முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளவஞ்சியின் தத்துவமுத்துக்கள்


Image hosted by Photobucket.com


1. வாழ்க்கைல யாரோ ரெண்டுபேரு மட்டும் அப்படி இப்படி புரட்டிட்டு மடிப்பு களையாம அலமாரிக்குபோற Hindu பேப்பரா இல்லாம காலைல இருந்து சாயந்தரம் வரை வர்றவங்க போறவங்க படிச்சு படிச்சே கிழிஞ்சிபோற டீக்கடை தினத்தந்தியா ஒரு 4 பேருக்கு உபயோகமா இருக்கறது எவ்வளவோமேல்!

2. ஆண்டவன் கெட்டவங்களுக்கு விதவிதமா பேண்ட் குடுப்பாரு. ஆனா பெல்ட்டு குடுக்காததால அடிக்கடி அவுந்துடும். நல்லவங்களுக்கு ஒரே ஒரு அண்டர்வேரு தான் குடுப்பாரு. இறுக்கமா கட்டிக்கறதுக்கு நாடாவோட! (எங்கயோ கேட்டமாதிரி இருந்தா நான் பொறுப்பல்ல!)

3. நகர வாழ்க்கைல பிஸ்சாவும் ஃபாஸ்ட்புட்டும் சாப்டுட்டு அடுத்தநாள் காலைல நியூஸ்பேப்பரையோ குண்டு புக்கையோ எடுத்துகிட்டு போய் ஒன்னரை மணிநேரம் முக்கியும் தோல்வியடையறவனைவிட, கிராமத்துல கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு விடிகாலைல போறபோக்குல காட்டுல கக்காபோறவந்தான் குடுத்துவச்சவன்!

4, காலங்காத்தால கார் எடுத்துகிட்டு 10 கிலோமீட்டர் தூரம் பீச்சுக்கு போய் அங்க ஒரு கிலோமீட்டர் நடக்கறதுக்கு, வீட்டசுத்தியே ஜிம்மிய கூட்டிகிட்டு 4 ரவுண்டுவர்றது ஜிம்மிக்கும் நல்லது. நம்ம மணிபர்சுக்கும் நல்லது,

5. நல்ல வேளை! நாம எல்லாம் இந்தியால பொறந்தோம். ஒரு ஃபிகர தேத்தி லவ் பண்ண துப்பு இல்லன்னாலும் ஒரு வயசுக்குமேல அப்பாம்மாவே ஒரு புள்ளய பார்த்து கல்யாணம்பண்ணிவச்சிடறாங்க. இதே நாம அமெரிக்கவுலயோ லண்டன்லயோ பொறந்திருந்தா நெலமைய நெணச்சுப்பாருங்க..! நம்ப மூஞ்சிக்கும் பர்சனாலிட்டிக்கும் என்னைக்கு ஃபிகர்மாட்டி செட்டில் ஆகறது??

6. கல்யாணத்தன்னைக்கு மாப்பிள்ளையயையும் பொண்ணையும் நல்லா பாருங்க! அவரு மொகம் நெறஞ்ச சிரிப்போட இருப்பாப்ல. பொண்ணு கேவி கேவி அழும். தம்மு தண்ணி அடிக்கறவங்க அந்த பழக்கத்தை நிறுத்தும்போது பார்த்திருக்கீங்களா? ஃபில்டரு தீயறவரைக்கும் வாய்சுட இழுப்பாங்க! கடைசிசொட்டு வரைக்கும் உறிவாங்க!! கடைசியா ஒன்ன செய்யும்போது புல்லா அனுபவிச்சிசெய்யனும். அதுக்குதான்.

7. பொண்டாட்டியா வர்றவகிட்ட அழகு மட்டும் இருந்தா போதும் நெனைக்கறவன் நெலம 1000 ரூபா செருப்பு வாங்குனவன் நெலமதான்! பத்திரமா பாத்துக்கறதுலயே வாழ்க்கை போயிரும்.

இன்னைக்கு இதுக்கு மேல சிந்திக்க முடியலைங்க... மிச்சத்த நாளைக்கு வச்சிப்போம்!

கருத்துகள்

  1. அடடா!
    என்ன தத்துவ முத்துக்கள்?
    இடைக்கிடை இப்பிடி எழுதவும்.

    பதிலளிநீக்கு
  2. வசந்தன், சுரேஷ்,

    கருத்துக்களுக்கு நன்றி. இதை எழுதுனதுக்காக எனக்கு யாரவது சாகித்திய ஆகாடமி குடுக்கறதா இருந்தாகூட முன்னாடியே சொல்லிடுங்க. அப்பதான் ஒரு நாலு பேர வர்ணமா.. அடச்சீ.. வண்ணமா திட்ட வசதியா இருக்கும்!

    ஹிஹி..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...