போனவாரம் வீக்கெண்டுக்கு இங்க பக்கத்துல இருக்கற பெர்த் அப்படிங்கற ஊருக்கு சுற்றுப்பயணம். சுற்றுப்பயணம்னு தோள்ல ஒரு மஞ்சப்பைய மாட்டிக்கிட்டு கெளம்பறம்னா அங்க போய்ச் சேர்ற எடத்துல ஆட்டையப் போட்டு அனுபவிக்க ஒரு ஆளு மாட்ட வேணாமா?! அப்படி மாட்டுனவருதான் நம்ப ஓமப்பொடி சுதர்சன்.கோபால் ! ரெண்டுநாளுக்கு சோத்தப்போட்டு, தூங்க எடங்கொடுத்து, குளிக்க சோப்பையும் கொடுத்து (பல்லு கையிலயே வெளக்கிட்டனுங்... ), ஸ்பீக்கரு ட்ரம்மு கிழிஞ்ச டீக்கடை சிலோன் ரேடியோ மாதிரி நான்ஸ்டாப்பா வாயால ராவுனதையெல்லாம் காதுல ரத்தம் வடிய கேட்டு, தூக்கத்துல விட்ட கொறட்டைய சகித்து (என்ன ஆச்சரியம்! எனக்கு கேக்கவே இல்லை!! ), கடைசியா பஸ் ஏத்திவிடற வரைக்கும் கூடவே இருந்து விருந்தோம்பல் தான் தங்கத் தமிழனின் உயர்ந்த குணம்னு நிரூபிச்ச அன்புத்தம்பிக்கு என் வணக்கங்கள்! ஆனால், என் பஸ் கெளம்புனது தெரிஞ்சதும் ஒரு துள்ளலா சந்தோசக் குதியலா அவரு வீட்டைப் பார்த்து ஓடுனதுதான் ஏன்னு புரியல... ரெண்டு நாளா பேசுனோம்! பேசுனோம்!! அப்படி பேசுனோம்!!! இங்கன தனியா பேசக்கூட ஆளில்லாம தனிமையின் அமைதியில் குண்டலினி யோகம் பயின்று கொண்டிருக்கும் எனக்கு (நம்பீட...
www.ilavanji.com