அஞ்சு பைசாவ அஞ்சு தடவ அய்யாயிரம் பேரு திருடுனா தப்பா அப்படின்னு கேட்டுட்டு அயோத்தியாகுப்பம் வீரமணி சைசுக்கு ஒருத்தன மசாலா பூசி வறுத்தெடுத்த காட்சிய பார்த்தவுடனே எனக்கெல்லாம் அடிவயிறு பகீருன்னு ஆயிடிச்சுங்க.. நானெல்லாம் பல தப்புகளை பல தடவை பல வருசமா செய்யற ஆளு( நம்ப சைசு வேற தனுசை ஒத்ததுதான்...! ) அன்னியன் கையில மாட்டுனா நம்ப கதையெல்லாம் என்ன ஆகும்னு நெனச்சா ஒடம்பெல்லாம் வெடவெடங்குது... என்னதுக்கு அவருக்கு கஷ்டம் அப்படின்னு நம்ப தப்புகளுக்கு(தவறல்ல...) நாமே தண்டனைகளை எழுதிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்! (கருட புராணம் வேற பழசாகி கிழிஞ்சி கெடக்குது..) இந்த மாதிரி ஒரு படத்தை பார்த்துட்டு நானெல்லாம் ஒடனே திருந்தலனா அப்பறம் என்ன மசுருக்கு( பார்த்தீங்களா.. இந்த வார்த்தயை இங்க இப்படி உபயோகப்படுத்துனதுக்கே எனக்கு திராவககொப்புளி தண்டனை குடுக்கனும்.. விளக்கமா பின்னால...) சங்கரு மாதிரி ஒரு சமூகச்சிற்பி இப்படி ஒரு படம் எடுக்கனும்? ஆத்திரத்த அடக்குனாலும் மூத்திரத்த அடக்க முடியாதுன்னு சொல்லுவாங்க.. ஆனா நமக்கு ஆத்திரத்தயும் அடக்க முடியாது.. மூத்திரத்தையும் அடக்க முடியாதுங்க....
www.ilavanji.com