Thursday, February 14, 2008

காத்தவராயரின் கசுமாலக் காதல் க(வி)தைகள்

அன்பே!

என் குளிர்கால
குமுட்டி அடுப்பே!


சுகமாகத்தான் இருக்கிறது
ஒரு பொட்டலம் சுண்டலில்
விரல்கள் துழாவி
பஞ்சப்பனாதியாய் பகிர்ந்துண்னுவதும்

சகிக்கத்தான் முடிவதில்லை
சுண்டலுக்கு காசு கொடுக்கும்
அற்ப(புத) தருணங்களில்
மட்டும்
நீ
வெட்கம் மேலிட
கடற்கரை மணலில்
முகம் புதைக்கும் மர்மம்

கற்றுக்கொண்டது
காதலில்
செலவினம் அதிகம்

பெருமைதான் எனக்கும்
பொட்டலத்தின்
அடிநுனியில் மாட்டிய
கடைசி சுண்டலுக்கான
அடிதடியில்
உன் வெற்றி

அதையும் மீறிய வலிகள்
என் கையில் விழுந்த
உன் கடைவாய்ப் பற்களின்
கடிதடங்கள்

கற்றுக்கொண்டது
காதலென்றால்
வலிகள் தாங்கனும்

ரோஸ்கலர் பிடிக்குமென்றே நம்பினேன்
நீ
ஒன்றுக்கு இரண்டாய்
பஞ்சுமிட்டாய் கேட்டபோது

அதிர்ந்துதான் போனேன்
பஞ்சுமிட்டாய் குச்சிகளை
நீ மட்டுமே
சாயம் போக
சப்பிய போது

கற்றுக்கொண்டது
காதலில்
விட்டுக் கொடுக்கனும்


சிலிர்க்கத்தான் செய்கிறது
விரலோடு விரல் கோர்த்து
முகமோடு முகம் வைத்து
வாயோடு உறவாட
உடலோடு விளையாட

குமட்டலே மிச்சம்!
சிக்கெடுக்காத தலையில்
விரல்கள் சிக்க
விளக்காத வாயின்
கப்பு தாக்க
கம்மாங்கூட்டின்
வீச்சம் தூக்க

கற்றுக்கொண்டது
காதலில்
காமமும் இருக்கனும்



பதவிசாகத்தான் இருக்கிறது
காதலியுடன்
டாஸ்மாக் சந்தில்
கமுக்கமாய் இருப்பது

பத்தும் பறந்தது
ஓல்டுமாங்க் ஆஃபும்
மீன்வருவல் பிளேட்டும்
போதவில்லையென
பக்கத்து டேபிளின்
மிச்ச ஊறுகாய் கவரை
உள்வெளி திருப்பி
நீ
சுத்தமாய் நக்கியபோது

கற்றுக்கொண்டது
காதலில்
சம உரிமை இருக்கனும்


சில்வியா குண்டலகேசியே...

எனக்கொரு சந்தேகம்!

காதலித்தே தீர வேண்டுமா என்ன?
காதலில்
இத்தனை கற்ற பின்னும்


அடைக்க முடியாதது அன்பு!
பரந்து விரிந்தது உலகம்!!
எல்லைகளற்றது பிரபஞ்சம்!!!
இதில்
காதலென்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமா?

அதனால்தான் கேட்கிறேன்...

நீயே இம்புட்டு அழகெனில்
உன் தம்பி எப்படி?!

ஹிஹி...

14 comments:

கோவி.கண்ணன் said...

கலகிட்டிங்க, காதலர்நாளில் வந்த இடுகைகளில் இது தான் எனக்கு best ஆக தெரிகிறது.

Anonymous said...

Super Vathiyare

- Ezhaiyin Sirippil

ILA(a)இளா said...

வாத்தி, இவிங்களுக்கும் இந்த நாள்தானா?

குசும்பன் said...

செம கலக்கல்!!!

மிகவும் பிடித்து இருக்கு

Kasi Arumugam - காசி said...

:-)

தருமி said...

காசி சொன்னதுக்கு - ரிப்பீட்டேய்!

சென்ஷி said...

//தருமி said...
காசி சொன்னதுக்கு - ரிப்பீட்டேய்!//

அப்ப நான் தருமி சாருக்கு ரிப்பீட்டே :))

சிறில் அலெக்ஸ் said...

'பின்னால'இப்படி ஒரு முடிச்சு வைப்பீங்கண்ணு யோசிக்கவேயில்ல..

எப்படியெல்லாம் காதலிக்குறாங்கப்பா..

:)

இளவஞ்சி said...

கோவி,

// இது தான் எனக்கு best ஆக தெரிகிறது. // இது என்ன? நல்லா எயிதுன மத்த பதிவருங்க எல்லாம் என்னை ரவுண்டு கட்ட ஏற்பாடா? :)

ஏழையின் சிரிப்பில், குசும்பன்,

நன்றி!

இளா,

// இவிங்களுக்கும் இந்த நாள்தானா? // யாருக்கு தெரியும்? காதல் என்பது அனைத்துலக ஜீவராசிகளுக்கானது என்ற என் பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடு இது.. (ஸ்ஸ்ப்பா..... )

காசியண்ணே,

நகைக்குறிக்கு நன்றி! நேர்ல இருந்திருந்தா இந்த ப்பிச்சுக்கு தமிழுக்கு என் நடுமண்டைல ஒரு கொட்டு வைச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்! :)

தருமிசார், சென்ஷி,

காசிக்கு நான் சொன்னதுக்கு ரிப்பீட்டே! ( பழிக்குப் பழி.. )

சிறில் அண்ணாச்சி,

'பின்னால' - ஹிஹி...

வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி.

கோபிநாத் said...

\\ குசும்பன் said...
செம கலக்கல்!!!

மிகவும் பிடித்து இருக்கு\\

வழிமொழிகிறேன்...;))

லக்கிலுக் said...

:-)

குமுதத்தில் கவிஞர் காத்துவாயன் போஸ்டிங் காலியா இருக்குதாமே? அப்ளை பண்ணி வைக்கலாம் இல்லை? அங்கே ஞானி கூட இருக்காரு....

இளவஞ்சி said...

கோபிநாத்,

நீங்களுமா? அதுசரி! :)

லக்கி,

// அப்ளை பண்ணி வைக்கலாம் இல்லை? அங்கே ஞானி கூட இருக்காரு....//

ஏய்யா இப்படி?

அவரு சும்மாவா குமுதத்துக்கு போனாரு? ஆவில ஆப்படிச்சதால போனாரு! நீங்களும் என்னை வலையுலகத்துல இருந்து ஆப்படிச்சு அங்க அனுப்ப போறீங்களா?! :)

Anonymous said...

ஓ, நீங்க 'அந்த மாதிரி' ஆளா?

முரளிகண்ணன் said...

;-)))))))))))))))

Blog Widget by LinkWithin