முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எட்றா வண்டியெ - வா.மு.கோமு





வா.மு.கோமுவின் புத்தகத்தை படித்துவிட்டு மனுசன் மனசுக்குள்ள அவரு பேனாவ உட்டு ஆட்டிட்டாப்லன்னு சொல்லி சிலாகிக்கறதும் வாழ்க்கைல சோக்களிகளோட மொத பீருக்கு அப்பறம் இதான் மப்புதூக்கறதான்னு தெரியாம அலங்கமலங்க கொஞ்சகணம் மெதப்புல இருக்கயில மப்புன்னா சூப்பர்தாம்லன்னு சொல்லறதும் ஒன்னுதான். ரெண்டுமே மொதமொதல்ல காணாததை கண்டுட்ட பிரமிப்பாத்தான் அனுபவிக்கயில தெரியும். வெளில சொல்லி அந்த சொகத்த எப்படி வெளக்கறது? சொல்லதேவையும் இல்லீல்ல? இருந்தாலும் அந்த திருட்டு சொகத்தை, தப்பை மறைச்சு செய்யற த்ரில்லை, நாசூக்கு மசிருமட்டைன்னு ஏதுமில்லாம தேங்காயொடச்ச மாதிரி சொல்லற நேர்மைய நாம அனுபவிக்கறதை கொஞ்சமா வெளீல சொல்லி பீத்திக்கறது தப்பில்லங்கறதால இந்த ரெண்டு பத்தி...


நாவல்னுதான் அட்டைல போட்ருக்காப்ல.. எனக்கென்னவோ பன்ணெண்டு சிறுகதைகள எழுதிவைச்சுட்டு வரிசைய மாத்திமாத்தி எந்த பத்திரிக்கை அனுப்பலாம்கற கொழப்பத்துல எல்லாஞ்சேத்தி ஒரு புக்கா போட்டுட்டாப்லனுதான் படிக்கயில தோனுச்சு. எந்த அத்தியாயத்துல ஆரம்பிச்சு படிச்சாலும் தனிக்கதைதான். மொத்தமா படிச்சா நாவல்மாதிரிதான் தெரிது. எல்லாகதைலயும் சாமிநாதன் வர்றாப்லங்கறதும் அல்லது எல்லாக்கதைலயும் சாமிநாதன் வரமாறியே எழுதுனாப்டியும் இருக்கறதால சாமிநாதனின் வரலாறுன்னு நினைச்சு படிச்சுக்கலாம்தான். ஊடால ஊடால சாதி ஒடுக்கம், அழுக்கு, பொருளாதாரம், பொழப்பு, செல்போனு, பொண்ணுன்னு களிமண்பொம்மைக்கு கைகாலு ஒட்டவைச்சதா இல்லாம பரோட்டாவுக்கு மாவுபெசயற மாதிரி நல்ல பெனைஞ்செடுத்ததுல இவை எதுவுமே துறுத்திக்கிட்டே தெரில. ஆரம்பத்துல கவுண்டமாரு எப்படி தாழ்த்தப்பட்டவங்களை அமுத்தறாங்கறமாதிரி சொன்னாப்டி இருந்தாலும் ச்சும்மா பார்த்ததுக்கே கையக்கால வாங்குன ஆளா இருந்தவிங்க காலப்போக்குல நீதிநியாயம் பார்த்து சும்மாக்கெடந்த சாமிநாதன கெளப்பியுட்டவ கவுண்டச்சின்னு தெரிஞ்சு கவுரவமா அவளை கொளத்தியுடறதை சொல்லறப்ப அவ்வளவு நீதிநியாயம் பார்த்தா இப்பெல்லாம் சாதி பார்க்கறாங்கனு கருக்குன்னுச்சு.


அதுக்கப்பறம் கதை மடைமாத்தி சாமிநாதனுக்கு வாழ்க்கைல கெடச்ச பல்புகளை அத்தியாயமா சொல்லிக்கிட்டே போறப்ப நமக்கும் நம்மை அடையாளப்படுத்திக்க நெறய சான்சுக படிக்க கெடைக்கறதால கதைல ஈசியா ஒட்டிக்கமுடியுது. சாமிநாதன் ஒரு குழப்பவாதி, அம்மா கூட இல்லாதவன். தறிக்குப்போயி கஷ்டப்பட்டு சம்பாரிச்சாலும் குடிக்கு குறைவில்ல. கோட்டருக்கு மகனை சார்ந்திருந்தாலும் பாசத்துல தாங்கும் அப்பா, கூட்டாளி, கூட்டாளியின் அம்மா சரோஜாக்கா, தறிக்குபோற புள்ளைங்க, லவ்வு, கல்யாணம், செல்போனு கலாச்சாரம்னு எல்லாருக்கும் நடக்கறதுதான். நடக்கறதை நடந்ததை அப்படியே தோப்புல கயித்துக்கட்டில ப்ரெண்டுக நாலுபேத்தோட சாயங்காலமா லுங்கிய ஏறக்கட்டிக்கிட்டு சாஞ்சாப்புல குப்புறடிச்சாப்புல நாம கதைகேக்கறமாதிரியே எழுதறது கோமுவின் திறமைதான். இருந்தாலும் இந்த சாமிநாதன் எங்க ஒருபடி தூக்கலா தெரியறான்னா அவனுக்குள்ள ஒளிஞ்சுவெளியாடும் தண்ணிபோட்டா பொங்கிவழியும் சுயபச்சாதாபம்தான்னு எனக்கென்னவோ தோனுச்சு. பதின்மத்துல கோட்டைவிட்டதுக்கெல்லாம் பச்சாதாபத்துல நொந்து நூடில்ஸ் ஆனவனுங்களுக்கு ஒவ்வொருமுறையும் சாமிநாதன் காதல்னு கெளம்பி வாயக்கொடுத்து சூத்த புண்ணாக்கிட்டு வரும்போது அடடே நம்பாளுன்னு சிரிப்புதானே கெளம்பும்? எனக்கும் ஒவ்வொரு அத்தியாயம் கடைசிப்பத்தி படிச்சுமுடிச்சதும் நெலக்கொள்ளாத சிரிப்புத்தான் அம்மிக்கிச்சு. சிரிச்சுக்கிட்டே திரும்பவும் இந்தாளு எங்கெல்லாம் வரிக்கு நடுவால வெடிவச்சிருக்காப்டின்னு இன்னொருக்கா சுருக்கா தேடறது ஒரு சுகம்.


போனவருசத்தின் மிகச்சிறந்த ரசனைக்குரிய படமாக அட்டக்கத்திய சொல்லுவேன். அதுக்கும் இந்த புதினத்துக்கும் நெறைய தொடர்பு. ரெண்டுமே பல்பு வாங்குற கதைதான். ஆனா படம் காதல்தோல்விய வலியாச்சொல்லாம சிரிச்சாப்டியே சொன்னாப்டி இருக்கும். ஆனா க்ளைமாக்ஸ்ல ஒரு அந்த ஏமாத்தத்தின் துயரம் படீர்னு மூஞ்சுல அறைஞ்சி அழவைச்சிடும். பயக வெடுக்காளியா சுத்தறதெல்லாம் வேசம்தான். மப்புபோட்டா மட்டும் அழுவறதுகூட மனம் கரையறதாலதான். ஆனா பதின்மத்துல எதிர்பால் தேடுதல்கொண்ட, கெம்பீரமோ வசதியோ தண்டியோ கவர்ச்சியோ உடல்வாகோ மெச்சூரிட்டியோ இல்லாத ஒருத்தன் உள்ள படற அவஸ்தையும் அதை ஈடுகட்டிக்க வெளில காட்டிக்கற அலப்பரையும் இரண்டுமே அவலம் மிகுந்தது. அந்த அவலத்த ஆசிட்டுமாதிரி குடிச்சுக்குடிச்சு தெளிஞ்சு ஒரு புள்ளய கட்டி குடும்பம்னு செட்டாவறதுக்குள்ள ஆம்பள படற தவிப்பை நேர்மையா சொன்னபடம் அட்டக்கத்தி. என்ன தவிர்க்கமுடியாத சினிமாஜிகினாக்களை ஒரு டைரக்டரு மொதபடத்துக்கு வியாபாரகாரணங்களுக்கு சேர்த்துக்கத்தான் வேண்டியிருக்கு. அதிலும்கூட துருத்தாமத்தான் நடுக்கடலுல கப்பலையிறங்கி தள்ளியிருப்பாப்ல ரஞ்சித்.


ஆனா ரஞ்சித்துக்கு எல்லாத்தையும் சினிமாவுல காட்டமுடியாத சுதந்திரம் கோமுவுக்கு உண்டு. எழுத்துல படிக்கயில நச்சுன்னு மண்டைலயும் மனசுலயும் இறக்கும் சுதந்திரம்தான். அந்த வரிகளை நாசுக்காகவும் பூச்சாகவும் சொல்லாம சொல்லறமாதிரியும் அருவருப்பில்லாமயும் நாகரீகமாய் வேற வார்த்தைகளைப்போட்டு எழுதிவிட முடியும்தான். ஆனா சொல்லவந்ததை இப்படி செத்துப்போன மிருகத்தை பாடம்பண்ணி காட்டறமாதிரி இல்லாம உயிர்ப்போட சொல்ல அந்த பூச்சுகளற்ற வார்த்தைகளே எங்கேயும் துருத்தாமல் இயல்பாய் நிற்கின்றன. 


இதுலயும் மொதரெண்டு அத்தியாயம் தவிர வேறெங்கும் சாதியழுத்தத்தை திணிக்கலை. வரிகளுக்கிடையில் உணர்ந்துக்கறது நம்ப பாடுதான். நம்ம சாமிநாதனுக்கு பாருடா இப்படில்லாம் ஆயிருச்சுன்னு கோமு சொல்லிக்கிட்டே போறாப்ல. நாமும் அவருக்கூடவே பத்திக்கு பத்தி ஊங்கொட்டிக்கிட்டே படிச்சுக்கிட்டே போறம். முடிவுல கெரகம் கதைய முடிச்சேபோடனும்னு போடான்னு கடைசில கட்டுன பொண்டாட்டு ஒரே வாரத்துல விரல்படாம ஊடுவிட்டு ஓடயில நமக்கும் அந்த அவலம் பத்திக்கிதுதான். ஆனா கோமு நாலு கோட்டர சேர்த்தடிச்சுட்டு ரயில்வே கேட்டுல உழுந்துசெத்தான்னு எழுதியிருக்கலாம். இல்லைன்னா அடுத்த செல்போனு நம்பரு தேடிக்கிட்டான்னு சொல்லியிருக்கலாம். இதெல்லாம் இல்லாம சரக்கடிச்சுக்கிட்டு மப்புல சினிமாப்பாட்டா பாடி சரோஜாக்காவை முத்தங்குடுக்கறாங்கறது எல்லாம் ராத்திரியெல்லாம் நடக்கும் கூத்துல கிழக்கால வெளுத்து விடியறது பார்த்து கூத்தை முடிச்சுத்தொலயனும் கொஞ்சம் தம்கட்டி கூவுடியம்மான்னு நல்லதங்காளை வாத்தியக்காரனுக சேர்த்தடிச்சு கெளப்பறமாதிரிதான் இருக்கு. இருந்தாலும் என்ன? கோமுவின் கதை. அவர் இஸ்டம். அவர் முடிவு.


கள்ளி, தவளைகள் குதிக்கும் வயிரெல்லாம் முன்னாடியே படிச்சவந்தான். அதிர்ச்சி கொடுக்கற மூஞ்சுல அறையற வரியெல்லாம் படிச்சு பழகிட்டந்தான். குத்தவைச்சு காதுல கோழியெகுட்டு கொடயறமாதிரி சொகமா கத சொல்லயில எவ்வளவுவேனும்னாலும் அலுப்பில்லாம கேக்கமுடியும்தான். ஆனா இந்த புத்தகத்துல ஒரு மகா சிறப்பிருக்கு. அது ஏழாம் பத்தி “ஏய், நாஞ்சொல்லறத கேளு!”


செல்போனு மட்டும் விசயமங்களம் எட்டியிருக்காட்டி கோமு எதவச்சு கதையெல்லாம் எழுதியிருப்பாப்டின்னு சிலசமயம் தோணும். ஆனா சிலாகிக்கும் மேட்டரு செல்போனல்ல. இந்த ஏழாவது அத்தியாயம் இருக்கே! அடடா... கொழம்பித்தவிச்சு சுத்தியிருக்கறவங்களையெல்லாம் ஒழப்பு ஒழப்புன்னு ஒழப்பி கடலபோடற புள்ளகிட்டக்கூட தெளிவாபேசுறேன்னு முன்னக்கி பின்னவும் மேலுக்கு கீழும் நாய்க்கு வாலுல டப்பிய கட்டியுட்டு அது ஒடோடுன்னு ஓடி ஓஞ்சுபோயி நெனவும் தெளிவுமா அப்பப்ப கெளம்பி மறுபடி வெருண்டு ஓடறமாதிரி மனசு ஒருகாலத்துல ஆம்பளப்பயகளுக்கு வாய்ச்சே தீரும். நம்பளை நாலுபேரு மதிக்கனும்னு தோனும். ஆனா நம்பமேல மரியாத நமக்கே இருக்காது. எல்லாருக்கும் புடிச்சாமாதிரி இருக்கனும்.ஆனா நமக்கே நமக்கு புடிக்காது. பெருசா ஏதாச்சும் செய்யறாப்டியே காட்டிக்க தோணும். ஆனா செய்யறதுக்கு ஒரு மசுரும் இருக்காது. பவுடரடிச்சு டக்கின்னு செஞ்சுக்கிட்டு பவுசா போனாலும் உள்ள இருக்கற சுடர்மணில இருக்கற ஓட்டைய எல்லாரும் பார்க்கறமாதிரியே இருக்கும். புடிக்காத புள்ளயா இருந்தாலும் விட்டா இதுவுங்கெடைக்காம போயிருமோன்னு ஜவ்வாட்டம் நல்லவன்னும் கெட்டவன்னும் மாறிமாறி போக்குக்காட்டி சொல்லறதெல்லாம் அந்த புள்ளயும் நம்பிட்டுதான் கேக்குதுங்கற நெனப்புல மேலுக்குமேலும் ஒளரிக்கிட்டே இருக்கற பேச்சு ஒன்னு இருக்குதே. அதை எந்த எழுத்துலயும் கொண்டு வந்துற முடியாது. ஒருத்தரு கொண்டுவந்துட்டாப்புலன்னா அந்தாளு பேனா நேரா நம்ப நெஞ்சுக்குள்ள பூந்து ஆட்டமா ஆடிருச்சுன்னு அர்த்தம். 16 பக்க அதகளம் அது!

எனக்கென்னவோ புத்தகத்துக்கு கொடுத்த நூத்தியிருவது ரூபாயும் இந்த அத்தியாயத்துக்கு மட்டுமே சரியாப்போயிருச்சுன்னு செம சந்தோசம்தான். அந்த ஒரு அத்தியாத்துலயும் நாம நம்பள கண்டுக்கலைன்னா இன்னமும் நமக்கு சுயத்துல வளர்ச்சி பத்தலைன்னு அர்த்தம்!

இத்தன சொன்னியே.. இந்த கதைல வர புள்ளைங்கள பத்தி ஏம்யா ஒன்னுமே சொல்லலையேன்னு கேக்கறீங்களா? கோமுவின் கதைப்பெண்கள். அதுல எனக்கு அந்த கருங்கொரங்கு மல்லிகாவை ரொம்ப புடிச்சிருக்கு :)

கருத்துகள்

  1. //பரோட்டாவுக்கு மாசுபெசயற மாதிரி //

    ???????????

    அப்ப........ வாங்கிறலாமுன்னு சொல்றீகளா?

    செஞ்சுருவோம்!

    பதிலளிநீக்கு
  2. இத வாசிச்சிக்கிட்டு இருக்கும் போதே இளவஞ்சின்னு ஒரு மனுசன் ஒரு கத எழுதி அத நான் வாங்கிப் படிச்சிட்டு விமரசனம் மாதிரி ஒண்ணு எழுதி, அதுல //அதை எந்த எழுத்துலயும் கொண்டு வந்துற முடியாது. ஒருத்தரு கொண்டுவந்துட்டாப்புலன்னா அந்தாளு பேனா நேரா நம்ப நெஞ்சுக்குள்ள பூந்து ஆட்டமா ஆடிருச்சுன்னு அர்த்தம். // அப்டின்னு எழுதினா எப்படி இருக்கும்னு நினச்சிக்கிட்டே வாசிச்சேனா... அதுனால இப்ப என்ன எழுதுறதுன்னே தெரியாமப் போச்சு. சரி .. உடுங்க... சான்ஸ் கிடைக்கும் போது பாத்துக்குவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு