முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வென்றுவாடி என் மகளே!

ன்னும் 4 மணி நேரத்தில் எம்பொண்னு வாழ்க்கையில் முதமுறையா பள்ளிக்கூடத்து வாசலை மிதிக்கப்போறா! அவங்கம்மா அவளுக்கு புத்தம்புது யூனிபாரத்தை போட்டுவிட்டு, சாமிய கும்பிடவைச்சு, தாத்தாபாட்டி காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு, புதுசா வாங்குன புத்தகப்பை, சோத்துப்பை, வாட்டர்பாட்டிலு எல்லாத்தையும் மாட்டிவிட்டு, நான் அவளுக்கு ஷீ போட்டுவிட்டு, வண்டில கூட்டிக்கிட்டுப் போய் கையப்பிடிச்சு நடத்திக்கொண்டு வகுப்புல விடத்தான் ஆசை! என் நேரம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்! நானே என் தொரசாமி தாத்தாவை கதறடிச்ச மொதநாளு கதைய மறக்காம கொசுவத்தி சுத்தி புளங்காகிதமாத்தான் இன்னமும் இருக்கேன்! அதுக்குள்ள எம்பொண்னு பள்ளிகூடத்துக்கு போறா! ஹிம்! காலம் போற வேகத்துல...

இந்த இனியநாள் இன்னொரு முறை எனக்கு கிடைக்குமா? தவறவிட்ட இந்த வாய்ப்புக்கான உண்மையான மதிப்பினை ஈடுசெய்ய இயலுமா? சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை! :( என்னால முடிஞ்சது அவளுக்கான இந்த பதிவுதான்!



போய்வாடி என் மகளே!
நம்வாழ்வை மொக்கையாக்க
மெக்காலே வடிவமைத்த
போர்க்களம்
வென்றுவாடி என் மகளே!

கூட இருக்கத்தான் ஆசப்பட்டோம்...

கள்ளநோட்டு கும்பலுக்கு
"வலைவீச" போனதால
எங்கப்பனுக்கு முடியல

துரைமாரு நாட்டுக்கு
ஆணிபிடுங்க வந்ததால
உங்கப்பனுக்கு முடியல



வெற்றிச் சிரிப்போட
எங்கப்பாரு
தினத்தந்தில வந்தாக

வெட்டிப் பதிவராக
உங்கப்பாரு
பதிவுலகில் வந்திருக்கேன்

கவலைப்படாதேயெங் கண்ணு!

எங்கம்மாவோட அப்பாரு
எங்கூட வந்தாக
உங்கம்மாவோட அப்பாரு
உங்கூட வர்றாக

என்னைக்கும் இதே கததான்!
அப்பனுங்க கதையெல்லாம்
வெறும் வாயோடு
வெளையாட்டு!



ஏபி சீடியும்
ஏப்ளஸ்பி ஹோல்ஸ்கொயரும்
இதமாத்தான் நீ படிக்க
எழுதி இருக்காக
என்பதுகிலோ புத்தகங்க

அத்தனையும் தெனம் சுமக்க
ஆசைப்படுறேன் இந்த அப்பா
படிச்சுக் கிழிக்க அல்ல
மூட்டை தூக்கியேனும்
நீ பெறவேண்டும்
உடலுறுதி
வாங்கித்தாரேன் ஹார்லிக்சு

வேற வழியில்ல கண்ணம்மா...

பப்பிஷேம் ஊருக்குள்ள
ஜட்டிபோட்டவன் லூசுப்பய
ஒம்பது டு அஞ்சுக்குள்ள
படிப்பையெல்லாம் முடிச்சுவிடு
அதன் பெறகும் படிச்சன்னா
அப்பாவுக்கு மூடவுட்டு



தோள்மீது உனைத்தூக்கி
மெரீனாபீச்சு கூட்டிப்போறேன்
அடையாறு சிக்னலிலே
மொளகாபஜ்ஜி வாங்கித்தாரேன்

வாரத்துல நாலுமுறை
புதுகாமிக்சு உனக்குண்டு
டென்னிஸோ உதைபந்தோ
கைதட்ட நானிருக்கேன்




"ஒரு குடம் தண்ணியூத்தி"
வெளையாட்டு சொல்லித்தாரேன்
"ரிங்கா ரிங்கா ரோசஸு"
உங்கிட்ட கத்துக்கறேன்


பாடங்க அத்தனையும்
மண்டைக்குள் அனுப்பிக்க
மனுசங்க அனைவரையும்
மனசுக்குள் ஏத்திக்க

பாடங்க நீ படிக்க
உங்கம்மா
ஸ்கேலோட காத்திருக்கா
அவகிட்ட நான் படிச்ச
உலகம்னு ஒன்றுண்டு
கருத்தாக படிச்சுக்க
உங்கப்பா
உவப்போடு சொல்லித்தாரேன்



காக்கா கடிபோட்டு
ஃப்ரெண்டுங்க புடிச்சுக்க
அல்லாவும் ஜீசசும்
எதிரியில்ல தெரிஞ்சுக்க

கீழே விழுகயில
சிரிச்ச மொகத்தோட
நீயாவே எழுந்துக்க
அடுத்தவனைக் கைகாட்டி
அழுது புலம்பறது
ஷேம்ஷேம்னு தெரிஞ்சுக்க

உலக உருண்டையிலே
ஒருபக்கம் நானிருக்கேன்
உன்னை
உருவாக்கும் உலகத்தின்
வாசப்படியில் நீயிருக்க





காலாண்டுப் பரிச்சைக்குள்ள
கலர்பென்சிலோட நான் வாரேன்
ரெண்டுபேரும் சோடிபோட்டு
உன் கனவுகளுக்கு
கலர் அடிப்போம்

போய்வாடி என் மகளே!
மெக்காலே வடிவமைத்த
போர்க்களம்
வென்றுவாடி என் மகளே!

================
படங்கள் உதவி: http://www.pluk.org/FS1.html


கருத்துகள்

  1. அடங்கொக்கமக்கா, நான் என்ன சொல்லப் போறேன்???

    ஆற்றாமையை, அழுகாம, நல்லா சொல்லிருக்கீங்க :-)

    பதிலளிநீக்கு
  2. உங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள்/ஆசீர்வாதமும்.
    பதிவு மிக நெகிழ்வாக இருக்கு.
    யார் வீட்டு குழந்தைக்கும் பொருந்துகிற மாதிரி உள்ளது அப்படியே அந்த "வரி" படங்களும் அருமையிலும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. வலிக்குது இளவஞ்சி....ம்ம்ம்ம்ம்

    மகளுக்கு இந்த பெரியப்பாவின் வாழ்த்துக்களையும் சேர்த்து சொல்லுங்க....

    நல்லா வரணும் குட்டிப்பொண்ணு...

    பதிலளிநீக்கு
  4. என்ன இளவஞ்சி??...நீங்க வெளிநாடா இப்பொ இருக்கரது??உங்க ஆதங்கம் ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க.....மனச தொட்டுடீங்க....ஆனா என்ன செய்ய?? எப்போதுமே ஒண்ண அடைய ஒண்ண விட வேண்டிதான் இருக்கு......பொண்ணு படிச்சு பெரிய ஆளா வருவா...அவளுக்கு எல்லா கலைகளும் பெற்று சிறப்பா வாழ என் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  5. உங்கள் இயலாமையை அழகாக அர்த்தமாக வெளியிட்டிருக்கிறீர்கள் இளவஞ்சி. உங்கள் மகளின் கல்விப்பயணம் இனிதாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் தலைவா!

    பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் .அகிலாண்டேஸ்வரி அல்லா ஜீஸஸ் அனைவரும் காத்து நிற்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.

    நல்லாப் படிச்சுப் 'பெரிய'ஆளா வரணும்.

    பதிலளிநீக்கு
  8. என்னுடைய அன்பான வாழ்த்துகளையும் சேர்த்துச் சொல்லிருங்க இளவஞ்சி!

    பாசமான அப்பாவை கண்டதில் மகிழ்ச்சி. இந்தக் கவிதையை சட்டமிட்டு வீட்டில மாட்டி வையுங்க. ஒரு நாள் உங்க பொண்ணு படிச்சு சிலாகிச்சு இடுகையெழுதுவா..

    பொண்ணுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துகள்! (அம்மாவுக்கு டபுள்! ;) )

    -மதி

    பதிலளிநீக்கு
  9. அன்பு இளவஞ்சி,
    பள்ளி செல்லும் உங்கள் மகள் எல்லாக் கலைகளும் கற்று, சிறப்புற்றுத் திகழ

    என் வாழ்த்துகளும், நல்லெண்ணங்களும்.

    ஒரு தகப்பனாக உங்கள் ஏக்கங்கள் புரிகிறது..

    கவிதை சூப்பர்..
    அன்புடன்,
    சீமாச்சு...

    பதிலளிநீக்கு
  10. இளவஞ்சி அண்ணாச்சி,

    என்ன சொல்றதுன்னே தெரியலை. பேரன்ட்ஹுட்(பாதர்ஹுட்) உங்க எழுத்துல பூந்து விளையாடுது.

    வாழ்க்கை சில சமயங்களில், நம்முடைய சில அபூர்வமான நிகழ்வுகளை விளையாட்டாய் தட்டிப்பறித்துவிடுகிறது.

    btw, நொந்த மனதை பியர் விட்டு ஆற்றினீரா? ;)

    பதிலளிநீக்கு
  11. மகளுக்கு நல்லதொரு அப்பா கிடைத்திருக்கிறார் :-).

    பதிலளிநீக்கு
  12. உங்கள் மகளுக்காய் நீங்கள் எழுதியிருக்கும் பிள்ளைத்தமிழ் அருமை.
    //படிச்சுக் கிழிக்க அல்ல
    மூட்டை தூக்கியேனும்
    நீ பெறவேண்டும்
    உடலுறுதி//
    //கீழே விழுகயில
    சிரிச்ச மொகத்தோட
    நீயாவே எழுந்துக்க
    அடுத்தவனைக் கைகாட்டி
    அழுது புலம்பறது
    ஷேம்ஷேம்னு தெரிஞ்சுக்க//
    கலக்கிட்டீங்க இளவஞ்சி.

    பதிலளிநீக்கு
  13. மத்தவங்களுக்கு எப்படியோ நான் பதிவை படித்து விட்டு அழுது விட்டேன்! பாப்பா ஜெயிப்பா இளவஞ்ஜி!

    பதிலளிநீக்கு
  14. காப்பரிட்ச்சைக்கு முதல்ல கலர்பென்சிலோட வர' வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  15. ஜாலியா சொல்லிருக்கீங்க, ஆனாலும் நெகிழ்ச்சியா இருக்கு.. உங்க பொண்ணுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  16. இளவஞ்சி மக்கா,

    அசத்திப்புட்ட போ!!
    என்ன சொல்லச் சொல்லுத??
    ஒரு குடம் பூப்பறிச்சு நீங்க கத்துக்கொடுத்து ரிங்கா ரிங்கா ரோசஸ் அவ கிட்ட கத்துக்குறது... அசத்தல் தலைவா!!

    குழந்தைங்க கிட்ட கத்துக்குறது மாதிரி சுகம் எதுவுமேயில்ல. உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் வாழ்த்துகள்!!
    நெசம்மாவே, நல்லா இருங்கடே!!

    அன்புடன்
    ஆசிப் மீரான்

    பதிலளிநீக்கு
  17. :(

    இப்படி ஒரு அப்பா இல்லையேன்னு அழுக வச்சுட்டீயே தல!

    பதிலளிநீக்கு
  18. இளவஞ்சி, ஆதங்கத்தை ரொம்ப நெகிழ்ச்சியா சொல்லியிருக்கீங்க.

    "காலாண்டுப் பரிச்சைக்குள்ள" வந்து சேர வாழ்த்துக்கள் :-)

    வரி ஓவியங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  19. உங்க பொண்ணுக்கு வாழ்த்துக்கள்..
    :-)

    பதிலளிநீக்கு
  20. கலக்கிட்டீங்க வாத்தியாரே.. பாப்பாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  21. மறுபடி என் இளவஞ்சி .. ஏம்பா இப்படி ..?

    பேத்திக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. Enathu Unarvupoorvama na vazhththukkal... Ungalukkum ungal ponnuvukkum.

    Singa Singi

    பதிலளிநீக்கு
  23. உங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள். நன்றாக படித்து பெரிய ஆளா வரனும்.

    பதிலளிநீக்கு
  24. புல்லரிச்சுப் போச்சுதப்பு.. - ஒனக்கு
    புள்ளமேல உள்ள பாசம்.
    என்னக் காக்கும் கன்னிமாரு,
    என் தங்கையையும் காத்திடுவா..

    (சந்தடி சாக்கினிலே - நீயும்
    ஆகிப்புட்டே எனக்கு சித்தப்பூ)

    :))

    பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  25. கலக்கிட்டீங்க அப்பு!

    கீழே விழுகயில
    சிரிச்ச மொகத்தோட
    நீயாவே எழுந்துக்க
    அடுத்தவனைக் கைகாட்டி
    அழுது புலம்பறது
    ஷேம்ஷேம்னு தெரிஞ்சுக்க


    இந்த வரி சூப்பர்!

    பதிலளிநீக்கு
  26. காலங்காத்தால என்னைய கதற விட்டுட்டுடியே மாமு..

    பதிலளிநீக்கு
  27. நண்பர்களே!

    பாப்பா ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டா! இன்னிக்கு மட்டும் கொஞ்சமா அழுததாவும் நாளைக்கு இருந்து அழாம போறேன்னும் சொன்னாள்! :)

    உங்க வாழ்த்துக்கள் அத்தனையையும் மறக்காம சொல்லிடறேன்!

    உங்கள் உளப்பூர்வமான அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  28. வாத்தி, படிச்சு முடிக்கும் போது கண்ணுல தண்ணி ததும்புது. அப்பனுங்க எல்லாம் இப்படி எழுதிதான் பொழைக்கனுமா? ரொம்ப நாள் ஆச்சுய்யா இப்படி உணர்ச்சிவசப்பட்டு. இப்படி நான் இருக்க, உங்க பதிவு பக்கமே இனிமே வர மாட்டேன். போ, ஆசானே, ரொம்பசெண்டி யாகிருச்சு இன்னிக்கு

    பதிலளிநீக்கு
  29. அருமையான, நெகிழ்வான ஒரு பதிவு. குழந்தையின் எதிர் காலத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் பதிவில் இருக்கும் பாசமும், பரிவும், அறிவுரையும் கண்டு உங்கள் மகள் மகிழும் நாளில் உங்களுக்கும் நிறைவாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  30. // சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை!//

    ஆணி அடித்தது போல் பதிந்திருக்கிறது மனதில்! எங்க அண்ணாச்சிய (அபிஅப்பா) அழ வெச்சிட்டீங்களே? :(
    பாப்பா அழாம ஸ்கூல் போனாளா கேட்டிங்களா?

    பதிலளிநீக்கு
  31. வாத்தி,

    அட்டகாசங்க... :)

    பாப்பா'வுக்கு சித்தப்பா'வின் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. பாப்பா அழாம பள்ளிக்கூடம் போய்வந்தது ரொம்ப மகிழ்ச்சி.
    கொஞ்சம் அழாம இருக்க முடியுமா.
    அதுக்காக அப்பாவே இப்படிக் கண்ணீர் விட்டா என்ன ஆறது.
    குழந்தைக்கு வாழ்த்துகள்.நல்லாவளர்ந்து
    அவ குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப்போக நீங்க செல்லணும்.:-))

    பதிலளிநீக்கு
  33. இளவஞ்சி, அற்புதம். வலையத்தில் வந்தால் என்ன? தினத்தந்தியில் வந்தால் என்ன? நல்ல கவிதைகள், என்றுமே, உள்ளிருந்து வருபவை. அவசரமாய் கிறுக்கப்பட்டவை அல்ல. உங்கள் பெண்ணின் கல்யாண நாளில், இந்த கவிதயே ஒரு "பெறும்" சீராய் அமையப்போகிறது. (அட்வான்ஸா பயமுறுத்திட்டேனோ? கவலைப்படாதீங்க, நானும் பெண்ணப் பெத்தவந்தான் :-)

    பதிலளிநீக்கு
  34. தலைவாரிப் பூச்சூடி உன்னைப்
    பாடசாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை
    தலைவாரிப் பூச்சூடி உன்னை
    சிலை போல ஏனங்கு நின்றாய்
    நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
    விலை போட்டு வாங்கவா முடிவும்
    கல்வி தெளிவாகப் படித்தாலே புரியும்

    இந்தப் பாட்டுதான் எனக்கு ஒடனே நெனைவுக்கு வந்தது.

    குழந்தைக்கு எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  35. // ஒம்பது டு அஞ்சுக்குள்ள
    படிப்பையெல்லாம் முடிச்சுவிடு
    அதன் பெறகும் படிச்சன்னா
    அப்பாவுக்கு மூடவுட்டு//


    இந்த வரிகளுக்காகவே உங்களுக்கு ஒரு "ஓ" போடனும், குழந்தைகளுக்கு படிப்பு முக்கியம்,ஆனால் அது சமயம் இந்த பிஞ்சு பருவத்தில் அனுபவிக்க வேண்டிய பல விஷயங்கள் உண்டு.

    உங்க பொண்ணுக்கு எனது வாழ்த்துக்கள், ஏமாத்தாம பீச்சுக்கு கூட்டிடு போங்க.பஜ்ஜியும்,காமிக்ஸ்ம் வாங்கி கொடுங்க

    பதிலளிநீக்கு
  36. "\\சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை!//"

    "மனுசங்க அனைவரையும்
    மனசுக்குள் ஏத்திக்க"

    "அல்லாவும் ஜீசசும்
    எதிரியில்ல தெரிஞ்சுக்க

    கீழே விழுகயில
    சிரிச்ச மொகத்தோட
    நீயாவே எழுந்துக்க
    அடுத்தவனைக் கைகாட்டி
    அழுது புலம்பறது
    ஷேம்ஷேம்னு தெரிஞ்சுக்க"

    வலியின் வெளிப்பாடு கண்ணீரின் மெளனம் மட்டும் அல்ல.. கண்ணீரின் கவிதையாகவும் வெளிப்படும் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள். கவிதையை ரசிக்க முடியாமல், உணர்வின் வலி தடுக்கிறது.என்ன சொல்வது....காலம் தான் ஒரே பதில்.

    பதிலளிநீக்கு
  37. மக்களே,

    உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மீண்டும் நன்றி! :)

    பதிலளிநீக்கு
  38. சார்.. என்ன சொல்றதுனே தெரியல... காலங்காத்தாலயே மனசெல்லாம் அடைச்சுப் போச்சு... கண்ணுல தண்ணி பாத்தி கட்டி நிக்குது.. இப்ப இல்லாத எங்கப்பாரு ஞாபகம் வந்திடுச்சு.. பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க சார்...

    பதிலளிநீக்கு
  39. வசந்த்,

    உங்க அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  40. உங்கள் மகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்.

    படிச்சதுக்கப்புறம் கொஞ்ச நேரம் ஒண்ணுமே ஒடல -)

    பதிலளிநீக்கு
  41. 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு'

    முடியல இளவஞ்சி "சிம்ளி சூப்பர்ப்"

    பதிலளிநீக்கு
  42. அருமையா எழுதியிருக்கீங்க...
    இங்கே என் பொண்ணை ஸ்கூல்ல முத நாள் விட்டுட்டு வரும் போது அவ அழலை ஆனா எனக்கு கண்ணீர் தளும்பிருச்சி...அந்த நினைவுகளை அப்பிடியே படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்!! அருமை

    பதிலளிநீக்கு
  43. "எங்கம்மாவோட அப்பாரு
    எங்கூட வந்தாக
    உங்கம்மாவோட அப்பாரு
    உங்கூட வர்றாக"

    இளவஞ்சி,
    உங்க உரிமையை இப்ப இருந்தே உங்க மகளிடம் சொல்லி வளருங்க.

    காலம் போற வேகத்துல இந்தப் பதிவுக்கு கொசுவத்தி சுத்தி புளங்காகிதமடையும் நாள் வெகுதூரமில்லை

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  44. அருமை. மிக அருமையாக நிகழ்வுகளை மெலிதான நகைச்சுவையோடு சொல்லியிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  45. ஜெயஸ்ரீ, செல்வேந்திரன், அனானி, டுபுக்ஸ், கண்மணி,

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! :)

    பதிலளிநீக்கு
  46. மிக அருமையான பதிவு இளவஞ்சி.மனதை கனமாக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  47. //கீழே விழுகயில
    சிரிச்ச மொகத்தோட
    நீயாவே எழுந்துக்க
    அடுத்தவனைக் கைகாட்டி
    அழுது புலம்பறது
    ஷேம்ஷேம்னு தெரிஞ்சுக்க//
    கலக்கிட்டீங்க!!

    உங்க பொண்ணுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  48. \\என்னைக்கும் இதே கததான்!
    அப்பனுங்க கதையெல்லாம்
    வெறும் வாயோடு
    வெளையாட்டு!\\

    நாலு வரியில நச்சுன்னு சொல்லிட்டிங்க தல ;)

    பதிலளிநீக்கு
  49. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல......நான் என் மகராசி குட பேசுற மாதிரியே இருக்கு....சின்ன சின்ன விஷயங்களைக் கூட எழுத்தா வடிக்கும் பொது எம்புட்டு அழகு
    Luv it! Luv it!

    பதிலளிநீக்கு
  50. அன்பை அன்பா வெளிப்படுத்தியிருக்கீங்க.
    உங்க பொண்ணுக்கு என்னுடை அன்பையும் ஆசீர்வாதத்தையும் தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு