முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா இங்கே வா வா!!

அம்மா இங்கே வா வா!
Arrest Warrant தா தா!
வேலூர் ஜெயிலில் போட்டு
கண்ணுல தண்ணியும் காட்டு!

அப்புவும் ரவியும் கூட்டு
சின்ன 'சாமி'க்கும் வேட்டு
குடுத்தாங்க மாமீங்க பேட்டி
சாயம் போச்சுது காவி வேட்டி

பெருசுங்க பொருளுங்க குட்தாங்க
கூடவே போட்டாவும் புட்ச்சாங்க
எதிராளிய குத்தம் சொன்னாங்க
மீதிய அமுக்கினு போனாங்க

போஸ்டரு நோட்டிசு அடிப்பாங்க
கட்டவுடுக்கு பாலும் ஊத்துவாங்க
அந்த 'ஸ்டாரோட' குஞ்சு-கல காணோங்க
பாலில்ல! ஒருபுள்ள போச்சுதுங்க

அபலைங்க சோகமும் பார்த்தாச்சி
அனுதாபமும் எரக்கமும் பட்டாச்சி
பழய துணிமணி கொடுத்தாச்சி
சுனாமி சோகமும் போயாச்சி

மிருனாள் சென் -ஆ! யாருங்க?
ஜெயலச்சுமி செரினா தெரியுங்க
ஐயோ! 'ரவி'-க்கு கை காலு போயிருச்சி
அப்புறம் அண்ணாமலையும் தொடங்கிருச்சி

பொங்கலு பண்டிகை வந்தாச்சி
TV-ல பிகருங்க பேத்தலு ஸ்டார்ட்டாச்சி
தலை-ங்க வாழ்த்து கொடுத்தாச்சி
வாழ்க்க மாமுலுக்கு திரும்பிடிச்சி

சமுதாய சிந்தன போதுங்க
ஊட்டுல சீனி கேட்டாங்க
முக்கு கடைல ச்சீப்புங்க
வாங்கிகினு வெரசா போறனுங்க

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு...

குலசை தசரா 2009 - புகைப்படங்கள்

ம க்கா நீங்க போன வருசம் நான் போயிட்டு வந்து பீத்திக்கின குலசை ட்ரிப்பை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். அருமைத்தம்பி ஆதி க்கும் அவிங்க வீட்டாருக்கும் அபார நியாபக மறதி! போன வருசம் நாங்க ஒரு செட்டாப்போயி கொடுத்த ஹிம்சைகளை அப்படியே அழிலப்பரு போட்டு அழிச்சாப்படி மறந்துட்டாய்ங்க. அதோட இல்லாம இந்த வருசமும் 10 பேர ஜமாவோட நாலு நாளைக்கு டிக்கெட்டோட அழைப்பு வைச்சாப்படி ஆதி. விடுவனா?! போட்டோ புடிக்கறமோ இல்லையோ இளவட்டங்களோட ஒரு செட்டா வேளாவேலைக்கு கொட்டிக்கிட்டு கெணத்தடில ஆனந்தக்குளியல் போட்டுக்கிட்டு போரடிச்சா அங்கங்க குத்தவைச்சு பொங்கல் போட்டாப்படி நாலுநாள் எந்த இம்சைகளும் இல்லாம (பார்றா... ஒரு இம்சையே இம்சை என்கிறதே! ஆச்சர்யக்குறி! ) கேமராவும் கையுமா வாழ வைச்சதுக்கே அவருக்கு கொட்டிக் குடுக்கனும். இருந்தாலும் தமிழர் வழக்கப்படி ஒரு தாங்க்ஸ் மட்டும் மனசார சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாய்கினோம் :) இந்தமுறையும் செல்வபிரகாஷ் , ஜெய்சிங் , நாதன் போன்ற பெரிய புகைப்படக்காரர்களும் வந்திருந்தாங்க. அவங்க கூட ஜமா போட்டு சுத்துன பிஸ்துக யாருன்னா மாப்ள சீவியாரு , வினோத்து , கவுஜர் லக்ஸ் மற்றும் கோகுல் . இவ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...