ஆஹா! ஒரு வாரம் ஓடிப்போச்சு! உங்களோட உற்சாகமான பின்னூட்டங்களும் கருத்துக்களூம் நெஜமாவே ரெண்டு டம்ளர் ராகிக்கஞ்சிய மோருல கரைச்சு கல்லுப்பு போட்டு வெங்காயத்தை கடிச்சுக்கிட்டு குடிச்சப்புல ஜில்லுன்னுதான் இருக்கு! இந்த வாரம் நாமன்னு ஆனதுக்கப்பறம் நல்ல விசயமா எழுதனுமேன்னு நினைச்சதுல வெளைஞ்ச மலரும் நினைவுகள் தாங்க இதெல்லாம்! சொல்ல வந்த கருத்தும் இதுதாங்க.. நிஜமாவே வாழ்க்கையை பத்தி சொல்லிக்குடுக்கறதுக்கு நம்பளைசுத்தி எப்பவும் ஒரு நாலுபேராவது இருக்காங்க... கடவுள் என்னைக்கும் மனுசங்களை நேரா சந்திக்கறதே இல்லை! அதுக்குபதிலா சகஜீவனுங்களைத்தான் அவரோட தூதுவராகவும் அவங்களிடம் கிடைக்கும் படிப்பினைகளைத்தான் அவரோட நற்செய்திகளாகவும் அனுப்பறாரு! இல்லைன்னா நாமெல்லாம் எந்த பாடசாலைல போய் படிச்சு இதெல்லாம் தெரிஞ்சிக்கறது? ஆனாலும் ஒருவேளை இது என்னைக்கும் இலவசகல்வியா இருக்கறதால நாமதான் சரியா கருத்தா படிக்கறதில்லையோ என்னவோ?! நட்சத்திரவிதிப்படி எல்லா நாளும் எழுதனும்னாலும் வெள்ளிக்கிழமை மட்டும் முடியலைங்க..( மதியக்கா.. மன்னிச்சிருங்க! ) அன்னைக்கு ஆபீசுல ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல நம்பளபோட்டு ஃபுல்நைட்டு பெண்டை நிம...
www.ilavanji.com