தக்காமெடிக்கு தலைகீழா டைவடிச்சு சிரிக்கற அளவுக்குத்தான் எனக்கெல்லாம் சீனப்படங்களை பத்தி தெரியும். ஏன்னா பார்த்துவைச்ச படங்க எல்லாம் எண்டர்த டிராகன்ல இருந்து க்ரோச்சிங் டைகர் ஜெட்லி ஒன் தானே! ஜாக்கிபடங்கள் ஒருவகைன்னா இந்த பழங்கால அரசர் துரோகம் வெண்தாடி குரு மொட்டைல புள்ளிவைச்ச சிஷ்யனுங்க அப்பறம் பறந்துபறந்து அடிச்சும் வேலைக்காவாம கடைசில துணிய கத்தியாக்கி ஏமாந்த ஒருநொடில சொருவி வில்லனைக்கொல்லும் யாஹூசூ படங்கதானே. அதனாலதான் ஆரம்பத்துல இது சீனப்படம்னு தெரிஞ்சதும் ஒரு அசூயையா பார்க்க ஆரம்பிச்சோம். ச்சோம்னா வீட்டுல பொண்டுபுள்ளைங்க எல்லாமும். பார்த்துமுடிக்கையில் எவ்வளவு மனக்கிளர்ச்சி மற்றும் மனஅமைதி ஆனோம்னு சுருக்க சொல்லிமுடியாது! சீனப்படங்கள் பற்றிய தவறான மாயையை சுத்தமா தொடைச்செடுத்தது நிச்சயம் பலன் தான். கதை...

அன்னயும் ரசூலும்

உ ங்களுடைய சொந்த ஊர் ஏன் உங்களுக்கு பிடித்திருக்கிறது? திருச்சி மலைக்கோட்டை கோவிலின் உச்சியில் படிகளில் அமர்ந்து திருச்சியை பார்க்குமிடம் உங்களுடன் ரகசியமாய் கைகோர்த்து வந்தவரால் பிடித்திருக்கக்கூடும். கோவை கிராஸ்கட் ரோடு சேட்டுக்கடை பானிபூரியின் சுவை ஜமா சேர்ந்த நண்பர்களால் சிறப்புற்றிருக்க கூடும். ஸ்ரீரங்கம் கூட வாத்தியாரும் நீங்களும் பிறந்த ஊர் என்பதற்காகவே ஒட்டிப்போக வாய்ப்புண்டு. ரசூலுகுக்கு கொச்சின் ஏன் பிடிக்கும் என்பதற்கு நட்பு தவிர வேறு காரணியில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு வழியும் இருந்திருக்காது போல. இரண்டாம் திருமணம் முடித்த அப்பா பெண்டு பிள்ளைகளோடு வேறு ஊரில் ஜாகையாயிருக்க கொச்சினில் ரசூலும் அவன் அண்ணனும் மட்டுமே திரைச்சீலைகள் பிரிக்கும் ஒரே அறை வீட்டில் பொங்கித்தின்று வாழும் வாழ்க்கை. வயதுக்கு வந்த பிரமச்சாரி அண்ணன் தம்பிகள் இரண்டுபேர் ஒரே வீட்டில் இருக்கையில் பழகும் முறையை கவனித்திருக்கிறீர்களா? கண்களில் நீர்முட்டி வலியினை சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. சந்தோசமாக இருக்கும் பொழுதில் கட்டிப்பிடித்து உச்சிமுகர தேவையில்லை. பிரச்சனைகளை மணிக்கணக்கில் பேசிப்பேசி மாய வேண...

ப்ரே பண்ணுவேன்! நானும் ப்ரே பண்ணுவேன்!!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவின் ப்ரேயர் சாங் கேட்டேன்! லவ் பண்ணி விட்டுட்டு போன பெண்ணை வாழ்த்தி ப்ரே பண்ணனுமாம்ல ப்ரே! ஆண்களின் காதல் தோல்வியின் வலி அவ்வளவு எளிதில் கடந்துவரக் கூடியதா என்ன? அப்பறம் இவ்வளவு நாள் வசந்தமாளிகை சிவாஜி ரத்தம் கக்கியதற்கும், நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் உயிரையே விட்டதுக்கும், வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் கோவில் மண்டபத்துல ஊமையாகி குடியேறியதற்கும், மூன்றாம் பிறை கமல் அடிவாங்கி ப்ளாட்பாரம் முழுக்க உருண்டத்துக்கும், மைக் மோகன் படத்துக்கு படம் பன்னு சாங்ஸ்சா பாடித் தள்ளினதுக்கும், காதலிக்கு கல்யாணமே செய்துவைக்கும் பூவே உனக்காக விஜய்யின் தியாகத்துக்கும், சுப்ரமணியபுரம் ஜெய் குத்து வாங்கி செத்ததுக்கும் அர்த்தமே இல்லையா என்ன?! உண்மையில் சொல்லப்போனால் இப்படி தன்னையும் வருத்திக்கொண்டு வாழ்வையும் கெடுத்துக்கிட்டு எல்லோரையும் சிரமப்படுத்தறதுக்கு பதிலா இப்படி வெகு இலகுவாக இந்த வலியை கடந்து வருவது சாலச்சிறந்ததுன்னு தோணுது. எப்படியும் பின்னாடி எவளையாவது கண்ணாலம் கட்டி புள்ள குட்டியோட சந்தோசமாத்தான் இருக்கப் போறோம். இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பின்னாடி நமக்க...

ஜீவனே... ஜீவனே...

கானா பிரபா அவர்களின் மிகவும் டச்சிங்கான ” இளையராஜா எனக்கு இன்னொரு தாய் ” என்ற பதிவினை படிக்க நேர்ந்தது. இளையராஜாவை பொறுத்தவரை மற்றவருக்கு தாயாகவும் தந்தையாகவும் தோழனாகவும் வழிகாட்டியாகவும் தெய்வமாகவும் பலபேருக்கு இருப்பது பெரிய விடயமல்ல. ஆனால் அந்த உணர்வினை பெற்றவருக்கே அது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிடிப்பையும் மாற்றத்தினையும் ஏற்படுத்துகிறது என்பது தெரியும். வலிகளை ராஜாவின் கரம்கொண்டு கடந்து வந்த கானா பிரபாவும் பொறாமைப்பட வைக்கும் ஒரு அதிர்ஷ்டசாலிதான்! இசை என்பது எனக்கு இங்கிலீசு மீடியம் படிக்கும் மேட்டுக்குடி மக்களால் அறிமுகப்பட்டது. இதையுங்கூடி ஒருமுறை எழுதியிருக்கிறேன்! ( பீட்டர் சாங்ஸ்சும் ஒரு தமிழ்மீடிய பையனும்... ) பேயடி அடிக்கும் ட்ரம்ஸ்சும், கதறக்கதற இழுக்கப்படும் லீட் கிட்டாரும் தான் பிடித்த வாத்தியங்கள். மெட்டாலிகா போலவோ மெகாடெத் போலவோ நீளமாய் முடி வளர்த்திக்கொண்டு வெறுங்கையில் கிடாரை காது கேக்கறதுக்கு தோதாக இழுத்தபடியே தலையை பரப்பிவிட்ட படி மாரியாத்தா ஆடவேண்டுமென்பது ஒரு அடையாளத்தேடல். ஆனால் அன்றைக்கு எனக்கிருந்த கம்பிமுடிக்கு வைத்த ப்ஃங்க் ஸ்...

சிவாஜி The BOSS - Coooooooooooool ! :)

நானெல்லாம் இன்னும் பாபா, சந்திரமுகி பார்க்காத அளவுக்கு ரஜினியின் அதிதீவிர ரசிகன்! அதுபோக நான் ஏன் ரஜினி படங்களை ரசிக்கறேன்னும் ஏற்கனவே கொசுவத்தி சுத்தியிருக்கறேன். அதனால இந்த பதிவை இவனும் மண்சோறு திங்கற கும்பல்ல இருப்பானோங்கற சந்தேகக் கண்ணோட பார்க்காம இதுவும் இன்னொரு சாதாரண ரசிகக் கண்மணியோடதே அப்படின்னாச்சும் நினைச்சுக்கிட்டு சும்மா ஜாலியா படிங்க! :) படம் சும்மா சொல்லக் கூடாதுங்க! அடி! அதிரடி!! கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ரெண்டாம் வரிசை நாயகர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு அடிச்சுக்கிட்டது நினைவுல இருக்குங்களா?! அவங்களுக்கு எல்லாம் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் அழுத்தமான சேதி என்னன்னா... இன்னும் அடுத்த 10 வருசங்களுக்கு சூப்பர்ஸ்டாராக கனவுலகூட நெனைக்காதீங்கப்பேய்! :) அஞ்சுக்கப்பறம் ஆறு! சிவாஜிக்கப்பறம் யாரு?! உண்மைதானுங்... ரஜினி மொத சீன்ல "மக்களுக்கு நல்லது செஞ்சேன்!"ங்கறதால ஜெயிலுக்கு உள்ளே வந்தேங்கறதுல இருந்து கடைசிசீன்ல மொட்டைத்தலைல தபேலா வாசிக்கறது வரைக்கும் நான்ஸ்டாப் அசத்தலுங்க. மனுசன் மனசை சும்மா அள்ளிக்கிட்டு போறாரு! அந்த துறுதுறு...

பீளமேடு - 641004

எ ன்னாங்க இது இப்படி ஒரு அநியாயம் நடக்குது நாட்டுல! கற்பனைத்திருட்டு ஒரு அளவுக்கு இருக்கலாம். அதுக்காக இப்படியா வகைதொகையில்லாம சீனுக்கு சீன் எங்க காலனி மேட்டருல இருந்து சுட்டு படமெடுப்பாய்ங்க? ( மனசாட்சி: டேய்... டேய் இந்தியா முழுசும் சின்னப்பசங்க ஒரே மாதிரிதான் கிரிக்கெட்டு வெளையாடுவாய்ங்க... சும்மா கூவாத.. ) சரி போனாப்போகுது. கிளைமாக்சு கூடவா? நாங்க சேரன் மாநகர் டோரணமெண்டுல செமீஸ் வரைக்கும் உயிரைக் குடுத்து போராடி வந்ததும் அப்பறம் ஃபைனல்சுல டங்குவராரு அந்து அம்மணத்துக்கு ஈக்குவலா சீரழிஞ்சு சின்னாபின்னப்பட்டு வந்ததும் இவிங்களுக்கு எப்படி தெரியும்? 4 ரவுண்டு மேட்சுல மூணாவதே செமீஸ் மேட்ச்னா பார்த்துக்கிடுங்க... ரெண்டு டீமும் எதுத்தெதுத்தாப்புல நின்னு கையெல்லாம் குடுத்து ஜோராத்தான் ஆரம்பிச்சது மேட்சு. அப்பவெல்லாம் சைடுக்கு 20 ஓவரு மேச்சுதான். அவங்க 88ம் நாங்க கடைசி விக்கெட்டுக்கு 84ம். வாழ்க்கைல நான் மொதலும் கடைசியுமா அடிச்ச ( பாரதி காலனி வினாயகரால் அடிக்க வைக்கப்பட்ட.. ) 6 அதுதான். அடிச்சு முடிச்சு ஆரவாரமெல்லாம் முடிஞ்சும் அரை மணி வரைக்கும் கையெல்லாம் நடுங்கிட்டு இருந்தது இன்...