வா.மு.கோமுவின் புத்தகத்தை படித்துவிட்டு மனுசன் மனசுக்குள்ள அவரு பேனாவ உட்டு ஆட்டிட்டாப்லன்னு சொல்லி சிலாகிக்கறதும் வாழ்க்கைல சோக்களிகளோட மொத பீருக்கு அப்பறம் இதான் மப்புதூக்கறதான்னு தெரியாம அலங்கமலங்க கொஞ்சகணம் மெதப்புல இருக்கயில மப்புன்னா சூப்பர்தாம்லன்னு சொல்லறதும் ஒன்னுதான். ரெண்டுமே மொதமொதல்ல காணாததை கண்டுட்ட பிரமிப்பாத்தான் அனுபவிக்கயில தெரியும். வெளில சொல்லி அந்த சொகத்த எப்படி வெளக்கறது? சொல்லதேவையும் இல்லீல்ல? இருந்தாலும் அந்த திருட்டு சொகத்தை, தப்பை மறைச்சு செய்யற த்ரில்லை, நாசூக்கு மசிருமட்டைன்னு ஏதுமில்லாம தேங்காயொடச்ச மாதிரி சொல்லற நேர்மைய நாம அனுபவிக்கறதை கொஞ்சமா வெளீல சொல்லி பீத்திக்கறது தப்பில்லங்கறதால இந்த ரெண்டு பத்தி... நாவல்னுதான் அட்டைல போட்ருக்காப்ல.. எனக்கென்னவோ பன்ணெண்டு சிறுகதைகள எழுதிவைச்சுட்டு வரிசைய மாத்திமாத்தி எந்த பத்திரிக்கை அனுப்பலாம்கற கொழப்பத்துல எல்லாஞ்சேத்தி ஒரு புக்கா போட்டுட்டாப்லனுதான் படிக்கயில தோனுச்சு. எந்த அத்தியாயத்துல ஆரம்பிச்சு படிச்சாலும் தனிக்கதைதான். மொத்தமா படிச்சா நாவல்மாதிரிதான் தெரிது. எல்லாகதைலயும் சாமிநாதன் வர்ற...
www.ilavanji.com