முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிலுசிலுக்குற சிலுக்கு ஜிப்பா

கும்பல்ல கலாய்க்கறதுக்கு ஒரு பிட்டு இங்க!

சிலுசிலுக்குற சிலுக்கு ஜிப்பா
பளபளன்னு மின்னுதப்பா!
வெள்ளைவெளேர் விஃக்சு டப்பா
குபுகுபுன்னு பொகையுதப்பா!

கருகருன்னு எம்ஜியார் டோப்பா
காத்தடிச்சா பறக்குதப்பா!
துருதுருன்னு சின்னபாப்பா
கலகலன்னு சிரிக்கிறாப்பா

S8ட்டு ஃபிகருங்கப்பா
சென்னைல டாப்புங்கப்பா!
அதுல நாளு அட்டுங்கப்பா
அது நம்ம ஏரியா பொண்ணுங்கப்பா!

ஒவ்வொரு வரிக்கும் நடுவுல கோரசு "ஊஊஊஆஆஆ... ஊஊஊஆஆஆ..."ன்னு வரணும். கடைசி பாராவுல உங்க ஏரியாவுக்கு தக்கபடி மாத்திக்கங்க... எங்கயாவது கும்பலா கலாய்க்கறப்ப இந்த பாட்ட(கானான்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்!) எடுத்து விடுங்க... உங்க ஜாலிக்கு நான் கேரண்ட்டி! (யாருப்பா அது "அப்போ கண்டிப்பா ஊத்தி மூடிரும்னு மொனங்கறது? )

இதுபோக வயசு வந்த பசங்களுக்கு மட்டும்னு "லோக்கலோக்க லோக்கோ"ன்னு ஒரு சரக்கு இருக்குதுங்க. அதை எழுதுனா அப்பறம் காசிக்கும் உங்களுக்கும் சண்டை வந்துரும்! (என்னை எப்படி இங்க எழுதவிட்டீங்கன்னு அவர பிலுபிலுக்க மாட்டீங்களா என்ன? :)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

என்ஃபீல்ட் புல்லட்

வாழ்க்கைல நீங்க என்னைக்காவது சொர்க்க ரதத்துல போயிருக்கீங்களா? அட, கடைசியா போறப்ப போகப்போற அந்த ரதம் இல்லைங்க! வாழறப்பவே போய் வந்து அனுபவிக்கற சொர்க்கம். சிலருக்கு பென்ஸ் காராக இருக்கலாம். சிலருக்கு கான்கார்ட் பயணம் வாய்ச்சிருக்கலாம். நம்மூரு கோவை-பெங்களூர் KPN ஸ்லீப்பர் கோச்சாகக்கூட இருக்கலாம். என்னைக் கேட்டீங்கன்னா அதை நான் புல்லட் ஓட்டிய காலங்களாகத்தான் சொல்லுவேன். புல்லட்டை ஓட்டக்கூட வேண்டாம்! சும்மா பின்னாடி உட்கார்ந்து போகயிலயே கூட அந்த சொகுசை உணரமுடியும். ஆமாங்க! ரொம்பப் பழசான டிசைன் தான். யானை கட்டி தீனிபோடற வேலைதான். பார்க்க சின்னதா அழகா துறுதுறுன்னு இல்லாம தாட்டியா அங்கங்க புடைப்புகளுடன் ஒரு மாதிரியான தட்டையான டிசைன் கொண்ட வண்டிதான். ஒத்துக்கறேன்! ஆனால் இதையெல்லாம் ஒத்துக்கிட்ட பிறகும் எனக்கு என்னவோ அந்த வண்டி அலாவுதீன் ஒருவித அதீத விருப்பத்துக்கு ஆட்பட்டு ஒரு நாள் பொழுதுபோகாம குறுந்தாடியை சிக்கெடுத்துக்கிட்டு இருந்த பூதத்தை கெளப்பிவிட்டு மாங்குமாங்குன்னு வேலை வாங்கி அவனே அவனுக்குன்னு உருவாக்கிக்கிட்ட ஒரு வாகனம்னும், லைலாவோட ரொமாண்டிக்கா இருக்கற காலங்களில் எல்லாம் பறக்...