Tuesday, September 09, 2008

நீலாங்கரையும் பிள்ளையாரும் பின்னே என் புகைப்படப் பெட்டியும்

போனவாரம் நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த மீனவ நண்பர் “சும்மா இருந்தா வாங்க பிரதர்... போட்ல போலாம்!”னு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது! ட்ரிப்பு செம ட்ரில்லு :)

நண்பரும் அவரு சோட்டாளிகளுமாக 12 பேரு. போட்டுல ரெண்டாளு இஞ்சினை மாட்டறதுக்குள்ள பயணத்துக்குண்டான பொருட்களை கவருமெண்டின் பட்டதாரிக்கடையில் வாங்கிக்கொண்டோம். அதாங்க... 4 மிராண்டா, 10 ப்ளாஸ்டிக் க்ளாசு, ஒரு ஹான்ஸ், ரெண்டு பாக்கெட்டு சிசர்ஸ் அப்பறம் த்ரி க்ரொன்ஸ் க்வாட்டர் நாலு. ஒரு க்வாட்டரு 70 ரூவாயாம்! நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது?! :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்..? ) இருந்தாலும் எடுத்தவரைக்கும் இங்க வழக்கம்போல கடைவிரிக்கறேன் :)




படை கெளப்பிடிச்சு.... நல்லா சேர்றாங்கைய்யா செட்டு!
The_Gang

நகரமும் ( மீண்டும் கரைசேர்வதே விதியெனினும் ) அதில் ஒட்டாமல் விலகித் தத்தளிக்கும் மனமும்...
Boat_alone

சேச்சே.... எப்படித்தான் இந்தக்கெரகத்த ஊத்திக்கறாய்ங்களோ?!
Mixing

ரெண்டு காலையும் விரிச்சு மல்லாக்கப்படுத்து வானத்தப் பார்க்கறதுல எவ்வளவு சொகம்!
Sea_clouds

மக்கா சரக்கும் நான் ஃபாண்டாவும்னு ஒரு மணி நேரம் நல்லாத்தான் போச்சு. அப்பறம் போட்டமுய்யா கடலுக்கு சோறு... எக்கி எக்கி வாந்திதான்... அலையாட்டத்துல பெருங்கொடலு தொண்டைவரைக்கும் வந்து இனிமே ஏதாவது திம்பயா?”ன்னு கேட்டுட்டு போயிருச்சுங்கப்பு! ரெண்டுதபா வந்தா சரியாகிருமாம்! அது சரி!

குதியாட்டம் ஆரம்பம்! :) நானுங்கூட ஜெட்டியோட நல்லா டைவெல்லாம் அடிச்சனுங்க.. போட்டா புடிக்கத்தான் ஆளில்ல... :( உண்மையில் அழ்மன விருப்பம் என்னன்னா அம்மணக்கட்டையா நடுக்கடல்ல ஊறனுங்கறதுதான். அதுக்குள்ள மக்கா இங்கன சுறா வந்தாலும் வரும்னு பிட்டை போட்டுட்டானுவ... நானும் சுறாவின் மனநலம் கருதி என் ஆசையை மீண்டும் தள்ளிப் போட்டுட்டேன்! :(
Cool_Dive


அமோகமான நாலு மணிநேரத்துக்கப்பறம் அடிச்சுப்போட்டாப்புல கரைவந்து விழுந்தோம். மீன் புடிச்சு ரிடர்னான ஒரு படகு...
Boat_parking

என்னத்த புடிச்சுக்கினு வந்தாய்ங்கன்னா...
Earnings

சங்கரா.... சங்கரா மீன் கொழம்பு வைப்பதெப்படின்னு பதிவு போடறவுகளுக்கு என்னாண்ட இருந்து ஒரு கிலோ மீனு அன்பளிப்பேய்! :)
Fish_Tale

நாம ஏற்கனவே மாநிறத்துக்கும் மேல் கலர். இருந்தாலும் லைட்டா ஸ்கின் டேனிங் செஞ்சுக்கலாம்னு கரைலயே நண்டு, நத்தைகளோடு ரெண்டுமணி நேரம் உருளல். கண்டதையும் பேசிக்கினு அப்பப்ப வந்துபோறா அலைகளால் புரண்டு படுத்துகினு லைப்பு நல்லாத்தான் இருந்தது :) அப்பறமா சாயந்தரம் கரைல விநாய்கரு கரைக்கறாங்கன்னு கேள்விப்பட்டு அங்கே ஆஜர்...

கொட்டிவாக்கம் கடற்கரையே தானுங்க! :)

Kottivakkam


காவிகளோடு ஐக்கியமான காமன்மேன் பிள்ளையாரு ஊர்வலம்...
Vinayak_rally

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்படி வந்த கணபதிகள்...
Vinayak_Coming

இப்படி கரை சேர்ந்தாய்ங்க... கட்டுமரத்தில் நடுக்கடலில் விட ஒரு விநாயகருக்கு 200 ரூபாய்.
Vinayak_going

நேத்துவரைக்கும் அருள் பாலிச்சவரை அள்ளி தூக்கிக்கினு வ்ரும் அருள் பெற்றவர்கள்...
bye_bye_Vinayak

இந்த வருசமும் கலக்கிப்புட்டம்ல....
Sendoff_Warriors

கணபதிக்கிட்ட களவாடுனது :)
The_remainings

ப்ளீஸ்மா.. எம்புள்ளையாரை மட்டுமாச்சும் ஒடைக்காம பத்தரமா வைச்சுக்றேன்!!
Saved_my_Vinayak

மாப்ளை விநாயாரு...
Rally_Melam

நண்பர்களும் நம்பர்களும்...
The_Numbers

கடைசிப்பிள்ளையாருக்கு பின்னான அலை ஓய்ந்த பீச் மற்றும் ஓய்வெடுக்கும் பளுதூக்கி...
Night_crane

காலைல இருந்து ஆட்டம் போட்டதுல நெம்ம டயர்டு! வாங்க ஆளுக்கொரு கார்னெட்டோ வாங்கித்தரேன் :)
ice_shop

29 comments:

ஆயில்யன் said...

//நகரமும் ( மீண்டும் கரைசேர்வதே விதியெனினும் ) அதில் ஒட்டாமல் விலகித் தத்தளிக்கும் மனமும்...
//

கலக்கல் வரிகள் மட்டுமல்ல...!


ஃபேண்டாவில் ஆரம்பித்து
மீன்கள் செத்துகிடக்கும் இடம் வந்து,பிள்ளையாரினை பிரிய மனமின்றி நிற்கும் சிறுமி வரையிலும்

ரியலி சூப்பர்:)))

nathas said...

அத்தினி படமும் டாப்பு டக்கரா கீதுபா !!!

வெண்பூ said...

இளவஞ்சி.. முதல்முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன். அற்புதமான படங்கள். அதிலும் பிளாக் & வொய்ட் டச் கொடுக்கப்பட்ட படங்கள் சூப்பர். பாராட்டுக்கள்...

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

தல... வழக்கம் போல.. படங்களுக்கு.. ஷொட்டு..! :))

ramachandranusha(உஷா) said...

குட்டி பெண் வெகு அழகு

-/பெயரிலி. said...

நன்றாக விழுந்திருக்கின்றன; குறிப்பாக, மூன்றாவது படத்தினை நீங்கள் அமைத்திருக்கும் விதம் அருமை

முரளிகண்ணன் said...

படங்கள் அசத்தல். அந்த சின்னப்பெண் டாப். கதாயுதம் வைத்திருந்தவர் ரொம்பவே நேச்சுரல்

ஏழையின் சிரிப்பில் said...

//வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது?//

எங்களுக்காக கவலைப்பட நீங்களாச்சும் இருக்கீங்களே!

Nakkiran said...

Photos are Really ROCKING...

G.Ragavan said...

ஹா ஹா ஹா

கடலுக்குள்ள போயி கக்குறதுக்கு ஒரு படகுப் பயணம்... ஹா ஹா.... ஐய்யோ ஐய்யோ! ஒரே தம்மாசு...

கடல்ல நீஞ்ச வருமா? அலையெல்லாம் இருக்கும்னு சொல்றாங்களே! நமக்கு இந்த மத்தியதரைக்கடல்...பசிபிக் பெருங்கடல்...இதுலதான் நீந்திப் பழக்கம். நேரா விவேகானந்தர் குறுக்குக் கடற்கரைல எறங்குனா...40 நிமிசந்தான்...மத்தியதரைக்கடலே மல்லாக்கப் பொறண்டுறும்ல..... :D

ஆனா ஒன்னுய்யா படமெல்லாம் கலக்கலா எடுக்குறீரு. அதெல்லாம் கைராசி.

CVR said...

Beauty!
Nice selective coloring..

யாத்ரீகன் said...

தல.. அட்டகாசம்.. போட்டோ பிடிக்குறதுல கவனம் கொஞ்சமா இருந்தப்பையே இப்படீனா ஒரு தப போட்டோ பிடிக்க மட்டுமே போங்க :-த .. ஊரு பக்கம் வரும்போது கட்டாயம் கூட்டீட்டு போவனும் சொல்லிபுட்டேன் :-த

Natty said...

இரசித்தேன்... கலக்கல் புகைப்படங்கள்

மோகன்தாஸ் said...

தல,

அருமையான படங்கள்.

உங்கக்கிட்டை எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த வண்ணங்கள் நிரம்பி வழிகிற புகைப்படங்கள் தான். கலர் டேஸ்ட்/சென்ஸ் உங்கக்கிட்டை ரொம்ப நல்லாயிருக்கு.

எனக்கும் ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம். :(

Jeeves said...

படங்கள் அசத்தலாக இருக்கிறது என்ற விஷயத்தை சொல்லும் நேரம் அது உருவாக்கப் பட்ட படங்கள் என்று மனதில் உறைக்கின்ற காரணத்தை உங்களிடம் சொல்லி அதை ரசிக்கக் கூடாதென்ற மனநிலையில் இதை எழுதும்போதே உள்ளிருந்து கூக்குரலிட்டு கத்தும் மனசாட்சிக்கு எதைச்சொல்லுவதென்று யோசித்து முடிக்கையில் சட்டென்று கண்ணில் நிறைகிறது குழந்தையின் முகமென்றாலும் தலைவரின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட படங்களை தவிர்க்கும் படிச் சொல்லிக் கொல்கிறேன்.

பி:கு: சூப்பரப்பேய்

ஜோ / Joe said...

படங்கள் விவரணை சூப்பர்!

புதுசா கடலுக்கு போறவங்க சும்மா போனாலே வுவ்வா தான் ..இதுல பாட்டில் வேறயா..ஹி..ஹி.

Anonymous said...

Excellent photos.....
congrats

கொங்கு ராசா / Raasa said...

ஹ்ம்..!! (பெருமூச்சு)

தாமிரா said...

ரெண்டு பதிவாக போட்டிருக்க வேண்டிய விஷயம் (உங்கள் ட்ரிப் தனி, பிள்ளையார் தனி) இருப்பினும் ரசிக்க முடிந்தது. புகைப்படங்கள் அருமை. குட்டிப்பெண்ணும் வசனமும் பிரமாதம்.

இளவஞ்சி said...

ஆயில்யன்,

நன்றி! :)

// மீன்கள் செத்துகிடக்கும் இடம் வந்து // அடடா! இத்தப்படிச்சா மீனு திங்கறவங்க மனசு என்ன பாடுபடும்?! :)

உஷாக்கா,

சுகந்தன்னே?! :)

ஏழையின் சிரிப்பில்,

உங்களைப்பத்தி கவலைப்பட நான் மட்டும் இல்லைங்க.. ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிங்களும் இருக்காய்ங்க... “ஏழை எளிய மக்கள்” மட்டும் இல்லைன்னா அப்பறம் யார முன்னேத்தறம்னு சொல்லி ஓட்டு வாங்கறது?! :)

பெயரிலி,

ஊக்கங்களுக்கு நன்றி. ஜிம்ப்ல கொஞ்சம் கத்துக்கிட்டு வெள்ளாடுனதுதான். :)

இளவஞ்சி said...

நாதஸ்,

டாங்ஸ்...

வெண்பூ,

நல்வரவாகுக! ஆனா அடிக்கடி வந்து ஒடம்ப கெடுத்துக்காதிங்க... :)

பாலாபாய், முரளி, நக்கீரன்,

பாராட்டுகளுக்கு நன்றி! :)

ஜீரா,

அதையேன் கேக்குறீங்க..? ஒரு கட்டத்துல வயித்துல ஒன்னுமே இல்லை... இருந்தாலும் உவ்வே உவ்வேன்னு நிக்காம ஒரே தமாசு! :) ஒரு டைவ் அடிச்சதும் எல்லாம் சரியாப்போச்சு..

நடுக்கடல்ல ஆலையெல்லாம் இல்லை ஓய்... படகு ச்சும்மா மேலையும் கிழயும் ஆடிக்கினே இருக்கு. நீச்சல் தெரிஞ்சதுன்னு எங்க வேணா அடிக்கவேண்டியதுதானே?! :)

// மத்தியதரைக்கடலே மல்லாக்கப் பொறண்டுறும்ல..... :D //

செய்யக்கூடிய ஆள்தாம்வே நீரு :)

இளவஞ்சி said...

யாத்ரீகன்,

வாங்க... கலக்கிபுடலாம் :)

சீவிஆர், நட்டி, அனானி,

டாங்ஸ் :)

தாஸு,

நன்றின்னேன். இது ப்ளானெல்லாம் செய்யல... ச்சும்மா அப்படியே போனது... அதான்.. :)

வாங்க ஜீவ்ஸ்,

// தலைவரின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட படங்களை தவிர்க்கும் படிச் சொல்லிக் கொல்கிறேன். // உம்ம தலைவரு கவுஜர் லக்குமணாருக்கு டச் பண்ணாத ரா ஃபைலை textpad ல போட்டு அனுப்பியிருக்கேன். படிக்கச்சொல்லுங்க :)

ஜோ,

நன்றி..

// புதுசா கடலுக்கு போறவங்க சும்மா போனாலே வுவ்வா தான் ..இதுல பாட்டில் வேறயா. //

நாங்கூட ஆரம்பத்துல மீனவநண்பர் சொன்னப்ப.. ”எத்தன கண்றாவி சரக்கெல்லாம் சாப்டுட்டு கமுக்கமா இருந்திருகோம்.. இது ச்சும்மா ஜிஜிபி”ன்னு நினைச்சேன்.. அதுக்கான பலனையும் அனுபவிச்சேன்.. :)

ராசா,

இதுக்குத்தான் உம்மை இத்துப்போன பெங்களூர்ல இருந்துக்கினு அழிச்சாட்டியம் செய்யாம அடிக்கடி சென்னை வாய்யா வாய்யான்னு அடிச்சுக்கறது.. :)

தாமிரா,

வருக! :)

// ரெண்டு பதிவாக போட்டிருக்க வேண்டிய விஷயம் // எல்லாம் ஒரே நாள்ல நடந்ததால அப்படியே...

இன்னொன்னு நம்ப மக்கா கிட்ட மேட்டரை சொல்ல ஆரம்பிச்சா நிறுத்த முடியறதில்ல ! :)

SurveySan said...

'Friends' padam, ATTAGAAAAAAAAAAAAASAM!

thala, decemberla indha maadhiri oru trip erpaadu panningeenna punniyamaa povum. naanum vaaren.

கோபிநாத் said...

ஆசானே..;((

அவ்வ்வ்வ்...அமீரகத்துல Flickr Blocked...தயவு செய்து வேற வழி செய்து எங்களுக்கும் படங்களை பார்க்க ஏற்பாடு பண்ணுங்க.

இளவஞ்சி said...

சர்வேசன்,

ஊக்கங்களுக்கு நன்றி! :)

கோபியாரே,

// அவ்வ்வ்வ்...அமீரகத்துல Flickr Blocked... // அடடா! இங்கன இருந்துக்கிட்டு பதிவர்கள் ஆட்டம் மட்டும் எப்படியா அப்படி பலமா போடறீங்க?! :)

வழக்கமாச்சியும் பிக்காசா ஏத்தி பதிவை அப்டேட் செஞ்சிருக்கேன். தெரியுதான்னு பார்த்துட்டு சொல்லுங்கப்பு...

கோபிநாத் said...

என்னத்த சொல்ல அம்புட்டு படமும் அட்டகாசம் ஆசானே ;))

ரொம்ப நன்றி...ம்ம்ம்..நான் எல்லாம் எந்த காலத்துல இப்படி எல்லாம் எடுக்க போறோனோ!! ;)

Sakthi said...

மிக அழகான புகைப்படங்கள். என்ன கேமரா உபயோகப்படுத்துகிறீர்கள்?

frissko said...

Modhal dhadava varraen...really stunning pictures all around (not just this post)...

Anonymous said...

As someone said already, your sense of color are amazing. When you stay in abroad, you tend to realize the colorfulnes of India, especially TN. I should learn the asthetics from you someday. Tops are that girl and the bunch of boys revving at you :)

Blog Widget by LinkWithin