ம ழைச்சேறின் கலவை தெறிக்கும் குழம்பிய சகதியில் சடுதியில் திருஷ்டியாகிப்பின் காற்றில் ததும்பிப்பிறந்து ஈர்ப்பின் விசையில் கீழாக ஓசையற்றுப் பயணத்துவங்கி மாசற்ற மாசுகளின் மீட்சியின் விளிம்பில் மரிக்கத்துவங்கும் துகள்களின் தெரிப்பில் ஜீவன் அடக்கும் பொங்கிய குமிழிகளின் ஆயுளின் நீளமாய் வாழ்வைக்கரைக்கும் ஒரு துளி சகதியின் பழுப்பு வர்ணமாய்... அடச்சே... இந்த கோணங்கி புஸ்தகத்த இனி தொடக்கூடாது! சரிங்க.. நேராவே சொல்லிடுறேன்! பழுப்பேறிப்போன ஒரு அட்டைப்பொட்டி வீட்டை சுத்தம் பண்ணும்போது கிடைச்சதுங்க! திறந்து பார்த்தால் ஒரு வீரத்தமிழனின் வாழ்வியல் காவியத்தினை படைக்க உறுதுணையளிக்கும் சான்றுகள் (மறுபடியும் பார்றா...! ) என்னோட கஜானா பொட்டிதாங்க அது! படிக்கற வயசுல ஏதேதோ சேர்த்துவச்சிருக்கேன்! ஒவ்வொன்னையும் எடுத்துப்பார்த்தா ஆனந்தக்கண்ணீரும், திகைப்பும், அதிர்ச்சியும், புன்முறுவலும் மாறிமாறி வருது! (ம்ம்ம்.. சிவாஜிக்கு அப்பறம் நவரசத்தையும் காட்ட நம்பள விட்டா வேறே யாரு இருக்கா? ) மொதமொதல்ல வாங்குன ஃபியூமா ஷூவோட சிம்பலும் சைசும் போட்ட சின்ன அட்டை! ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா ...
www.ilavanji.com