எ ன்னது?! ஒரு வார கேப்புல சன்னமா பொண்ணை பேசி முடிச்சிட்டீங்களா? நிச்சயம் வரைக்கும் போயாச்சா? ரெண்டு வீட்டுலையும் கைய நனைச்சிட்டீங்களா?! கல்யாண தேதிக்கு இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கா? என்னப்பு... சொல்லவேல்ல? சரி விடுங்க.. சொந்த பந்தங்க மட்டும் கூடி மேட்டரை முடிச்சிருப்பீங்க... கல்யாணத்துக்காவது மறக்காம பத்திரிக்கை வைங்க! நமக்கெல்லாம் அடிக்கடி இந்த கல்யாணவீட்டு போட்டோவுலையும் வீடியோவுலையும் லைட்டா பல்லைக்காட்டிக்கிட்டு, 101 ரூவா வைச்ச கவரை கமுக்கமா மாப்ளை கைல அழுத்திட்டு, நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீசு வாழ்த்தான "Many more Happy returns of the Day" அப்படிங்கறதை ஜாக்கிரதையா தவிர்த்து, கேனத்தனமா "மச்சி! கடைசில நீயும் கவுந்துட்டயா"ங்கற மாதிரி ஏதாவது பெனாத்தி, வீடியோல விழுகறதெல்லாம் நமக்கு சர்வசாதாரணங்கற மாதிரி ஒரு லுக்கோட, கொஞ்சம் முறுக்கிக்கிட்டு வெரைச்சா மாதிரி நின்னு வந்ததுக்கான எவிடென்சு காட்டலைன்னா சமுதாயத்துல திடீர்னு நம்ம பெரபலம் கொஞ்சம் கொறைஞ்சுட்டாப்புல ஒரு நெனைப்பு வந்துரும்! அதுக்காகத்தான்! மத்தபடி மூனுவேலை மூக்குப்பிடிக்க மொசுக்கறதுக்கு இல்லைங்...! ஆக ம...
www.ilavanji.com