பொசுக்கும் வெயிலில்
ஆளரவமற்ற தெருவில்
பொங்கும் வியர்வையுடன்
மெல்ல கூவியபடிசெல்லும்
பழைய பேப்பர்காரனின்
குரலில்
சாலையோர நெரிசலில்
கடந்துசெல்லும் வாகனங்களை
சலனமின்றிப் பார்க்கும்
குருட்டுப் பிச்சைக்காரனின்
முகத்தில்
இருசக்கர வாகனத்தில்
கணவனை பிடித்தபடி
குழந்தையை அணைத்தபடி
எங்கோ வெறிக்கும்
இளம் மனைவியின்
பார்வையில்
பாதாளச் சாக்கடையில்
மனசை இரும்பாக்கி
உடம்பையே கருவியாக்கி
அடைப்பை நீக்குபவன்
அசைவுகளில்
கையில் மஞ்சள்பையுடன்
நெற்றியில் யோசனையுடன்
முன்பதிவு வரிசையில்
களைத்த முதியவரின்
முகத்தில்
உணர்வுகள் செத்துப்போய்
பேச்சையே உணர்வாக்கி
எப்போது முடிப்பானென
படுத்துக்கிடக்கும் விலைமகளின்
தேகத்தில்
வெறுமைகளால் என்றும்
வெறுமைகளைமட்டுமே
உணர்த்தமுடிவதில்லை
இளவஞ்சி! வெறுமை பதிவு அருமை.தொடர்ந்து எழுதவும்.
பதிலளிநீக்கு* பேப்பர்காரனின் குரலில், எதிர்பார்ப்பு
பதிலளிநீக்கு* பிச்சைக்காரனின் முகத்தில் எதிர்பார்ப்பு
* மனைவியின் பார்வையில் எதிர்பார்ப்பு
* அடைப்பை நீக்குபவன் அசைவுகளில் எதிர்பார்ப்பு
* முதியவரின் முகத்தில் எதிர்பார்ப்பு
* விலைமகளின் தேகத்தில் எதிர்பார்ப்பு
அருணன், அனானிமசு: உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குநல்லாயிருக்கு
பதிலளிநீக்குஉயிரோட்டமாய் இருக்கிறது கவிதை உண்மையும் கூடவோ.?
பதிலளிநீக்குnalla kavithai iLavanji
பதிலளிநீக்குunga blog paththina munnuraiyai
koncham maaththunga en intha
pammaaththu :-)
enRum anbakalaa
maravantu
இளவஞ்சி சார்
பதிலளிநீக்குஅது என்ன சார் எல்லா கவிதைகளிலும்
முடிவு கொஞ்சம் conventional_ஆ இருக்க மாட்டேங்குது.
கவிதை அருமை.....