வாங்கப்பு...
வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி...
*****
போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்!
ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங்க. புத்தகம் வாங்க காசில்லாம இல்லைங்க! ஆனா எதை எடுத்தாலும் ஏனோ வாங்கி உடனே படிச்சாகனுங்கற பரபரப்பு வரவே இல்லை :( எங்க என்னோட புக்கு படிக்கற ஆசைக அப்படியே தேஞ்சு ஓஞ்ச்சுருச்சோன்னு பயங்கர வருத்தத்துல தோசை தின்ன வெரலை நக்கிக்கிட்டே யோசிச்சதுல அந்தக்கால என் வாசிப்பனுபவங்கள் எல்லாம் வரிசையா மண்டைக்குள்ள மார்ச்பார்ஸ்ட்! முத்து காமிக்ஸ் பின் பிரிக்காம அப்படியே 10 தடவை மோந்துபார்த்து ஏகாந்தமடைந்தது, பரிச்சைக்கு முந்தினநாள் பாடபுத்தகம் மாதிரி காக்கி அட்டைபோட்டு ”மனைவியைப் புரிந்துகொள்ளுங்கள்” படிச்சு கப்பு வாங்குனது, எங்கப்பாரு வாங்கி வைச்ச பழைய புத்தங்களையெல்லாம் எடுத்து அவரு எங்கெங்க அடிக்கோடு போட்டு அவரு கருத்தை வெளம்பி வைச்சிருக்காருன்னு படிச்சு ரசிச்சதுன்னு யோசிச்சுக்கிட்டு நின்னதுல மண்டைல சடார்னு ஒரு பொறி!
நான் ஆறாப்பு படிக்கையில திருப்பூர்ல இருந்து ஈரோடு மாறுனப்ப லவட்டிக்கிட்டு வந்த கவருமெண்டு லைப்ரரி புக்கை ஆறுமாசம் கழிச்சு புத்திவந்து உள்ளார 10 ரூவா வைச்சு ஒரு மாப்பு கடிதமெழுதி திரும்ப லைப்ரரிக்கே அனுப்பிவைச்சேன். அந்த லைப்ரரிக்காரரு ஃபைன் கூட பிடிக்காம என் நேர்மைய பாராட்டி ரூவாய மணியார்டர் செஞ்ச அந்த அரிய நிகழ்வு! உடனே ஒரு போட்டோ அட்ரஸ் ஃப்ரூப்போட 60 ரூவா கொடுத்து கன்னிமரால மெம்பரு ஆகிட்டேன்! 15 நாளைக்கு 3 புத்தகம்னு ஆறு மாசமா படிப்பு நல்லாத்தான் ஓடுது. வாசிப்பனுபம் ஒரு சுகம். அதுவும் தேடி வாங்கறதை விட தேடறப்பப்ப எதிர்பாராம கிடைக்கறதை படிக்கறது இரட்டிப்பு சுகம்! ஆமாங்க... இப்பத்திக்கி 16 வருசம் கழிச்சு மீண்டும் ஒருமுறை முற்றிலும் வேறொரு மனநிலையில் கும்பகோணத்து புழுதி பறக்கும் தெருக்களில் ( இந்தமுறை காமத்தை புரிந்துகொள்ள... ) பாபுவுடன் அலைந்து கொண்டிருக்கிறேன் :)
*****
என்பீல்ட் புல்லட்டு பத்தின கொசுவத்தி பதிவை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். அதுல புதுசா ஒரு புல்லட்டு வாங்கி புளங்காகிதம் அடையனும்னு ஆசைப்பட்டிருப்பேன். ஆனா என்னதான் புதுசு வாங்குனாலும் அது எங்கப்பாரு பைக்கு மாதிரி வருமான்னு ஒரே யோசனை. இதுக்கு பேசாம எங்கப்பாரு புல்லட்டையே புதுசா மாத்திட்டா?! இது ”பேசாம அவளையே நீங்க பொண்டாட்டி ஆக்கிக்கிட்டா?!” அப்படின்னு வடிவேலுகிட்ட கேட்டமாதிரியே இருக்கா? ஆனா அதான் நடந்தது. 34 வருசமா உழைச்ச வண்டியை ச்சும்மா ஜம்முன்னு புத்தம்புதுசா மாத்திக்கொடுத்த கோயமுத்தூரு மெக்கானிக் பாபுவுக்கு ( 98947 69155 ) நன்றி! இன்னமும் தமிழ்நாட்டுல ஆட்டோமொபைல் ஸ்பெஷலிஸ்டுகன்னா அது எங்கூருகாரருவகதான்! :)
இப்பத்திக்கு வறுத்தெடுக்கற சென்னை வெயிலெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை! ச்சும்மா ராக்கெட்டாட்டம் ஈசியார் ரோட்டுல காத்தைக் கிழிச்சுக்கிட்டு ஆபீசு போய்வர்றதுல இருக்கற கெத்து...அடடா... இதுபோக இப்பவும் எங்கப்பாரு எங்கூடத்தான் அப்படீங்கறது மெயின் மேட்டரு! :)
*****
கொஞ்ச நாளைக்கு முன்ன எங்காபிசுல ஃபேசன் பெரேடு நடத்துனாய்ங்க. என்ற அழகுக்கும் நளினத்தும் கெம்பீரத்துக்கும் இதெல்லாம் தேவையான்னு நீங்க கேக்கலாம். இதெல்லாம் பார்த்தா அப்பறம் சரித்தரத்துல இடம் பெற்றது எப்படி? எதையுமே சீரியசாச் செய்ய தண்டி இல்லைன்னா அதை அப்படியே காமெடியா மாத்தி கல்லா கட்டுறதுங்கறது எனக்கு பாலபாடம்! பயபுள்ளைங்க எல்லாம் ச்சும்மா உடையா உடுத்தி நடையா நடந்து பழக எங்காப்பீசு பெருசுங்க மட்டும் Recession-2010ன்னு தீம் வைச்சுக்கிட்டு களமிறங்கிட்டோம். ஆளாளுக்கு காமெடி ஃபீசாகி அட்டகாசம் செய்ய நான் என் ”ஹேர்ஸ்டைலு”க்கு தோதாக சிவாஜி த பாஸ் வேலை போய் மொபைல் பெட்டிக்கடை நடத்தறதை எடுத்துக்கிட்டேன். ”அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே”ன்னு பட்டையா எண்ட்ரி குடுத்து அப்படியே தலீவரு நடை நடந்து ரெண்டு கையையும் காத்துல விஷ்ஷுக்கி பின்னாடி பாக்கெட்டுல இருந்து பாக்கு ரீலை எடுத்து சுத்தி கழுத்துல போட அப்லாஸ் அப்படியே அள்ளிக்கிட்டது.
அதெல்லாம் நம்ப சூப்பர் ஸ்டாருக்குன்னாலும் ச்சும்மா 3 நிமிசம் வந்ததுக்கே மக்கா இப்படி கரகோஷம் எழுப்பி என்னை வைகுண்டம் போக வைச்சுட்டாங்களே... அப்ப அவருக்கு வாழ்க்கை முழுசும் எப்படி இருக்கும்னு யோசனை வராமலில்லை!
இதுபோக பொங்கலன்னைக்கு தமிழ்ல நல்லா மூச்சு விடாம ஒளர்ற திறமையைப் பாராட்டி காம்பயரிங் செய்ய மைக்குவேற கொடுத்தாய்ங்க... 4 மணிநேரம் சும்மா ரத்தம் வரவர தேமேன்னு சக்கரைப்பொங்கல் வைக்கற போட்டிக்கு வந்திருந்த அத்தனை பேரையும் வெளாரிட்டேன். அடடா.. மைக்மோகனே இப்ப ஓஞ்சிட்டாலும் அந்த செகண்டு நினைச்சதை நினைச்சபடி மைக்குல பேசிக்கிட்டு கும்பல்ல வளைய வர்றதுக்கு ஒரு மாதிரியான தினவுதான். IT வேலை போனாக்கூட எப்படியும் இசையருவி 10 மணி ஸ்லாட்டு வாங்கிடலாம்னு நம்பிக்கை வந்துருச்சுங்கப்பு! :)
எது எப்படியோ பலவருசம் கழிச்சு மீண்டும் கலைக்கூத்தாடியனதுல தாங்க முடியாத சந்தோஷம்! இதே சுகுர்ல அப்படியே அடுத்த வருசம் கோவை CIT Hormony கல்ச்சுலர்ஸுக்கும் எண்ட்ரி போட்டுற வேண்டியதுதான். ( என்ன... அந்தக்காலத்துல அடிவாங்கன மாதிரி இப்ப வாங்காத இருக்கனும்! வயசாவுதில்ல?! ஒடம்பு தாங்காது! ஹிஹி... )
*****
வயதில் இளையவர் ஆனாலும் என் மனைவி என்னைவிட எல்லா விடயங்களிலும் மிகத் தெளிவாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர் ( அவர் திருமணமே சாட்சி! ஹிஹி..) ஆரம்பத்தில் என்னதான் நான் வாதப்பிரதிவாதத்தில் லாவகமாக கம்பு சுத்தினாலும் கடைசியில் திறமையான முடிவுகளால் அவரது சரியான ஆளுமையை அழுத்தம் திருத்தமாக உணரவைப்பவர். இப்பத்தின ஒரு சப்பை பிரச்சனை என்னவெனில் நான் பாலச்சந்தர் படங்களை பயங்கரமாக எதிர்ப்பவன். கவைக்குதவாத ஒரு கற்பனா உலகத்தினை நிறுவி முரண்பாடான கோட்பாடுகளை படம் முழுக்க வலியத்திணித்து சமூகத்தில் ஒரு புண்ணாக்குக்கும் உதவாத தீர்வுகளை பெண்ணிய புரட்சி என்ற சுகர்கோட்டிங்கில் அப்பட்டமான க்ளிஷேக்களாக காட்டியவர் என்பது தவிர அவரது படங்களின் மீது எனக்கு உணர்வுபூர்வமான ஒன்றுதல் வந்ததே இல்லை! ஆனால் என் மனைவி இதையெல்லாம் புறந்தள்ளி அவரது படங்கள் ( அதுவும் கல்கி! ) தனக்கு பிடித்திருக்கிறது என்கிறதோடு வாதத்தை முடித்துவிடுவார். சமூகம் மீதான மெச்சூரிட்டி என்னைவிட அவருக்கு அதிகம் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை உள்ளதால் இப்பொழுது நான் பாலசந்தர் படங்களை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? அல்லது மீண்டும் ஒரு முறை புதிய கோணத்தில் பார்க்க வேண்டுமா?!
ஒரே கொழப்பமுங்க!
*****
கையில கேமராவை வைச்சுக்கிட்டு கொஞ்ச வருசமா நானும் இங்கனயும் அங்கனயும் அல்லாடிக்கிட்டு இருக்கறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இவ்வளவுநாளா காமெராவுல எப்படி சூப்பரா படமெடுக்கறதுங்கற புத்திதான் இருந்துச்சு. நாளாக நாளாக காமெரா அதன் சிறப்பம்சம் புதுப்புது டெக்னிக் இதெல்லாம் எப்படிங்கற புத்தியைத் தாண்டி நாம வெளிப்படுத்த நினைக்கறதை எப்படி செய்யறதுங்கற யோசனை வந்திருக்கு. அதாவது கருவி முக்கியமல்ல. அதன்மூலம் வெளிப்படுத்தற கலையே முக்கியங்கற மாதிரி. இப்பத்தின படங்கள் எனக்கு ஓரிரண்டு பாராட்டுகளை மட்டுமே பெற்றுத்தந்தாலும் நாம எடுக்க நினைக்கறதை புரிஞ்சுக்கிட்டவுங்கன்னு அப்படியே அவங்கமேல உள்ள இருந்து பொங்கிடுது. அதாவது கவிதையின் படிமங்களை புரிஞ்ச வாசகனை வாஞ்சையோடு பார்க்கும் கவுஜர் மாதிரி! என்னதான் பொழுதுபோக்குக்கு படமெடுத்தாலும் இந்த வகைதான் சரியான அடுத்தகட்ட நகர்வுன்னு மனசுக்கு தோணுது. இப்பத்திக்கு முழுசா நான் சரியா ஃபார்ம் ஆகலைன்னாலும் முயற்சி செஞ்சு இதுலயாவது நல்ல பேரு வாங்கனுங்கற ஆசை இருக்குங்க! :)
One Last Good-Bye!
*****
இதுக்கே ரீலு அந்துருங்கறதால என் புராணத்தை இப்பத்திக்கு நிப்பாட்டிக்கறேன். இருந்தாலும் இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க. எழுதறனோ இல்லியோ போட்டோவாச்சும் போட்டு ஒப்பேத்துவேன் என்று இன்றைய நாளிலே உளமார உறுதி கூறுகிறேன்! :)
புல்லட்டு போட்டோவும் புல்லட்டோட பாஸ் போட்டோவும் ஒஹோ!!! :))
பதிலளிநீக்கு//போட்டோவாச்சும் போட்டு ஒப்பேத்துவேன் என்று இன்றைய நாளிலே உளமார உறுதி கூறுகிறேன்! :)//
பதிலளிநீக்குஹைய்ய்ய்ய்ய்ய் இனி மாசம் மாசம் போட்டோ விருந்து காத்துக்கிட்டிருக்கா? :)
// இதையெல்லாம் புறந்தள்ளி அவரது படங்கள் ( அதுவும் கல்கி! ) தனக்கு பிடித்திருக்கிறது என்கிறதோடு வாதத்தை முடித்துவிடுவார்.// இந்த படம் என்னோட வீடுகாரம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும் . ஏன்னு இன்னம் புரியலே . எனக்கு பாலச்சந்தர் படம்னாலே அலர்ஜி. உன்னோட கருத்தே தான் என்னோடதும் ! ஆஹா , புல்லட் மேகநிக்ஸ் தெரிஞ்சவங்க இன்னமும் கோவைல இருக்கறாங்களா !! அப்பா வண்டிய ஓட்டும்போது இருக்கும் சுகமே தனி. என்ஜாய்!
பதிலளிநீக்குnanri ayyaa...ullen ayya...gettuppu sooperappu...
பதிலளிநீக்குSmart Men ride Smart Bikes, hey! ;)
- Pot"tea"kadai.
தலைவரே..
பதிலளிநீக்குஎன்ன இது..? ஆடிக்கொரு தடவை.. அமாவாசைக்கு ஒரு தடவைன்னு பதிவு போடுறீங்க..?
/இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க//
பதிலளிநீக்குஇப்படித்தான் நாலுவருசத்துக்கு முன்னாடியும் சொன்னதா ஞாபகம்.
சூப்பரு அப்ப இனி படம் காட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டிங்க எழுதுங்க பாஸ்...
பதிலளிநீக்குஆனா பாருங்க எழுதினாலும் இல்லைன்னாலும் நீங்க ஒரு இலக்கியவாதிங்கிறதை பதிவோட தலைப்பே சொல்லுது...
:)
உம்மோட சேத்து அஞ்சாச்சு, பழைய புல்லட்ட ருசுவாக்கி வச்சு கடுப்பேத்துற சேக்காளிக கூட்டம்..
பதிலளிநீக்குசும்மா இருக்கறவன சொறிஞ்சுவிட்டுடறாங்கப்பா.. :(
//இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும்// ஹி.. ஹி.. இதெல்லாம் ரொம்ப நா கழிச்சு பதிவ எழுதி அதை முடிக்கும் போது வழக்கமா போடுற சம்பிரதாயம் தானே :( .. நெசமா இருந்தா சந்தோசம் தான்..
சொல்ல மறந்துட்டேன்.. போட்டோபடத்துல இன்னும் அதே இளமையோடவே இருக்கேங்க.. :)
பதிலளிநீக்கு// ILA(@)இளா said...
பதிலளிநீக்கு/இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க//
இப்படித்தான் நாலுவருசத்துக்கு முன்னாடியும் சொன்னதா ஞாபகம்.//
அட போன வருசமுங்கூட இதையேத்தான் சொன்னாரு...
இவரு பேச்சை இனி நம்பறதில்லை. பேசாம கல்யாணமாம் கல்யாணம் தொடரை மீள்பதிவு செய்யுங்க ஆசானே.. புதுசா வந்தவுகளுக்கு உபயோகமா இருக்குமுல்ல.. :)))
//கவைக்குதவாத ஒரு கற்பனா உலகத்தினை நிறுவி முரண்பாடான கோட்பாடுகளை படம் முழுக்க வலியத்திணித்து சமூகத்தில் ஒரு புண்ணாக்குக்கும் உதவாத தீர்வுகளை பெண்ணிய புரட்சி என்ற சுகர்கோட்டிங்கில் அப்பட்டமான க்ளிஷேக்களாக காட்டியவர் என்பது தவிர அவரது படங்களின் மீது எனக்கு உணர்வுபூர்வமான ஒன்றுதல் வந்ததே இல்லை!//
பதிலளிநீக்குஇப்படில்லாம் பேசினா கண்ணக்கட்டுதுங் சாமின்னு சொல்ற காலமெல்லாம் மலையேறிடுச்சு.. சிம்பிளா ஸ்மைலி போட்டுட்டு நகர்ந்திடுறாங்க மக்கள்ஸ் :)))
உங்களாட்டம் ஆளுங்கள்லாம் அடிக்கடி பதிவு போட்டு எங்களை ஊக்கு விப்பீங்கன்னு பாத்தா பின் வாங்கிகிட்டே இருக்கீங்க..
பதிலளிநீக்குஒரு ஆறுமாசம் விடாம போடுங்க.. நாங்களும் ரிட்டன் ஆவறதைப்பத்தி யோஜிக்கறோம்.
இளவட்டச் சிங்கம் இளவஞ்சி வாழ்க வாழ்க - வெல்லாம் பாக்குறீகளாப்பு
பதிலளிநீக்குநட்புகளே,
பதிலளிநீக்குஇத்தனைபேரு என்னை இன்னும் மறக்காம இருக்கீங்களா?!
நன்றின்னேன்....:)
அவசரமா பெங்களூருக்கு கெளம்பிக்கிட்டே இருக்கறேன். அதுக்குள்ள பின்னூட்டங்களுக்கு பதில் போட அடுத்த வருசம்தான் வருவேன்னு கெளைப்பிவிட்டுராதீக!! நாளைக்குள்ள மீண்டும் வர்றேன்! :)
கும்பகோண தெருக்களில் மெக்கானிக் பாபுவோடோ சுத்துகிறீர்கள்:)பிரபல மோகம் தாண்டவமாடி தெனம் ரெண்டு பதிவு போடும் சக பதிவர்களுக்கு பதிவு போடாமலேயே பிரபலமாக இருக்கும் டெக்னிக்க சொல்லித்தாங்க பாஸ் :)
பதிலளிநீக்குஇளவஞ்சி வாங்க வாங்க.. போட்டோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஆசானே அட்டகாசம்...நீங்க பின்னூட்டம் போட்டாலே பதிவுலகம் பத்திக்கும்....இதுல இம்புட்டு பெரிய பதிவு போட்டது தீபாவளி தான் போங்க ;))
பதிலளிநீக்குஆசானே அம்புட்டு அழகாக இருக்கீங்க..;) அந்த கருப்பு கலர் கண்ணாடி ஆகா..ஆகா...அழகு அழகு ;)
ஆசானே கடைசியில ஏதோ ஒரு நாலுவரி எழுதியிருக்கிங்கல்ல...அது எந்த வருஷம் எழுதிவச்சது...தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு ;))
Wow ! Cool Pose Thala !
பதிலளிநீக்குஆயில்யன்,
பதிலளிநீக்குஉண்மையில புல்லட்டோட பாஸ் எங்கப்பாரு :)
ஜெயகாந்தன்,
கோவைல மட்டுமே தொழில் சுத்தமா புல்லட்டை பிரிச்சுப்பூட்டறாங்க.
பொட்டீ,
நன்றி! உம்ம வண்டிக்கு என் வண்டி சோடி போட்டுக்கலாமா? ஆனா ஒன்னு. நீங்க 80க்கு மேல போவக்கூடாது! :)
உ.த,
என்ன செய்ய.. உங்க பதிவுகளை படிக்கறதுக்கே நேரம் சரியா இருக்கு! எங்கன எழுத?! ஹிஹி...
இளா,
நீர் ஒருத்தரு போதுங்க!
ஆனா நான் அன்னிக்கும் இன்னிக்கும் ஒரே பேச்சுத்தான்! :)
தமிழன்,
பதிலளிநீக்கு// நீங்க ஒரு இலக்கியவாதிங்கிறதை பதிவோட தலைப்பே சொல்லுது...//
நல்ல வேளை// நெசமான இலக்கியவாதிங்க எல்லாம் என் பதிவுக்கு வர்றதில்லை! அதுபோக நம்பளது தலைப்பு மட்டுந்தாங்க அப்படி இருக்கும்! :)
ராசா,
ச்சும்மாவா சொறியறோம்? நீரும் உம்ம வண்டியை ரெடி செஞ்சுட்டீருன்னா 10 வண்டியா அப்படியே நைட்டுல கெளம்பி பர்லியாருல டீ குடிச்சுட்டு வரலாம். எப்படி வசதி? :)
// படத்துல இன்னும் அதே இளமையோடவே இருக்கேங்க..//
அன்னிக்கே நான் எனக்கு இருக்கறது ஒரே ஒரு நரைமுடி.. அதுவும் பகுட்டுலன்னு சொன்னேன். ஒரு பய நம்புனீங்களா? நான் யூத்து.. யூத்து.. யூத்தேதான்!
சென்ஷி,
// அட போன வருசமுங்கூட இதையேத்தான் சொன்னாரு... //
அதெப்படியா எல்லாரும் ஒரே பாயிண்டுல அடிக்கறீங்க? இந்த தபா பாருங்க.. நெசமாவே மாசத்துக்கு ஒன்னாச்சும் போடுவேன். ( ஸ்சப்பா...முடியல! )
// சிம்பிளா ஸ்மைலி போட்டுட்டு நகர்ந்திடுறாங்க மக்கள்ஸ்//
அடடா! இதேதான் எங்கூட்டுலயும் நடந்திருக்கும் போல! நாம் மொக்கைமேல மொக்கையா போட்டுத்தள்ள அவிங்க ஒரு ஸ்மைலில புல்ஸ்டாப்பு வைச்சுட்டு போயிட்டாங்க!
ராம்சுரேஷ்,
பேரு நல்லாருக்குங்க! :) சரக்கிருந்தா செய்யமாட்டமா? நீர்வேற என்னை ஜாமீன்ல வைச்சுட்டு போறீங்க...
அய்யனார்,
பதிலளிநீக்குஅட.. ஆமாங்க! ரெண்டுபேரும் பாபு!
// பதிவு போடாமலேயே பிரபலமாக இருக்கும் டெக்னிக்க //
நான் இந்தப்பக்கம் வராம இருக்கறதையே மக்க இப்படி பிரபலமா கொண்டாடறாங்களோ என்னவோ?! :)
பாலகுமார்/நாதஸ்,
நன்றி :)
கோபிநாத்,
// அந்த கருப்பு கலர் கண்ணாடி ஆகா..ஆகா...அழகு அழகு ;)//
உம்ம நக்கலு இருக்கே! சே.. ஒரு மனுசன் தேமேன்னு மாட்டிக்கிட்டு இருக்கானே? அவனைப்பத்தி.. ஹிம்.. கண்ணாடி அழகாம்! இதெல்லாம் ஆணவம்வே!
// அது எந்த வருஷம் எழுதிவச்சது...தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு ;))//
அது வந்து.. ஹிஹி..
ஆனா ஒன்னு தெரியுது...எல்லாம் ஒரு குருப்பாத்தான் இருக்கீங்க.. புதுசா பதிவெழுத வர்ற பச்சப்புள்ளைய இப்படியா ராகிங் செய்யறது?!
என் புல்லட்டையும் சீரமைக்கணும். என்ன செலவு ஆச்சி?
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குதல.. வாங்க...வாங்க..!!
அனானி,
பதிலளிநீக்குதனிமடல் போடுங்க.. டீடெயிலு அனுப்பறேன்.
பாலாபாய்,
வந்துட்டன்! :)
அனானி,
// இளவட்டச் சிங்கம் இளவஞ்சி வாழ்க வாழ்க - வெல்லாம் பாக்குறீகளாப்பு //
பார்த்தேன். திகிலில் பின்னூட்டம் கூட இடாது வெளிரிப்போனேன்! இந்த சதிக்குப்பின்னால் அமீரக கையொன்று இருப்பதாக வன்மையாக சந்தேகிக்கிறேன்!!!
இந்த சதிக்குப்பின்னால் அமீரக கையொன்று இருப்பதாக வன்மையாக சந்தேகிக்கிறே//////
பதிலளிநீக்குசுத்தமான வடிகட்டிய மிகச் சரியான தப்பு. தருமியும் நீங்களும் வயசுக் கோளாறில் !! மைதானத்தில் மல்லுக்கட்டுறதிலிருந்து இளவஞ்சி பாசறைக்கு தலைவராகிட்டோம்
அனானி,
பதிலளிநீக்கு// சுத்தமான வடிகட்டிய மிகச் சரியான தப்பு//
அதானே பார்த்தேன். நானாவது வலைல அப்டுடேட்டா இருக்கறதாவது! :)
// தருமியும் நீங்களும் வயசுக் கோளாறில் !! //
நான் சரி... தருமிசாரை ஏங்கானும் இழுக்கறீர்? அவருக்கு இப்பத்தான் 24 முடியுது! :)
// இளவஞ்சி பாசறைக்கு தலைவராகிட்டோம் //
பெருமைக்கு எருமை மேய்க்கறீங்க.. அவ்ளவ்தான் சொல்லுவேன்! ஹிஹி...
உள்ளேன் அய்யா.
பதிலளிநீக்கு:-)
வாங்க வாங்க...!
பதிலளிநீக்கு:)
போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.இந்த இடுகையைச் சேர்த்திருக்கேன்
பதிலளிநீக்குமொட்ட பாஸ் சூப்பர்!
பதிலளிநீக்குiruththaliyam-naa - existentialism-aa?
பதிலளிநீக்குone last goodbye - konjam purinjuthu - konjam puriyala! :)
k.b enakkum puriyaatha puthir - kalki yaarukUtaiyO kuzaNthai, yaaraiyO pinna kalyaanNam - konjam puratchi, villanOta kuzaNthai - rombavE wastoo! :) That way Sindhu Bhairavi more understandable than Kalki. Even Rayil Sneham (TV serial) on same lines was understandable. K.B says Gautham Menon is THE next director - I understand Gautham better!
Madura - ippaththaan paaththEn mUnNu pathivum! :)
//( அதுவும் கல்கி! ) தனக்கு பிடித்திருக்கிறது என்கிறதோடு வாதத்தை முடித்துவிடுவார்.//
பதிலளிநீக்குரொம்ப உதைக்குதே!
//இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க//
promises are made to be broken!
படம் .. மண்டையிலயும் சரக்கு வேணும் போலும். அப்பத்தான் இப்படியெல்லாம் எடுக்க முடியுமோ?
பதிலளிநீக்கு