முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொட்டிய கட்டறேனுங்க!


Image hosted by Photobucket.com

ஆஹா! ஒரு வாரம் ஓடிப்போச்சு!

உங்களோட உற்சாகமான பின்னூட்டங்களும் கருத்துக்களூம் நெஜமாவே ரெண்டு டம்ளர் ராகிக்கஞ்சிய மோருல கரைச்சு கல்லுப்பு போட்டு வெங்காயத்தை கடிச்சுக்கிட்டு குடிச்சப்புல ஜில்லுன்னுதான் இருக்கு!

இந்த வாரம் நாமன்னு ஆனதுக்கப்பறம் நல்ல விசயமா எழுதனுமேன்னு நினைச்சதுல வெளைஞ்ச மலரும் நினைவுகள் தாங்க இதெல்லாம்! சொல்ல வந்த கருத்தும் இதுதாங்க.. நிஜமாவே வாழ்க்கையை பத்தி சொல்லிக்குடுக்கறதுக்கு நம்பளைசுத்தி எப்பவும் ஒரு நாலுபேராவது இருக்காங்க... கடவுள் என்னைக்கும் மனுசங்களை நேரா சந்திக்கறதே இல்லை! அதுக்குபதிலா சகஜீவனுங்களைத்தான் அவரோட தூதுவராகவும் அவங்களிடம் கிடைக்கும் படிப்பினைகளைத்தான் அவரோட நற்செய்திகளாகவும் அனுப்பறாரு! இல்லைன்னா நாமெல்லாம் எந்த பாடசாலைல போய் படிச்சு இதெல்லாம் தெரிஞ்சிக்கறது? ஆனாலும் ஒருவேளை இது என்னைக்கும் இலவசகல்வியா இருக்கறதால நாமதான் சரியா கருத்தா படிக்கறதில்லையோ என்னவோ?!

நட்சத்திரவிதிப்படி எல்லா நாளும் எழுதனும்னாலும் வெள்ளிக்கிழமை மட்டும் முடியலைங்க..( மதியக்கா.. மன்னிச்சிருங்க! ) அன்னைக்கு ஆபீசுல ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல நம்பளபோட்டு ஃபுல்நைட்டு பெண்டை நிமிர்த்திட்டாங்க! அதேபோல நேரம் பத்தாதலால நிறைய எழுத்துப்பிழைகளோடவும் பதிவுகளை போட்டுட்டேன்! படிச்சு சகிச்சுகிட்டவங்க அப்படியே என்னையும் மன்னிச்சுருங்க! (தமிழ்ல எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை மன்னிப்புதான்! இல்லைன்னா நானெல்லாம் எப்படி பொழப்பு நடத்தறது!? :) )

ஒருவாரமா மடிக்கணினியை கட்டிக்கிட்டு ஓரியாடுனதுல வீட்டுலயும் கொஞ்சம் கலவரம்தாங்க! இன்னும் ஒரு வாரத்துக்கு இதை வீட்டுல தொடக்கூடாதுன்னும் இல்லைன்னா இன்னொரு புதுக்கரண்டி வாங்கவேண்டியிருக்கும்னும் எனது இல்லாள் தாழ்மையாகவும் அன்போடவும் பரிவுடனும் வேண்டுகோள் வைத்திருப்பதால் போனாப்போதுன்னு(ஹிஹி...) நானும் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்திருக்கிறேன்! ஆகவே அன்பர்களே! இத்தனை நாள் படிக்காமலும் பின்னூட்டமிடாமலும் விட்ட பதிவுகள் ஆபீசுல கவனிக்கப்படும்னு சொல்லிக்கறேன்! (இல்லைன்னா மட்டும்? )

மற்றபடி, உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் என்றென்றும் நன்றி!

கருத்துகள்

  1. அதுக்குள்ளே ஒரு வாரமா? கலக்கல் வாரம்.

    நீங்க சொல்றது சரிதான் இளவஞ்சி. வாழ்க்கையிலே பலதும் இலவசக்கல்வி என்பதாலே கவனிக்க வேண்டிய நேரத்துலே கவனிக்காம பிறகு இருந்து "இரை மீட்கிறது".

    உங்களுடைய அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இந்த வார நட்சத்திரம், இல்ல..இல்ல.. வலைப்பதிவுகளில் நட்சத்திரம் நீங்கதான்

    பதிலளிநீக்கு
  3. சூஊஊஊஊஊஊஊஊப்பர் வாரம்.

    நல்ல பதிவுகள் நல்ல செய்திகள் என்மனசுக்குள்ளெ போயிருக்கு.
    நல்லா இருங்க.

    தொடர்ந்து உங்க பதிவுலே எழுதுங்க. விட்டுராதீங்க.
    சொல்லிப்புட்டேன், ஆமா.

    என்றும் அன்புடன்,
    துளசி.

    பதிலளிநீக்கு
  4. இளவஞ்சி, உண்மையிலேயே உங்க பதிவுகள் நேர்மையாவும், எளிமையாவும், நெகிழ்ச்சியாவும், சிந்திக்க வைக்கிறதாகவும் அதே சமயம் ஒரு சின்ன புன்னகையோட படிக்கும்படியாகவும் இருந்தது. திருப்பி தலை மறைவா ஆகாம நிறைய எழுதுங்க!!

    பதிலளிநீக்கு
  5. Holdat9000:
    The week was a great read and touching. Pl continue.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இளவஞ்சி,
    அருமையான வாரம் .இது போல எந்த வலைப்பதிவரும் என்னைக் கவர்ந்ததில்லை என்பதை உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லிக்கொள்கிறேன் .

    நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. எளிமையான அதேசமயம் படிக்க தூண்டும் நல்ல பதிவுகள்.தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ரசனைக்கும் சிந்தனைக்குமுரியதாயிருந்தன உங்கள் பதிவுகள்.
    'அந்த ஏழு நாட்கள்' முடிய பழைய இளவஞ்சியைப் பார்க்கலாமென்று நம்புகிறேன்.
    புதுசாப் படமெல்லாம் வந்திருக்காமே?
    ஏனோ தெரியவில்லை. உங்கள் பக்கம் மட்டும் கணிணியில் வர நேரமெடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. 'ஓரியாடுனதுல' - ஆஹா..., இந்த வார்த்தையக் கேட்டு எத்தன நாளாச்சு... ?
    கொங்குதமிழ் கொஞ்சி விளையாடுது!

    கலக்கு மச்சி..

    பதிலளிநீக்கு
  11. "இளவஞ்சி,
    அருமையான வாரம் .இது போல எந்த வலைப்பதிவரும் என்னைக் கவர்ந்ததில்லை என்பதை உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லிக்கொள்கிறேன் .

    நிறைய எழுதுங்கள்."

    -இது ஜோ சொன்னது.

    நான் 100% அதை வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் அனைவரின் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. //இன்னும் ஒரு வாரத்துக்கு இதை வீட்டுல தொடக்கூடாதுன்னும் இல்லைன்னா இன்னொரு புதுக்கரண்டி வாங்கவேண்டியிருக்கும்னும் எ/

    நல்ல வேளை.. புதுக்கரண்டி, தப்பிச்சீங்க... கொடுத்து வெச்சசரு...
    பூரிக்கட்டையா இருந்தா எப்படி இருக்கும்... யோசித்து பாருங்க

    அன்னைக்கு ஆபீசுல ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல நம்பளபோட்டு ஃபுல்நைட்டு பெண்டை நிமிர்த்திட்டாங்க!

    நீங்க 5 ஸ்டார் ஓட்டல்ல வேலை செய்றீங்களா இளவஞ்சி அன்னாத்த? ஹி னு நம்ம கம்ப்யூட்டர் கோயிந்தன் கேக்கறான்.. இன்னபா சொல்றது அவனுக்கு??
    ஹி ஹி ஹி ..

    பதிலளிநீக்கு
  15. புதுக்கரண்டியா இருந்தா என்ன? பூரிக்கட்டையா இருந்தா என்ன? அதது அவனவன் கொடுப்பினை! அதுபோக நம்ப மனதிடத்துக்கு முன்னால இதெல்லாம் ச்சும்மா! :) (அவிங்க தூங்கிட்டாங்க.. ஹிஹி....)

    "ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல " - எழுதும்போதே நினைச்சேன்! இது தேவையான்னு! :)

    வருகைக்கு நன்றி வீ.எம்...

    பதிலளிநீக்கு
  16. எனக்கு நேரமில்லாத ஒரு நேரத்தில் வலைப்பூ நட்சத்திரமாக வந்து...
    நான் வர முன்னமே பெட்டியைக் கட்டிக் கொண்டு வெளிக்கிட்டு விட்டீங்கள்.
    பரவாயில்லை. இனித்தான் உங்கள் மலரும் நினைவுகளை வாசிக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...