" டே ய் மச்சி! இந்த மடோனாங்கறது ஆம்பளையா பொம்பளையா!?" என்ற இந்த அதியற்புதமான கேள்வியினை கேட்ட என்னை தி.நகர் பாஸ்ட்புட் கடையின் ஓனர் ஓரத்தில் மிச்சத்திற்காக படுத்திருக்கும் ஜிம்மியை பார்க்கும் பார்வையைனை ஒத்த ஒரு லுக்கை விட்டு "மாங்கா மாதிரி வந்த இடத்துல மானத்தை வாங்காதடா!" என்ற என் நண்பன் சக்கரையின் பதிலின் மூலமாகத்தான் முதன்முதலாக மேல்நாட்டு இசையெனும் இன்பக்கடலில் என் கால்நனைப்பு நடந்தது! அவன் கோவைல GRG மெட்ரிகுலேசன். நான் கோபால் நாயுடு தமிழ்மீடியம் 11ஆவது! சாயந்தரம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தவிர வேறு எதற்கும் எங்களுடன் சேராத இந்த புண்ணியாத்துமா சக்கரை ஒரு முறை லட்சுமி காம்ப்ளெக்ஸ் முதல்மாடியில் இருக்கும் 'சிங்'ங்கான் கடைக்கு கேசட்டு ரெக்கார்ட் செய்ய என்னையும் கூட்டிச்செல்ல அங்கு வைத்து நான் கேட்ட கேள்வி தான் அது! அந்த நாள் வரைக்கும் எனக்கெல்லாம் தெரிஞ்ச இங்கிலீசி பாட்டுன்னா அது "சாலிடெர் ஃபார் ஸ்போர்ட்ஸ்.. சாலிடெர் ஃபார் சண்டே மூவீஸ்.. சாலிடெர்ர்ர்... சாலிடெர்ர்ர்ர்.." தான்! இந்த பாட்டுல ( ஹிஹி.. விளம்பரத்துல..) எல்லா வார்த்தைகளும் தெரிஞ்சதுங...
www.ilavanji.com