முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவாஜி The BOSS - Coooooooooooool ! :)



நானெல்லாம் இன்னும் பாபா, சந்திரமுகி பார்க்காத அளவுக்கு ரஜினியின் அதிதீவிர ரசிகன்! அதுபோக நான் ஏன் ரஜினி படங்களை ரசிக்கறேன்னும் ஏற்கனவே கொசுவத்தி சுத்தியிருக்கறேன். அதனால இந்த பதிவை இவனும் மண்சோறு திங்கற கும்பல்ல இருப்பானோங்கற சந்தேகக் கண்ணோட பார்க்காம இதுவும் இன்னொரு சாதாரண ரசிகக் கண்மணியோடதே அப்படின்னாச்சும் நினைச்சுக்கிட்டு சும்மா ஜாலியா படிங்க! :)

படம் சும்மா சொல்லக் கூடாதுங்க! அடி! அதிரடி!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ரெண்டாம் வரிசை நாயகர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு அடிச்சுக்கிட்டது நினைவுல இருக்குங்களா?! அவங்களுக்கு எல்லாம் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் அழுத்தமான சேதி என்னன்னா... இன்னும் அடுத்த 10 வருசங்களுக்கு சூப்பர்ஸ்டாராக கனவுலகூட நெனைக்காதீங்கப்பேய்! :) அஞ்சுக்கப்பறம் ஆறு! சிவாஜிக்கப்பறம் யாரு?! உண்மைதானுங்...

ரஜினி மொத சீன்ல "மக்களுக்கு நல்லது செஞ்சேன்!"ங்கறதால ஜெயிலுக்கு உள்ளே வந்தேங்கறதுல இருந்து கடைசிசீன்ல மொட்டைத்தலைல தபேலா வாசிக்கறது வரைக்கும் நான்ஸ்டாப் அசத்தலுங்க. மனுசன் மனசை சும்மா அள்ளிக்கிட்டு போறாரு! அந்த துறுதுறு நடையும் சுறுசுறு டயலாக் டெலிவரியும் இருக்கறவரைக்கும் யாரும் அடிச்சுக்கவே முடியாது போல. நினைச்சுப்பாருங்க! 3 மணிநேர படத்தை கொஞ்சமும் சலிப்படையாம உட்கார்ந்து பார்க்க வைக்கனும்னா அது சாதனைதான்!


ரஜினியிடன் இன்னமும் இளமை இருக்குங்க! அட்டகாசமா லவ்வறாரு! அருமையான ரஜினி ட்ரெண்டு டான்ஸ்சு ஆடறாரு! பைட்டுல சும்மா பறந்து பறந்து அடிக்கறாரு! ஜாலியா அசால்டா காமெடி பண்ணாறாரு! இதைவிட வேற என்ன வேணும்? ஆனா குரல்ல மட்டும் கொஞ்சம் வயசு தெரியுது! விடுங்க... அடுத்த படத்துல அதையும் சரி செஞ்சிடுவாரு! :)


படத்துல ரஜினிக்கு ஜோடி ஸ்ரேயாவா விவேக்கான்னே சந்தேகம் வந்துருது. பாட்டுங்க தவிர மத்த அத்தனை சீன்லயும் கூடவே ஒட்டிக்கிட்டு வர்றாரு. ஆனா சிரிக்கத்தான் முடியலை. விவேக் பீரியடு முடிஞ்சிருச்சா?! பட்டிமன்றம் ராஜா, பாப்பையா அய்யா கூட நல்லா காமெடி செஞ்சிருக்காங்க. இவ்வளவு ஏன்? பல இடங்களில் ரஜினியே தூள் கெளப்பியிருக்காரு. ஆனா விவேக்கு இன்னமும் ட்ரேட்மார்க் பாடிலேங்வேஜ், வசனங்கன்னு ஓவர் டார்ச்சரு. சின்னக்கலைவாணரே... சீக்கிரம் டிராக்கை மாத்துங்க! இதுவரைக்கும் வந்ததுல ரஜினி-கவுண்டரு காம்பினேஷன் தான் டாப்புங்கறது என் எண்ணம். ரஜினிக்கு மட்டுமல்ல... சத்தியராஜ், விஜய், கார்த்திக்னு பலபேருக்கு கவுண்டருதான் அல்டிமேட் காம்பினேஷன்!


ஸ்ரேயா, அம்சமா இருக்காங்க. அழகா இருக்காங்க. அழுகிற காட்சிகளில் கூட அழாம நடிச்சிருக்காங்க. இதுபோக பல இடங்களில் அவர்களது உடுக்கை இடுப்பு மிகப்பிரமாதமாக நடித்திருந்ததையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்! ஹிஹி. அம்மணி, இனிமேல் கொஞ்சம் சூதனமா இருந்து அடுத்து இளவட்டப்பயலுகளோட சோடி போட்டு நடிங்க. இல்லாம அடுத்ததா சரத்குமாரு, விஜயகாந்துன்னு முன்னனி ஹீரோக்களோட மட்டும்தான் நடிப்பேன்னு ஏதாவது மார்க்கெட்டு வேல்யூ காட்டனீங்கன்னா, அப்பறம் அடுத்த "மீனா"வாக ஆகறதுக்கு பிரகாசமான வாய்ப்புகள் அதிகம்!


பாப்பையா பொண்ணுங்க அங்கவையும் சங்கவையும் என்ன மாதிரியான காமெடியோ? சங்கருக்கும் சுஜாதாவுக்குமே வெளிச்சம்! மெயின் வில்லன் சுமனுக்கு நல்ல தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சீக்கிரமே "காதல்" தண்டபாணியின் இடத்தை பிடிப்பார்! அவ்வளவு திறமை காட்டியிருக்கிறார்! சிறிது காலத்துக்கு முன் "அகில இந்திய ரசிகர் மன்றம்" கண்ட மெட்டிஒலி போஸ் வெங்கட் சுமனுக்கு அடியாளாக வருகிறார். அவ்வளவு வளர்ச்சி! :) அதேபோல, சைடு வில்லன் மாயாண்டி பேய்க்காமனின் திரைத்துறை வளர்ச்சி அவரது இடுப்பளவில் தெரிகிறது!

ரஜினிக்கு காமெடிங்கறது வெகு இயல்பா வருங்கறது பல இடங்களில் பளிச்! பேர்&லவ்லி போட்டுக்கிட்டு "நான் கமலஹாசன் மாதிரி ஆயிருவேன்"கறதும், "மாமா! என்ன வைச்சு காமெடி கீமெடி பண்ணலியே"ங்கறதும், ஸ்ரேயா வீட்டுக்காரங்க கூட "பழகிப் பழகி" வெளையாடறதும், வேண்டாங்க... விளக்க முடியாது. நீங்களே பார்த்து ரசிங்க! கமல் ரஜினி மாதிரி டான்ஸ் ஆடறது நடக்குதோ இல்லையோ ரஜினி கமல் மாதிரி ஆடறது நடந்திருச்சு! கூடவே கொசுறா சிவாஜி, எம்ஜியாரு டான்சும்!!! சென்னைல விசில் பறந்திருக்கும். இங்க நான் மட்டும் சிரிச்சுக்கிட்டேன்!

ரஹ்மான் பாட்டெல்லாம் மொதல்ல கேக்கறப்ப அவ்வளவா பிடிபடாது. ஆனா படத்தோட பார்க்கறப்ப ஒரு தூக்கு தூக்கிறும். ரஜினிக்கு கேக்கனுமா?! சன்லைட் பாட்டுலயும் அதிரடி பாட்டுலயும் சும்மா வெளுத்து வாங்கிட்டாய்ங்க! ஆனாலும் சங்கர் இந்த செட்டு போடறதையும் கிராபிக்ஸு வைக்கறதையும் என்னைக்குத்தான் நிறுத்தப் போறாரோ?! பல இடங்களில் அபத்தமா பல்லை இளிக்குது! இம்மாம் பெரிய டைரக்டருக்கு பாடல் காட்சிகளில் மட்டும் பயங்கறமா கற்பனை வறட்சி. மொத பாட்டுக்கு தொப்பைல ரஜினிபடம் வரைஞ்சுக்கிட்டு 50 பேரு ஆடறாங்க... சகிக்கலை! ( ஆனா அதே பாட்டுல நயன்தாரா... ஹிஹி... )


படத்துல எனக்கு பிடிக்காத ஒரே விசயம் அந்த பிரமாண்டம் தாங்க! வீட்டுல வடை சுட்டாலும் 50 ஐய்ட்டம் போடறாங்க. சண்டை போட்டலும் 100 கிட்டாரை ஒடைக்கறாங்க. பல இடங்களில் காசை வீணாக்கறது தெரியனும்னே வீணாக்கியிருக்காங்க. AVM சரவணன் சங்கரோட இந்த இம்சையை வழக்கம்போல கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்திருப்பாரு போல! நல்ல பாட்டுக்கு திராபையா ஒரு கண்ணாடி மாளிகை கட்டி அதுல நடனநங்கைகளுக்கு இறக்கைக மாட்டி விசிறிக்க வைக்கறாங்க. ரஜினிங்கற பிரமாண்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் பல இடங்களில் எடுபடவே இல்லை. "காதலின் தீபம் ஒன்று.." அப்படின்னு சிம்ப்பிளா அருமையா அழகா பாடி மக்க மனசுல இடம்பிடிச்சவருக்கு டூயட் பாட்டுக்கு 2 கோடி ரூபாய் கண்ணாடி செட்டுங்க அப்படிங்கறது எல்லாம் சந்தனக்கட்டைமேல பாடிஸ்பிரே அடிச்சா மாதிரி! ( படத்துல ரஜினி ஓட்டற கறுப்பு டொயொட்டா 4X4 சங்கரோடதாம். ஆனா கார் சேஸ் பைட்டு சீன்ல மட்டும் அதை வெவரமா கறுப்பு ஸ்கார்பியோவா மாத்திட்டாரு! இந்த வெவரம் ப்ரொடியூசரு காசை கரைக்கதுலயும் இருக்கனும்ல?! )


சங்கரு அடுத்த படத்துக்கு எப்படியும் 3 மாசத்துக்கு ரூம்போட்டு யோசிக்கனும். சமுதாய அவலங்களை தேடிக் கண்டுபுடிச்சு அதை கோடிகோடியா மார்க்கெட்டு பண்ணறதுன்னா சும்மாவா?! இதே ரேஞ்சுல போனா அடுத்தது சினிமாவால சீரழியற தமிழகத்தை ஹீரோ எப்படி பிரம்மாண்டமாய் போராடி காப்பாத்தறாருங்க சொ.செ.சூல போய் முடியக்கூடும்!

இவ்வளவு சொன்னயே? கதைய சொல்லலியேன்னா கேக்கறீங்க? போங்க சார்... சும்மா தமாசு பண்ணாதீங்க! லட்டு சாப்பிடறப்ப முந்திரிப்பருப்பு கிடைக்கலைனாலும் இனிக்காமயா போயிரும்? :)

அதனால,

ரஜினி ஒரு கன்னடர்... வட்டாள் நாகராஜோட கூட்டாளி... அவர் படங்களை புறக்கணிப்போம் என்பவர்களும்...

60 வயசு தாத்தாக்கு 20 வயசு ஹீரோயினா என வெள்ளித்திரையில் பெண்ணீயம் தேடியபடி உள்குத்து பதிவுகள் போடுபவர்களும்...

கட்டவுட்டுக்கு பால் ஊத்தற ரசிகர்களை கரித்துக்கொட்டும் சமுதாய அக்கறை கொண்ட சிந்தனையாளர்களும்...

ரஜினி எப்படி தமிழக பொருளாதாரத்தை அடியோடு சுரண்டி அதை அப்படியே கர்நாடகாவுக்கு கொண்டுபோய் அங்கே சொர்க்கபூமியாக மாற்றியிருக்கிறார் என வருத்தப்படும் பிராந்திய பொருளாதார நிபுணர்களும்...

இவரெல்லாம் என்னாத்த நடிக்கறாரு.. சும்மா பன்ச்சு டயலாக்கெல்லாம் ஒரு நடிப்பா.. இந்தாளுக்கு எதுக்கு இத்தனை சம்பளம்.. எதுக்கு இவருபின்னாடி இத்தனை ரசிகருக்கு என வருத்தப்படும் தமிழ்க்கலையுலகம் காக்கவந்த கலைத்தாயின் மூத்த புதல்வர்களும்...

ரசிகர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆசைகளை தூவி குளிர்காய்கிறார் என்று வருங்கால தமிழகத்தின் அரசியலை வழிநடத்தும் கவலைகளோடு இருப்பவர்களும்...

மேற்சொன்ன எல்லாத்தையும் ஒரு 3 மணிநேரம் ஒதுக்கி ஓரமா வைச்சுட்டு சும்மா ஜாலியா குடும்பத்தோட சிவாஜிக்கு போயிட்டு வாங்க மக்கா! எண்டெர்டெயின்மெண்ட்டு 110% கேரண்டி!!!

அதெல்லாம் முடியாது.. நாங்க கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டோம் அப்படின்னு உறுதியா இருந்தாலும்... ஒன்னும் நட்டமில்லை..

Coooooooooool !!! :)

கருத்துகள்

  1. hiii Boss...how come noone left any feedback here???

    one thing is sure..this movie is entertaining people......

    பதிலளிநீக்கு
  2. இதுதானய்யா, விமர்சனம் நம்பர் ஒன். இளவஞ்சி சூப்பர். இதை விமர்சனம் என்று சொல்வதா, திறனாய்வு என்றுச் சொல்வதா :-)

    பதிலளிநீக்கு
  3. படம் எப்படியோ தெரியாதுங்க.. உங்க விமரிசனம் தூள் !!! கடைசில சொல்லியிருக்கிங்களே அதுதான் நம்ம policy. Excellent !!
    ..Ag

    பதிலளிநீக்கு
  4. //மேற்சொன்ன எல்லாத்தையும் ஒரு 3 மணிநேரம் ஒதுக்கி ஓரமா வைச்சுட்டு சும்மா ஜாலியா குடும்பத்தோட சிவாஜிக்கு போயிட்டு வாங்க மக்கா! எண்டெர்டெயின்மெண்ட்டு 110% கேரண்டி!!!//


    Cool!!! :)

    பதிலளிநீக்கு
  5. சங்கரு அடுத்த படத்துக்கு எப்படியும் 3 மாசத்துக்கு ரூம்போட்டு யோசிக்கனும். -- LOL

    உங்களுடைய இயல்பான சரளமான நடை உங்கள் எழுத்தின் ஒரு பலம். தொடர்ந்து எழுதுங்க!!

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி விமர்சனம் பெஸ்ட்டோ பெஸ்ட்டு.. அதைவிட கடைசியா சொல்லிருக்குற 'பஞ்ச்சஸ்' சூப்பரோ சூப்பர்..

    பதிலளிநீக்கு
  7. சோம்பேரி,

    நடுராத்திரில பதிவை போட்டுட்டு தூங்க போயிட்டேன்! அதான் :)

    அனானி,

    ஏதோ திட்டறீங்க! ஆனா புரியலை.. முழுசா திட்டுங்கப்பு! :)

    உஷா,

    // இதை விமர்சனம் என்று சொல்வதா, திறனாய்வு என்றுச் சொல்வதா //

    நான் என்னைக்குங்க அதெல்லாம் செஞ்சிருக்கேன்? என் வழக்கமான திரைப்புலம்பல்! அவ்வளவே! :)

    Ag,

    நன்றி!

    பதிலளிநீக்கு
  8. கூமுட்டை, கப்பிபய,

    நன்றி! :)

    Manki,

    // தொடர்ந்து எழுதுங்க!! // அதுவந்து.. ஹிஹி..

    உண்மைத்தமிழன்,

    // அதைவிட கடைசியா சொல்லிருக்குற 'பஞ்ச்சஸ்' // ஏதேது?! விட்டா என்னை பஞ்சராக்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீங்க போல! :)))

    பதிலளிநீக்கு
  9. நல்ல விமரிசனம் இளவஞ்சி

    ஆனா குரல்ல மட்டும் கொஞ்சம் வயசு தெரியுது! விடுங்க... அடுத்த படத்துல அதையும் சரி செஞ்சிடுவாரு! :)

    :-)))

    எண்டெர்டெயின்மெண்ட்டு 110% கேரண்டி!!!

    Cool :-))

    அப்புறம்,உங்க 'கொசுவத்தி சுத்தின' பதிவு ரொம்ப நல்லா இருந்தது.

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு இளவஞ்சி. படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டியது. டிவில ரஜினி வந்தாலே என்னோட குட்டிப்பசங்க ரெண்டு பேத்தையும் கைலயே பிடிக்கமுடியாது. தியேட்டர்க்குக் கூட்டிட்டுப் போய்த்தான் பாக்கணும் இந்தப் படத்தை-ன்னு முடிவோட இருக்கேன். இந்த வாரயிறுதியில் முடியாது. அடுத்த வாரயிறுதிவரை பாஸ்டன்ல ஓட்டுவாய்ங்களான்னு தெரியலை. விசாரிக்கணும்.

    சங்கருடைய படங்களில் நான் வெறுப்பது தேவையற்ற பிரம்மாண்டங்களும், வெட்டியான கிராபிக்ஸ் வேலைகளும்.

    சரளமான எழுத்துநடையில் சிறப்பாக இருக்கிறது பதிவு.

    பல்லேலக்கா பாட்டைத் தலைவர் பாடியிருக்காரே. தூள் கிளப்பியிருப்பாங்க போலன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். விமர்சனங்களைப் பாத்தா பாட்டை ரொம்ப சுமாராப் படமாக்கியிருக்காங்க போலயே? அப்படியா?

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நல்ல விமர்சனம்!

    ரஜ்னிகாந்தின் shades, style பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?

    உங்க கடைசி சில பத்திகள் நல்ல சிரிப்பை வரவழைத்தது! யாரையோ குத்துகிறீர்கள் என்று தெரிகிறது, பாவம் விட்டுவிடுங்கள்.

    -யு.எஸ்.தமிழன்

    பதிலளிநீக்கு
  12. cooooool விமர்சனம்...

    //இதே ரேஞ்சுல போனா அடுத்தது சினிமாவால சீரழியற தமிழகத்தை ஹீரோ எப்படி பிரம்மாண்டமாய் போராடி காப்பாத்தறாருங்க சொ.செ.சூல போய் முடியக்கூடும்!
    //
    இளவஞ்சி டச் இதானா..அருமை+ :-)


    //அதெல்லாம் முடியாது.. நாங்க கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டோம் அப்படின்னு உறுதியா இருந்தாலும்... ஒன்னும் நட்டமில்லை..
    //

    நச்சுன்னு சொல்லியிருக்கிங்க..

    பதிலளிநீக்கு
  13. ரஜினி என்ற மனிதர் தான் படத்தின் வெற்றி... சங்கர் என்பதால் கூட பிராமண்டம் என்பதை தெளிவா சொல்லிட்டீங்க...

    ரஜினியோட பலமே அவரின் வெறி பிடிச்ச ரசிகர்களை மீறி அவர் படத்தில் அப்படி என்ன தான் இருக்கு என்று பாப்போம் என்று ஒரு கூட்டம் இருக்கு....

    மொத்ததில் உங்க ப்திவு கூல்ல்ல்ல்ல்ல்

    பதிலளிநீக்கு
  14. சர்வே ஜீ, கதிரவன்,

    நன்றி! :)

    சுந்தர்,

    // சங்கருடைய படங்களில் நான் வெறுப்பது தேவையற்ற பிரம்மாண்டங்களும், வெட்டியான கிராபிக்ஸ் வேலைகளும். //

    கேட்டா கதைக்கு ஒரு ரிச்நெஸ் தேவைம்பாங்க! :)

    பல்லேலக்கா பாட்டு அருமைங்க! சங்கர் அவரு பார்முலால படமாக்கியிருப்பாரு! அதாங்க.. ரோட்டுக்கு பெயிண்ட்டடுக்கறது.. சிங்கம் புலி வேசம்கட்டி ஆடறதுன்னு! :) ரஜினியின் அறிமுகப்பாட்டுல இருக்கற ஒரு ஹெப் இதுல மிஸ்ஸிங்... நயந்தாரா புடிக்கும்னா இன்னும் ரசிக்கலாம்! ;)

    யு.ஸ். தமிழன்,

    // ரஜ்னிகாந்தின் shades, style பற்றி ஒன்றும் சொல்லவில்லையே// அதாங்க மொதல்வரி அடி! அதிரடி!! :)

    // யாரையோ குத்துகிறீர்கள் என்று தெரிகிறது // இது அநியாயங்க! பொழுதுபோக்கா பாருங்க.. பார்க்கப் பிடிக்கலைன்னாலும் உங்களுக்கு ஒன்னும் நட்டமில்லைன்னு தானே சொல்லியிருக்கறேன்! :)

    பதிலளிநீக்கு
  15. நாகை சிவா,

    //ரஜினியோட பலமே அவரின் வெறி பிடிச்ச ரசிகர்களை மீறி அவர் படத்தில் அப்படி என்ன தான் இருக்கு என்று பாப்போம் என்று ஒரு கூட்டம் இருக்கு//

    உண்மை தாங்க.. நான் தனியா படம் பார்த்துட்டு வர்றப்ப எனக்கு இருந்த சந்தோசத்தை விட, பொடுசுகளோட குடும்பம் மொத்தமுமா வந்திருந்தவங்க முகத்துல அதிகமா சந்தோசம் இருந்தது! பொதுவாகவே நம்ப ஊர்ல குடும்பமா சினிமாக்கு போவதுங்கறது சினிமாவுக்கு மட்டும் இல்லை! கடைத்தெருவுக்கு போய் துணியோ நகையோ வாங்கிட்டு, அப்பறம் படம் பார்த்துட்டு அப்படியே வெளில சாப்டுட்டு சந்தோசமா இருந்துட்டு வர்றதுக்கான ஒர் வாய்ப்பு! அதுல ரஜினி படம்னா கொஞ்சம் ஸ்பெஷல்! அவ்வளவுதான்! :)

    மனதின் ஓசை,

    ஊக்கங்களுக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  16. "சந்தனக்கட்டைமேல பாடிஸ்பிரே அடிச்சா மாதிரி!"
    :)) Coool!

    எழுத்துல 110% போட்டுட்டு படத்துல 100% தான் போட்டுருக்கீங்க ;-)

    பதிலளிநீக்கு
  17. Sun,

    // எழுத்துல 110% போட்டுட்டு படத்துல 100% தான் போட்டுருக்கீங்க //

    அது... வந்து...

    110% மீடியா ஹைப்புங்க (நானெல்லாம் மீடியாவாம்!! )

    100% மினிமம் காரெண்ட்டிங்க!

    ஹிஹி...

    பதிலளிநீக்கு
  18. கறி வறுவல்ல கறியை விட கருவேப்பிலை எக்கச்சக்கமா இருக்குறது மாதிரி போய்க்கிட்டிருக்கு ஷங்கர் படங்கள். ஜெண்டில்மேன், காதலன், இந்தியன்..அப்படியே முதல்வன் வரைக்கும் ரசிச்சதை இப்ப ரசிக்க முடியலை. கொஞ்சம் மூளையைப் பயன்படுத்துனா நல்லது.

    நாங்க...எங்க வீட்டுல எப்பவுமே ரஜினி படத்துக்குப் போக மாட்டோம். சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். மொதமொத நாங்க வீட்டோட பாத்த ரஜினி படம் மாப்பிள்ளை. பொட்டும் பொடிசா நண்டும் சிறுசா இருந்தப்பப் பாத்தது. படத்தப் பாத்து நான் அமலா ரசிகனானதுதான் மிச்சம். அதுக்கப்புறம் எதுவும் பாத்த நினைவில்லை.

    ரொம்ப நாள் கழிச்சி முத்துங்குற படம் பார்த்தேன். ஏன்னா...அந்த அரசியல் சூழ்நிலை. அருணாச்சலம் போகலை. கொஞ்ச நாள் கழிச்சு பாக்கப் போனா..தேட்டர்ல பத்து பேரு. அடுத்து படையப்பா. அது வந்தப்போ பெங்களூருக்கு வந்த புதுசு. ஒடனே போய்ப் பாத்துட்டேன். ரெண்டு காரணம். படம் தமிழ்ப் படம். அடுத்தது அதுல சிவாஜி நடிச்சிருந்தது.

    பாபாவைப் பார்க்கவே இல்லை. ஆனா சந்திரமுகி பார்த்தோம். மறுபடியும் அம்மா அப்பாவோடு. பெங்களூரில். காரணம்? மணிசித்ரதாழு. நான் ஏற்கனவே பார்த்த படம். மிகவும் பிடித்த படம். ஆகையால் சந்திரமுகி. இப்பொழுது சிவாஜி. ஆனால் போக வேண்டும் என்று தோன்றவில்லை. காரணம் படத்தில் ஈர்க்கும் விஷயம் எதுவுமே இல்லை. சாகாரா பாட்டு நன்றாக இருக்கிறது. ஆனால் அது படத்தில் இல்லையாம். தமிழை உதுத்த நாராயணன் பாடிய பாடல்தான் படத்தில் இருக்கிறதாம். அப்புறமென்னத்துக்குப் பாக்குறது? என்னது பொழுது போக்கவா? Oceans's 13, shrek the third, harry potter எல்லாம் வரிசையா இருக்கே. சூர்யா நடிச்சு வேல் வேற வரப் போகுது. இப்போதைக்கு அது போதும். ஆனா இங்க பயக படம் பாத்தே ஆகனும்னு துடிக்கிறாங்க. அவங்களால போய்ப் பாத்தாலும் பாப்பேன்.

    பதிலளிநீக்கு
  19. chellam ..i love u..i like u too..\
    rajini veriyan

    பதிலளிநீக்கு
  20. இளவஞ்சி,

    எல்லாம் ஒரு குருப்பாத்தான் அலையறாங்க்கப்பா,இப்படியே எல்லாம் சிவாஜிக்கு முன்னால் ,பின்னால் ,பக்கவாட்டில் எல்லாம் ஏதேனும் ஒரு பதிவைப்போட்டுக்கொண்டே போனால் முடிவு தான் என்ன, இப்படியே போனால் சி என்றால் சிவாஜி என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். நிறுத்துங்கய்யா ... நிறுத்துங்க , அவன நிறுத்த சொல் நான் நிறுத்தறேனு மொக்கைப் போடாம நிறுத்துங்கய்யா.((தனித்துவமானவன்... உங்களைப்போலவே நு கேப்ஷன் எல்லாம் உங்க பதிவில் இருக்கே அதன் அர்த்தம் என்னவோ?)

    பதிலளிநீக்கு
  21. யோவ் ஜீரா,

    // கறி வறுவல்ல கறியை விட கருவேப்பிலை எக்கச்சக்கமா இருக்குறது மாதிரி //
    // தமிழை உதுத்த நாராயணன் //

    உமக்கு குசும்பு ஓவர்தான்! :)

    ஆர்னால்டு சிவநேசன் படத்தை பார்த்துட்டு அவருக்கு டாம் ஹேங்ஸ் மாதிரி நடிக்க வரலைன்னு சொல்லலாமா? டெர்மினேட்டர் காஸ்டவேல பாதிகூட வராதுன்னு கம்பேர் பண்ணாலாமா? இல்லை அவங்க எல்லாம் நடிக்க வராமத்தான் ஃபார்முலா படங்க செய்யறாங்களா?!

    அவங்கவங்க படத்துக்கு அந்தத்த மனநிலையோட போனா நிறைய படங்கள் ரசிக்கலாம்! வரப்போற தசாவதாரத்துக்கு சிவாஜி பார்த்த மனநிலையிலா போவேன்? :)

    வாய்ப்புக்கிடைச்சா பாரும் ஓய்! இல்லைன்னாலும் ஒன்னும் கெட்டுப்போகாது! அதுக்காக Ocean13 போவேங்கறீரே?! நியாயமா? எதுக்கும் மந்திரிச்ச தாயத்து ஏதாவது கட்டிக்கிட்டு போங்க! புரிஞ்சாலும் புரியும்! :)

    // படத்தப் பாத்து நான் அமலா ரசிகனானதுதான் மிச்சம்// சீக்கிரமே ஸ்ரேயா ரசிகனாகக் கடவது!

    // இப்போதைக்கு அது போதும். ஆனா இங்க பயக படம் பாத்தே ஆகனும்னு துடிக்கிறாங்க. அவங்களால போய்ப் பாத்தாலும் பாப்பேன். //

    ரஜினி படம் பாக்கப் போறதை பத்தி ரஜினி மாதிரியேவா ஸ்டேட்மெண்ட் விடறது!? :)))

    பதிலளிநீக்கு
  22. அனானி அண்ணே!

    // chellam ..i love u..i like u too.. // என்னா வெளையாட்டு இது? :)))


    வவ்வால்,

    நிறுத்திக்கறேன்! நான் இத்தோட நிறுத்திக்கறேன்! :)

    // ஏதேனும் ஒரு பதிவைப்போட்டுக்கொண்டே போனால் முடிவு தான் என்ன // முடிவு அடுத்த பரபரப்புதான்! ஆனால் வலையுலகில் அடுத்தது என்ன பரபரப்பாகும் என்பது நானறியோம் பராபரமே! :)

    // அதன் அர்த்தம் என்னவோ? //

    ம்ம்ம்.. வந்து.. அதாவது... மொக்கை போட்டாலும் உப்புமா கிண்டுனாலும் என் ஸ்டைல்ல கிண்டறேன்! நீங்க உங்க ஸ்டைல்ல கிண்டுங்கங்கறது! :)

    கோச்சுக்காதீகப்பு... இதோ நிறுத்திடறேன்!!!

    நிறுத்திட்டேன்!!!

    ( பசிக்குது... 3 தோசையும் கூட தொட்டுக்க போன மாசத்து MTR பொடியும் போனவார பொதினா சட்னியும் நேத்தைய பாசிப்பருப்பு சாம்பாரும் வைச்சு சாப்டுட்டு திரும்ப வர்றேன்! )

    OK.. OK.. நெஜமாவே நிறுத்திட்டேன்!!!

    பதிலளிநீக்கு
  23. //மேற்சொன்ன எல்லாத்தையும் ஒரு 3 மணிநேரம் ஒதுக்கி ஓரமா வைச்சுட்டு சும்மா ஜாலியா குடும்பத்தோட சிவாஜிக்கு போயிட்டு வாங்க மக்கா! எண்டெர்டெயின்மெண்ட்டு 110% கேரண்டி!!!//

    நாமெல்லாம் இப்படி எல்லாத்தையும் ஒதுக்கிஓரமா வச்சிட்டு படம் பார்க்கிறதாலதான் அவரு எங்கள (வேற யாரு, இளிச்சவாய் தமிழனைத்தான்) ஒதுக்கிட்டு, கர்னாடகாவில எல்லாத்தையும் கொண்டுபோய் ஒதுக்குறாரு.

    பதிலளிநீக்கு
  24. when everyone this website are simply finding mistakes and going for rajini appose policy...i find your review as a neutral one...there may be few holes but rajini the wild river swipes all holes and make the film run faster is the truth,if some one says truth i like them...cool...
    but no change in my mind...i love you
    rajini veriyan

    பதிலளிநீக்கு
  25. இளவஞ்சி, சிவாஜி முதல் ஷோ பார்த்துவிட்டு வந்த நிமிடம் முதல், கிட்டத்தட்ட பதிவிடப்பட்ட அத்தனை விமர்சனத்தையும் படித்து விட்டேன். தவிர தினசரிகள் வெளியிட்ட அத்தனை விமர்சனங்களையும் படித்துவிட்டேன். அனைத்திலும் சிறந்ததாய் தங்களுடையது இருந்தது.

    மிக்க அன்புடன்
    செல்வேந்திரன்.

    பதிலளிநீக்கு
  26. படிச்சதும் உங்கள் நினச்சி ரொம்ப பாவமா போச்சு, இளவஞ்சி. பாவம்தான் நீங்க. ஏன்னா ..
    //பசிக்குது... 3 தோசையும் கூட தொட்டுக்க போன மாசத்து MTR பொடியும் போனவார பொதினா சட்னியும் நேத்தைய பாசிப்பருப்பு சாம்பாரும் வைச்சு சாப்டுட்டு திரும்ப வர்றேன்! )//

    :(

    பதிலளிநீக்கு
  27. தருமிசார்,

    // படிச்சதும் உங்கள் நினச்சி ரொம்ப பாவமா போச்சு, இளவஞ்சி //

    நாலு இட்லிக்கு ஏழெட்டு வகை சட்னியும் சாம்பாரும் குருமாவும் ஊத்தி அடிக்கற மதுரக்கார ஆளுக்கு என்னைப்பார்த்தா அப்படித்தான் இருக்கும்! :)

    இதுக்கெல்லாம் வட்டியும் மொதலுமா மதுரைக்கு வந்தா வாங்கிறமாட்டேன்?

    உங்க வீட்டுச்சாப்பாடே கூடாது! அத்தனை தட்டுக்கடைலயும் ஏறி எறங்கிருவோம்!! :)))

    பதிலளிநீக்கு
  28. //மேற்சொன்ன எல்லாத்தையும் ஒரு 3 மணிநேரம் ஒதுக்கி ஓரமா வைச்சுட்டு சும்மா ஜாலியா குடும்பத்தோட சிவாஜிக்கு போயிட்டு வாங்க மக்கா! எண்டெர்டெயின்மெண்ட்டு 110% கேரண்டி!!!//
    220% சந்தோஷப்பட்டாச்சுங்க. நீங்க சொல்ற எல்லாமே சரி.

    பதிலளிநீக்கு
  29. Rashka,

    கருத்துக்களுக்கு நன்றி! அவர் சம்பாதிப்பதை அவர் என்ன செஞ்சா நாம எப்படிங்க கேக்க முடியும்? படம் நல்லா இருக்குன்னு சொல்லறேன். அவ்வளவுதான். நீங்க அவரை நடிகனாக அல்ல! ஒரு நல்ல வியாபாரியாகவாது பாருங்க. சரக்கு புடிச்சா வாங்குங்க. இல்லையா, ஒதுக்கிருங்க. ஆனா வியாபாரமே செய்யக்கூடாதுங்கறது சரியாப்படல! நாட்டை முன்னேத்தறது, வறுமைய ஒழிக்கறது, தமிழினத்தை முன்னேத்தறதுன்னு நாட்டுத்தலைவருங்க செய்யவேண்டியதையெல்லாம் வெள்ளித்திரை நடிகருகிட்ட தேடுறது யார் தவறு? அப்பறம் எதுக்குய்யா "வருவேன்.. வரமாட்டேன்னு" வாய்ஸ் குடுத்து வெளையாடறாருன்னா, அப்பவெல்லாம் நான் ஜஸ்ட் லைக் தட் சிரிச்சிட்டு போவேன். அவ்வளவுதான்.


    // இளிச்சவாய் தமிழனைத்தான் // தமிழகத்தில் தமிழனை இளிச்சவாயனாக வைத்திருப்பதற்கு முக்கியக் காரணகர்த்தா ரஜினியா?! எனக்கு அப்படி தோணலை! :)

    அனானி,செல்வேந்திரன்,

    ஊக்கங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  30. // இளவஞ்சி said...
    யோவ் ஜீரா,

    // கறி வறுவல்ல கறியை விட கருவேப்பிலை எக்கச்சக்கமா இருக்குறது மாதிரி //
    // தமிழை உதுத்த நாராயணன் //

    உமக்கு குசும்பு ஓவர்தான்! :) //

    என்னய்யா! குசும்புன்னா கோயமுத்தூருக்குக் குத்தகைக்கா விட்டிருக்கு. எங்கூருக்கு வந்து பாருங்க. குசும்பு கூத்தாடும். :)

    // ஆர்னால்டு சிவநேசன் படத்தை பார்த்துட்டு அவருக்கு டாம் ஹேங்ஸ் மாதிரி நடிக்க வரலைன்னு சொல்லலாமா? டெர்மினேட்டர் காஸ்டவேல பாதிகூட வராதுன்னு கம்பேர் பண்ணாலாமா? இல்லை அவங்க எல்லாம் நடிக்க வராமத்தான் ஃபார்முலா படங்க செய்யறாங்களா?! //

    அர்னால்டு சிவாஜிநகர் பார்முலா போட்டு நடிச்சாரு நடுவுல...நல்ல படங்களும் நடிச்சாரு. ஜூனியர்ல அம்மாவாகுறது...ஜிங்கில் ஆல் த வே-ல காமெடி..கொஞ்சம் மாறி மாறி முயற்சி செய்றாங்கள்ள...ரஜினிக்கு நடிக்கவே தெரியாதுன்னு சொல்லலை. முள்ளும் மலரும், ஜானி, பில்லா, தில்லு முல்லு...எத்தனை வேணும். இப்ப வரிசையா இப்பிடித்தான்னா எப்படி? எங்களுக்கு ஓவர் டோசா இருக்கு.

    // அவங்கவங்க படத்துக்கு அந்தத்த மனநிலையோட போனா நிறைய படங்கள் ரசிக்கலாம்! வரப்போற தசாவதாரத்துக்கு சிவாஜி பார்த்த மனநிலையிலா போவேன்? :) //

    உண்மைதான். ஒத்துக்கிறேன். அந்த மனநிலையும் பக்குவமும் நோக்கு இருக்கு. நேக்கு இல்லையே! நேக்கு யாரத் தெரியும்! எங்க போவேன்! :))))

    // வாய்ப்புக்கிடைச்சா பாரும் ஓய்! இல்லைன்னாலும் ஒன்னும் கெட்டுப்போகாது! அதுக்காக Ocean13 போவேங்கறீரே?! நியாயமா? எதுக்கும் மந்திரிச்ச தாயத்து ஏதாவது கட்டிக்கிட்டு போங்க! புரிஞ்சாலும் புரியும்! :) //

    என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க. Ocean's 12 பாத்ததுமே அடுத்த படம் வரும்னு முடிவு கட்டிக் காத்திருக்கோம்ல. இன்னைக்குப் போறேய்யா போறேன். :)

    //// படத்தப் பாத்து நான் அமலா ரசிகனானதுதான் மிச்சம்// சீக்கிரமே ஸ்ரேயா ரசிகனாகக் கடவது! //

    ஸ்ரேயாவா? அது ஸ்ரேயாவோட ப்ராப்தியைப் பொருத்து :))))))))))

    //// இப்போதைக்கு அது போதும். ஆனா இங்க பயக படம் பாத்தே ஆகனும்னு துடிக்கிறாங்க. அவங்களால போய்ப் பாத்தாலும் பாப்பேன். //

    ரஜினி படம் பாக்கப் போறதை பத்தி ரஜினி மாதிரியேவா ஸ்டேட்மெண்ட் விடறது!? :))) //

    என்ன பண்றது? ஆண்டவன் சொல்றான். ஜிரா செய்றான்! கதம் கதம். :)

    பதிலளிநீக்கு
  31. http://www.viduppu.net/index.php?subaction=showfull&id=1181910764&archive=&start_from=&ucat=1&

    பதிலளிநீக்கு
  32. முதல் பாதியில் அரை மணி நேரம் செம்ம மொக்கை.

    இரு குடும்பங்களும் பழகப் போகுதல்,சிவாஜி வெள்ளையாக முயற்சி செய்யறது எல்லாமே ரத்தம் வர வைக்குது.இரண்டாம் பகுதியில இதற்கெல்லாம் சிகரம் வைக்கிற மாதிரி வருது அந்த தாவணியால ரயிலை நிறுத்துற காட்சிகள்.

    என்ன கொடுமை சிவாஜி இது.....????

    ப்ரீ கன்சீவ்டு நோஷன்ஸ் இல்லாம போன என்னை மாதிரி ஆளுங்களாலேயே தாங்க முடியலையே;எந்த இடங்களில தப்பக் கண்டுபிடிக்கலாம்னு கண்ணில வெளக்கெண்ணை ஊத்திக்கிட்டு பாக்கிற ஆளுங்க கிட்ட இருந்து சிவாஜியைக் காப்பாத்த ஆண்டவனால் கூட முடியாது..

    அப்புறம்..இது உமக்கே நல்லா இருக்கா?? என் கிட்ட ஞாயித்துக்கிழமை போலாம்னு சொல்லீட்டு முதல் காட்சியே போயிருக்கீரு...ஊருக்கு வந்து வச்சிக்கிறேன் கச்சேரியை..

    பதிலளிநீக்கு
  33. சீக்கிரம் வாங்க .. ஜமாய்ச்சுருவோம்!

    பதிலளிநீக்கு
  34. சந்தனக்கட்டைமேல பாடிஸ்பிரே அடிச்சா மாதிரி

    Yeppadi ippadiyellam? Neengalum room pottu yosippeengalo? :)))

    பதிலளிநீக்கு
  35. /////////////////////////////

    3 மணிநேர படத்தை கொஞ்சமும் சலிப்படையாம உட்கார்ந்து பார்க்க வைக்கனும்னா அது சாதனைதான்!

    /////////////////////////////

    இது தான் பாயின்டு.

    நல்ல நேர்மையான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  36. //ஆனா குரல்ல மட்டும் கொஞ்சம் வயசு தெரியுது! விடுங்க... அடுத்த படத்துல அதையும் சரி செஞ்சிடுவாரு! :)//
    ஏங்க. அடுத்த படத்துக்கு இன்னும் ஒரு 2-3 வருடம் காத்திட்டிருக்கனும். குரல் மேலும் உடையும். ஒன்றும் பன்ன முடியாது. பேசாம அமிதாப் ஸ்டைல்ல வயசான கேரக்டரா தேர்ந்தெடுத்துக்க வேண்டியது தான்.

    //மேற்சொன்ன எல்லாத்தையும் ஒரு 3 மணிநேரம் ஒதுக்கி ஓரமா வைச்சுட்டு சும்மா ஜாலியா குடும்பத்தோட சிவாஜிக்கு போயிட்டு வாங்க மக்கா! எண்டெர்டெயின்மெண்ட்டு 110% கேரண்டி!!!//

    அதே! அதே!!

    //ரஜ்னிகாந்தின் shades, style பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?//

    படம் முழுக்க தெகட்ட தெகட்ட அள்ளி கொடுத்திருக்கார் ஷங்கர். மொட்டை தலையில் கண்ணாடி போட்டு தலையை திருப்ப கண்ணாடி அப்படியே பின் பக்கம் போவதாக இருக்கட்டும், பபிள் கம் ஸ்டைல் அப்படீன்னு.

    //தமிழகத்தில் தமிழனை இளிச்சவாயனாக வைத்திருப்பதற்கு முக்கியக் காரணகர்த்தா ரஜினியா?!//

    காமராஜருக்கு பின் கழக ஆட்சி தமிழகத்தில் ஆரம்பித்தவுடன் தமிழன் இளிச்சவாயன் ஆனான். ரஜினியும் தன் பங்குக்கு உபயோகப்படுத்திக்கொண்டார். இதில் திருந்த வேண்டியது தமிழன் தானே தவிற ரஜினி ரசிகன் அல்ல. காரணம், ரஜினி ரசிகனும் தமிழன் தானே? (புரியுதா??? ஏன்னா எனக்கே புரியல).

    முதல் வாரத்தில் மட்டும் தியேட்டர் டிக்கெட் விற்பனை மட்டும் 25C. படத்தில் மொத்த வருமாணம் 150C-யை தாண்டுமாம். UK Top 10-ல் இடம் பெற்ற முதல் தமிழ் படம், 9வது இடம். ஜெர்மனியிலும் படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

    மொத்தத்தில் படமும் நன்று. உங்கள் விமரிசனமும் நன்று.

    பதிலளிநீக்கு
  37. உங்கள் எழுத்துக்கள் வெளிநாட்டுப் பேப்பரிலும் இப்ப வருது.

    http://www.orupaper.com/node/55

    எழுத்துக் கூலியெல்லாம் கிடைக்கும்தானே :)

    தொடர்ந்து எழுதுங்க!!

    பதிலளிநீக்கு
  38. வெங்கட்ராமன், ஹரீஷ், சீனு,

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    அனானி,

    சுட்டிக்கு என் நன்றிகள்!

    எழுத்துக்கூலியா?! நீங்க வேற! ஒருபேப்பர்ல போட்டுக்கவான்னு கேட்டாங்க.. நான் சரின்னு சொன்னேன். இதுவே எனக்கு பெருமையில்லையா?! :)))

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு