முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் ஒளிப்படப் பெட்டியிலிருந்து...








கருத்துகள்

  1. உங்க போட்டோ, நீங்க அடிக்கடி பார்க்கும் சிட்டு உட்பட எல்லா படங்களும் நல்லா இருந்ததுங்க. அந்த முதல் போட்டோ என்ன? புரியவே இல்லையே.

    பதிலளிநீக்கு
  2. இதெல்லாம் நீங்க எடுத்தப் படமா??? நல்லா இருக்குது.. :)))

    பதிலளிநீக்கு
  3. thala, engana poyi iruntheenga imboottu naalaa?

    பதிலளிநீக்கு
  4. யாருங்க உங்கள அமெச்சூர் போட்டோகிராஃபர்னு சொல்றது? இன்று தொட்டு மெச்சூர் போட்டாக்காரருனு அழைக்கப்படுவீராக!

    பதிலளிநீக்கு
  5. வாத்தியார்,
    முந்தியெல்லாம் எழுதுவீங்களே, அது மாதிரி இந்தப் படத்துக்குக் கீழ ரெண்டு வரி எழுதக் கூட நேரமில்லாம பிஸியாகிட்டீங்களா?!!! :(((

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கடைசி குருவிப்படம் தான் இப்போது என் கணினி முகப்பில்.
    தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  7. மிக அழகான தருணங்கள்!!
    முதல் படம் மின்னலா???

    பதிலளிநீக்கு
  8. இகொ,

    // உங்க போட்டோ // ஹிஹி..

    முதல் போட்டோ வாணவேடிக்கைங்க! படம் மேல கிளிக்குனா பெரிய படம் கிடைக்கும். அதுலயாவது புகைப் படக்கலை சரியா பொங்குதான்னு பாருங்க! :)

    ஜி, வரணும்! நன்றி!

    குரு, எல்லாம் வனவாசம்தான்! :)

    செல்லமுத்து, பட்டத்திற்கு நன்றி! நம்ம மக்கா இத பாதில படிச்சுட்டு அமெச்சூரான மெச்சூர் போட்டாக்காரருன்னு சொல்லுவாங்க பாருங்க! :)

    பாரதி, எல்லாம் அப்பப்ப அங்கங்க எடுக்கறதுதான். பாராட்டுக்கு நன்றி!

    பொன்ஸ்,

    // கீழ ரெண்டு வரி எழுதக் கூட நேரமில்லாம பிஸியாகிட்டீங்களா?!!! :((( // பிசியாவது.. ஒன்னாவது! எல்லாம் "ஜிம்மிக்கு நிக்க நேரமில்லை... பார்க்க வேலையுமில்லை" கதைதான்! நெஜமாலுமே எனக்கு இத படத்துக்கெல்லாம் என்ன எழுதறதுன்னு தெரியலை! அதனால, அந்த மொட்டை மரத்துக்கும் மொட்டை குரங்குக்கும் முடிச்சுபோட்டு நீங்களே ஒரு கவிதை எழுதிருங்க! உங்க பதிவுல தான்! :)

    வடுவூர் குமார், வருகைக்கு நன்றி!

    யோகன் பாரிஸ், முதல் படம் வாணவேடிக்கை! :)

    பதிலளிநீக்கு
  9. nice photos.. esp. that lonely dry tree... i guess it could have created more impact if it had been on the left or right most frame of the picture .. sariya therila.. etho thonuratha solraaen thaliva..

    nanum thaan padam potaen.. aarum vandhu paatha maathiri therila.. (sila nallavungala thavira ;-) .. elaathukum oru star value venumo ? ;-)

    பதிலளிநீக்கு
  10. படமெல்லாம் நல்லா இருக்கு.

    அந்த மொதல் படம் ஷட்டர் வேகம் கொறைச்சி அல்லது லாக் வெச்சி எடுத்தீங்களா?

    பதிலளிநீக்கு
  11. இத்தன் படம் போட்டீங்க ரெண்டு பிகர் படமும் போட்டு இருக்கலாம் இல்ல...அத நீங்க மட்டும் தனியா பார்த்திட்டு இருந்தா என்ன அர்த்தம் :-)

    பதிலளிநீக்கு
  12. யாத்ரீகன்,

    நீங்க சொல்வது சரி! மரத்தை ஓரமா வைக்க நான் நின்னு நின்னு எடுத்த இடம் வாகா அமையலை! உங்க அடுத்த கேள்விக்கான பதில் உங்க பதிவுக்கு வந்து சொல்லறேன்! :)

    மாசிலா, ஷட்டர் ஸ்பீட் 2 செகண்டு வைச்சு எடுத்தது. வருகைக்கு நன்றி!

    ஷ்யாம்,

    பிகர் படங்களா?! அதையெல்லாம் எடுக்கற அளவுக்கு திறமையிருந்தா நான் ஏன் கடுவனாகவே நம்ப கல்லூரில "வாழ்ந்து" வெளிய வந்திருக்கப்போறேன்!? :)

    பதிலளிநீக்கு
  13. எனக்கு கூட படம் எடுக்கறது என்றால் ரொம்பவும் பிடிக்கும். தற்போது என்னிடம் உள்ள Canon EOS 350D யில் எடுத்த ஒரு சில படங்களை இங்கே http://naalainamathae.blogspot.com/2007/03/blog-post.html போய் பார்த்து கருத்தைச் சொல்லுங்க.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. //திறமையிருந்தா நான் ஏன் கடுவனாகவே நம்ப கல்லூரில "வாழ்ந்து" வெளிய வந்திருக்கப்போறேன்//

    நம்ம கல்லூரில இருக்கற பிகருங்க 'அலகு' க்கு சிங்கிளா இருப்பது எவ்வளவோ மேல்...என்னங்க நான் சொல்றது..நல்லா இருக்கற ஒன்னு ரெண்டு கேரளா பிகருகளயும் அந்த ஊர்காரனுங்களே வளச்சுக்குவானுங்க :-)

    பதிலளிநீக்கு
  15. அருமையான போட்டோகிராபி!!

    யோவ் இந்த கிராபிக்ஸ் வித்தையெல்லாம் போன வாரம் எடுத்த போட்டோவில காட்டுவீர்ன்னு பார்த்தா கைவிட்டுட்டீரேவே !!
    சட்டி அகப்பைன்னு எதாவது பழமொழி சொல்லி வேலப் பாய்ச்சாதீரும்...

    பதிலளிநீக்கு
  16. டுபுக்ஸ்,

    நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் சட்டி அகப்பைதான்!!

    அகப்பை சரியா இல்லைன்னா சட்டில என்ன இருந்தாலும் எடுக்க முடியாது!!! ( இங்கே அகப்பை என்பதை என் ஓட்டைப் புகைப்பொட்டியாகவும் நிறைசட்டி என்பதை நீங்களாகவும் கொள்க!! :) )

    பதிலளிநீக்கு
  17. பிரமாதமா படம் புடிச்சிருக்கீருய்யா. நீரே புடிச்சதா? இல்ல காபி ஷாப்ல யாராவது குடுத்து வாங்கீட்டு வந்ததா? போட்டோக்கு வெளக்கம் வேணுமய்யா! வெளக்கம் வேணும்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...