இது விமரிசனம் இல்லைங்க.. வயித்தெரிச்சலு...
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம். TVல தான் சீரியல் எல்லாத்துலயும் ஆம்பளையும் பொம்பளையும் கூடிக்கூடி அழுவறாங்கன்னு நொந்துபோயி ஒரு படத்துக்கு போலாம்னு நெனைச்சு நம்ப இளயதளபதி படமாச்சே அப்படின்னு எனக்கும் பொண்டாட்டிக்கும் சேர்த்து 120 ரூபாயிக்கு டிக்கெட்டு எடுத்து போனா... நம்ப பொழப்பு நாறப்பொழப்பு ஆகிடுச்சுங்க!
கடைசி வரைக்கும் ஒரு 80 பக்க நோட்டகூட காட்டாம ஒரு காலேஜ் கதை. அதுவும் எங்க? இத்தனை நாள் நம்ப ஹீரோங்க எல்லாம் ஆடிப்பாடறதுக்கு மட்டும் போன ஊட்டில. விஜயும் ஜிலினியா டிசோசாவும்(பேர எழுதறதுக்குள்ள ஜன்னி வந்துடும் போல) படம் முழுக்க ஒரு ஜோல்னாப்பைய தோல்ல தொங்கவிட்டுகிட்டு இருக்காங்க. அதுக்குள்ள என்ன வச்சிருக்காங்களோ அவங்களுக்கே வெளிச்சம். நாயகி மழைல நனையற அழகைப்பார்த்து ஹீரோக்கும், ஹீரோ குடை மடக்கற வீரத்தைப்பார்த்து ஹீரோயினுக்கும் புடிச்சுபோயிடுதாம். இந்த காலத்து காலேஜ் பசங்க பார்த்தா பின்னாடி சிரிச்சிட்டு போவாங்க!
படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி சீன்ல கோவை ஏர்போர்ட் வரை பின்புலத்துல பைப்புல பொகை பொகையா உடறாங்க... அதை நாம பனிமூட்டம்னு நினைச்சுக்கனுமாம். டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறியிருக்கற இப்பத்த சினிபீல்டுல இதகூட கவனிக்காம ஒரு ஒளிப்பதிவாளரு! பாவம் சம்பளம் குடுக்காத கடுப்புல இப்படி கவுத்துட்டாரா என்னன்னு தெரியலை.
அம்பதை தாண்டுன பெருசுங்க எல்லாம் இளவட்டமா நடிக்கறப்ப வடிவேலு காலேஜ் பையனா நடிக்கறது தப்பில்லைதான். அதுக்காக லாஜிக்கே இல்லாம ஒரு வெளக்கம் குடுக்கறாங்க பாருங்க. வர்ற எரிச்சல்ல முன்னாடி உக்காந்த்திருக்கறவன் முதுகை பெராண்டலாம்னா மொத்தமே ஒரு 40 பேருதான் தியேட்டருல.
அந்த காலத்துல அனுராதா, ஜெயமாலினி எல்லாம் திடீர்னு ஒரு டான்சுக்கு வருவாங்களே.. அதுபோல பிபாசா பாசு. சச்சினை கட்டிபுடிச்சி உச்சிமோந்து பொரண்டு உருண்டு காதலோட மேன்மைய ஹீரோயினுக்கு சொல்லறாங்க... இதுக்கு மேலசொன்ன கவர்ச்சி டான்சு லாஜிக்கே 100 மடங்கு தேவலாம்.
என் கேள்வியெல்லாம் இதுதாங்க.
இந்த படத்துல நடிக்கறதுக்கு கில்லி கொடுத்த விஜய் தேவையா?
ஆனா ஒன்னு மறுக்க முடியாதுங்க. விஜய்க்கு நல்ல ட்ரெசிங்சென்ஸ்
நிற்க:(ஹிஹி.. இது எழுதாம என்னால முடியாதுங்க. படம் முழுக்க ஒரு சீன்ல கூட ஒழுங்கா நின்னு நடிக்காம இப்படியும் அப்படியும் ஆடிக்கிட்டே இருக்கற சச்சினை பார்த்தா லூசுப்பயன்னுதான் தோணுது. ஆனா இதுக்கு டைரக்டரோட விளக்கம் என்ன தெரியுங்களா. ஹீரோ எப்பவும் உற்சாகம் கொப்பளிக்க திரியற ஒரு பார்ட்டியாம்!)
போடாங் கோ!!!
உங்கட இந்த விமர்சனத்தவிட படம் சிரிப்பத் தராது.
பதிலளிநீக்குநீங்களும் பார்த்துட்டீங்களா?... அய்யா.. இப்பத்தான் ஒரு நிம்மதி.. நம்ம மட்டும் தான் கூமுட்டைத்தனமா போயி உக்காந்தோம்னு நினைச்சேன்.. :-)
பதிலளிநீக்குthere are some remarkable similarities with your and my review (http:\\penathal.blogspot.com)
பதிலளிநீக்குAny day, your review is more humourous.
வசந்தன், ராசா, சுரேஷ்,
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இது நெஜமாவே பொலம்பலு தாங்க.. விமரிசனம் இல்ல. அதுக்கெல்லாம் நமக்கு அறிவு பத்தாது. :)
"கில்லி கொடுத்த விஜய் "
பதிலளிநீக்கு-ஆனாலும், உங்களுக்கு விஜய் மேல இப்படி ஒரு தப்பான எண்ணம் இருக்கக்கூடாதுங்க!
இளவஞ்சி,
பதிலளிநீக்குநல்ல தலைப்பு, போங்க !!!!!
தலைப்பைப் பார்த்துட்டு "என்னடா நம்ம தல சச்சின் டெண்டுல்கரை திட்றாரு" ன்னு சும்மா கோவமா வந்தேங்க !!!! வந்து படிச்சு பார்த்தாக்க, நம்மள லூசு ஆக்கிட்டீங்களே :)
நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்க, பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்
பாலா
ரசனைகள் பல விதம். பொதுவா விஜய் படம் பிடிக்காத என் பல நண்பர்களுக்கும் இந்தப் படம் ரொம்பப் படித்திருந்த்து. நானும் நண்பர்களும் அதிக முறை பார்த்த படமும் இது தான். நானே ஒரு 15 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். மொழி தெரியாத என் இந்தோனேசிய நண்பர்களும் கூட ரசித்துப் பார்த்தார்கள்.
பதிலளிநீக்குஇந்த மாதிரி படங்களில் logic எல்லாம் பார்ப்பதில் பொருள் இல்லை
//posted by இளவஞ்சி at 1:12 PM on May 6, 2005 //
பதிலளிநீக்குஎன்ன வாத்தி நடக்குது இங்கே? 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது? என்ன மாயமோ? என்ன மர்மமோ? ஒரு வேளை ரொம்ப சூடான இடுகைன்னு ரிப்பீட்டு ஆவுதா?
விஜய் படத்துலேயே புடிச்ச படம் அப்படின்னா அது வசீகரா, அடுத்தது சச்சின். ஏன் இந்த 2 படமுமே டப்பாக்குள்ள சீக்கிரம் போச்சுன்னு தெரியல.
பதிலளிநீக்கு//இந்த மாதிரி படங்களில் logic எல்லாம் பார்ப்பதில் பொருள் இல்லை//
பதிலளிநீக்குஏதோ உங்கள மாதிரி நாலு நல்லவங்க இருக்கர வரைக்கும் தமிழ் சினிமா நல்லா இருக்கும் :-)
ரவிசங்கர்,
பதிலளிநீக்குபடத்துல லாஜிக் தேடறதா இருந்திருந்தா நான் விஜய் படத்துக்கு ஏன் போறேன்? கலக்கற மசாலாவையாவது சரியா கலக்கலையேங்கற பொலம்பல் தான் :)
ஷ்யாம், இளா வருகைக்கு நன்றி!
இளா,
// 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது? என்ன மாயமோ? என்ன மர்மமோ? //
எனக்கும் புரியலையே அய்யா! பின்னூட்டத்தை அனுமதித்தேன். பார்த்தா பதிவே வெளிக் கெளம்பியிருக்கு!!! யார் வேண்டுமானாலும் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கலாம் போல!
என்னை திரும்ப பதிவுலகுக்கு இழுக்க நடக்கும் சதி இது என்பதினை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்! ஹிஹி...
யோவ் இன்னாங்கைய்யா விளாயாடுறீங்களா...
பதிலளிநீக்கு"இப்போ புதுசா ஒரு பையன் கிரிக்கெட்டுல வந்திருக்கான் ரொம்ப நல்லா ஃபீல்டிங் பண்றான்...அவனுக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்கு...பேரு கூட ஏதோ அசாருதீன்னு சொன்னாங்க..." டயலாக் தான் நியாபகத்துக்கு வருது. என்ன ஆச்சு டெக்னாலஜிக்கு...மே 6 மட்டும் (தலைகீழா போட்டு) கணக்குல எடுத்திக்கிச்சா?
// இளவஞ்சி zei...
பதிலளிநீக்குஎன்னை திரும்ப பதிவுலகுக்கு இழுக்க நடக்கும் சதி இது என்பதினை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்! ஹிஹி... //
ஆணித்தரமாச் சொன்னாலும் ஆடித்தரமாச் சொன்னாலும்...உங்களைப் பதிவுலகத்துக்குள்ள இழுக்குற சதி வெற்றி பெற உளப்பூர்வமாகப் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
//உங்களைப் பதிவுலகத்துக்குள்ள இழுக்குற சதி வெற்றி பெற உளப்பூர்வமாகப் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.//
பதிலளிநீக்குநானும் ஜிரா கட்சி........
இன்னைக்கு தான் புது ப்ளாகருக்கு மாறினீங்களா ? என்னுடைய பழைய பதிவும் இது மாதிரி தமிழ்மணத்துல இன்றைய பதிவுகள் பகுதியில வந்திருக்கு
பதிலளிநீக்குஉங்கள் பதிவும் இன்றைய பதிவுகள் பகுதியில இருக்கு ...
// 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது? என்ன மாயமோ? என்ன மர்மமோ? //
பதிலளிநீக்குநான்கூட போஸ்ட் போட மேட்டர் கிடைக்காததால சச்சின் படமெல்லாம் பார்த்து எளுத ஆரம்பிச்சிட்டீங்கன்னு நினைச்சேன்.. நான் எளுதறன்ல, புலம்பி, ரெண்டுபேர் என்னைத்தேத்துறதுக்கு ஏற்பாடு பண்ணி, அதுமூலமா இன்னும் ரெண்டு பதிவுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்ல. :-D