இந்த வார விகடனில் (அண்ணாச்சி: அதென்ன இந்தவார விகடன்? அட்டையக் கிழிச்சா வாராவாரம் அதே விகடன் தான் டே! ) சில எரிச்சலூட்டும் பகுதிகள். கவர்ஸ்டோரில ஆரம்பிக்குது உப்புக்காகிதம் வைச்சு மூஞ்சுல தேக்கற மாதிரியான எரிச்சல்! திமுக மகளீர் மாநாடு மூலம் போட்டி கனிமொழிக்கும் கயல்விழிக்குமாம்! ஊருல யாருக்குமே தோணாத பத்தவைக்கற நேக்குல இப்படி ஒரு கட்டுரை. இதை இப்படி எழுத விகடன் எதுக்கய்யா? பருத்திவீரன் படத்துக்கு விமரிசனமாக எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுட்டால் அறிவுசீவி விமர்சனமாக இருக்காதேன்னு சன் டீவி விமர்சன பன்ச் மாதிரி “க்ளைமாக்ஸ் வக்கிரம்”னு ஒரு பிட்டை போட்டது நினைவிருக்கலாம். இப்போ இந்தவாரம் 32 நபர்களால் ஒரு அபலைப்பெண் பலாத்காரப்படுத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம் பற்றிய ஒரு கட்டுரை. “உறைய வைக்கும் பூடகமான பலாத்கார காட்சிகளைக் கொண்டது” அப்படின்னு விமர்சனம். ஆனால் இதில் வக்கிரம் என்ற் வார்த்தையே காணோம்! அதென்னய்யா அமீர் எடுத்தால் வக்கிரம்! இன்னொருத்தரு எடுத்தால் சமூக அவலங்களைக் காட்டும் படைப்பா? என்ன விமர்சனமோ! என்ன அளவுகோலோ!! அடுத்தது, வலைப்பதிவுகளில் வந்த விமர்சன...
www.ilavanji.com