முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புகைப்படம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கென்ன?

இறக்கிப்போட்ட ஜீன்ஸின் மேல் ஜாக்கி பட்டை உன்னுது இறுக்கிப்போட்ட அர்ணாகொடியுள் எலாஸ்டிக்போன சுடர்மணி என்னது எல்லோபோர்டு பல்லவனுக்கு மூணுரூவா மொய்யி ஏசிபோட்ட வோல்வுக்குள்ள ”புல்ஸிட் ட்ராபிக்”குங்கற நீய்யி வெறிக்க வெறிக்கப் பார்த்தே பூத்த கண்கள் என்னுது ரேபனை கழட்டுன ஒடனே சுருக்கும் கண்கள் உன்னுது ”லதாவை நான் காதலிக்கறேன்”னு இன்னம் செவுத்துலதான் எழுதறேன் “ரெடி ஃபார் அ டேட்?”னு நீ ஃபேஸ்புக்குல எழுதற உனக்கும் எனக்கும் மாசக்கடைசியில் ரெண்டு சைபரே வித்தியாசம் டேபிள் தொடச்சுப்போகையில் நீ உதிர்க்கும் ”தாங்ஸ்”சில் நிக்குது உன் மனிதாபிமானம் கூடவே உன்தரத்தில் என் இடமும் ஆனாபாரு... நீயே உன் கம்ப்பூட்டரை துண்டுதுண்டாய் தின்னும்வரை உன் வெளிக்கியை ட்ராக்ட்ராப்பை ட்ராஸ்பின்னில் போடும்வரை நான் நானாகவே வேண்டுமுனக்கு இன்னனும் தெளிவில்லை சமூகத்துல தனிச்சுப்போவது நீயா நானான்னு நிச்சயம் தெரியுமெனக்கு பதில் தெரியும் நாளில் வெளிப்படுமென் வன்மம் உனதுபோல பூசிமெழுகி இருக்காது! எனக்கென்ன... ஏக்கம் எனக்கொன்னும் புதுசில்லை ***** கதிர் இங்கே ! - வேறென்ன? பழமைபேச...

ஸ்டேட் ஃபர்ஸ்ட்லெல்லாம் இங்கனதான் படிக்கறாங்க!

ஏழாப்பு C பிரிவு கல்வியால் மட்டுமே.. இருளில் இருந்து வெளிச்சத்துக்கு... என்னக் கொடுமை மணி இது!? நான் வழக்கம் போல 12 மார்க்குதான்... நீங்க எவ்வளவு? கூட்டாளி/சேக்காளி/க்ளாஸ்மேட்டு/பிரண்டு.... அது ஒரு கனாக்காலம்! ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!

ஓய்வு...

Halted , originally uploaded by i L a V A n J i . ச்சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட்! Flickr to Blogger :)

மதுரை மீனாட்சி கோவில் - புகைப்படங்கள்

ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு ஆசைங்க! அதாவது இந்த வெள்ளைக்காரவுக எல்லாம் நம்ப ஊருக்கு டூரிஸ்ட்டுன்னு வந்துக்கிட்டு கையில ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க. ஆனா எங்கூட்டமா நான் கேமரா பையை தூக்கிக்கிட்டு கெளம்புனாலே சந்தோசமாகிருதாங்க. அதுபோக “ம்ம்ம்.. இந்ததடவை எனக்கு சனிபெயர்ச்சி ரெண்டுநாளைக்கா?”ன்னு கேட்டு கன்பார்ம்டு அலும்பு வேற! இதுல எங்கபோயி அவிங்களையும் கூட கூட்டிக்கிட்டு பரதேசிபோல சுத்தறது?! அப்படியே அவிங்க வந்துட்டாலும் பெத்துக ரெண்டும் ”யய்பா... யப்பா..” கொரங்குக்குட்டிக போல தொத்திக்கிட்டா அப்பறம் எங்க? எங்கானா நிழல் பார்த்து கூடாரம் போட்டு செட்டிலாக வேண்டியதுதான்! :) அதனால இந்தமுறை வெவரமா குலசைல தசரா முடிஞ்சதும் நெல்லைல எறங்கி அரைக்கிலோ இருட்டுக்கடை அல்வா வாங்கி தின்னுக்கிட்டே மதுரைக்கு வந்து தனியா எறங்கிட்டேன்! என்னமாதிரி வயசுப்பையன் மதுரலை தனியா சுத்தறது டேஞ்சருன்னாலும் அழகிரி நாட்டுல ஒன்னும் நடந்துறாதுங்கற நம்பிக்கைல துணிஞ்சு என்னோட வலதுகாலை வைச்சாச்சு. அப்...

குலசை தசரா 2009 - புகைப்படங்கள்

ம க்கா நீங்க போன வருசம் நான் போயிட்டு வந்து பீத்திக்கின குலசை ட்ரிப்பை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். அருமைத்தம்பி ஆதி க்கும் அவிங்க வீட்டாருக்கும் அபார நியாபக மறதி! போன வருசம் நாங்க ஒரு செட்டாப்போயி கொடுத்த ஹிம்சைகளை அப்படியே அழிலப்பரு போட்டு அழிச்சாப்படி மறந்துட்டாய்ங்க. அதோட இல்லாம இந்த வருசமும் 10 பேர ஜமாவோட நாலு நாளைக்கு டிக்கெட்டோட அழைப்பு வைச்சாப்படி ஆதி. விடுவனா?! போட்டோ புடிக்கறமோ இல்லையோ இளவட்டங்களோட ஒரு செட்டா வேளாவேலைக்கு கொட்டிக்கிட்டு கெணத்தடில ஆனந்தக்குளியல் போட்டுக்கிட்டு போரடிச்சா அங்கங்க குத்தவைச்சு பொங்கல் போட்டாப்படி நாலுநாள் எந்த இம்சைகளும் இல்லாம (பார்றா... ஒரு இம்சையே இம்சை என்கிறதே! ஆச்சர்யக்குறி! ) கேமராவும் கையுமா வாழ வைச்சதுக்கே அவருக்கு கொட்டிக் குடுக்கனும். இருந்தாலும் தமிழர் வழக்கப்படி ஒரு தாங்க்ஸ் மட்டும் மனசார சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாய்கினோம் :) இந்தமுறையும் செல்வபிரகாஷ் , ஜெய்சிங் , நாதன் போன்ற பெரிய புகைப்படக்காரர்களும் வந்திருந்தாங்க. அவங்க கூட ஜமா போட்டு சுத்துன பிஸ்துக யாருன்னா மாப்ள சீவியாரு , வினோத்து , கவுஜர் லக்ஸ் மற்றும் கோகுல் . இவ...

ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை

தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை. ம.செ, மதன் மற்றும் மாருதி... 1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!” ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா? துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்... பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக... அழிவினைப் பற்றிய உருவாக்கம்... நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும் “வெளுப்பும்”! அப்பா அங்கிட்டு வரையறாரு.. என்னால முடிஞ்சது இங்கிட்டு... தூரிகைகளின் துயரப்பதிவுகள்... சில உங்கள் பார்வைக்கு...

கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...

போனவாரம் சில புகைப்பட ஆர்வலர்களுடன் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே, திபெத்தியர்களின் வாழ்விடமான குஷால்நகரில் உள்ள கோல்டன் டெம்ப்பிள் (இரண்டாம் முறை) சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. நாதன் , PeeVee , ஆதி போன்ற போட்டோகிராபி பிஸ்த்துகளுடன் நம்ப பின்னவீனக் கவிஜர் லக்குவனர் , எலக்கியவாதி மோகன் தாஸு , லக்குவனாரின் நண்பர் வினோத் மற்றும் சில நண்பர்களுடன் பயணம். வெள்ளி இரவு சென்ட்ரலில் ஆரம்பித்த அலப்பரை மீண்டும் திங்கள் அன்று சென்னை வந்து சேரும்வரை ஓயவில்லை :) நீண்ட நாட்கள் கழித்து ஒரு மனநிறைவான பயணம். என்ன... கற்றறிந்த சான்றோர்கள் கூட இருந்ததால் பால்ய நண்பர்களுடனான பயணங்களில் பேச்சுவாக்கில் கெட்டவார்த்தைகளை அள்ளியிறைப்பதில் கிடைக்கும் சந்தோசம் மட்டுமே அன்றைக்கு இல்லை.. :) ) மாண்டியா வரை மைசூர் எக்ஸ்பிரசில் பயணம். பிறகு அங்கிருந்து இரண்டு நாளைக்கு ஒரு டாடா சூமோ பேசிக்கொண்டு அங்கிருந்து தென்னூரு ஏரி.. அங்கிருந்து மேல்கோட்டா... அப்படியே மைசூர் வழியாக குஷால்நகரில் ராத்தங்கல். காலையில் தங்கக்கோவிலில் நடந்த விழாவில் சிறப்பழைப்பாளார்களாக பங்கேற்பு(ஹிஹி... ) மதியமாக கிளம்பி மைசூரை ச்சும்மா பேருக்குத்தொட்டு...