முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்ப்பதிவுகளில் நல்லதொரு மாற்றம்!

கொஞ்சநாளாகவே பதிவுகளில் அடிதடி, வசவுகள், தனிமனிதத்தாக்குதல்கள் என்று படிச்சு படிச்சு ஓய்ஞ்சுபோய் இருக்கறப்ப இந்த இரண்டு பதிவுகளை படிக்கும்போதே அவ்வளவு சந்தோசமா இருக்குங்க! 1. http://veeravanniyan.blogspot.com/2005/11/blog-post_07.html வீரவன்னியன் : கருத்துகளை எதிர்கருத்துகளுடன் மோதிக் கொள்வோம். அனைவரது பதிவுகளையும் மதிப்போம். ஒவ்வொருவருக்கும் தனித் திறமை இருக்கத் தான் செய்கிறது. ரஜினிராம்கி : Veeravanniyan, I second your post. I think, we are sailing on the same boat. Let us continue to be a good friend. All the Best! 2. http://sivapuraanam.blogspot.com/2005/11/blog-post_17.html மலேசியா ராஜசேகரன் : உங்களைப் போன்ற இளஞர்களின் முயற்சியும் துடிப்பும் பாரட்டப் பட வேண்டியவை. ஆதரிக்கப் பட வேண்டியவை. உங்களுக்கும் உங்கள் முனைப்பான நண்பர்களுக்கும் எதிர் புரத்தில் நின்று தர்க்கம் செய்ய எனக்கு மனமில்லை. அது என் முதிர்ச்சிக்கும் அழகில்லை. ஆதலால், உங்கள் நண்பர்கள் பலரது மனதையும் புண்படுத்துமாறு அமைந்த என் எழுத்துக்களுக்காக நான் இங்கு நிபந்தனை அ...

ஹாரிபாட்டரும் மாயத்தீக்கோப்பையும் என் மருவாதியும்!

ந மக்கு நேரமே சரியில்லைங்க! எந்த நேரத்துல பயத்தை பத்தி எழுதுனனோ தெரியலை வாழ்க்கைல எல்லாமே ஒரு மார்க்கமாவே நடக்குது! சொந்தக்கார பயக ஊருல இருந்து வந்திருக்காங்களே.. அவிங்களை பேங்களூரு சுத்திக்காட்டலாம்னு ஒரு நல்லெண்ணம் இருந்திருந்தா ஒழுங்கா MG Roadக்கு கூட்டிட்டுபோயி வண்ணக்கோலங்கள் காட்டிட்டு(இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற! ) அப்படியே ஒரு அஞ்சுநக்கி( அதாங்க 5 ரூபா கோன்ஐஸ்...) வாங்கிக்குடுத்து அப்படியே பஸ் ஏத்தி அனுப்பியிருக்கலாம்! அதை விட்டுட்டு புதுசா ஒரு கடைவீதி ஒன்னுல நிறைய தியேட்டரு எல்லாம் இருக்கு வாங்கப்பு காட்டறேன்னு PVRக்கு கூட்டிக்கிட்டு போனனுங்க. அங்க போயி வழக்கம் போல வாசப்படில கொஞ்சநேரம் ஒக்கார்ந்து தரிசனம் பார்தோமுங்களா( என்னண்ணே இது? எல்லா புள்ளைங்களும் பத்தாத துணியே போட்டிருக்காளுங்க..! ) அப்பறம் வழக்கம் போல BOSEக்கு போயி ஹோம்தியேட்டரு டெமோ பார்த்தோமுங்களா.. அதுக்கப்பறம் அப்பிடியே திரும்பாம இன்னும் ஒரு ஃப்ளோரு மேல போனதுதாங்க தப்பு! "அண்ணே கடையெல்லாம் நல்லாத்தான் இருக்கு! அப்பிடியே ஏதாவது படமும் பார்த்திறலாம்!"னானுவ! சிவகாசி இல்லை(எல்லாம் விதியப்போவ்!) ..மஜா ...

மாப்பூ...! வச்சிட்டான்யா ஆப்பூ...!!

உ ங்களுக்கு தைரியம்னா என்னன்னு தெரியுமா? பயப்படாததுமாதிரி நடிக்கறதுதான் அப்படின்னு நம்ப அண்ணாத்தே கமலு குருதிப்புனல்ல சொல்லுவாரு பார்த்திருக்கீங்களா? அது அப்படியே சரின்னு வச்சிப்போம். ஆனா பயம்னா என்னன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இந்த கேள்விக்கு ஆயிரம் விடைகள் இருக்குங்க! எல்லாத்தையும் எடுத்துப்போட்டு அலசி ஆராய்ந்து பிரிச்சி மேய்ந்து கடைசியா என்ன கிடைக்குதுன்னு பார்த்தா அதுவும் ஒரே வார்த்தைதாங்க. அறியாமை!! அதுதாங்க பயம்! என்ன உதாரு ரொம்ப விடறானேன்னு பார்க்கறீங்களா? எல்லாம் ஒரு அனுபவம்தாங்க! மனசுக்குள்ள பெரிய பிஸ்த்துன்னு நினைப்பு இல்லைன்னாலும் தெரிஞ்சதை சொல்லறதுல்ல தப்பில்லைதானுங்களே? எனக்கு இந்த பேய் பிசாசெல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியாதுங்க! நம்பிக்கையும் இல்லை. கல்யாணமாகி 2 வருடங்கள் ஆனதுக்கப்புறமும்! ஆனா கல்யாணத்துக்குப்பிறகு டார்வின் கொள்கைல முழுநம்பிக்கை உண்டு..("T.Nagar போத்தீஸ்க்கு போலாம்னா ஏன் கொரங்கு மாதிரி முழிக்கறீங்க...?!") அதுனால அதப்பத்தியெல்லாம் பயமே இல்லை. ஆனா பயப்படுறவங்களைப்பார்த்தாதான் நமக்கு கொஞ்சம் பேஜாருங்க! விசயம் ஒன்னுமே இர...

Appun, Give me a Rocket!

உங்கள்ல எத்தனை பேரு கவருமெண்ட்டு ஆசுபத்திரிக்கு போயிருக்கீங்க? அட, நோயாளியா இல்லைங்க! கையில நாலு ஆப்பிளோ ஆரஞ்சுப்பழமோ இல்லை நீல்கிரிஸ் பேக்கரி பிரட்டையோ வாங்கிக்கிட்டு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்கன்னு படுத்திருக்கறவங்களை பாக்கறதுக்காவது?! ஒரு முறை போயிட்டுவந்திங்கன்னா இந்த ரெண்டுல ஒரு எண்ணம் நிச்சயமா மனசுல தோணலாம்! இடிஞ்சு விழுகறமாதிரியான பழய கட்டடத்துல 100 படுக்கைகளை நாலா பக்கமும் போட்டு மூலை முக்குல எல்லாம் வெத்தலை எச்சில் துப்பிவச்சி, எப்பவும் சொதசொதன்னு இருக்கற கதவில்லாத பாத்ரூமுக்குள்ள இருந்து 24 மணிநேர பிரீ சர்வீசா வீச்சம் ஆசுபத்திரி பெனாயிலு வாசத்தையும் தாண்டி வீசியபடி இருக்க உள்ள போறதுக்கும் வெளில வர்றதுக்கும் தனித்தனியா அஞ்சோ பத்தோ ஆளுக்கேத்தபடி லஞ்சம் கொடுத்தபடியும் உள்ள வந்தாலே இருக்கற ஆரோக்கியமும் போயிரும்போல இருக்கற நெலைல படுத்திருக்கற பரிதாப ஜீவன்கள் எல்லாம் எப்படி பொழைக்குமோங்கற கவலை ஒன்னு.. இல்லை கொஞ்சம் அன்னாடங்காச்சிங்களோட எகானாமி வெவரம் தெரிஞ்சவங்களா இருந்தா அடுத்தவேளை சோத்துக்குமட்டும் வழியிருக்கற ஜனங்களுக்கு இருதயம் கிட்னி பெயிலியர்னு ஏதாவது பணக்காரவியாதி வந்தா...