முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Science of Stock Market Investment - செல்லமுத்து குப்புசாமி


நீங்கள் அந்தக்கால பதிவராக இருந்திருந்தால் செல்லமுத்து குப்புசாமியை ஷேர்மார்க்கெட் பற்றி புத்தகம் எழுதும் எழுத்தாளராக முதன்முதலில் அறிந்திருக்கமாட்டீர்கள். ( வரலாற்றை தேடினால் அவரின் கும்மாச்சுகதை ஒன்று மாட்டலாம்! ) இப்பொழுதும் ஒன்றும் தகவல்குறையில்லை. இரவல் காதலியின் எழுத்தாளர்தான் இழக்காதே எழுதியவரும்கூட. இதற்கு நடுவில் பிரபாகரன் மற்றும் எல்டிடிஈ பற்றியும் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்! அவரது எழுத்தின் வீச்சு அப்படி.


ஆனால் பாருங்கள் எனக்கு அவரை இன்னமும் வலைப்பதிவர் குப்ஸ்சாகத்தான் நெருக்கமாய் அறிவேன். அதை என் பெருமைன்னும் அவர் கெரகம்னும் வைத்துக்கொண்டாலும் எனக்கும் அவருக்கும் பாதகமில்லை. ஒன்று கவனித்திருக்கின்றீர்களா? எழுத்தாளர்கள் நல்ல வாசகர்களாக இருக்கிறார்கள். ஆனால் வலைப்பதிவர்கள் நல்ல வாசகர்களை பொறுக்கியெடுத்துவிடலாம். தமிழில் நாலுவரி டைப்படித்தால் அதைப்படிக்க நாலேபேர் இருப்பதை அறிகையில் புத்தி பத்திபத்தியாய் எழுதப்போய்விடுகிறது. கொஞ்சநாளில் அடேடே.. இப்பவர்ற புத்தகங்களுக்கு நம் நூறுபதிவுகளை எடுத்து புத்தகமாய்ப்போட்டால் எழுத்தாளர்பேட்ஜ் கிடைக்குமோன்னு அதையும் கைக்காசு 10000 போட்டு செய்துபார்க்க தூண்டுகிறது. ஆனால் பதிவர் குப்ஸ் எழுத்தாளர் செல்லமுத்துவாக அடுத்தடுத்து நல்ல புத்தகங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் எழுதப்பட்ட பதிவுகளை புத்தகங்களாக அல்ல!




ஒருகாலத்தில் கையில் 6 டிஜிட்டில் கொஞ்சம் காசுசேர்த்துவைத்திருந்தேன். அதாவது என் சம்பளத்தில் இருந்து நானாய் சேர்த்தது. மாமனார் கொடுத்ததாக இருந்தால் உடம்பில் ஒரு பயமும் மனைவியின் கழுத்தை இறுக்கும் கடிவாளமும் இருந்திருக்கும். சொந்த உழைப்பில் வந்ததல்லவா? கூடவே அந்த பீரியடில் சூரியவம்சம் படமும் வந்ததல்லவா? இரண்டையும் ஒருலைனில் இணைக்க ஒரே பாட்டில் ஊரிலிருக்கும் எல்லா பெயர்ப்பலகையும் என்பெயராக கனவில் வந்து தொலைத்தது. ம், இதற்கு தேவயானியே கனவில் வந்திருக்கலாம். விதி வலியது. அள்ள அள்ளப்பணம் அப்படின்னு பாகம் 1 மற்றும் 2 வாங்கினேன். படித்தேன். ஒரு கதைபுத்தகம்போல விறுவிறுப்பாக படித்துமுடிக்கையுல் ஹர்ஷத்மேத்தாவின் சித்தப்புபோலவே ஒரு மிதப்பு. என்ன இருந்தாலும் வலைப்பதிவரல்லவா? மனசுக்குள் ஒரு எச்சரிக்கை. பணம் பண்ணறது என்ன கதையெழுதறதுமாதிரி இம்புட்டு ஈசியா? இருக்காதே? அப்ப சீரியசான புக்குபடிச்சு சீரியசா பணம் பண்ணலாம்னு இழக்காதே வாங்கி படிச்சேன். முன்னதைவிட இது நல்ல விசயஞானமும் சிறந்த எடுத்துக்காட்டுகளும்னு நல்லாத்தான் இருந்தது.


ஆனாபாருங்க படிச்சது நானல்லவா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! ஒரு டீமேட் அக்கவுண்டு ஓபன்செய்து மொத்த காசையும் இறக்கி ஆரம்பத்தில் ச்சும்மா ஒர்ரூவா ரெண்டுரூவா ஏறுனதுக்கெல்லாம் நைட்டுல ஒவ்வொரு நேம்போர்டா மனசுல கற்பனைசெஞ்சுக்கிட்டு சிறப்பாத்தான் போச்சுது. தொழிலை தொழிலாக கருத்தோடு செய்பவனுக்கே அது தொழில். மற்றவனுக்கெல்லாம் அது சூதுதான். ஒன்னார்ரூவா ஏறுனா விக்கறதும் நாலனா இறங்குனா வாங்கறதுன்னும் ஆறுமாசம் ஒரே அழிச்சாட்டியம்! மனசுல தெகிரியம் எகிற நம்மைவிட இழக்காதே எழுத்தாளரு என்னபெரிய பிஸ்துன்னு தெனாவெட்டுல துறை ரீதியாக அவரை சந்தித்து அளாவளாமென்று எங்கள் சந்திப்பை பழைய மகாபலிபுரம் சாலையில் ( இப்பத்தான் அது ஐடி கலாச்சாரத்தின் சீர்கேடுகள் நிறைந்த ராஜிவ்காந்தி சாலையாமே!? ) அலுவலகத்தை ஒட்டி வைத்துக்கொண்டோம். நான் லொடலொடன்னு எப்படி இந்திய ஷேர்களை வலதுகைல வாங்கி இடதுகைல தூக்கிவீசி அதை மூக்குல நிறுத்தி பேலன்ஸ் செய்து விளையாடறேன்னு சொல்லச்சொல்ல அவர் என்னைப்பார்த்த பார்வை எவ்வளவு கேவலமென்பதை எந்த இலக்கியமும் சொல்லில் வடித்துவிடமுடியாது! என்ன இருந்தாலும் நண்பனல்லவா? ஆகவே ஒரு முக்காமணி நேரத்துக்கு அந்த ரோட்டிலேயே நிற்கவைத்து வகுப்பெடுத்தார். சூட்சுமங்களை லட்டுலட்டாக வீசினார். லபக்கிக்கொள்ள எனக்கு திராணியில்லையெனில் அவரென்ன செய்யமுடியும்? இந்த சந்திப்பு பாலகுமாரன் சுஜாதாவை ஒரு இரவில் சந்தித்து சிறுகதை எழுதுவதெப்படின்னு கற்றறிந்த நிகழ்வுக்கு சற்றொப்ப நடந்தது. ஆனால் இதைப்பற்றி சுஜாதா ஒருமுறை சொன்ன ”எல்லாருமா சூட்சுமத்தை பிடித்துக்கொண்டார்கள்? அது பாலகுமாரனின் திறமை” என்பதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.


குப்ஸ் கதறக்கதற சொல்லித்தந்ததில் ஒன்றுகூட என் மரமண்டைக்கு ஏறவில்லை. ஒரே வருடத்தில் என் ஃபோர்ட்போலியோ முழுக்க ஆங்காங்கே இருந்த பச்சையெல்லாம் காணமல்போக ச்சும்மா செக்கச்செவனேன்னு ஆகியது. இழக்காதே சட்டியில் நிறையத்தான் இருந்தது, ஆனால் என் அகப்பை ஓட்டை என்பதால்தான் நான் சட்டியில் இருந்து எடுக்கமுடியவில்லை என்பதை உணர இரண்டு வருடங்கள். அதற்கப்பறமும் நான் அடங்கவில்லை! எவனாவது கையில அஞ்சுரூவா வைச்சுக்கிட்டு ஷேர் அப்படின்னு ஒரு வார்த்தைய உச்சரிச்சுட்டான்னா அவனை அப்படியே அமுக்கிக்கினுபோய் என் டீமேட் அக்கவுண்டைக்காட்டி “ரெத்த பூமிடா இது.. பாரு எப்படி செவப்பா இருக்கு!”ன்னு கிலிகெளப்பிக்கொண்டிருந்தேன். மக்களுக்கு என் திறமை தெரியவர என்னைப்பார்த்தாலே தெரிச்சு ஓட என் ஷேர் சுதி குறைய ஆரம்பிக்க கனவில் எழுதிவைத்த நேம்போர்டெல்லாம் ஒன்னொன்றாக கழற்றிவைக்கவும் தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்யவும் சரியாக இருந்ததால் தொழிலை ஏறக்கட்டிவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக டீமேட்டில் லாகின்செய்வதையே நிறுத்தி வருசத்துக்கொருக்கா எட்டிப்பார்த்து என் கும்பேனி எம்டிக்களெல்லாம் அதே செவப்பை மெயிண்டெய்ன் செய்யறாங்கலான்னு கன்பார்ம் செஞ்சுட்டா ஒரு திருப்திதேன்!


இத்தனை வருட பங்குவணிகத்தில் செல்லமுத்து அன்றைக்கு மண்டையில் குட்டி சொல்லித்தந்த ஒரே ஒரு விடயம் நச்சுன்னு புரிந்தது. ஸ்பெகுலேசனில் பங்குவணிகம் செய்யாதே! கெடக்குது கழுதை விடுங்க, நான் இன்னும் குப்ஸின் நட்பை இழக்கவில்லை!


ஏண்டா வெளங்காவெட்டி.. இம்புட்டு தெறமைய வைச்சுக்கிட்டு நீயெல்லாம் எப்படி இந்த புத்தகத்தை பரிந்துரை செய்யலாம்னு நீங்க கேக்கலாம். குடிகாரவகளுக்குத்தான் குடியை நிறுத்துவதின் உடனடி நன்மைகள் காலையில் மனதில் உதிக்கும்! அதுபோலன்னு வைச்சுக்கங்க. நீங்களாவது செல்லமுத்துவின் இந்த புத்தகங்களை படித்து பங்குவணிகத்தில் உய்து அவராண்ட நல்லபேரு வாங்குங்க! சொன்னவுடன் கப்புன்னு புடிச்சுக்கும் கற்பூரங்களை அவருக்கு ரொம்பபுடிக்கும்!


நான் எனக்குத்தோதான இரவல்காதலி PDFல வந்ததும் கப்புனு புடிச்சு படிச்சுக்கறேன்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு