பொங்கச்சொல்லி பிரகாசரும் சோழன் எம்.எல்.ஏவும் கேட்டுக்கொண்டதாலும் மேட்டரு கொசுவத்திதுறையின்கீழ் வருவதால் என்னால் வாயை அடக்கமுடியாதென்பதாலும் இங்கே! அப்பாவின் காவல்துறை வேலையாக தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு வருடாவருடம் பெட்டிதூக்கி கடைசியாக கோவையில் கூடாரம் அடித்திருந்தாலும் என் சொந்த ஊர் தருமபுரி மாரண்டாஹள்ளியை சுற்றியிருக்கும் பலகிராமங்கள். அதெப்படி பலகிராமங்கள் சொந்த ஊராக இருக்கமுடியும்? எங்க தாத்தாபாட்டி பெற்ற 13ல் 2 தவற தக்குன மீதி 11ல் ஒரே ஒரு பெண் எங்க அத்தை! 10 பயகள்ல எங்கப்பாருதான் கடைக்குட்டி. இந்த ஆலமரத்துல பலவிழுதுகள் பலதிசைகளில் வேர்பரப்பினால் நான் எந்த ஊரை சொந்த ஊருன்னு சொல்லிக்க? கடைக்குட்டிங்கற ஒரே தகுதியால் வயக்காட்டுக்கு களிதூக்கிக்கொண்டு வேலைக்கு போகாமல் கவருமெண்டு ஸ்கூலுக்கு அரிசிச்சோறு கட்டிக்கொண்டு படிக்கப்போய் வேலையாகி டவுனுக்கு வந்துவிட்டவர் அப்பா. அப்போதெல்லாம் தீவாளி ஃபேமசாகாமல் பொங்கபண்டிகை முன்நின்ற காலகட்டம். சிறுவயதில் பொங்கல் பண்டிகை எனக்கு எங்கள் கிராமங்களில் வாய்த்திருக்கிறது. பண்டிகை 3 நாட்கள் எப்படியும் நடக்கும். 7நாள், 10நாள் வகை பண்டிகையெல்லாம்...
www.ilavanji.com