முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சில பட்டாம்பூச்சிகளின் பருவகாலங்கள்...

சிறகடிச்சுக்கிட்டுதான் இருந்தோம்! கொரங்குபெடல் சைக்கிளிலும் ரைட்டாதப்பா கட்டங்களிலும் படிக்கட்டு சறுக்கலிலும் கோணமூக்கனின் காக்காகடிக்கும் தெருப்பயகளுடம் ஐஸ்பாய்க்கும் அம்மாப்பா விளையாட்டுக்கும் இதுக்குமுன்னால யாருமே திட்டுனதில்ல தம்மு தும்முன்னு நடக்காதே... அடக்க ஒடுக்கமா ஒக்காருடி.. எப்பப்பாரு என்னடி இளிப்பு? அத்தனை அசைவுகளுக்கும் திருத்தம் சொல்லறாங்க நாங்க இதுவரை பறந்ததை ரசிச்சவங்க டீவிசானலை திடீரென மாத்தறதும் நான் தலைகுனிந்து விரல்நகம் கடிப்பதும் எங்க வீட்டின் புதுப்பழக்கம் ச்சே! அம்மாதான் இப்படின்னா இந்த அண்ணனுக்கென்ன? முன்னமாதிரி விளையாடவராம தள்ளித்தள்ளிப்போறான் கொரங்கு... பசங்ககூட சேரக்கூடாது சரி.. அப்பாவின் கழுத்தையுமா பிடிச்சு தொங்கக்கூடாது? இப்போதெல்லாம் பழகிக்கொண்டோம் சட்டையை முன்னால் இழுத்துப்பிடித்துக்கொள்ள சில பார்வைகளை தாண்டிவரும்போது யாரு கேட்டா இந்த சனியனை இப்போ வரலேன்னு? அய்யயோ அங்க்கிள்! நாங்க போறோம்... அம்மா சொல்லியிருக்காங்க I should not talk to Strangers!

ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!

பழம்தின்னு கொட்டையப்போட்ட பெரியவக எல்லாம் இங்க நின்னு ஆடி நூறும் இருநூறூமா செஞ்சுரிகள போட்டுத்தாக்கிக்கிட்டு இருக்கற இந்த சபைல வெறும் அம்பதுகே பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் 'கங்குலி'த்தனமா இருந்தாலும் அரிப்பு யாரைவிட்டது சொல்லுங்க?! ஆமாங்க... இதுதான் எனது 50வது பதிவு! போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது! ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன்! ஆடிக்கும் அம்மாவாசைக்கும் எட்டிப்பார்த்து எழுதிட்டுபோற என் அக்கவுண்டை என்னைக்கு ஃப்ளாகரே பொறுத்துக்கமுடியாம என் கடவுச்சீட்டை காணாமடிக்கப்போகுதோ தெரியலை! எனக்கெல்லாம் போனவருசம் வரைக்கும் வலைன்னா அது மெயிலு பார்க்கறதுக்கும், தினமலர், தந்தி, மாலைமலர், தினகரன், குமுதம், விகடன்னு எங்கனயாவது தமிழ் எழுத்து தெரிஞ்சா மேயறதுக்கும்தான்னு ஒரு பொழப்பத்த பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. எங்கனயோ ஏதோ ஒரு சைட்டுல ஒரு சுட்டியை தட்ட அது ஒரு ஃப்ளாகரு பக்கத்துக்கு போயிருச்சுங்க! அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான்! :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி! அந்த பதிவுல ஒரு சைடா பார்த்...

புதூர் குஞ்சாளு - சிறுகதை

“ஒரு நூறு ரூபா இருந்தா போயிட்டு வந்துரலாண்டா! ஆனா அது ஒரு மணி நேரத்துக்குதான்” "ஏண்டா எல்லாம் தெரிஞ்ச மாதிரி புளுகுற? யாரு சொன்னா உனக்கு?" "நம்ப மெக்கானிக் கணேசன் தாண்டா... அவன் பிரண்டு போயிருக்கானாம்... ஆனா நைட்டு 9 மணிக்கு மேலதானாம்! வீட்டுமுன்னாலயே ஒருத்தன் ஒக்கார்ந்திருப்பானாம். அவன் கிட்ட காசு குடுத்துட்டு சொன்னா போதும். போயிரலாம். ஆனா கண்டிப்ப்பா ஹெல்மெட் வாங்கிட்டு போகனுமாம்!" "டேய்... பார்த்த மாதிரி பேசாத.. இந்த வேலையை பண்ணறான்னா அப்பறம் எதுக்கு தெனமும் ரோடு ரோடா பூ வித்துக்கிட்டு அலையறா?" "போடா சும்பை... அதெல்லாம் ஒரு செட்டப்புக்காகதான். அப்பதான் எவனும் கேக்கமாட்டான். போலீஸிம் புடிக்காது. புருசனும் இல்லை. அப்பறம் ஏன் கலர் பொடவை கட்டறா? பூ விக்கறவ ஏன் லோஹிப்பு கட்டிக்கிட்டு விக்கனும்?" "அதுக்காக ஒடனே ரேட்டுன்னு சொல்லிடறதா? புருசன் இல்லாததால பூ வித்து சம்பாதிக்கறா. வெள்ளைப்பொடவை கட்டுனா யாரும் பூ வாங்க மாட்டாங்க.. அதுனால கலர் பொடவை கட்டிக்கிட்டு சுத்துறா. இதை வச்சி எப்படிரா இப்படி சொல்லுற? நீயும் போனதில்...

தமிழ்ப்பதிவுகளில் நல்லதொரு மாற்றம்!

கொஞ்சநாளாகவே பதிவுகளில் அடிதடி, வசவுகள், தனிமனிதத்தாக்குதல்கள் என்று படிச்சு படிச்சு ஓய்ஞ்சுபோய் இருக்கறப்ப இந்த இரண்டு பதிவுகளை படிக்கும்போதே அவ்வளவு சந்தோசமா இருக்குங்க! 1. http://veeravanniyan.blogspot.com/2005/11/blog-post_07.html வீரவன்னியன் : கருத்துகளை எதிர்கருத்துகளுடன் மோதிக் கொள்வோம். அனைவரது பதிவுகளையும் மதிப்போம். ஒவ்வொருவருக்கும் தனித் திறமை இருக்கத் தான் செய்கிறது. ரஜினிராம்கி : Veeravanniyan, I second your post. I think, we are sailing on the same boat. Let us continue to be a good friend. All the Best! 2. http://sivapuraanam.blogspot.com/2005/11/blog-post_17.html மலேசியா ராஜசேகரன் : உங்களைப் போன்ற இளஞர்களின் முயற்சியும் துடிப்பும் பாரட்டப் பட வேண்டியவை. ஆதரிக்கப் பட வேண்டியவை. உங்களுக்கும் உங்கள் முனைப்பான நண்பர்களுக்கும் எதிர் புரத்தில் நின்று தர்க்கம் செய்ய எனக்கு மனமில்லை. அது என் முதிர்ச்சிக்கும் அழகில்லை. ஆதலால், உங்கள் நண்பர்கள் பலரது மனதையும் புண்படுத்துமாறு அமைந்த என் எழுத்துக்களுக்காக நான் இங்கு நிபந்தனை அ...

ஹாரிபாட்டரும் மாயத்தீக்கோப்பையும் என் மருவாதியும்!

ந மக்கு நேரமே சரியில்லைங்க! எந்த நேரத்துல பயத்தை பத்தி எழுதுனனோ தெரியலை வாழ்க்கைல எல்லாமே ஒரு மார்க்கமாவே நடக்குது! சொந்தக்கார பயக ஊருல இருந்து வந்திருக்காங்களே.. அவிங்களை பேங்களூரு சுத்திக்காட்டலாம்னு ஒரு நல்லெண்ணம் இருந்திருந்தா ஒழுங்கா MG Roadக்கு கூட்டிட்டுபோயி வண்ணக்கோலங்கள் காட்டிட்டு(இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற! ) அப்படியே ஒரு அஞ்சுநக்கி( அதாங்க 5 ரூபா கோன்ஐஸ்...) வாங்கிக்குடுத்து அப்படியே பஸ் ஏத்தி அனுப்பியிருக்கலாம்! அதை விட்டுட்டு புதுசா ஒரு கடைவீதி ஒன்னுல நிறைய தியேட்டரு எல்லாம் இருக்கு வாங்கப்பு காட்டறேன்னு PVRக்கு கூட்டிக்கிட்டு போனனுங்க. அங்க போயி வழக்கம் போல வாசப்படில கொஞ்சநேரம் ஒக்கார்ந்து தரிசனம் பார்தோமுங்களா( என்னண்ணே இது? எல்லா புள்ளைங்களும் பத்தாத துணியே போட்டிருக்காளுங்க..! ) அப்பறம் வழக்கம் போல BOSEக்கு போயி ஹோம்தியேட்டரு டெமோ பார்த்தோமுங்களா.. அதுக்கப்பறம் அப்பிடியே திரும்பாம இன்னும் ஒரு ஃப்ளோரு மேல போனதுதாங்க தப்பு! "அண்ணே கடையெல்லாம் நல்லாத்தான் இருக்கு! அப்பிடியே ஏதாவது படமும் பார்த்திறலாம்!"னானுவ! சிவகாசி இல்லை(எல்லாம் விதியப்போவ்!) ..மஜா ...

மாப்பூ...! வச்சிட்டான்யா ஆப்பூ...!!

உ ங்களுக்கு தைரியம்னா என்னன்னு தெரியுமா? பயப்படாததுமாதிரி நடிக்கறதுதான் அப்படின்னு நம்ப அண்ணாத்தே கமலு குருதிப்புனல்ல சொல்லுவாரு பார்த்திருக்கீங்களா? அது அப்படியே சரின்னு வச்சிப்போம். ஆனா பயம்னா என்னன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இந்த கேள்விக்கு ஆயிரம் விடைகள் இருக்குங்க! எல்லாத்தையும் எடுத்துப்போட்டு அலசி ஆராய்ந்து பிரிச்சி மேய்ந்து கடைசியா என்ன கிடைக்குதுன்னு பார்த்தா அதுவும் ஒரே வார்த்தைதாங்க. அறியாமை!! அதுதாங்க பயம்! என்ன உதாரு ரொம்ப விடறானேன்னு பார்க்கறீங்களா? எல்லாம் ஒரு அனுபவம்தாங்க! மனசுக்குள்ள பெரிய பிஸ்த்துன்னு நினைப்பு இல்லைன்னாலும் தெரிஞ்சதை சொல்லறதுல்ல தப்பில்லைதானுங்களே? எனக்கு இந்த பேய் பிசாசெல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியாதுங்க! நம்பிக்கையும் இல்லை. கல்யாணமாகி 2 வருடங்கள் ஆனதுக்கப்புறமும்! ஆனா கல்யாணத்துக்குப்பிறகு டார்வின் கொள்கைல முழுநம்பிக்கை உண்டு..("T.Nagar போத்தீஸ்க்கு போலாம்னா ஏன் கொரங்கு மாதிரி முழிக்கறீங்க...?!") அதுனால அதப்பத்தியெல்லாம் பயமே இல்லை. ஆனா பயப்படுறவங்களைப்பார்த்தாதான் நமக்கு கொஞ்சம் பேஜாருங்க! விசயம் ஒன்னுமே இர...

Appun, Give me a Rocket!

உங்கள்ல எத்தனை பேரு கவருமெண்ட்டு ஆசுபத்திரிக்கு போயிருக்கீங்க? அட, நோயாளியா இல்லைங்க! கையில நாலு ஆப்பிளோ ஆரஞ்சுப்பழமோ இல்லை நீல்கிரிஸ் பேக்கரி பிரட்டையோ வாங்கிக்கிட்டு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்கன்னு படுத்திருக்கறவங்களை பாக்கறதுக்காவது?! ஒரு முறை போயிட்டுவந்திங்கன்னா இந்த ரெண்டுல ஒரு எண்ணம் நிச்சயமா மனசுல தோணலாம்! இடிஞ்சு விழுகறமாதிரியான பழய கட்டடத்துல 100 படுக்கைகளை நாலா பக்கமும் போட்டு மூலை முக்குல எல்லாம் வெத்தலை எச்சில் துப்பிவச்சி, எப்பவும் சொதசொதன்னு இருக்கற கதவில்லாத பாத்ரூமுக்குள்ள இருந்து 24 மணிநேர பிரீ சர்வீசா வீச்சம் ஆசுபத்திரி பெனாயிலு வாசத்தையும் தாண்டி வீசியபடி இருக்க உள்ள போறதுக்கும் வெளில வர்றதுக்கும் தனித்தனியா அஞ்சோ பத்தோ ஆளுக்கேத்தபடி லஞ்சம் கொடுத்தபடியும் உள்ள வந்தாலே இருக்கற ஆரோக்கியமும் போயிரும்போல இருக்கற நெலைல படுத்திருக்கற பரிதாப ஜீவன்கள் எல்லாம் எப்படி பொழைக்குமோங்கற கவலை ஒன்னு.. இல்லை கொஞ்சம் அன்னாடங்காச்சிங்களோட எகானாமி வெவரம் தெரிஞ்சவங்களா இருந்தா அடுத்தவேளை சோத்துக்குமட்டும் வழியிருக்கற ஜனங்களுக்கு இருதயம் கிட்னி பெயிலியர்னு ஏதாவது பணக்காரவியாதி வந்தா...