அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே? அறிவுப்பசி அண்ணாசாமி: சோக்கா கேட்ட அப்பாவி.. பாயிண்டு பாயிண்டா சொல்லறேன் கேட்டுக்க... 1. "அதுவா? எனக்கு பிடிச்ச கருத்தை சொல்லறதுக்கு உனக்கு முழுசுதந்திரம் இருக்குன்னு அர்த்தம்" அப்படின்னு எழுதிவச்சிகிட்டு, F9/11 படம் எடுத்தவரு அது அவரோட சொந்தபடத்துல சொன்ன சொந்த கருத்துக்கள் அப்படிங்கறதை விட்டுட்டு என்னமோ புஷ்சு வீட்டு வரவேற்பறைல கக்கா போயிட்டு சும்மா வந்துட்ட மாதிரி சொல்லறதுதான் கருத்துச்சுதந்திரம்னு நம்பவைக்கறது! நாம நகைச்சுவையா பத்தி பத்தியா எழுதினாலும் அது மத்தவங்களுக்கு நகைச்சுவைதான்னும் அதுக்கு மத்தவங்க யாராவது கருத்து சொன்னா ஒடனே நகைச்சுவை முகத்தை கலைச்சுட்டு சீரியசா அதுபத்தி விவாதிக்கனும்னு நம்பறது. அதையே ஒருத்தரு "இந்த நகைச்சுவை மூன்றாம் தரமா இருக்கு! " அப்படின்னு ஒரு கருத்தை சொன்னா "இதையெல்லாம் நகைச்சுவை இல்லைன்னு சொன்னா உனக்கு மூளைக்கோளாரு! " அப்படின்னு பின்னூட்டம் வந்தாலும் ஒன்னும் சொல்லாம அதை அப்படியே வச்சிருக்கறது! 2. சேரும்போது மட்டும் நாம எழுதறது நாலு பேரு கவனத்துக்கு போகனும்ற ...
www.ilavanji.com