கொஞ்சநாளாகவே பதிவுகளில் அடிதடி, வசவுகள், தனிமனிதத்தாக்குதல்கள் என்று படிச்சு படிச்சு ஓய்ஞ்சுபோய் இருக்கறப்ப இந்த இரண்டு பதிவுகளை படிக்கும்போதே அவ்வளவு சந்தோசமா இருக்குங்க!
வீரவன்னியன்:
கருத்துகளை எதிர்கருத்துகளுடன் மோதிக் கொள்வோம். அனைவரது பதிவுகளையும் மதிப்போம். ஒவ்வொருவருக்கும் தனித் திறமை இருக்கத் தான் செய்கிறது.
ரஜினிராம்கி:
Veeravanniyan, I second your post. I think, we are sailing on the same boat. Let us continue to be a good friend. All the Best!
மலேசியா ராஜசேகரன் :
உங்களைப் போன்ற இளஞர்களின் முயற்சியும் துடிப்பும் பாரட்டப் பட வேண்டியவை. ஆதரிக்கப் பட வேண்டியவை. உங்களுக்கும் உங்கள் முனைப்பான நண்பர்களுக்கும் எதிர் புரத்தில் நின்று தர்க்கம் செய்ய எனக்கு மனமில்லை. அது என் முதிர்ச்சிக்கும் அழகில்லை.
ஆதலால், உங்கள் நண்பர்கள் பலரது மனதையும் புண்படுத்துமாறு அமைந்த என் எழுத்துக்களுக்காக நான் இங்கு நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
சிவபுராணம் சிவா:
அன்பு ஐயா ராஜசேகரன் அவர்களுக்கு,
தெரிந்தோ தெரியாமலோ நாம் இருவரும் சண்டை கோழிகளாகி விட்டோம். பொதுவில் மன்னிப்பு என்று ஒரு வார்த்தையை பயன் படுத்தவும் ஒரு மனம் வேண்டும். நீங்கள் அந்த குணத்தால் எங்கோ போய்விட்டீர்கள். உங்களை மன்னிப்பு கேட்க வைக்க நாங்கள் இதை செய்யவில்லை. என் அப்பா வயதில் இருக்கும் நீங்கள் (அடியேனின் வயது 29 ), எங்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டதற்கு நன்றி. நடா போன்ற நண்பர்களின் வட்டத்திற்குள் இருப்பதினாலேயே நாங்கள் உங்கள் 'தலைகீழாக' என்ற வார்த்தைக்கு உணர்ச்சிவசப்பட்டோம்.... எப்படியோ "நண்பர்களாக இருப்போம்" என்று சொல்லியபடி, நாம் நண்பர்களாக இருப்போம்.
இப்படியல்லவா இருக்கவேண்டும் நட்புவட்டம்! கருத்துக்களால் மட்டுமே இங்க இனி அடிச்சுக்கனும்னு ஏற்பட்டிருக்கற இந்த நல்ல மாற்றத்தை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்!
நல்லதொரு மாற்றத்தை ஆரம்பித்துவைத்த உங்கள் நால்வருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்!!!
கருத்துக்கலால அடிச்சிக்கலாம்.. அப்பால புடிச்சுக்கலாம்! :) (ம்ம்ம்.. அப்படியே இந்த ஆபாச/போலி அனானிகள் மேட்டரும் முடிஞ்சுட்டா எவ்வளவு நல்லா இருக்கும்?! )
எனக்கு எங்க தாத்தா(அதே துரைசாமி தாத்தாதான்...! ஆவியா இல்லைங்க.. நேர்ல சொன்னது..!) சொன்னதுதாங்க நியாபகத்துக்கு வருது.. "சண்டை போடறப்போ எவ்வளவு கொறைச்சு பேசறமோ அவ்வளவு நல்லது! ஏன்னா.. அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு சேர்ந்துக்கறபோது ரொம்ப சுலுவா இருக்கும்ல...! "
நல்ல மாற்றம்னு சொல்லிட்டு நானும் அதுல பங்கெடுத்துக்கலைன்னா எப்படி? சைக்கிள் கேப்புல நானும் சொல்லிடறேன்!
மீனாக்ஸ்! ரொம்பநாளைக்கு முன்னால உங்ககூட ஒரு விவாதத்துல அர்த்தமில்லாத முறையில நான் பங்கெடுத்துக்கிட்டதுக்கு மிகவும் வருந்துகிறேன்! உங்கள் மனம் அன்று புண்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! (நீங்க எப்பவோ மறந்துபோயிருக்கலாம்! ஆனா எனக்கு இது ஒன்னுதான் இங்க ரொம்பநாளா உறுத்திக்கிட்டே இருக்கு! :( )
மன்னிக்கத்தெரிஞ்சவன் மனுசன்!
மன்னிப்பு கேக்கத்தெரிஞ்சவன் அதைவிட பெரிய மனுசன்!!
இந்த கருத்தைகூட கத்துக்கலைன்னா அப்பறம் எதுக்கையா நான் சினிமா பார்க்கனும்?! :)
நெஜமாவே இதயம் நெகிழ்வுடன்(ரசிகவ்.. இந்த ஒருதபா விட்டுடுங்க.. :) )
இளவஞ்சி...
நிற்க: இந்த மாற்றத்தை நீங்களும் வரவேற்கறீங்கன்னா ஒரு (+) குத்து விடுங்கப்பு!
உண்மையை...
உரக்கச்சொல்வோம் உலகுக்கு!
nan oru (+) kuthu viduruken :-)
பதிலளிநீக்குI apologise in advance for my future comments... just for fun. ;-)
பதிலளிநீக்குஅதுதானே?1., எங்கூர்ப் பக்கம் தன்னோட ஒத்தக் கைய வெட்டுனவனையே., "வாப்பா!., மாப்ள., என்னமோ கோவத்துல செஞ்சுட்ட(??!!!)., அட., நான் அதை மறந்துட்டப்பா சாப்பிட வா" ங்கிறதும் "வாண்ணேன்னு" பொண்ணுக (இரண்டு கை இருந்தாலே ஒன்னுக்கும் உதவ மாட்டான்., இப்ப இந்தப் புள்ள பாடுதான் ரொம்பச் சிரமம்., இருந்தாலும்) கூப்புடறதும் சகஜம். அவங்க சண்டைப் போடும் போது நேர்ல பார்த்தவன் அதுக்கப்புறம் சட்டைய பிச்சுகிட்டு அலைய வேண்டியதுதான்.
பதிலளிநீக்குகருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு., எனக்கு சரின்னு பட்டது., உங்களுக்கு தப்புன்னு படும்., உங்களுக்கு தப்புன்னு படுறது எனக்கு சரின்னு படும். அதுல கோவத்துல நாலு வார்த்தைகள் வர்றதுதான். நானெல்லாம் பின்னூடத்தை ஆற அமர யோசிச்சு எல்லாம் போடறதுல்ல... பதிவப் படிச்ச உடனே என்ன தோணுதோ., அத அப்பிடியே தட்டிருவேன். ஒரு வலைப்பதிவாளரின் உண்மையான குண வெளிப்பாடு இந்தப் பின்னூட்டம் என நான் நினைக்கிறேன். நம்மை அறியாமலேயே நாம் பலரைக் காயப் படுத்தி விடுகிறோம். இரண்டு பேர் நேருக்கு நேர் பார்த்து பேசும் போதே எவ்வளவு பிரச்சனை வருது?. முகம் தெரியாமல் கருத்துகளை பரிமாறிக் கொள்கிறோம். அதில் ஏற்படும் பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக அணுகினால் எவ்வளவு இதமாக இருக்கும். இளவஞ்சி நீங்கள் சொல்வதை 101% ஒத்துக் கொள்கிறேன். நான் மன்னிப்பு கேட்கனும்னா... அது பெரிய வரிசையே வரும் எனவே நான் யாரைக் காயப் படுத்தியிருந்தாலும்., தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.
ஏய்... வாங்கப்பு ., நமக்குள்ள என்ன வயல் தகறாரா?., வாய்க்கால் தகறாரா?., கருத்து தகறாருதானே?!. சண்டை போட்ட இரண்டு நாடுகள் கூட ஒன்றாகி விடுகின்றன?., மனங்கள் ஒன்றாக முடியாதா?.
நல்ல காரியம் செஞ்சிருக்கீங்க, இளவஞ்சி..இது போன்ற ஆரோக்கியமான சூழ்நிலை தொடர்ந்தா ரொம்ப நல்லாத்தான் இருக்கும்!
பதிலளிநீக்குஅப்பூ,
பதிலளிநீக்குஎங்கேயோ போய்ட்டப்பூ!
நல்லா இருக்கணும் நீங்க.
நல்லா வளரணும் தமிழும், தமிழரும், தமிழ்மணமும்...
இளவஞ்சி நல்ல பதிவு.
பதிலளிநீக்குவலைப்பதிவாளர்களுக்குள் ஒற்றுமையையும், நட்பும், ஆரோக்கியமான விவாதங்களும் என்றும் நிலவ வேண்டும் என்று நினைக்கிறேன்.
அட, எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. இளவஞ்சிக்கு நன்றி. மற்றபடி, நான் சென்ற மாதம் தமிழ்மணம் தளத்தில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக நண்பர்கள் யாரும் காயப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதே போல இன்னொரு முறை செயல்படவேண்டியிருந்தால் எப்படி செயல்படலாம் என்றும் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். கூடிய விரைவில் நல்லசெய்தியுடன் வருவேன்.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குஆனா + குத்துக்கு இப்பிடியொரு விளம்பரமா என்று இன்னொரு குரலும் வருது.
பரவாயில்லையே, மிக நல்ல பதிவு இளவஞ்சி.
பதிலளிநீக்குஇதே களத்தில் நானும் அறியாமல் யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் அதற்கு இந்த திறந்த மன்னிப்பைக் கேட்டுவிடுகிறேன். (பெரிய மனுசன் ஆகறதுன்னா சும்மாவா?)
மக்களே!
பதிலளிநீக்குநன்றியை நாமெல்லாம் ஆரம்பிச்சு வச்ச அந்த நாலு பேருக்குத்தான் சொல்லனும்! நான் வழிமொழிந்தவன்.. அவ்ளோதான்!
அப்டிப்போடு! கலக்கல்!
கிறுக்கன்! இதுதான் கோடு போட்டா ரோடு போடறதா?!
கொழுவி! ஹிஹி...
ஆனா நெஜமா விளம்பரத்துக்கு போடலைங்க! இதைவிட்டா கருத்துக்கணிப்புதான் நடத்தனும். அந்த டெக்னாலஜி நேத்துநைட்டு தேடி எடுக்கமுடியலை.. அதுபோக கருத்துக்கணிப்புன்னா கொஞ்சம் செயற்க்கையா போயிரும்னு தோணுச்சு! மேலும், கேக்காமையே + குத்தறதுல நம்ம மக்கள் வள்ளலுங்க! :)
சுரேஷ்! //பெரிய மனுசன் ஆகறதுன்னா // அது! :)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி மக்களே!
காசியண்ணே!
பதிலளிநீக்கு//கூடிய விரைவில் நல்லசெய்தியுடன் வருவேன்// ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
ஜெயின் மதத்தில் பருயூஷனா என்று ஒரு நோன்புக் காலம் உண்டு. ஆகஸ்ட் / செப்டம்பர் மாதங்களுக்கிடையில் - நம்ம ஆவணி மாசம் - 15 நாட்களுக்கு ஜெயின்கள் விரதம் அனுசரிப்பார்கள். இந்த சமயத்தில் பிரதிகிரமணா என்று ஒரு குறிப்பிட்ட நாள் அன்றைக்கு அவர்கள் அனைவரும் தங்கள் சுற்றம், நட்பு என்று எல்லோரிடமும் அந்த வருடம் முழுவதும் தாங்கள் எங்காவது அவர்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக்க வேண்டுவார்கள். Forgiveness Festival என்றுதான் இதை என் மகன்களின் ஜெயின் நண்பர்கள் குறிப்பிடுவார்கள். கேட்கும்போதே மனசில் சினேகத்தையும், நேர்மறை என்ணங்கள் தோற்றுவிக்கும் பண்டிகை இது. இன்று தமிழ்வலைப்பதிவில் இப்படி ஒரு "பிரதிகிரமணா" நிகழ்வதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தச் சூழலை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றிகள் இளவஞ்சி.
பதிலளிநீக்குததாஸ்து
பதிலளிநீக்குஇன்னாமே நைனா சண்டை இல்லீனா கலீஜா இர்க்கும் பா...நாம பேட்டைய எட்துக்கலாமா? இன்னா சொல்றே?
பதிலளிநீக்குநல்ல உதாராணங்களை தொடங்கிய நண்பர்களுக்கும், அதைக் கண்டுகொண்டு அனைவருக்கும் கொண்டுவந்த உங்களுக்கும் நன்றியும், பாராட்டுக்களும்.
பதிலளிநீக்கு//"சண்டை போடறப்போ எவ்வளவு கொறைச்சு பேசறமோ அவ்வளவு நல்லது! ஏன்னா.. அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு சேர்ந்துக்கறபோது ரொம்ப சுலுவா இருக்கும்ல...! "// வாஸ்தவமான வார்த்தை! பெருசெல்லாம் சொன்னாக, சொன்னபடி நின்னாக... :)
பதிலளிநீக்குஆரோக்கியமான சர்ச்சை மட்டுமே அறிவை வளர்க்கும். மற்றது பகையை வளர்க்கும். தக்க சமயத்தில் நல்ல ஓர் கருத்தினை சரியான உதாரணங்களுடன் எடுத்துக் கூறியுள்ளீர்கள். என் மனப்பூர்வமான நன்றியை உங்களுக்கு தெரிவிக்கிறேன்("+" குறியுடன்)
பதிலளிநீக்குமிக்க நன்றி. இது எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும். எழுதுவதை எழுதிவிட்டு, ஸ்மைலி போட்டு போட்டு அலுத்துவிட்டது :-)
பதிலளிநீக்குநல்ல பதிவு இளவஞ்சி....
பதிலளிநீக்குகருத்து மோதல்கள் தனிமனித தாக்குதலாக மாறமால் கையாள்வதில்தான் இருக்கிறது ஒவ்வொருவரின் திறமையும் நேர்மையும்.
இதோட நான் 2 + போட்டுட்டேன்.
தோணுச்சின்ன்னா இன்னொரு + போடுவேன்
இளவஞ்சி, அந்த வி்ஷயத்தில் நீங்கள் எந்தவிதத்திலும் தவறாக நடந்து கொள்ளவில்லை. வீண் கவலைகள் வேண்டாம். My anger in that issue is still at some others ;-)
பதிலளிநீக்குஅருனா, 'பிரதிகிரமணா' பற்றிய தகவல்கள் அருமை! மன்னிப்பு கேக்கறதுல இப்படியும் ஒரு நன்மை இருக்கா? நல்ல நல்ல செய்திகளெல்லாம் தேடிவருது! :)
பதிலளிநீக்குமணி, இந்த ஒரு பதிவுலயாவது விட்டுடுவோம்! அடுத்ததுல இருந்து பட்டைய கெளப்பிடலாம். அனானிகளுடனான போர் முடிஞ்சதா?!
அன்பு, ராதாகிருஷ்னன், இறைநேசன், ப்ரகாஷ் - நன்றி!
உஷா, //ஸ்மைலி போட்டு போட்டு அலுத்துவிட்டது :-) // இந்த ஸ்மைலியும் அதேதானா?!
முத்துக்குமரன், + இப்படி எகிறுதேன்னு பார்த்தா நீங்கதானா அது? :)
மீனாக்ஸ், மிகவும் நன்றி! அப்பாடா.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு... பெங்களுர் வந்ததுல இருந்து 5 மாசமா எப்ப எங்க அடிவிழுகும்னு தெரியாம பய்ந்துக்கிட்டே இருந்தேன்! :)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
இதோட நான் 2 + போட்டுட்டேன்.
பதிலளிநீக்குதோணுச்சின்ன்னா இன்னொரு + போடுவேன்//
ஹலோ.. முத்துக்குமரன்!
என்னால ஒன்னுக்கு மேல +குத்து போட முடியலையே..
"நீங்க ஏற்கனவே ஓட்டு போட்டுவிட்டீர்கள் என்கிறதே.."
சரி போட்டும்..
இளவஞ்சி! என்ன திடீர்னு பச்சைக்கொடி போட்டூட்டீங்க?
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொன்னா மாதிரி பதிவாளர்களுக்கு நடுவில நடந்துக்கிட்டிருந்த வாக்குவாதங்களிலிருந்த நேர்த்திக்கே நான் உங்களுடைய பதிவுகள படிக்கறதுண்டு..ஏமாத்திட்டீங்களே..
இருந்தாலும் ஒருவிதத்துல பாக்கப் போனா இதுவும் நல்லதுக்குத்தான்.
வாக்குவாதங்கள் வாய்ச்சண்டையாக மாறி நட்பில் விரிசல்களை ஏற்படுத்திவிடக்கூடாது என்பது சத்தியமான உண்மை!
சரி சரி கவலைப்படாதீங்க எல்லார் மன்னிப்பையும் ஏத்துக்கிட்டேன்.. டோண்ட் ஒர்ரி..
பதிலளிநீக்கு(+) போட்டேன்பா..
திரு ஜோசப் சில நேரங்களில் என் பதிவுற்கு கூட + போட முடியாமல் போவது உண்டு. அதனாலத்தான் இந்த மாதிரியான இடத்தில் வாய்ப்பு கிடைக்கிறப்ப போட்டுக்கிறது.....
பதிலளிநீக்குஒரு நல்விதையை விதைத்தால் அது ஆயிரம் கனிகளைத் தரும் என்ற நம்பிக்கையில்தான்......
ஞானபீடம் நன்றாகச் சொன்னீர்கள். கருத்து வேறுபாடுகள் உண்டு. கருத்து வேறுபாடு இருப்பதாலேயே ஒருவரை இழிந்தவர் என்றும் கழிவுகள் என்றும் கூறுவது தவறு. இதை உணர்ந்தவர்களுக்கு என்றுமே நல்ல வழிதான். நான் எப்பொழுதாவது யாரையும் மனம் புண்படப் பேசியிருந்தால் அதற்கு இந்தப் பதிவில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் படிச்சபிறகு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.
பதிலளிநீக்குநானும் எதுனா மனக்காயம்(!) ஏற்படுத்தியிருந்தா
மன்னிச்சிருங்க.
இந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டா இப்படி ஒண்ணு அமையுமா?
நன்றாகச் சொன்னீர்கள் இளவஞ்சி. மன்னிப்பது மனித குணம்.
பதிலளிநீக்குநானும் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குநண்பர்கள் யாரிடமாவது நான் கடுமையாக நடந்து கொண்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
இளவஞ்சி,
பதிலளிநீக்குதேவையான ஒரு பதிவு ! பாராட்டுக்கள் ! 2 (+) போட்டேன்பா..(home and office!)
//நானும் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்கிறேன்.
நண்பர்கள் யாரிடமாவது நான் கடுமையாக நடந்து கொண்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
//
ஜோ கூறியதை வழி மொழிகிறேன்.
காசி,
//கூடிய விரைவில் நல்லசெய்தியுடன் வருவேன்.
//
வாழ்த்துக்கள் !!! Boy or a Girl ;-)
கொஞ்சம் சுயவிளம்பரம் !!!
http://balaji_ammu.blogspot.com/2005/11/blog-post_21.html
என்றென்றும் அன்புடன்
பாலா
நன்றி இளவஞ்சி
பதிலளிநீக்குநானும் + குத்திட்டேன்.
எனக்கு மட்டும் ஒரு +க்கு மேல போட முடியல் எப்பவும்.
முக்கியமானத மறந்துடறேனே.
எப்போதும் தாமதமா வர்றதால
பெரியவங்க பெருந்தன்மையா மன்னிச்சிடுங்க
இளவஞ்சி நல்ல காரியம் பண்ணிய்ருக்கீங்க. என்னதான் அடிச்சுக்கிட்டாலும் இப்படி மன்னிப்பு கேட்குறது ஆரோக்கியமான செயல்.
பதிலளிநீக்குநானும் பொதுவா கேட்டு வைக்கிறேன்.
எல்லாரும் ஒரு தபா என்னையும் மன்னிச்சுடுங்கப்பா.
போட்டேன் 3 வது + ......
பதிலளிநீக்குநானும் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்....
யோவ் இளவஞ்சி, என்னடா இந்த பதிவுக்கு இத்தனை + விழுந்துருக்கேன்னு வந்து பாத்தா... கலக்கிட்டய்யா.. கை கொடுங்க.. வாழ்த்துக்கள் இளவஞ்சி.. என்னையும் எல்லாரும் மன்னிச்சிடுங்கப்பா ஏதாவது உங்களை புண்படுத்தியிருந்தா :-)
பதிலளிநீக்குஇளவஞ்சி சார்,
பதிலளிநீக்குஅஞ்சனம் லைட்டா கலஞ்சிருச்சி போங்க ... :)
4 +
பதிலளிநீக்குரொம்ப நன்றி இளவஞ்சி அவர்களே!
பதிலளிநீக்குஎன்னோட சீனியர்களை இதன் மூலம் அடையாளம் கண்டு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
நான் அந்த பள்ளியில் 84-85 ரெண்டு வருஷம்தான் படித்தேன்.(4 மற்றும் 5ம் வகுப்பு மட்டுமே)
நீங்க படித்தது நாமக்கல் டவுன் பள்ளியிலா அல்லது தும்மங்குறிச்சியா?
எனென்றால் எனது தந்தை ப.இராமச்சந்திரன் தும்மங்குறிச்சி பள்ளியில் (பாத்திமா ஆர்.சி.துவக்கப்பள்ளி நிர்வாகம்தான்)
84 ல் இருந்து பணி புரிந்தார்.
செல்வராஜ் சார் அவர்களும் தும்மங்குறிச்சி பள்ளியில் எனது தந்தையுடன் சில காலம் பணியாற்றியுள்ளார்.
5:27 AM
நாமக்கல் சிபி said...
இளவஞ்சி அவர்களே,
நீங்கள் படித்தது நாமக்கல் பள்ளி என்றால் ஆசிரியர் சிவப்பிரகாஸம், ஆசிரியைகள் வீரம்மாள், தாராமதி, அன்னம்மாள், கமலம், இருதயமேரி
ஆகியோரையெல்லாம் நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
5:33 AM
தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவிக்கவும், மன்னிப்பு கேட்கவும் தயங்கியிருந்தோருக்கு உங்கள் பதிவு நல்ல உபயோகமாக உள்ளது. நம்மை அறியாமலே சில சமயம் பிறரைக் காயப்படுத்தினாலும், இறங்கி வருவது எவ்வளவு இனிமையாக உள்ளது. உங்களுக்கு மிகுந்த நன்றி சொல்லவேண்டும்
பதிலளிநீக்கு