வாலிப வயோதிக வலைப்பதிவர்களுக்கு...
அகில உலக ப்லாகர்ஸ் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்பதிவுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரே ஸ்தாபனமான 'துளசிதளம்' வலைப்பதிவர் வைத்தியசாலையின் முதன்மை பதிவரான பின்னூட்ட பிதாமகள் திருமதி. துளசி கோபால் அவர்கள் 14-02-2006 அன்று பெங்களூரு விஜயம்! (சாம்ராட் ஹோட்டல், நடராஜா தியேட்டர் எதிரில்)
வைத்தியர் குழு:
பின்னூட்டக்கலையை இந்த உலகிற்கு முதன்முதலில் தோற்றுவித்து பெரும்பான்மை வலைப்பதிவர்களுக்கு வாழ்வளித்த முதன்மை மருத்துவர் துளசியக்கா
பொறுமையின் சிகரம் விருந்தோம்பல் நாயகர் கோபால் அண்ணா!
முதன்மை கம்பவுண்டர் நாட்டியசிகிச்சை ஸ்பெசலிஸ்ட் யானையார்
புன்சிரிப்பு சித்தர் மருத்துவமாமணி பூனைக்குட்டியார்
உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் பெருக! வாசகர் வருகையை அதிகரிக்க!! 15 நாட்களில் வித்தியாசம் தெரிய!!!
தரமான ஆழமான பதிவுகளை போடவேண்டியதில்லை. படம் போட்டே பதிவுகளை நிரப்பவேண்டியதில்லை. அங்க இங்க அப்படி இப்படி சொன்னதென விளக்கப்பதிவுகள் தேவையில்லை. சுடச்சுட செய்தியென நியூஸ்பேப்பரை cut/paste செய்யவேண்டியதில்லை. "குஷ்புவின் கூந்தலும் எங்கள் வீட்டு ஷாம்புவும்" "தயிர்வடையின் பிறழ்வும் காராபூந்தியின் மறுப்பும்" என்பது போன்ற அதிநவீன தலைப்புகள் தேவையில்லை! அக்கா அவர்களது "பின்னூட்ட ஊக்கச் சிகிச்சை" ஒன்றே போதும்! 15தே திகதிகளில் உங்கள் வலைப்பக்கம் பின்னூட்டங்களால் நிரம்புவதை நேரடியாகக்காணலாம்! பலனில்லையெனில் பேமெண்ட் வாபஸ்! 100% காரண்டி!!!
தினம் ஒரு பதிவு போடாவிட்டால் கைகள் நடுங்குதல், பின்னூட்டங்களை படிக்க பயப்படுதல், அடுத்தவர் பதிவில் அனானியாக அல்பமாய் திட்டுதல், காலை எழுந்ததும் தமிழ்மணத்தில் முழித்தல், அரைத்தூக்கத்தில் பின்னூட்டங்களை மாற்றியிடல், பதிவிட்டு 1 மணி நேரமாகியும் பின்னூட்டம் வராமல் திகிலடைதல், ஆபீஸ் கணினியில் Alt+Tab ம், வீட்டுக்கணினியில் F5 பட்டன்களும் தேய்ந்திருத்தல், விளக்கப்பதிவென வெளங்காப்பதிவிடல், IP அட்ரசை அடிவரை தோண்டுதல், பார்க்குமிடமெல்லாம் +/- தேடுதல் போன்ற அனைத்து வியாதிகளுக்கும் மேலும் பதிவுகளைப் படிக்கும்போதே ஏற்படும் மடக்கிட்டானோ என்ற வயிறு கலக்கும் பயம், தெரிஞ்சிருக்குமோ என்ற வெட்கம், கண்டுபிடிச்சுட்டாங்களோ என கூனிக்குறுகும் அவமானம், கேட்டுட்டானே என தலைக்கேறும் கோபம், ஒத்துக்கவே மாட்டேங்கறானே என வரும் வெறுப்பு, சொன்னதை மாத்தி சொல்லறானே என மூக்கு நுனியில் எரிச்சல், அடக்கமாட்டாமல் வரும் அகப்பாவச் சிரிப்பு போன்ற நவரச தொந்தரவுகளுக்கும் நிரந்தர தீர்வு!!!
துளசிதளம் என்ற முகவரிக்கு கீழ்க்கண்டவாறு பின்னூட்டங்களையும் + குத்துக்களையும் இட்டு அற்புத சிகிச்சையை ஆனந்தத்துடன் பெறலாம்.
Gruop A சூப்பர் ஸ்பெசல் சிகிச்சை : 25 பின்னூட்டங்களும் 10 + குத்துக்களும் ( ஒரே நாளில் தீர்வு )
Group B ஸ்பெசல் சிகிச்சை: 10 பின்னூட்டங்களும் 5 + குத்துக்களும் ( 15 நாட்களில் தீர்வு )
Group C சிறப்பு சிகிச்சை: 5 பின்னூட்டங்களும் 1 + குத்தும் ( கஞ்சப்பிசினாறி!!! உனக்கெல்லாம் சிகிச்சை தேவையா? ஓடீரு!!! )
இந்த வருட சுற்றுப்பயண விபரம்:
போடி விஜயம்: இந்த மாதம் 3வது வாரம்
சென்னை விஜயம்: 12ம் தேதி
மீண்டும் சென்னை விஜயம்: 16ம் தேதி
நியூசிலாந்து விஜயம்: மாதக்கடைசி
அடுத்தமாதத்தில் இருந்து துளசிதளத்தில் இந்தியப்பயணம்-தினமொரு பதிவுகள்!! காணத்தவறாதீர்!!!
* * *
ஆமாங்க துளசியக்காவையும் கோபால் சாரையும் பெங்களூரில் சந்தித்தோம்! அவங்களோட மின்னல்வேக சுற்றுப்பயணத்தில் சென்னையை முடித்துக்கொண்டு 14தேதி பெங்களூர் வந்திருந்தார்கள். ராகவன் மற்றும் சுதர்சன் கோபால் ஆகிய இருவருடன் சேர்ந்து நீண்ண்ண்டதொரு கலந்துரையாடல்! மரத்தடி நண்பர்களை பார்த்துவிட்டு வந்த அவர்களை இரவு 8:30 மணிக்கு பிடித்து ராவ ஆரம்பித்தோம்! 11 மணி வரைக்கும் விடவில்லை! துளசியக்கா/கோபால் சார் இனிய வாழ்வின் ரகசியம் ஒரே காரணமாகத்தான் இருக்க முடியும்!!! சிரிப்பு.. சிரிப்பு..சிரிப்பு... கோபால் சாருக்கு எதையும் தாங்கும் இதயம்! எங்களது ரம்பத்தை கடைசிவரை புன்னகையிலேயே சாமாளித்தார்! பெரும்பாலும் அனைத்து பதிவுகளையும் படித்திருக்கிறார்! நல்லதொரு பொங்கல் அன்று!!
வலை ஒரு மாய உலகம் தாங்க! பதிவுல இருக்கற படத்துல 11வது 'பி' பிரிவு மாணவன் போல பால்வடியும் முகத்துடன் இருக்கும் ராகவன், இப்போது பெங்களூரின் முதன்மைத்தகுதி வாய்ந்த பிரமச்சாரி! Valentine Day அன்னைக்கு மயிலாரை வெவரமாக கழற்றிவிட்டுவிட்டு தனியாக பெங்களூரில் நூல்விட்டு டீல் போட்டுக்கொண்டு இருந்தவரை அழைத்துக்கொண்டு போகவேண்டியதாகிவிட்டது! சரி விடுங்க!! பல் இருக்கறவன் என்னைக்கு வேணும்னாலும் பட்டாணி கடிக்கலாம்!!!
சின்ரெல்லாக்களின் சோகத்தினை அழுத்தமாக எழுதும் சுதர்சன் கோபால் 40+ நினைத்துக்கொண்டு போனால் அங்கே 'வாலிப வயசி'ல் 23ல் ஒருத்தர்! தீர்க்கமாக பேசுகிறார். நிறைய படிக்கிறார். அன்னைக்குன்னு பார்த்து கண்வலின்னு நைட்டு 11 மணிவரை Ray-Ban போட்டுக்கொண்டே சுற்றுகிறார்! அவரை Drop செய்தபோது 'Take Care' என்று சொன்னதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு ரஸ்யாவின் 'நாட்டுவைத்தி'ய மருந்தினை உட்கொண்டுவிட்டு கண்வலி(!?) சரியாகிவிட்டதென கூறுகிறார்! மொத்தத்தில் இவ்வளவு நாள் தமிழ்பதிவுகளில் பங்கேற்றும் தெளிவாக இருக்கிறார்!!!
கோபால் சாருக்கு மன உறுதியும் கழுத்தில் வலிமையும் மிக மிக அதிகம்! நாங்கள் இத்தனை பட்டரை போட்ட பிறகும் விடைபெறும் பொழுது நியூசிலாந்து வரும்படி அன்போடு அழைத்தார். நாங்களும் தற்போதைய ஜெட் மற்றும் டெக்கானின் போட்டியை மனதில்கொண்டு எப்படியும் அடுத்தவருடம் நியூசிலாந்துக்கு ரிடர்ன் டிக்கட்டு ரூ.148.95 ஆக வாய்ப்புகள் இருப்பதால் அவசியம் வருவதாக வாக்களித்து விடைபெற்றோம்!
* * *
தமிழர்கள் நான்குபேர் சந்திட்டு விட்டு பொரளி பேசாமல் இருந்து தமிழ்க் கலாச்சாரத்தினை காப்பாற்றமுடியாத அவலநிலைக்கு ஆளாக்க விரும்பாமல் நாங்களும் கடமையாற்றினோம்! எனவே உங்களே உங்களுக்காக எங்கள் ரம்பத்தில் சிக்கிய சில கிசுகிசுக்கள்
1. icarus என்பதன் பின்னிருக்கும் ரகசியம் என்ன?
2. மழை ஸ்ரேயாவை ஏன் சில நாட்களாக பதிவுகளின் பக்கம் காணவில்லை?
3. தேந்துளி அவர்கள் பிரதி ஞாயிறு மறக்காமல் செய்யும் காரியமென்ன?
4. துளசியக்கா பதிவில் கண்ட கிழிந்த டயர் புகைப்படத்தின் புலன் விசாரணை ரிப்போர்ட் என்ன?
5. இளவஞ்சியின் என்றும் மாறா சிகையலங்கரத்தின் மர்மம்?!
6. நாகரீகப்பெண்களின் பால் குழப்பம்?
7. ரஸ்யாக்காரரின் அடுப்படி ரகசியங்கள்?
8. நியூசிலாந்து பூனைகளின் தங்கும் இடங்கள்!?
9. பின்னூட்டதிற்கு பின்னூட்டதிற்கு பின்னூட்டம் வாங்கும் தொழில் ரகசியம்?
10. 50, 000 கலர் புடவையில் துளசியக்காவிற்கு பிடிக்காத கலர்!?
மேற்படி கிசுகிசுக்களின் மேலதிகத்தகவல்கள் வேண்டுவோரும் குலுக்கல் முறையில் கீழ்க்கண்ட பரிசுகளை வெல்ல விரும்புவோரும் (தேர்ந்தெடுத்த பொருளின் அருகிலுள்ள கட்டத்தில் டிக் செய்கசுயவிலாசமிட்ட 5ரூபாய் ஸ்டாம்பு ஒட்டிய கவருடன் ரூ. 250 DD உடன் எழுதவேண்டிய முகவரி:
டுபாக்கூர் ட்ரேடர்ஸ்,
2வது மெயின், 2 1/2வது குறுக்கு,
கயா-657832
பரிசு 1: ஒரு டயலுடனும் இரண்டு முட்களுடனும் சிறப்பாக ஒரு நாளைக்கு இருமுறை துல்லியமாக நேரம் காட்டும் ஸ்பெசல் வாட்சு
பரிசு 2: 8 in 1 ஸ்பெசல் ரேடியோ (ரேடியோ, டேப், வாட்ச், டூத்பிரஸ், முகக்கண்ணாடி, பேனா, தோசைக்கை, தீப்பெட்டி அனைத்தும் அடங்கியது )
பரிசு 3: Auto Blogger - அனைத்து பதிவுகளையும் படித்து முக்கியமில்லாத விசயங்களை கண்டுபிடித்து கேள்விகளாக மாற்றி சொந்த பிளாகாக போடும் கருவி! இப்போதைய டிமாண்டு உச்சத்தில் இருப்பதால் பரிசு விழுந்தாலும் 6 மாதம் காத்திருத்தலை தவிர்க்க ரூ.1000 DD அனுப்புக!!!

நல்ல வேளை'ப்பா! முதல்ல மதுரைக்கு வந்திட்டு பெங்களூரு போனாங்க துளசியும், கோபாலும். இல்லாட்டி, இளவஞ்சி எழுதுன பதிவைப் படிச்ச ஆளுங்க அதற்குப் பிறகு என் பதிவை நான் போட்டிருந்தா, சீந்தவா போறாங்க.
பதிலளிநீக்குஆமா, ராகவன் வரலை?
இந்த பதிவு பிரமாதம்! நல்லா ரசிச்சேன்!
பதிலளிநீக்குஅப்படியே அவங்களையும், மத்தவங்களையும் அழைச்சிகிட்டு டிபிஆர்.ஜோசஃப் ஐயாவுக்கு தருகிற எதிர் விருந்துல மறக்காம கலந்துக்குங்க இளவஞ்சி!
http://pithatralgal.blogspot.com/2006/02/41.html
என்ன தருமி சார். அவசர அவசரமா படிச்சீங்களா? பிரம்மச்சாரி அது இதுன்னு இல்லாதது பொல்லாதது எல்லாம் இராகவனைப் பத்தி இளவஞ்சி சொல்லியிருக்காரே படிக்கலையா?
பதிலளிநீக்குஇளவஞ்சி,
பதிலளிநீக்குகிசுகிசுக்களா?
சிலதுக்குத் தரேன்.
1. இகாரஸ் என்பது ஹங்கேரியின் மிகப் பிரபலமான பஸ் தயாரிக்கும் கம்பெனி. பிரகாஷ் உதைக்க வரப்போறார்.
6. அவர்கள் பாலில் குழப்பமா? அல்லது அவர்கள் பால் உங்களுக்கு குழப்பமா? விளக்கவும்.
9. அதான் புட்டு புட்டு கொத்தனார் பதிவுலயும், அதையே மீள்பதிவு செஞ்சு குமரனும் சொல்லிட்டாரே!
எனக்கும மூணாவது பரிசு போதும். VPP தனியா?
என் அடுப்படியில் என்னப்பா ரகசியம்? ராகவன் இதப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே! :)
//தினம் ஒரு பதிவு போடாவிட்டால் கைகள் நடுங்குதல், பின்னூட்டங்களை படிக்க பயப்படுதல், அடுத்தவர் பதிவில் அனானியாக அல்பமாய் திட்டுதல், காலை எழுந்ததும் தமிழ்மணத்தில் முழித்தல், அரைத்தூக்கத்தில் பின்னூட்டங்களை மாற்றியிடல், பதிவிட்டு 1 மணி நேரமாகியும் பின்னூட்டம் வராமல் திகிலடைதல், ஆபீஸ் கணினியில் ஆல்ட்+Tஅப் ம், வீட்டுக்கணினியில் F5 பட்டன்களும் தேய்ந்திருத்தல், விளக்கப்பதிவென வெளங்காப்பதிவிடல், ஈP அட்ரசை அடிவரை தோண்டுதல், பார்க்குமிடமெல்லாம் +/- தேடுதல் போன்ற அனைத்து வியாதிகளுக்கும் மேலும் பதிவுகளைப் படிக்கும்போதே ஏற்படும் மடக்கிட்டானோ என்ற வயிறு கலக்கும் பயம், தெரிஞ்சிருக்குமோ என்ற வெட்கம், கண்டுபிடிச்சுட்டாங்களோ என கூனிக்குறுகும் அவமானம், கேட்டுட்டானே என தலைக்கேறும் கோபம், ஒத்துக்கவே மாட்டேங்கறானே என வரும் வெறுப்பு, சொன்னதை மாத்தி சொல்லறானே என மூக்கு நுனியில் எரிச்சல், அடக்கமாட்டாமல் வரும் அகப்பாவச் சிரிப்பு //
பதிலளிநீக்குஅய்யோ பாவம் இளவஞ்சி நீங்க :-)) அப்படியே வலைப்பதிவர் சந்திப்பின் போட்டா போட்டிருக்கலாமே
இளவஞ்சி, விழுந்து விழுந்து சிரிச்சேன்.
பதிலளிநீக்குகொஞ்ச நாள்ல நீங்களும் மருத்துவமனையின் ஒரு பிராஞ்ச பெங்களூர்ல ஆரம்பிச்சுடுவீங்க போல. :)
நல்ல பதிவு!
ஏதோ,
பதிலளிநீக்குஅக்காவை பத்திரமாத் திருப்பியனுப்பினாச் சரி.
இளவஞ்சி,
பதிலளிநீக்குபதிவை படிச்சிட்டு சிரித்ததில் பக்கத்து cube காரங்க வந்து என்ன ஆச்சு உன்னக்குனு கேக்குர மாதிரி ஆகிபோச்சு.
பின்னூட்டம் அதிகம் எதற்கு
பதிலளிநீக்குஇளவஞ்சி,
பதிலளிநீக்குஇத..இத..இதத் தான் எதிர்பார்த்தேன்.
தூள்மா!
ஆகா! எழுதுறேன்னு சொன்னீங்க. எழுதீட்டீங்க.....பிரமாதம். பிரமாதம்.
பதிலளிநீக்குஇளவஞ்சியை அன்னைக்குதான் மொதல்ல பாத்தது. ரொம்ப அமைதியா இருக்காரு. ஆனா எல்லாம் படிகிராரு. நல்ல நினைவாற்றல். சுதர்சன் பெரிய படிப்பாளி. அவரும் நல்லா சிந்திக்கிறாரு. நல்லா தெளிவா பேசுறாரு. கருப்புக் கண்ணாடியைக் கடைசி வரை கழட்டவேயில்லை. அரசியல் ஆசை இருக்கும் போல.
துளசி டீச்சரைப் பத்தி சொல்ல வேண்டியதே இல்லை. அவங்களும் சரி கோபால் சாரும் சரி..ரொம்ப பாந்தமா நகைச்சுவையாவும் பேசுனாங்க. உண்மையிலேயே நல்லதொரு சந்திப்பு.
// ஆமா, ராகவன் வரலை? //
பதிலளிநீக்குஎன்னைக் கேட்டதுக்கு நன்றி தருமி. நானும் போயிருந்தேன். ஆனா துளசி, கோபால், இளவஞ்சி, சுதர்சன் மாதிரி பெரிய தலைகள் இருக்குற எடத்துல நம்ம அடக்கி தான வாசிக்கனும்.
// என்ன தருமி சார். அவசர அவசரமா படிச்சீங்களா? பிரம்மச்சாரி அது இதுன்னு இல்லாதது பொல்லாதது எல்லாம் இராகவனைப் பத்தி இளவஞ்சி சொல்லியிருக்காரே படிக்கலையா? //
பதிலளிநீக்குகுழப்பமோ குழப்பம்....நான் ஜூட். புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் (புகை மண்டலம்)
நாங்கெள்ளாம் ஆபிஸிலே தமிழ்மணம் விண்டோவை மினிமைஸ் பண்ணி வெச்சுகிட்டு ரகசியமா படிச்சிட்டு திரியறோம்...இப்படி எல்லாம் எழுதி எங்களை வெடிச்சிரிப்பு சிரிக்க வெச்சி நாலு பேருகிட்டே எங்களை மாட்டி விடறதில உமக்கு என்னய்யா சந்தோஷம்?
பதிலளிநீக்குஇளவஞ்சி, அருமையா இருக்கு...சேலம் வைத்தியரோட பேடண்ட் உரிமை பிரச்சினை வரும்...பார்த்துக்குங்க :)))))))))
"பல் இருக்கறவன் என்னைக்கு வேணும்னாலும் பட்டாணி கடிக்கலாம்!!!"
பதிலளிநீக்கு"மொத்தத்தில் இவ்வளவு நாள் தமிழ்பதிவுகளில் பங்கேற்றும் தெளிவாக இருக்கிறார்!!!"
"பரிசு 3: Auto Blogger- அனைத்து பதிவுகளையும் படித்து முக்கியமில்லாத விசயங்களை கண்டுபிடித்து கேள்விகளாக மாற்றி சொந்த பிளாகாக போடும் கருவி! இப்போதைய டிமாண்டு உச்சத்தில் இருப்பதால் பரிசு விழுந்தாலும் 6 மாதம் காத்திருத்தலை தவிர்க்க ரூ.1000 DD அனுப்புக"
கலக்கிப்புட்டீங்க.ஃபுல் ஃபார்மில இருப்பீங்க போல இருக்கு.
Nice Compilation.. enjoyable read
பதிலளிநீக்கு:-))))) சரி சரி.. சாரே... நீங்கள் என்ன சிகிச்சை பண்ணிக்கிட்டீங்கனு சொல்லவே இல்லையே ;-))))))
பதிலளிநீக்குகொஞ்சநாளா தமிழ்மணத்திலிருந்த மன இறுக்கம் விலகி புத்துணர்ச்சி தரும் மருந்தாக உள்ளது.
பதிலளிநீக்கு:-)))
பதிலளிநீக்குராகவன், இப்போது பெங்களூரின் முதன்மைத்தகுதி வாய்ந்த பிரமச்சாரி! Valentine Day அன்னைக்கு மயிலாரை வெவரமாக கழற்றிவிட்டுவிட்டு தனியாக பெங்களூரில் நூல்விட்டு டீல் போட்டுக்கொண்டு இருந்தவரை அழைத்துக்கொண்டு போகவேண்டியதாகிவிட்டது!
பதிலளிநீக்குபிரம்மச்சாரி அது இதுன்னு இல்லாதது பொல்லாதது எல்லாம் இராகவனைப் பத்தி இளவஞ்சி சொல்லியிருக்காரே படிக்கலையா//
இளவஞ்சி, ]
இதுக்கு கொஞ்சம் 'கோனார் நோட்ஸ்' வேணுமே...
ராகவன், இப்போது பெங்களூரின் முதன்மைத்தகுதி வாய்ந்த பிரமச்சாரி! Valentine Day அன்னைக்கு மயிலாரை வெவரமாக கழற்றிவிட்டுவிட்டு தனியாக பெங்களூரில் நூல்விட்டு டீல் போட்டுக்கொண்டு இருந்தவரை அழைத்துக்கொண்டு போகவேண்டியதாகிவிட்டது!
பதிலளிநீக்குபிரம்மச்சாரி அது இதுன்னு இல்லாதது பொல்லாதது எல்லாம் இராகவனைப் பத்தி இளவஞ்சி சொல்லியிருக்காரே படிக்கலையா//
இளவஞ்சி, ]
இதுக்கு கொஞ்சம் 'கோனார் நோட்ஸ்' வேணுமே...
துளசியக்கா இந்தியா வந்திருப்பது தெரியாமல்
பதிலளிநீக்கு(என் தனிமடலுக்கு)உடனே பதில் எழுதிருவாங்களே இன்னும் காணுமேன்னு பாத்தேன்!
>>பதிவிட்டு 1 மணி நேரமாகியும் பின்னூட்டம் வராமல் திகிலடைதல்,<<
அதெப்படிங்க?ஓ..அனுபவம் பேசுது போல..
கலக்கல் பதிவு!ரசித்து சிரித்தேன்
மீனா.
சிபி,
பதிலளிநீக்குஉங்க விருந்துக்கு வராமையா?! சாப்பாடு போடறாங்கன்னா அன்னைக்கு ஒரு நாளு முன்னாடியே டேரா போடுற கும்பலு நாங்க.. வந்துருவோம்!
குமரன், //பிரம்மச்சாரி அது இதுன்னு இல்லாதது பொல்லாதது // அடப்பாவமே?! அப்ப ராகவன் எனக்கே கடுக்கா குடுத்துட்டாப்புலயா?!
ராம்ஸ்! //என் அடுப்படியில் என்னப்பா ரகசியம்? // நீங்க மட்டும் ரஸ்யால எடுத்த போட்டோக்களை எங்களுக்கு காட்டலை இல்ல?! அப்பறம் நாங்க மட்டும் இந்த ரகசியத்தை எபப்டி சொல்லறது?! சஸ்பென்ஸ்சுல கொஞ்சநாளைக்கு திரிங்க!!! :)
கார்த்திக், நம்ப பொழப்புதான் உங்களுக்கு தெரியுமே?! வழக்கம் போல கையை வீசிக்கிட்டுதான் போனேன்! கோபால் சார்தான் எங்களையெல்லாம் போட்டா புடிச்சாரு! துளசியக்கா பதிவுல போடுவாங்க.. பொறுங்க...
தங்கமணி, //மருத்துவமனையின் ஒரு பிராஞ்ச பெங்களூர்ல// அதுசரி!!! நாமெல்லாம் அக்கா ஆஸ்பத்திரிக்கு ஆள் புடிக்கற ஏஜெண்டு.. அவ்ளோதான்! :)
வசந்தன், கவலையே படாதீக.. அக்கா அடுத்தமாசம் ஆரம்பத்துல தளத்துக்கு வந்துடுவாக! :)
வளர்ந்தவன், //பின்னூட்டம் அதிகம் எதற்கு // இப்படி எல்லா பதிவுலையும் பிட்டு பிட்டா வசனம் போட்டா அது என்னைக்கு எங்களுக்கு புரியறது?!
முத்து, //நாலு பேருகிட்டே எங்களை மாட்டி விடறதில // இப்ப தெரியுதா? உம்ம "தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி? " பதிவை படிச்சப்பவும் நாங்க இப்படித்தானே மாட்டியிருப்போம்! :)
யாத்திரீகன், அக்கா நானெல்லாம் இந்த பின்னுட்ட விளையாட்டுக்கு ஜிஜிபின்னு மருந்தே குடுக்கலை! :(
ஏஜெண்டு, ஸ்மைலி உங்க பின்னூட்டத்துல தான் இருக்கு.. உங்க படத்துல காணோம்.. கொஞ்சம் சிரிக்கற படமா கிடைக்கலையா?!
மணியன், நன்றி!
தருமி, //'கோனார் நோட்ஸ்'// எனக்கே ஒன்னும் வெளங்கலை! முருகனுக்கு ஆறு முகம் மாதிரி நம்ப ராகவனுக்கு எத்தனை முகமோ?! ஆனா மயிலார் இவரு ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பையன்னுதான் சொன்னாப்புல!!
மீனா, //அனுபவம் பேசுது போல/ இந்த அனுபவம் இல்லாமலா?! :)
மற்றபடி, வருகைக்கும் கருத்துக்களிட்ட அனைவருக்கும் நன்றி!
ஹி ஹி
பதிலளிநீக்குநானும் இன்னிக்கு மதியம் தான் துளசி அம்மா கிட்ட தொலைபேசியில பேசினேன், எப்பவும் போல கால் பண்றப்போ வாத்தியார் வந்துட்டாராங்காட்டியும் அது மிஸ்டு காலா பூட்சி, அப்புறம் அம்மா போன் பண்ணிட்டாங்க, எடுக்கலாம்னா வாத்தியார் வண்டில நின்னுக்கினு கீறார், அப்புறம் செல்ல ஆப்பண்ணிட்டு வாத்தியார் கிட்ட ஒரு 10 நிமிசம் பேசிட்டு செல் ஆன் பன்றேன் கரெக்டா புட்சிட்டாங்கோ....ரொம்ப சந்தோசமா இருந்தது பேசினது அவங்க கிட்ட :) இந்த வலைப்பதிவு பத்தி சொன்னேன், ஒரே சந்தோசம் அவங்களுக்கு, இங்க இந்தியால தமிழ் பாண்ட் இல்லையாம் பிரவுசிங் செண்டர்ல எல்லாம், அதான் நம்ம ஜெயாம்மா கிட்ட சொல்லி எல்லா பிரவுசிங்க் செண்டர்லயும் தமிழ் பாண்டு நிறுவசொல்லுங்களேம்பா??? நன்றீ
ஸ்ரீஷிவ்...:)
அய்யா இளவஞ்சி
பதிலளிநீக்குஅப்படியே துளசியின் பாடம்
ரொம்ப நல்லா படிச்சிருக்கீங்க.
சான்ஸே இல்ல.
இப்படி துளசிம்மாவின் சென்னை வருகையை யாராவது போட்டாங்களா?
அப்ப முதல்ல மதுர
பிறகு தான் சென்னையா
ரொம்பவும் பேச விஷயம் இருந்தது.நேரம் தான் இல்லை
கோ.கணேஷ் வேற இங்க இப்ப இல்லை,துளசிம்மாவுக்கு வரவேற்பு வளையம் வைக்க.
எப்படியோ தரிசனம் ஆச்சு
//போடி விஜயம்: இந்த மாதம் 3வது வாரம்
பதிலளிநீக்குசென்னை விஜயம்: 12ம் தேதி
மீண்டும் சென்னை விஜயம்: 16ம் தேதி
//
கோயமுத்தூர் வருவாங்களா?
எனக்குக்கூட ஒரு அப்பாயின்மெண்ட் வேணும்!
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
இளவஞ்சி.... சூப்பர்....!!!. இன்று நாள் முழுதும் சிரித்துக் கொண்டிருப்பேன்.
பதிலளிநீக்குஅடடா! குமரன்.. ஒலகம் எங்கயோ போயிக்கிட்டு இருக்கு! நான் இப்பத்தேன் நாலு பதிவு போடறேன்!!
பதிலளிநீக்குவந்துருவோம்! வந்து சப்போர்ட்டை காமிச்சிருவோம்!!! :)
அட என்னங்க இளவஞ்சி
பதிலளிநீக்குஎனக்கும் இந்த நாலு புரியல.
ஆனா உங்க பதிவு பாத்துதான் ஏதோ புரிஞ்ச மாதிரி இருக்கு.
நீங்களாவது துளசிம்மா பதிவு போட்டாச்சு.இங்க அதுகூட போடலைங்க.
வேகமான உலகமுங்கோ
ம் ஓடிப்பார்ப்போம்
ரோஜா அணிக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி இளவஞ்சி
பதிலளிநீக்குஇளவஞ்சி. நீங்க சொன்ன வேகத்தைப் பார்த்துட்டு எங்கே எங்க அணிக்குத் தான் வோட்டுப் போடப் போறீங்களோன்னு நெனைச்சு கொஞ்சம் அவசரப்பட்டு நன்றி சொல்லிட்டேன். நீங்க என்னடான்னா உங்க உண்மையான விசுவாசத்தைக் காமிச்சு தருமி சார் அணிக்கே வோட்டு போட்டுட்டீங்க. அதனால நான் சொன்ன தாங்க்ஸை வாபஸ் வாங்கிக்கிறேன். :-)
பதிலளிநீக்குபாவம் இளவஞ்சி, சம்பளம் குடுத்து கணினியும் குடுக்கிறாங்க. அதுக்காகவாவது கொஞ்சம்வேலை செய்ய வேண்டாமா அலுவலகத்திலே? நீங்களே சொல்லுங்க!! மனச்சாட்சினு இருக்குல்ல மனுசனுக்கு! அதான் இவ்ளோ நாள் வேலை செய்தேன். இந்தப்பக்கம் வர முடியல :o)
பதிலளிநீக்குதுளசி அக்காவுக்கு நன்றின்னு தனி பதிவு போடலாம்னு இருக்கேன். அவங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம்தான் என் வலைதளம் கலகலன்னு இருக்கு...
பதிலளிநீக்கு//துளசி அக்காவுக்கு நன்றின்னு தனி பதிவு போடலாம்னு இருக்கேன்.//
பதிலளிநீக்குசீக்கிரம் போடுங்க.. அந்தப் பதிவுக்காவது நேரத்தோட வந்து பின்னூட்டம் போடறேன்..
:))
உதை, பொன்ஸ்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கு நன்றி!
அடடா! துளசியக்கா பேரைச்சொன்னாலே பின்னூட்ட மழைதான் போல! :)
அக்கா! நீங்க வாழ்க!!!
//அக்கா! நீங்க வாழ்க!!!//
பதிலளிநீக்கும் ம்ம் சரி சரி.
எல்லாரும் நல்லா இருங்க.
//உதை, பொன்ஸ்...
பதிலளிநீக்கு//
ஒரு நொடி ஆடிப் போயிட்டேன். எதுக்குடா இளவஞ்சி பொன்ஸக் கோவிச்சுக்கறார்னு. அப்புறம் தான் புரிஞ்சது அது உதை இல்லை உதய்ன்னு :-)
துளசியக்கா பேரைச் சொன்னாக் கூட போதும்; தனியாப் பதிவெல்லாம் போட வேணாம். பின்னூட்ட மழை கொட்டும். அனுபவத்துல சொல்றேன். :-)
ஹிஹி..
பதிலளிநீக்குநல்ல சிரிப்புங்க இதைப் பார்த்து.. முதல் முதல்ல, இதைப் படிச்சப்போ, உதயகுமார் எழுதினதை, நீங்க தான் எழுதி இருக்கீங்கன்னு நினைச்சிகிட்டேன்..("துளசி அக்காவுக்கு நன்றின்னு தனி பதிவு போடலாம்னு இருக்கேன்.")..
அடுத்து நீங்க பதில் சொன்னதை ("உதை, பொன்ஸ்"), நானும் "பொன்ஸை உதை"ன்னு புரிஞ்சிகிட்டு, பயந்து ஓடிட்டேன்(என்ன இது, இப்படி எல்லாம் சொல்றாருன்னு :))..
இப்போ குமரன் எழுதி இருப்பதைப் பார்த்துத் தான் புரியுது :) :-D
யப்போவ்... விட்ட குறை தொட்ட குறைன்னு சொல்லுவாங்க... அது இதுதான்.. என் பேரை வெளி நாட்டுக்காரங்கதான் மென்னு முழுங்குவாங்கன்னா, இங்கேயுமா???
பதிலளிநீக்குYou too, Ilavanji????
பொன்ஸ், இதை சாக்கா வச்சு நீங்களும் என் பேரை சிதைச்சு சிரிக்கறீங்க...
ஆனாலும், துளசி அக்காவுக்கு நன்றின்னு தனி பதிவு வந்துட்டே இருக்கு.
:))
பதிலளிநீக்கு