"டேய் மச்சி! இந்த மடோனாங்கறது ஆம்பளையா பொம்பளையா!?" என்ற இந்த அதியற்புதமான கேள்வியினை கேட்ட என்னை தி.நகர் பாஸ்ட்புட் கடையின் ஓனர் ஓரத்தில் மிச்சத்திற்காக படுத்திருக்கும் ஜிம்மியை பார்க்கும் பார்வையைனை ஒத்த ஒரு லுக்கை விட்டு "மாங்கா மாதிரி வந்த இடத்துல மானத்தை வாங்காதடா!" என்ற என் நண்பன் சக்கரையின் பதிலின் மூலமாகத்தான் முதன்முதலாக மேல்நாட்டு இசையெனும் இன்பக்கடலில் என் கால்நனைப்பு நடந்தது! அவன் கோவைல GRG மெட்ரிகுலேசன். நான் கோபால் நாயுடு தமிழ்மீடியம் 11ஆவது! சாயந்தரம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தவிர வேறு எதற்கும் எங்களுடன் சேராத இந்த புண்ணியாத்துமா சக்கரை ஒரு முறை லட்சுமி காம்ப்ளெக்ஸ் முதல்மாடியில் இருக்கும் 'சிங்'ங்கான் கடைக்கு கேசட்டு ரெக்கார்ட் செய்ய என்னையும் கூட்டிச்செல்ல அங்கு வைத்து நான் கேட்ட கேள்வி தான் அது! அந்த நாள் வரைக்கும் எனக்கெல்லாம் தெரிஞ்ச இங்கிலீசி பாட்டுன்னா அது "சாலிடெர் ஃபார் ஸ்போர்ட்ஸ்.. சாலிடெர் ஃபார் சண்டே மூவீஸ்.. சாலிடெர்ர்ர்... சாலிடெர்ர்ர்ர்.." தான்! இந்த பாட்டுல ( ஹிஹி.. விளம்பரத்துல..) எல்லா வார்த்தைகளும் தெரிஞ்சதுங்கறதால மனசுல அப்படியே பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு! எங்க கும்பல்லையும் சில பேரு இங்கிலீசு மீடியம் இருந்தானுங்க. அவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்னா நாங்க இங்கிலீசு பரிச்சையை மட்டும் இங்கிலீசுல எழுதுவோம்! அவனுங்க எல்லா பரிச்சையையும் இங்கிலீசுல எழுதுவானுங்க.. தமிழை தவிர.. மத்தபடி வாங்கற மார்க்குல இருந்து வாத்தியாருகிட்ட வாங்கற உதைவரை எல்லாருமே ஒரே ரேஞ்சுதான். ஆனா இந்த சக்கரை ரேஞ்சே தனி! இஙகிலீசு புக்கு படிக்கறதும் இங்கிலீசு ப்டம் புரிஞ்சு பாக்கறதும் அவன் ஃபிரண்சுகளோட இங்கிலீசுலயே பேசறதுன்னும் ஒரு லெவல்லயே இருப்பான்! இவன் கூட இருக்கும்போது நாங்க பார்த்த இங்கிலீசு படத்தோட கதையைப்பத்தி பேசிக்கவே மாட்டோம்! அது ஜாக்கிஜான் படமா இருந்தாக்கூட! அவன் இல்லைன்னா "ஏண்டா.. டெமிமூர் ரோஜர்மூரோட தங்கசியாமே?! உனக்கு தெரியுமா"ங்கற ரேஞ்சுலதான் எங்க பொங்கல் இருக்கும்! இந்த ரேஞ்சுல இருந்த அவனை எங்க பொகையால ஒன்னும் செய்யமுடியாம ஆளு பார்க்க "ஆவாரம்பூ" படத்துல வர்ற வினீத் போல இருக்கவே இவனுக்கு நாங்க சக்கரைக்கு பேரு வைச்சு அதன் மூலமா அவனை தரவிறக்கம் செஞ்சு அதன்மூலமாக அவன் அடைந்த தகுதியை கணக்கில் கொண்டு மொத்தமா அவனை எங்க சங்கதுல சேர்த்துக்கிட்டோம் என்பதில் முடிஞ்சுபோனது அவனோட "ரேஞ்சு".
அன்னைக்கு வீட்டுக்கு வந்தவுடனே அவன்கிட்ட கெஞ்சிக்கூத்தாடி "ஒரே ஒரு கேசட்டு குடுடா"ன்னு கெஞ்சிக் கேட்க அவன் பொழச்சுப்போன்னு ஒன்னுக்கு ரெண்டா மடோனாவோட "Like a Prayer"ம் MJவோட "Bad"ம் குடுத்தான்! கொடுக்கும்போதே தெளிவா மாடோனாங்கறது பொம்பளைன்னும் மைக்கேல் ஜாக்சன்ங்கறது ஆம்பளைன்னும் சொல்லித்தான் கொடுத்தான்! அதுல ரெண்டாவது மட்டும் இன்னைக்கும் சந்தேகமா இருக்கு! :) அந்த ரெண்டு கேசட்டுகளையும் வீட்டுக்கு கொண்டு வர்றதுக்குள்ள எனக்கு புல்லரிப்பு தாங்கலை! மனசுக்குள்ள ஓரமா Solomon Grundyக்கு சித்தப்பா பையன் ஆகிட்டமாதிரியே ஒரு குஜாலு! வீட்டுக்கு வந்தவுடனே, எங்க அப்பா வீடுன்னா ஒரு டேப்ரிக்கார்டரு இருக்கனும் என்பதை தவிர வேறு எந்தவிதமான குறிக்கோளுமற்று எந்தக் காலத்திலோ வாங்கி வைத்திருந்த தீப்பெட்டிக்கும் சற்று பெரிய சைசிலிருக்கும் அந்த செவப்பு கலர் Sanyo செட்டை எடுத்துக்கொண்டு என் டேபிளுக்கு போய் ரெண்டு கேசட்டையும் போட்டு கேட்க கேட்க.. ஆஹா! மலபார் பீடியின் இழுக்க இழுக்க இன்பம் மாதிரி கேட்க கேட்க இன்பம்! அன்னைக்கு முழுக்க கேசட்டு கவருலு இருக்கற பாட்டு பேரையும் அதுதான் பாடுதாங்கற ஆராய்ச்சிலையுமே பொழுது போயிருச்சு! எங்க வீட்டு செட்டு "என் புருசந்தான்.. எனக்குமட்டும்தான்" பாட்டு போட்டாலே ஆயிரத்தெட்டு நடுக்கங்களோட 95 வயசு கெழவி பாடற எழவூட்டு அவுட்புட்டுதான் கொடுக்கும்! இதுல மடோனாவை நான் எப்படி கேட்டிருப்பேன்னு நினைச்சுப்பாருங்க!
ஆனா ஆரம்பம் தாங்க இப்படி! அதுக்கப்பறம் சக்கரை ஒருநாள் "Smooth Criminal" டான்சை வீடியோல காட்ட கொஞ்சநாளைக்கு அந்த பைத்தியமாகவே ஓடுச்சு! கொஞ்சம் கொஞ்சமா MJல இருந்து George Michael, ABBA, BoneyM, Phil Collins, Elton john, Sting, Bruse Springston, Eagles, Prince னு கொஞ்சம் கொஞ்சமா ஞாலெட்ஜு விரிவாக ஆரம்பிச்சது! பாட்டெல்லாம் புரியுதோ இல்லையோ மெட்டு பீட்டு ரிதம் நல்லா இருந்தா போதும்! அது கூட குரலும் நல்லா இருந்துட்டா கேக்கவே வேணாம்! கொஞ்ச நாள்ல நாங்களே சொந்தமா சிங்கான் கடைக்கு போக ஆரம்பிச்சுட்டம்னா பாருங்களேன்! அப்போ சோனி கேசட்டு 40ரூபாய்! 5ஸ்டார் கேசட்டுன்னு ஒன்னு 25 ரூபாய்க்கு கிடைக்கும்! அதுல ரெண்டு வாங்கிக்கிட்டு சிங்கான் கடைல இருக்கற ஆல்பம் லிஸ்ட்டை எல்லாம் எடுத்து எங்களுக்கு தெரிஞ்ச பாட்டு, தெரியாத ஆளு, நல்லாயிருக்கும்னு நம்பற பாட்டு, சிங்கானையே கேட்டு தெரிஞ்சுக்கறதுன்னு 2 மணிநேரம் கடைலயே பழியாக்கெடந்து 20 பாட்டுக்கு லிஸ்ட்டை தயார்செஞ்சு கொடுத்துட்டா சரியா மொத்தம் 200ரூபாய் குனீஸாயிருக்கும்! அது ரெக்கார்ட் ஆகி வர்ற வரைக்கும் நாலுநாளைக்கு மனசுக்குள்ள குறுகுறுன்னே இருக்கும்! அன்னைக்கு சாயந்தரம் கும்பலா காந்திபுரம் போய் கடைல கேசட்டை சிங்கானை ரெண்டு நிமிசம் போட்டுக்காட்ட சொல்லிட்டு அந்த மொத பாட்டை கும்கும்னு அவரு Kenwood செட்டுலயும் Bose ஸ்பீட்டர்லையும் (ரொம்ப நாளைக்கு போஸ் ஸ்பீக்கரு டூப்ளிகேட்டுன்னு எங்களுக்குள்ள வாக்குவாதம்! )கேட்டு வாங்கிக்கிட்டு அந்த எபெஃக்ட்டை பத்தி பொகையோட பேசிக்கிட்டே கிராஸ்கட் ரோட்ல சேட்டு கடைல பேல்பூரி சாப்டுட்டு வீடுவந்து சேருவோம்!
அன்னைக்கு எங்களுக்கு இருந்த குறைஞ்சபட்ச கனவெல்லாம் ஒரு நல்ல ஆயில் சீசன் செஞ்ச SG bat! ஒரு நல்ல மியூசிக் சிஸ்டம்! பைக் ஆசையெல்லாம் கூட பின்னாடிதான் வந்தது! ஒரு நாள் ராஜா Philips Powerhouse வாங்கியிருக்கான்னு தெரிஞ்சு மொத்தமா அவன் வீட்டுக்கு படையெடுத்து ஆசைஆசையா அந்த கருப்புகலர் பெரிய ஸ்பீக்கர்ல 800W PMPO எழுத்துக்களை தடவியபடியே அதுல பாட்டுக்கேட்டது இன்னும் நினைவிருக்கு! ம்ம்ம்.. அது ஒரு கனாக்காலம்! அதுக்குள்ள காலேஜு வந்துட்டோம்! என் காலேஜுல அவ்வளவா பீட்டரு பார்ட்டிங்க இல்லைன்னாலும் என் செட்டு பசங்க படிச்ச மெடிக்கல் காலேஜ் மூலமா அவனுங்களுக்கு நிறைய நார்த் மக்கள் ஃபிரண்ட்சிப் கிடைச்சது! அவனுங்க மூலமா கேட்க ஆரம்பிச்சதுதான் ஹெவிமெட்டல் , பவர்மெட்டல், டெத், டார்க், ஃக்ரேப்ட்ஒர்க் எல்லாம்! சும்மா ஜொய்ங்..ஜொயிங்னு பாஸ் கிட்டாரு இழுக்க டிரம்சு சும்மா பின்னி பெடலெடுக்க பாடல் வரியெல்லாம் யாருக்கு வேணும்? சும்மா உடம்புல் ரத்தம் ஜிவுஜிவுன்னு சூடேரும்! அதுக்கப்பறம் எந்த காலேஜ் விழாவுல எங்க இங்கிலீசு பாட்டு பாடற போட்டி நடந்தாலும் ஜரூரா போய் கும்பலா ஐய்க்கியாமாருவோம்! அதுவரைக்கும் மத்த பாட்டுக்குபாட்டு, Addsapp, quiz னு எல்லா போட்டிலையும் கீழ நின்னுக்கிட்டு ஒப்பாரி வைக்கறது, பெல்ட்டுல அடிச்சிக்கறது, சேர் மேல ஏறி பெல்டுலயே தூக்குல தொங்கறமாதிரி அல்லாடறதுன்னு அத்தனை பேரையும் காலாச்சுட்டு இருந்துட்டு RockShow வர்றப்ப மட்டும் சக்கரையோட சேர்ந்துக்கிட்டு Goodboyயா போய் அங்க பாடற ஹெவிமெண்ட்டல் பாட்டுக்கெல்லாம் முன்வரிசைல கைல விர்ட்சுவல் கிடாரை பிடிச்சுக்கிட்டு மாரியாத்தா மொத்தமா வந்து மேல ஏறிட்டாப்புல சாமியாடுவோம்! அதுவும் தெரிஞ்ச பாட்டா பாடிட்டானுங்கன்னா அவ்வளவுதான்! சிலநேரம் Axl Roseஆக்கூட மாறிடுவோம்!
ஒரு தடவை இப்படித்தான் குமரகுரு காலேஜுல ஒரு மல்லு ட்ரூப் நல்லா பாடறாங்கன்னு கேள்விப்பட்டு அவங்களை கோவை மெடிக்கல் காலேஜ் ஆண்டுவிழாவுக்கு போய்பேசி கூட்டிக்கிட்டு வந்தானுவ.. விசயம் கேள்விப்பட்டு மெடிக்கல் நார்த்தீஸ்க்கெல்லாம் ஒரே சந்தோசம். அந்த பேண்ட்க்கு இதுதான் முதல்தடவை ஃப்ரொபசனலா ஸ்டேஜ் ஏறுவது! நாங்களும் எங்களுக்கு புடிச்ச பாட்டுகளா ஒரு 30 பாட்டுங்க செலக்ட்செய்து கொடுக்க.. மக்கா அன்னைக்கு நைட்டு பின்னிட்டானுவ! கடைசி நாள் கடைசி நிகழ்ச்சியா தமிழ்பாட்டுக ஆர்கெஸ்ட்ரா 9 மணிக்கு முடிய 10 மணிக்கு பசங்க எல்லாம் சரியான 'சுதி'யோட வந்து இறங்க ஆரம்பிச்சதுய்யா மொதபாட்டு! Judas Priest டோட Painkiller! சும்மா கிட்டாரையும் ட்ரம்ஸ்சையும் பிச்சு மேஞ்சுட்டானுவ... இதுக்கப்பறம்தாம் நம்ப பீட்டரு மக்களுக்கே அன்னைக்கு நைட்டு வாழ்க்கைல ஒரு நம்பிக்கையும் பிடிப்பும் வந்தது! கோவைல அவனுங்க லெவலுக்கு எதுவும் கிடைக்காம காஞ்சு கெடந்தவுங்களுக்கு அன்னைக்கு நைட்டு ஒரு வரம்தான்! நைட்டு மூனு மணி வரைக்கும் 25 பாட்டாவது பாடியிருப்பனுங்க.. ஆடி ஆடி ஓய்ஞ்சுபோயி கைகாலெல்லாம் வலிக்குது! "காது... வலிக்குது.. வேணாம்..விட்டுரு!"ன்னு சொன்னாக்கூட அவனுங்க கேக்கறமாதிரியில்லை! வந்த சான்ஸ்சையும் கிடைச்ச ஆடியன்ஸையும் விடக்கூடாதுன்னு பாடிக்கிட்டே இருக்கானுவ! கடைசி வரைக்கும் ஒரு 50 பேரு தாக்குப்பிடிச்சோம்! அன்னைக்கு ஹைலைட்டே என்ன பாட்டுன்னு கேக்கறீங்களா? ட்ரூப்பு 10 பாட்டுக்கப்பறம் கொஞ்ச நேரம் கேப் விட, ஓல்டு மங்க் கொடுத்த நல்ல சுதில ஸ்டேஜ் முன்னாலயே கிர்ர்ரடித்துக்கிடந்த பழனியப்பன் "என்னடா? பாடறதை நிறுத்திட்டானுவ?"ன்னு திடீர்னு எழுந்து மைக்க பிடிச்சு "Sunday Sunday Holiday.. Monday Monday Working Day.. Friday Friday ****ing Day!" அவன் சொந்த சரக்கை எடுத்துவிட்டதுதான்! அப்படியே அப்ளாசை அள்ளிட்டான்! பாட வந்தவுங்களுக்கே சிரிப்பு தாங்கலை!
ம்ம்ம்.. இன்னைக்கும் நான் இங்கிலீசு பாட்டுகளை கேக்கறன்னா அது அந்த மெட்டு , பீட்டு, ரிதம் மற்றும் குரல்வளம்தான். எனக்கு தெரிஞ்சு எந்த பாட்டையும் இதுவரை முழுசா வரிக்குவரி புரிஞ்சு கேட்டது இல்லை! அதுநாளதான் மீனாக்ஸ்சோட பதிவுல நம்ப அண்ணாத்தே Pink Floyd பாட்டோட மொழிபெயர்ப்பை படிக்கச்சொல்ல நாம இத்தனை நாள் கேட்ட பாட்டுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கான்னு ஒரே ஆச்சரியமா போயிருச்சு! சரி விடுங்க! அர்த்தம் புரிஞ்சா ஒரு வேளை இந்த பாட்டுக எல்லாம் பிடிக்காம போயிருமோன்னு ஒரு பயம் இருக்கறதுனால இதுக்கு மேலையும் இப்படியே கேட்டுக்கறேன்! :)
மேல உள்ள போட்டோவை பார்த்து பயந்துடாதிங்க! அது அந்தக்காலத்து இளவஞ்சி CIT Harmony போகறதுக்காக ஹாஸ்டல்ல ரெடியாகறப்ப எடுத்தது! பின்னாடி பார்த்தீங்களா? காவித்துண்டு! அன்னைக்கு அகாசி கேப்போட உபாயத்துல அந்த ஹேர்ஸ்டைல்ல இருந்தேன்! இன்னைக்கு எதுவுமே இல்லாம அகாசியோட ஒரிஜினல் ஸ்டைல்ல இருக்கேன்! ஆட்டம் அதிகமானா அப்பறம் அடங்கறப்ப இதுதான் கதின்னு ஆண்டவன் அன்னைக்கே மெசேஜு சொல்லியிருக்காரு! நாந்தேன் கவனிக்கலை போல! :)
இத்தனையும் சொல்லிட்டு எனக்கு பிடிச்ச பாட்டுக சிலதை சொல்லலைன்னா எப்படி? அப்பத்திக்கு மூடுக்கு ஏத்தாப்புலதான் நம்ப பாட்டு லிஸ்ட்டு! இப்போ எங்காதுல பாடிக்கிட்டு இருக்கற ப்ளே-லிஸ்ட்டு இங்கே...
Nirvana - Smells like a teen sprit, Come As You Are
MLTR - Paint My Love
Paul Young - Living in the love of Common people
Ping Floyd - Dogs of War, Us and Them, Another Brick in the Wall
REM - Loosing my religion
Metallica - Unforgiven, fuel, I Dissapier
Guns'n'roses - November Rain, Please Dont Cry, Sweet Child of mine
Enigma - Child in Us, Push the Limits, I love you I kill you
MegaDeath - Symphony of Destruction
Aerosmith - Living on the Edge
Bryan Adams - Have You Ever Really Loved A Woman, Summer of '69
Eminem - Lose Yourself, 8 mile
Queen - Radio gaga, We'll rock you
Def Leppard-Have You Ever Needed Someone So Bad
Dr Alban - It's My Life
Europe - The Final CountdownScorpions - Still Loving You, Under the same sun
UB40 - CANT HELP FALLING IN LOVE
MICHAEL JACKSON - I Just Can't Stop Loving You
John Bon Jovi - Bed of Roses, Blaze of Glory
Savage Garden - To the Moon and Back, I want you
Lionel riche - Hello
Roxette - Shes Gotta Look
Chris Deburgh - Lady in Red , Last night
Modern Talking - brother Louie
Modonna - Frozen
George Michael - Father Figure
No Mercy - Please don't go
Cutting Crew -I Just Died In Your Arms
Mr. Mister - Broken Wings
Cher - All Or Nothing
White Lion - When The Children Cry
Backstreet Boys - Show Me the Meaning of Being Lonely
enrique - rythm divine
Police - Every breath you take
MC Hammer - U Can't Touch This
கடந்தகால நினைவுகளினூடே நல்லதொரு இசைபற்றிய பதிவு. கீழே பாடல்களின் பாடல்களின் பட்டியலைப் பார்க்கும்போது எல்லா இரக இசையையும் நீங்கள் இரசிப்பது தெரிகிறது. அப்படி கலவையாக இசையை இரசிக்கத் தெரிவது கூட வித்தியாசமான அனுபவமாய் இருக்கும் போல :-).
பதிலளிநீக்குஎன்னத்தைச் சொல்ல?
பதிலளிநீக்குபடம் பதிவு எல்லாமே நல்லாயிருக்கு. உங்கட பாணியிலயே தொடருங்கோ.
/// தமிழை தவிர.. மத்தபடி வாங்கற மார்க்குல இருந்து வாத்தியாருகிட்ட வாங்கற உதைவரை எல்லாருமே ஒரே ரேஞ்சுதான்.///
பதிலளிநீக்குஉங்கள் எழுத்து நடை இயல்பா இருக்கு. கோவை கல்லூரி விழாக்களை பற்றிய சுவையான தகவல்கள்.
ஆஹா டிசே! இந்த பதிவினை எழுதும்போது உங்களது "ராப் பாடல்களினூடு ஒரு சிறு பயணம்" நினைவுக்கு வந்தது. நீங்கள் இதனை படிக்கவேண்டும் என நினைத்தேன்! பார்த்தால் முதல் பின்னூட்டமே உங்களுடையது! :)
பதிலளிநீக்கு//கலவையாக இசையை இரசிக்கத் தெரிவது கூட // இதெல்லாம் "இருக்கறவனுக்கு ஒரு இடம்.. இல்லாதவனுக்கு ஒலகமே மடம்.."ங்கற கதைதான்! புரிஞ்சி கேக்கறவனுக்கு புடிச்சது ஒரு ரகம்! என்னை மாதிரி ஆளுங்களுக்கு... ஹிஹி.. கலவையா கேக்கறதுல இன்னொரு நன்மையும் உண்டு! ஒரே மனநிலைல இருக்கவேண்டாம் பாருங்க! :)
வசந்தன், கிருக்கன், அனுசுயா... வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
இளவஞ்சி சார்,
பதிலளிநீக்குபல நினைவுகளை ஞாபகபடுத்தியது உங்கள் பதிவு. நன்றி..
Boney M என்று நினைக்கிறேன். குற்றம் கண்டுபிடிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம்.
நாங்க காலேஜ் படிக்கும் போது ஜார்ஜ் மைக்கேல் கேட்டா ஒரு மாதிரி பார்போம் :-)
மடோனாவோட papa dont preach me பாட்டு பிடிக்குமா ?
//எல்லா போட்டிலையும் கீழ நின்னுக்கிட்டு ஒப்பாரி வைக்கறது, பெல்ட்டுல அடிச்சிக்கறது, சேர் மேல ஏறி பெல்டுலயே தூக்குல தொங்கறமாதிரி அல்லாடறதுன்னு..
பாரம்பரியம் என்னாலும் காப்பற்றபட்டது :-)
//"Sunday Sunday Holiday.. Monday Monday ...
காலேஜ் படிக்கும் போது நாங்களே எழுதிய ஆங்கில மெட்டுக்கள் நினைவுக்கு வந்தது..
//நம்ப பாட்டு லிஸ்ட்டு
இவ்வளவு கலவையான ரசனையா.. ஆச்சர்யபடுகிறேன்.
U2 கேட்டு பாருங்க உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். Beatles பத்தி ஒண்ணுமே சொல்லல
கார்த்திக்,
பதிலளிநீக்குதவறு திருத்தப்பட்டது! நட்ட நடுநிசில ஒக்கார்ந்து கண்ணு எரிய பதிவு எழுதுனா இப்படித்தான் போல! வேற ஏதாச்சும் இருந்தாக்கூட சொல்லப்பு! மானம் போறதுக்குள்ள மாத்திடுவோம்!
//மடோனாவோட papa dont preach me // கண்டிப்பா! ஆனா அம்மணி எதுக்காக இந்த பாட்டை பாடறாங்கன்னு சக்கரை சொல்லி தெரிஞ்சப்பறம் அது நம்ப தமிழ்க்கலாச்சாரத்துக்கு ஒத்துவாராதுங்கறதால ரொம்பநாள் கழிச்சு வந்த Frozenக்கு மாறிட்டேன்! ஹிஹி... ம்ம்ம்.. என்ன இருந்தாலும் இவுக என் அறிவுக்கண்ணை தொறந்துவைச்ச அக்கா! :)
//பாரம்பரியம் என்னாலும் காப்பற்றபட்டது // அடடா என் கழக கண்மணிகளா!! :)
//U2 கேட்டு பாருங்க // With or without You க்கு நான் அடிமை! அடிமை!! அடிமை!!!
Beatles என்னவோ என்னை இன்னைக்கு வரைக்கும் இழுக்கவே இல்லை! John Lennon - Imagine கூட பாட்டுல கருத்து இருக்கறதால எல்லோருக்கும் பிடிக்குதுன்னு நினைக்கறேன்! எனக்கு பிடிச்ச உள்ளத்தை உருக்கும் குரலுக்கு சொந்தக்காரருன்னா அது Chris De Burgh தான்!
கடைசியா.. //இளவஞ்சி சார்// இது கொஞ்சம் ஓவருங்க! :))
என்னமோ greek and latin அப்டிம்பாங்களே அது மாதிரி இருக்கு. நமக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாதுங்க. இன்னும் உங்க 11வது ஸ்டாண்டர்ட் லெவல்தான் இன்னும்.என்ன பாடுறதுல abba, boneyM கேட்டிருக்கேன். 'கீனா' இல்லியா அதுனால Jim Reeves தெரியும். அத தாண்டினா, KennyG, Yanni..அம்புடுதான். நீங்க மைக்கிள் ஜாக்சன்பற்றிசொன்னது மாதிரி எது ஆம்பிள பாடறது, எது பொம்பள பாடறதுன்னு புரியாமப் போனதால் அந்தப் பக்கமே போனதில்லை.
பதிலளிநீக்குபழைய போட்டோ...ம்ம்ம்..ம்...ரொம்பதான் ஆடியிருக்கீங்க...
//என்னமோ greek and latin அப்டிம்பாங்களே அது மாதிரி இருக்கு// எல்லாம் சும்மா பிட்டைப் போடறதுதான் தருமி சார்! :)
பதிலளிநீக்கு//ம்ம்ம்..ம்...ரொம்பதான் ஆடியிருக்கீங்க... // எனக்கே இப்போத்தான் தெரியுது!!!!
//மேல உள்ள போட்டோவை பார்த்து பயந்துடாதிங்க! அது அந்தக்காலத்து இளவஞ்சி CஈT Hஅர்மொன்ய் போகறதுக்காக ஹாஸ்டல்ல ரெடியாகறப்ப எடுத்தது! பின்னாடி பார்த்தீங்களா? காவித்துண்டு! அன்னைக்கு அகாசி கேப்போட உபாயத்துல அந்த ஹேர்ஸ்டைல்ல இருந்தேன்! இன்னைக்கு எதுவுமே இல்லாம அகாசியோட ஒரிஜினல் ஸ்டைல்ல இருக்கேன்! ஆட்டம் அதிகமானா அப்பறம் அடங்கறப்ப இதுதான் கதின்னு ஆண்டவன் அன்னைக்கே மெசேஜு சொல்லியிருக்காரு! நாந்தேன் கவனிக்கலை போல! :)//
பதிலளிநீக்குநீங்களெல்லாம் முன் ஜாக்கிரதையோடு போட்டோ எடுத்து வைச்சிட்டீங்க, நானெல்லாம் முடியிருக்கிற போட்டோ இல்லைங்கிறதுக்காகவே போட்டோவே போடாம இருக்கேன். என்னவோப்பொங்க, ஜானியை பிடிக்கலைன்னு சொல்லீட்டீங்க, சரி போனாப்போகுது ஒப்பீனியன் டிபர்ஸ். ஹிஹி.
நீங்க இப்படி நிறைய முடி இருக்கிற மாதிரி போட்டோவெல்லாம் போட்டு ஏமாத்தப்பார்த்தாலும் நாங்க ஏமாற மாட்டோம் :-). இது போன்ற மாய்மாலங்களெல்லாம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். :-)
இப்படிக்கு
பொறாமையில் ஒரு முடிசூடா மன்னன்.
ilavanji,
பதிலளிநீக்குungalluku ella vishayathayume azhaga solla(ezudha) theiryudhu. Adiyanukku bangalore la dhan pozahppu.
Unga song lista paatha ninga ella typana paatum keppinganu nenaikaren. Neenga mention panna songs la 80% of the songs naan ketirukken. Very nice selection. Ippallam indha pop songs kekaradha niruthiten. Nalla vela indha boy band and girl band trend onjirukku. It become repetetive now a days(not rock/hip-hop). Neenga hip-hop ellam kekkaradhu illaya?
Nalla ezhuduringa appu, trenda continue pannunga.
My list of songs:
1. Pink Floyd(Favorite Band) - Comfortably Numb(Ennoda most favorite song of all time, gilmour guitar solo is so pure and divine), High Hopes(Second best), Sorrow, Hey You + all the songs you mentioned.
2. Eminem - Lose yourself(one of the best), stan.
3. Queen - 2 songs mentioned by you + Bohemian Rhapsody.
4. Metallica - one.
5. Deff Leppard - Love Bites.
6. Led Zeppelin - Stairway to heaven, kashmir.
7. Rammstein - Amerika, du hast.
8. Prince - Doves dont cry.
9. Green Day - Jesus of suburbia, Boulevard of Broken dreams.
10. Tupac - ghetto gospel.
11. Akon - Ghetto(ippodhaya favorite)
12. Nelly - Airforce one
13. usher - Yeah.
14. 50 cent - 21 questions, in da club(unbeatable beat)
15. Notorious BIG - Hypnotise
16 P. Diddy - Every breathe you take.
17. sting - Brand newday.
18. Bryan adams - best of me, summer of 69.
19. REM - Drive
20. Europe - carrie, the final countdown.
21. George Michael - Careless whisper.
22. Eagles - Hotel California(idha top 5 la pottirukanum)
23. Santana - Black Magic woman, Smooth, Maria Maria.
எங்கள் ஊர் திரையரங்குகளிலே ஆங்கிலப்படங்கள் தொடங்கமுன்னால், சில ஆங்கிலப்பாடல்கள் போடுவார்கள். சொற்களும் தெரியாமல் ஆங்கிலப்பாடல்கள் பாடியிருக்கிறோம். அப்படியாக எங்கள் ஆங்கிலப்படஞானத்தையும் இசைஞானத்தினையும் வளர்த்த Bud Spencer & Terrence Hill ஆகியோரின் நகைச்சுவைப்படங்கள் வாழ்க. பிறகு பார்த்தால், Bud Spencer இற்குக் கூட ஆங்கிலம் மட்டோமட்டாம் :-(
பதிலளிநீக்குநமக்குப் பிடித்த சில பாடல்களும் பட்டியலிலே கிடக்கின்றன. வாழ்க. ஆனால், பிடித்த பாடகர்கள் சிலரின் பெரிதும் பிடித்துக்கொள்ளாத பாடல்களையும் சேர்த்திருப்பதைக் கண்டிக்கிறோம் ;-)
கொஞ்சம் ஜாஸ், கண்ட்ரி, போக், ப்ளூஸ் என்ற திசைகளிலும் நகருங்கள்.
ஐயா உண்மையச் சொல்றேன்....எனக்கும் நீங்க போட்டுருக்குற பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீங்க சொல்ற விஷயங்களெல்லாம் எனக்கு சத்தியாமாப் புரியலைங்க.......
பதிலளிநீக்குஆனா மைக்கேல் சாக்சன் ஆம்பிளையான்னு நீங்க இன்னமும் சந்தேகப்படுறது மட்டும் புரிஞ்சது... :-)))
எனக்கு இங்கிலீசு பாட்டு அறிமுகம் ஆனது ஒரு நண்பன் வீட்டுல பீத்தோவன் கேட்டுட்டுதான்...என்னமோ ஒரு பிடிப்பு....அப்புறம் நானும் வாங்கிக் கேட்டுக்கிட்டு இருந்தேன்...அப்புறம் அதையும் விட்டாச்சு....
ஆனா OSTஸ் விரும்பிக் கேப்பேன். All I want is a room some where ல இருந்து Who wants to move it move it வரைக்கும்.
மோகன்தாஸ்,
பதிலளிநீக்கு//பொறாமையில் ஒரு முடிசூடா மன்னன்// God gives hair only to the ugly headed persons to hide it!! ஹிஹி... அதனால எஞ்ஜாய் மாடி!! :)
ஜானை பிடிக்காம எல்லாம் இல்லைங்க! (எதுக்கு வம்பு! உங்க சமீபத்திய பதிவுபடி நீங்கதான் ஜானிக்கு அகில உலக ரசிகர்மன்ற தலைவரா இருக்கனும்! பிடிக்கலைன்னு சொன்னா அடியப்போட்டுறபோறிங்க!! :) )
முருகேசன், நீங்களும் பெங்களூரா! சூப்பரு! வந்து ஜமால ஐக்கியமாகிருங்க!
Hotel California, Careless Wishpers, Final Countdown, இதெல்லாம் தாண்டாம வரமுடியுமா என்ன?! :)
உங்க லிஸ்டுல நாலைஞ்சு புதுசா இருக்கு, நாலைக்கு ஆபீசுல எவன் சிஸ்டத்துல இருந்தாவது உருவிட வேண்டியதுதான்! :)
அனானி,
//கொஞ்சம் ஜாஸ், கண்ட்ரி, போக், ப்ளூஸ் // இதிலெல்லாம் மாரியாத்தா டான்ஸ்சுக்கு வழியில்லாததால அந்தபக்கம் போகலைன்னு நினைக்கறேன்! இதோட சேர்த்து எனக்கு பிடிச்ச ஆளுங்களோட உங்களுக்கு பிடிச்ச ஐட்டங்களை எடுத்துவிட்டீங்கன்னா நானும் அப்டேட் செஞ்சுக்குவேன்! :)
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
ராகவன், மாடரேட் செஞ்சதுக்கப்பறம் உம்ம கமெண்ட்டு காணாமப்போயிருச்சு! அதனால நானே போஸ்ட் செஞ்சுடறேன்!
பதிலளிநீக்கு"ஐயா உண்மையச் சொல்றேன்....எனக்கும் நீங்க போட்டுருக்குற பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீங்க சொல்ற விஷயங்களெல்லாம் எனக்கு சத்தியாமாப் புரியலைங்க.......
ஆனா மைக்கேல் சாக்சன் ஆம்பிளையான்னு நீங்க இன்னமும் சந்தேகப்படுறது மட்டும் புரிஞ்சது... :-)))
எனக்கு இங்கிலீசு பாட்டு அறிமுகம் ஆனது ஒரு நண்பன் வீட்டுல பீத்தோவன் கேட்டுட்டுதான்...என்னமோ ஒரு பிடிப்பு....அப்புறம் நானும் வாங்கிக் கேட்டுக்கிட்டு இருந்தேன்...அப்புறம் அதையும் விட்டாச்சு....
ஆனா OSTஸ் விரும்பிக் கேப்பேன். All I want is a room some where ல இருந்து Who wants to move it move it வரைக்கும். "
ராகவன்,
பதிலளிநீக்கு//ஆனா மைக்கேல் சாக்சன் ஆம்பிளையான்னு நீங்க இன்னமும் சந்தேகப்படுறது மட்டும் புரிஞ்சது//
ஐயையோ ராகவன்! இப்போ தமிழ்நாட்டு தேர்தல் களத்துல முக்கியமான கேள்வியே "நீ ஆம்பளையா?!"ங்கறதுதான்! இப்படி எதையாவது சொல்லி என் முதுகுல டின் கட்ட விட்டுறாதீக!!
Ayya ilavanji,
பதிலளிநீக்குBangalore la endha area la irukkinga, enga work panringa....
If you dont want to mention, its ok.
If you want to mention personally, here is my mail id: kmuru_somu@rediffmail.com
என்னன்னமோ சொல்லியிருக்கீங்க... .. CIT ஹார்மனி,மெடிக்கல் காலேஜ் கல்சுரல்ஸ் தவிர நமக்கு வேற ஒன்னும் விளங்கல..
பதிலளிநீக்குமொட்டைய தாண்டி வராமாயே விட்டுட்டோம்.. :(
இளவஞ்சி,
பதிலளிநீக்குமேலை நாட்டுப் பாடல்கள் பற்றி அதிக பரிச்சயமில்லை. காலேஜ் படிக்கும்போது, Grammy award பெற்ற பாடல்களை ரசித்திருக்கிறேன். உங்கள் பதிவின் நடை மிக மிக சுவாரசியமாக இருந்தது. நன்றி.
//மொட்டைய தாண்டி வராமாயே விட்டுட்டோம்.. :( // ராசா... ஒன்னும் கொறைஞ்சு போகலை! "ஆளும் அவன் தலையும்... படிக்கறதுக்கு காலேஜ் போடான்னா இப்படி பொறுக்கிபய மாதிரி திரியாம்பாரு"ன்னு உங்க அய்யங்கிட்ட திட்டு வாங்கியிருக்கமாட்டீக.. இவ்ளவ்தான் இதன்மூலமா உங்களுக்கு கிடைக்காதது! :)
பதிலளிநீக்கு//ஆனாலும் கடைசிவரைக்கும் ' பீட்டர் சாங்ஸ்' ஸோட பாட்டயும் போடாம, அவுங்க ஆம்பளயா? பொம்பளயான்னும் சொல்லாம ஏமாத்திடீங்களே! :-)// தியாக்.. ஆனாலும் இது அனியாயத்துக்கு ஓவரு!
பாலா.. நான் கோவைல
College Functionனு படியேறாத ஒரே காலேஜ் உங்க GCTதான்! :)
உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கு நன்றி!
God gives hair only to the ugly headed persons to hide it!! //-
பதிலளிநீக்கு- இப்படியும் சொல்வாங்களாமே: god created some heads beautiful; for the rest, he covered it with hair!!
தருமிசார், அது பழமொழியே கிடையாது. என்னை மாதிரி ஆளுங்க யாரோ சொன்ன 'பொகை'மொழி! இந்த "சீச்சீ இந்த பழம்" கதை!! :)
பதிலளிநீக்குயாரோ ஒரு டாக்டரு அவர் மேஜைல இதை எழுதிவைச்சிருப்பாருன்னு எங்கயோ படிச்சது! ஆனா நீங்க சொன்னது இன்னும் நல்லா இருக்கு! இனிமே இதை மனப்பாடம் செஞ்சுக்கறேன்! :)
இளவஞ்சி
பதிலளிநீக்குஅருமை. ஆனாலும் எனக்கு பிடித்த பாடகர்களை தேடிப்பார்த்து ஏமாந்ததென்னவோ உண்மை:(
பத்மா, உங்களுக்கு பிடிச்ச ஆளுங்களையும் சொல்லுங்க! அவங்களையும் ஒரு எட்டு பார்த்துடுவோம்! இந்த விசயத்துல வஞ்சனையே கிடையாது!! :)
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி!
//மொட்டைய தாண்டி வராமாயே விட்டுட்டோம்.. :(//
பதிலளிநீக்குஇத்தையே நான் வளிமொளிகிறேன்.
இப்போ உங்க மொகத்தில இருக்கும் அந்த ராசகளை போட்டிருக்கிற பொகைப்படத்துல கொஞ்சம் மிஸ் ஆகறாப்ல தெரியுது.
சுதர்சன்,
பதிலளிநீக்கு//இப்போ உங்க மொகத்தில இருக்கும் அந்த ராசகளை//
நீர் சொல்லும் களை இம்சை அரசன் 23ம் புலிகேசியின் முகத்தில் இருப்பதுவா??
ilavanji,
பதிலளிநீக்குvery nice post!!!!!many fo yr choices very good and i did learn about a few too!!!!! try "system of the down".....you ll like it!
Radha
Radha,
பதிலளிநீக்குThanks for your visit to my blog! And for the info too! :)
யார் யாருக்கோ பட்டம் குடுக்கறங்கபா, உனக்கு கொடுக்கலாம் 'இனையக்கலைவாணர் இளவஞ்சி'.
பதிலளிநீக்குதரமான நகைச்சுவை. தொடர வாழ்த்துக்கள்
இளவஞ்சி,
பதிலளிநீக்குகலக்கல்.
நந்தன், ஜெயஸ்ரீ,
பதிலளிநீக்குஊக்கங்களுக்கும் வருகைக்கும் நன்றி!
Mr Ilavanji?
பதிலளிநீக்குI guess we could have been in the same school at the same time (but I did "A"!) Enjoyed reading your post. Well. I was in the same boat as you were!! Been there.. Keep writing!!
http://www.jayakanthan.net
Class of 1988 (10th)
Class of 1990 (12th)
ஜெயகாந்தன்,
பதிலளிநீக்குஉன்னை எனக்கு நல்லா தெரியும்! உங்கூட சிலதடவை பீளமேடெல்லாம் சுத்தியிருக்கேன்!
நானும் அதே!
Class of 1990 (12th)
"எரியும் மெழுகுவத்திக்கு முன்னால் ஒரு அட்டையை வைத்து மறைத்து அதை வாயால் ஊதி அணைப்பது எப்படி?? "
இப்பவாச்சும் ஞாபகம் வருதா???
:)))
அடப்பாவமெ? என்னொட சின்ன மூளைக்கு இன்னும் நியாபகம் வரலெ!!
பதிலளிநீக்குகொஞ்சம் குளு??
என்னொட ஈமைல்: njayakanthan@gmail.com
Iyaa Ilavanji,
பதிலளிநீக்குAttagasamana Post.. If anything, it got me reminded of those good old days of riding the bus to Coimbatore to that same Singhaan Kadai in LC (laxmi Complex, that's how they used to call it) for that same old Peter song cassettes..Probably, the Singhaan is the one who introduced most tamil speaking coimbatoreans to English music and made good business out of it..
BTW, most of usare just like you..we all connect to the English songs through its beats, rhythm, etc and not teh Lyrics..Hardly did/do I focus on them.. Nanbar Murugesan connects with me better tha you do as I tend to listen more of the Black/Ghetto anthems than your MJ/Madonna/Bruce Springsteeen, etc., though they were my "harbingers" for the english music scene..
FYI, I recently posted an article on my blog about the 2nd generation Indian kids and their choices of Music (they call it the Desi Anthems, a mix of hip-hop/rap/reggaeton, etc with our hindi/punjabi songs).. If anything, you would probably enjoy the video I have loaded under the article by a guy called Bohemia..Check it out and tell me if you like..Enjoyed your blog and thanks to Gilli for bring it to my attention..Thinking of blogrolling you, do you mind??
Anand aka Andy
இளவஞ்சி, பழைய பதிவாவே படிக்கறோமே.. கொஞ்சம் சமீபத்துப் பதிவு படிப்போமேன்னு இங்ஙன வந்தேன்.
பதிலளிநீக்குஏண்டா வந்தோம்னு ஆய்டுச்சுங்க. ஒண்ணுமே புரியலைங்க... ஏதேதோ எழுதி இருக்கீங்க.. நானெல்லாம் இன்னும் "சாலிடெர் ஃபார் ஸ்போர்ட்ஸ்.. சாலிடெர் ஃபார் சண்டே மூவீஸ்.." மாதிரி தான் கேட்டு கிட்டு இருக்கோம்..
இருந்தாலும் நல்லா எழுதி இருக்கீங்க, கொஞ்சம் கொஞ்சமா உங்க ரசனை வளர்ந்த விதத்தை.. எழுதற விதம் வழக்கம் போலவே நல்லா இருக்கு :)
GeronimoThrust , Thanks for your comment and appreciation! Ur "Bohemia" is a real cool one ! :)
பதிலளிநீக்குபொன்ஸ், //ஏண்டா வந்தோம்னு ஆய்டுச்சுங்க. ஒண்ணுமே புரியலைங்க... // அடடா! சரி விடுங்க! அடுத்தாவது ஒயுங்கா எயிதறேன்! :)
வருகைக்கு நன்றி!
இளவஞ்சி
பதிலளிநீக்குஎல்ட்டன் ஜான், பில்லி ஜோஎல், விட்னி, மார்க் அந்தனி, ராண்டே ட்ரவிஸ், ஸ்டீவி என்று ஒரு பட்டியலே இருக்கிறது. உங்கள் முகவரி(மின் அஞ்சல்) கொடுத்தால், பாடல்கள் அனுப்புகிறேன்.
தேன் துளி,
பதிலளிநீக்குஅடடே! நீங்க சொல்லறதுல சிலபேரு நம்ப லிஸ்டுலையும் இருக்காங்க! எதுக்கும் உங்க லிஸ்டயும் அனுப்புங்க!
நீங்கள் பெற்ற இன்பம்... பெருக இவ்வையகம்! :)
ilavanji@hotmail.com