அது ஒரு காலம். வீட்டில் ரேடியோ இருந்தாலே வசதிக்காரவுக என இருந்தகாலம். ரெண்டாப்பு மூனாப்பு படிக்கையில எங்க லைன்வீட்டு ஓனரு ஒரு பெரிய மஞ்சாக்கலர் பொட்டிய பங்களா வீட்டு திண்ணைல வைச்சு கேட்டுக்கிட்டு இருப்பாரு. அப்பவே கேட்டுப்போட்ட வீடு. அவரு லாரிபில்டிங் பட்டறையும் வைச்சிருந்ததால அவருபேரு ரேடியோக்காரரா லாரிக்காரரான்னு காலனிமக்கா மாத்திமாத்தி குழப்பி சொல்லிக்குவாங்க. அது ரேடியோவா இல்ல ரிக்கார்டுதட்டு பெட்டியான்னுகூட சரியா தெரியல. வீட்டுகேட்டுக்கு வெளில நின்னு தூரத்துல இருந்து பார்த்தது மஞ்சாபொட்டியாத்தான் தெரிஞ்சது. ஏதாச்சும் பாடிக்கிட்டே இருக்கும். ஆனா அவருக்கு ரெண்டு சம்சாரம்னு மட்டும் இன்னும் நினைவிருக்கு. அதுக்கப்பறம் வேற ஊருக்கு போயிட்டாலும் பொழுதுபோக்கு எல்லாம் எங்க வீட்டுல எப்பவும் புத்தகங்க மட்டும்தான். வாசிக்கறதுக்குன்னு கோகுலம், பூந்தளிர், தமிழ் மொழிபெயர்ப்பு ரஸ்ய பத்தகங்கள்னு ஏதாச்சும் வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கும். அதுவரைக்கும் கோயில் கல்யாண கூம்பு ஸ்பீக்கரு பாட்டுக மற்றும் திருவிளையாடல் விதி கதைவசனம் சும்மா காது கிழிய கேட்ட நியாபகம் உண்டு. படம்பார்க்க அம்புட...
www.ilavanji.com