முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாசிப்பனுபவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயிர்த்தலம் - வாசிப்பனுபவம்

இந்தியாவுக்கு வந்து திரும்பிய இரண்டு பயணங்களில் என் ஒரு 23 கிலோ பெட்டியானது தமிழ் புத்தகங்கள் கட்டிய அட்டைப்பெட்டியாக இருந்தது. அறுக்கமாட்டாதவன் பொச்சுல அம்பத்தெட்டு அருவா மாதிரி தடித்தடி புத்தகங்கள் எல்லாம் வாங்கியாந்து அடுக்கி வைச்சுக்கும் ஆசைக்குப்பின்னால் ஊரோடு உறவாடும் ஒரு உள் நோக்கம் உண்டு. பின்ன நீங்களும் வருசத்துக்கு ஒருக்கா டிசம்பர்ல அதானே செய்யறீங்க? :) இந்த அருவாள்களில் கொற்றவை, கொற்கை எல்லாம் கூட உண்டு. அதுக்கெல்லாம் யாராச்சும் பத்தாயிரம் பக்கத்தில் விளக்கவுரை எழுதுவாங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன். வந்ததும் அதையும் வாங்கிப் பக்கத்தில் அடுக்கிறனும். என் வாசிப்பு தண்டி அவ்வளவுதான் :)  இந்த முறை உறவினர் ஒருவர் சென்னையில் இருந்து வந்தாப்ல. 23 கிலோ கேட்டால் துப்புவாங்க வேண்டியிருக்கும் என்பதால் ரெண்டே ரெண்டு புத்தகம் மட்டும் கேட்டேன். தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகளும், உயிர்த்தலமும். இரண்டாவது வந்தது. முதலாவது வழக்கமாய் வாங்கும் புக்லேண்டில் இல்லை. ( அந்தக் கடை மேனேஜர் ( அ ஓனர்? ) மிக நல்லவர். கூடவே வந்து எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்ராயங்களையும் சொல்லி வாங்க வைச்...

வண்ணத்திரை - வாசிப்பனுபவம்

ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கும். தன் வாசகர்கள் யார்? அவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டும்? அவர்கள் எதிர்பார்ப்பு என்ன? என்கிற தெளிவு. இதில் தெளிவாக இல்லையெனில் பத்திரிக்கை அதுவாகவே பொல்லையாகிரும். சிறுபத்திரிக்கையாக இருந்தாலும். இலக்கியப்பத்திரிக்கையில் நடுப்பக்க கவர்ச்சிப்படம் போடுவதோ அல்லது சினிமா எக்ஸ்ப்ரெசில் சமூக அவலங்களை சாடுவதோ நேர்மையான செயலாக கருதலாம்தான். ஆனால் வாங்கிப்படிக்கும் வாசகனுக்கு அது நேர்மையாக விற்கப்பட்ட பொருளல்ல. இந்த தெளிவு குழப்பதின் உச்சியில்தான் பெரிய பெரிய பத்திரிக்கைகளே இன்றைக்கு திணறிக்கொண்டு இருக்கின்றன. விகடனைப்படித்தால் சினிமா எக்ஸ்பிரஸ் படித்த கடுப்பு. குமுதத்தை புரட்டி முடிக்கையில் விளம்பர கேட்டலாக் படிக்கும் வெறுமை. இவையிரண்டுக்கும் நடுவில் இருக்கும் கேப்புல கல்லா கட்டிறமுடியுமான்னு ரெண்டுசைடு கண்டெட்டுகளை ஒப்பேத்தி இரண்டுங்கெட்டான் நகலாக நிற்கும் குங்குமம். பெரிய பத்திரிக்கைகளே இப்படி தனக்கென இருந்த அடையாளங்களை இழந்து தமக்கும் வாசகர்களுக்கும் இருந்த பிணைப்பை அலட்சியப்படுத்தி எப்படியாவது விற்பனை ஏத்தறதுக்கு சினிமா விட்டா கதியில்லைன...

மாதொருபாகனும் இணைய இந்துத்துவ எதிர்ப்பும்

சென்னையில் வேலை பார்த்த காலத்தில் எனக்கொரு அலுவலக நண்பர் இருந்தார். சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவர். பள்ளி கல்லூரி சுற்றுலாவுக்கு சிலவெளியூர்கள் சென்றுவந்ததோடு சரி. சொத்தங்களும் வேலூர். கல்லூரியும் சென்னையை ஒட்டி. பேசுவதெல்லாம் சென்னை மற்றும் அதன் உயர்வுகள் பற்றியே இருக்கும். அவர் பார்வையில் கோவை மதுரையில் இருந்து வேலைக்கு சென்னை வந்த நாங்களெல்லாம் ஏதோ பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்றே எண்ணம். எங்கள் வாழ்க்கைமுறைகள் எதுவும் அவருக்கு தெரியாது. அறிந்துகொள்ளும் ஆர்வமுமில்லை. பொள்ளாச்சி எனில் மசக்கவுண்டனுங்க வேட்டியும் பெண்கள் கண்டாங்கியும் கட்டிக்கொண்டு வாழ்பவர்கள் என்கிற சினிமா கொடுத்த சித்திரம் தவிர வேறு அறியாதவர். கூட வேலைபார்த்த நண்பரின் திருமணத்திற்கு என அனைவரும் ஈரோட்டுக்கு கிளம்பினோம். ஏற்காடு எக்ஸ்பிரஸ் சென்று சேரும்வரை அவருக்கு புது ஊரைப்பார்க்கும் ஆர்வம் தாளவில்லை. எங்கேயோ கேள்விப்பட்ட ஈரோடுபோய் திருச்சிவரு ஜோக்கையெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். ரயில் நிலையத்தில் இறங்கி பஸ்ஸ்டாண்டு ஒட்டிய லாட்ஜில் அறையெடுத்து செட்டிலாகி மண்டபத்துக்கு போக ரெடியாகிக்கொண்டிருக்கும் ப...

எட்றா வண்டியெ - வா.மு.கோமு

வா.மு.கோமுவின் புத்தகத்தை படித்துவிட்டு மனுசன் மனசுக்குள்ள அவரு பேனாவ உட்டு ஆட்டிட்டாப்லன்னு சொல்லி சிலாகிக்கறதும் வாழ்க்கைல சோக்களிகளோட மொத பீருக்கு அப்பறம் இதான் மப்புதூக்கறதான்னு தெரியாம அலங்கமலங்க கொஞ்சகணம் மெதப்புல இருக்கயில மப்புன்னா சூப்பர்தாம்லன்னு சொல்லறதும் ஒன்னுதான். ரெண்டுமே மொதமொதல்ல காணாததை கண்டுட்ட பிரமிப்பாத்தான் அனுபவிக்கயில தெரியும். வெளில சொல்லி அந்த சொகத்த எப்படி வெளக்கறது? சொல்லதேவையும் இல்லீல்ல? இருந்தாலும் அந்த திருட்டு சொகத்தை, தப்பை மறைச்சு செய்யற த்ரில்லை, நாசூக்கு மசிருமட்டைன்னு ஏதுமில்லாம தேங்காயொடச்ச மாதிரி சொல்லற நேர்மைய நாம அனுபவிக்கறதை கொஞ்சமா வெளீல சொல்லி பீத்திக்கறது தப்பில்லங்கறதால இந்த ரெண்டு பத்தி... நாவல்னுதான் அட்டைல போட்ருக்காப்ல.. எனக்கென்னவோ பன்ணெண்டு சிறுகதைகள எழுதிவைச்சுட்டு வரிசைய மாத்திமாத்தி எந்த பத்திரிக்கை அனுப்பலாம்கற கொழப்பத்துல எல்லாஞ்சேத்தி ஒரு புக்கா போட்டுட்டாப்லனுதான் படிக்கயில தோனுச்சு. எந்த அத்தியாயத்துல ஆரம்பிச்சு படிச்சாலும் தனிக்கதைதான். மொத்தமா படிச்சா நாவல்மாதிரிதான் தெரிது. எல்லாகதைலயும் சாமிநாதன் வர்ற...