பதிவுலக நண்பர்களுக்கு எப்படித்தான் நன்றி சொல்லறதுன்னு தெரியலை! என்னத்த எழுதறதுன்னு தெரியாம கோட்டி புடிச்சபடி நம்ம மக்கா எல்லாம் பேரரசு கிட்ட மாட்டுன பரத் குத்துப்பாட்டுக்கு ஆடுற கணக்கா கணக்கு வழக்கில்லாம வகைதொகையில்லாம அடிச்சாடுறதை காதுகளில் பொகையோடு படிச்சபடி இருக்கற என்னைய கூப்புட்டு புடிச்ச படம் போடுங்க.. புடிச்ச பதிவு ஒன்னு சொல்லுங்கன்னு சொல்லி என் வயத்துல பாலை வார்க்கறாக. அதை சாக்கா வைச்சே இந்த வருசம் ரெண்டு பதிவு தேத்திட்டேன்! :) இருந்தாலும் இந்த தொடர் வெளாட்டுக்குன்னு எழுதறது நெசமாவே தாவு தீருது! அழைப்பு வைத்த தருமிசாருக்கு நன்றிகள்! போனவருசம் நான் எழுதுனதுல எனக்குப்பிடிச்சது எதுன்னு சொல்லனுமாம். எனது மூன்றாண்டு கால பதிவுலக வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் என் எழுத்துப் பணிக்கான (ஹிஹி.. ) கடின உழைப்பு என்பது கழுத தேஞ்சு கட்டெரும்பு ஆன... வேணாம் ரொம்ப பழசு... புரட்சித் திருமா தேய்ஞ்சு நடிகர் திருமா ஆன... வேணாம் வெவகார மேட்டரு... என்னாத்துக்கு எதுக மொகன? நேராவே சொல்லிடறேன்... 2005ல 50 பதிவுக... 2006ல 32 பதிவுக.. 2007ல 21 பதிவுக.. என்னா ஒரு வேகம்.. முன்னேத்தம் பாருங்க... இதுல இந்த...
www.ilavanji.com