அடல்ட் வாழ்வில் உடம்புக்கு திருப்தியா செய்யவேண்டியது உணவும் உடலுறவும். இதில் இரண்டாவது ஏற்கனவே நம்ப நாட்டுல கடும் வறட்சில ஓடிக்கிட்டு இருக்கு. கிடைச்சதையெல்லாம் இல்வாழ்க்கை சமூகசூழல் ஒழுக்கவிதி பொருளாதாரம் சாதிமத கட்டுப்பாடுகள்னு ஆயிரத்தெட்டு கொடைச்சல்ல கிடைச்சும் கிடைக்காத குற்றவுணர்வுல பொதுப்புத்தி ( அதாங்... பெரும்பான்மை )வாழ்க்கைய ஏற்கனவே மருகலில் ஓட்டிக்கிட்டு இருக்கோம். இதுல முதலாவது உணவையும் குற்றவுணர்ச்சி தூண்டப்பட்டேதான் செஞ்சு அழியனுமா? சாப்பாட்டை சந்தோசமா அனுபவிச்சு சாப்பிடறதுல அப்படி என்னய்யா குற்றம்? வீகன் பேலியோ ஆர்கானிக்குன்னு விதவிதமா கெளப்பிக்கெளப்பி சும்மா இருக்கறவங்களை மருகிமருகி சாப்பிடவைச்சு அய்யோ முடியலயே தப்புசெய்யறோமோன்னு குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டு தவிக்கனுமாங்கறேன்? நம்முடைய மனோபாவத்துக்கு ( Attitude ) பொருந்தாத தேவையில்லாத அவசியமில்லாத செயல்களை எல்லோரும் செய்யறாங்களேன்னு கடமையாய் செய்வது பின்பு செய்ய இயலாமல் போவது குற்றவுணர்வை மட்டுமே கொடுக்கும். ஸ்போர்ட்ஸ்மேனாக இருப்பதும் குறிப்பிட்ட டயட்டை கட்டுக்கோப்பாய் செய்வதும் அவரவர் தேர்வு. சுயதேர்வா...
www.ilavanji.com