ஜீலை' 06 மாத போட்டிக்கான தலைப்பினை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை வழங்கிய தேன்கூடு - தமிழோவியத்திற்கு என் நன்றிகள். போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.php படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஜூலை 20, 2006 ஜூலை 21 - 25 வாக்கெடுப்புகள் நடைபெற்று, முடிவுகள் ஜூலை 26 அறிவிக்கப்படும். - - = = 0 0 O 0 0 = = - - தேன்கூடு - தமிழோவியம் July 2006 போட்டியின் தலைப்பு மரணம்! இந்த உலகத்தில் இருப்பவருக்கு இதுதான் முற்றுப்புள்ளி. அடுத்து என்னவென்று எவரும் அறிந்ததில்லை. அறிந்தவர் இருப்பதில்லை. மரணம் ஏற்படுத்தும் விளைவுகள் அலாதியானவை. நெருங்கிய சொந்தங்களின் இழப்பு வாழ்க்கையை புரட்டிப் போடத்தான் செய்கிறது. எவ்வளவு கெட்டவனாக சமூகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவன் இறப்பில் சில நல்லவைகளை பேசத்தான் செய்கிறோம். அருகாமை மரணங்கள் சில மணித்துளிகளுக்காவது நம்மை நாமே எடைபோட்டுப் பார்க்க உதவத்தான் செய்கின்றன. சுயநலக் கணக்குகள் அழுத முகங்களின் ஊடே அவரவர் அடிமனதில் ஓடத்தான் செய்கிறது. சற்றே துணிந்த மனமிருப்பின்...
www.ilavanji.com