பேசுவதே புரியும் பொழுது
முகத்திலிருக்கும் இரு பட்டாம்பூச்சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கிறுகிறு
விடுமுறையில் தூதாக
பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா
எனக்கேட்டு அனுப்பிய
பட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை
புடவைகளுக்கடியில் பத்திரமாய்
என்னைவிட மாநிறமா
எனக்கையோடு கையொற்றி
முதன்முதலில் தொட்டபொழுது
முன்உணராத பட்டாம்பூச்சிகள்
என் அடிவயிற்றில்
பிறந்தநாள் பரிசென
நீ பிடித்துவந்து
நாம் பறக்கவிட்ட
விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த
நீலம்தெளித்த பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சிகளும் இப்படித்தான்
கலவிக்கொண்டே பறக்குமென
நீ சொன்னதை உணர்ந்ததினம்
நம் கலவியின் உச்சகணம்
சிலநாட்களே வாழ்ந்துமடியும்
பட்டாம்பூச்சிகளுக்குள்
பிரிவுத்துயர் இல்லையென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி முத்தம்
மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை
ம்ம்...ம்..ம்
பதிலளிநீக்குவீட்டம்மாவுக்கு என்று தனியா ஒரு பொழிப்புரை தயார்தானே..?
கவிதை சூப்பர், போட்டோவும் அருமை.
பதிலளிநீக்குஅதையெல்லாம் விட, தருமியின் கமெண்ட் சூப்பரோ சூப்பர்!
கவிதை சூப்பர், போட்டோவும் அருமை.
பதிலளிநீக்குஅதையெல்லாம் விட, தருமியின் கமெண்ட் சூப்பரோ சூப்பர்!
பிரிவின் கனம்
பதிலளிநீக்குஉண்மையின் வேதனையினை உணர்த்தும் கணம்
உணர்வுகளின் வலி
காணும் காட்சிகளிலும் தொடரும்
தன் பதிவினை நிகழ்த்தி
தவிர்க்கவே இயலாதபடி
கவிதை நன்று இளவஞ்சி
தருமி, சுரேஷ், எல்லோரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல.. ஆஹா... ஒரு குரூப்பாத்தான் அலையறாய்ங்கப்பா...
பதிலளிநீக்குமதுமிதா, உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
நல்ல நிழற்படம். இளவஞ்சி உங்கள் பதிவின் urlஐ தினமலரில் பார்த்தேன்.
பதிலளிநீக்குஆஹா... அவிங்க என்னையும் விட்டுவைக்கலையா?? :)
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி பத்மா அரவிந்த்!
மற்றுமொரு நல்ல கவிதை .
பதிலளிநீக்கு:-) தவறே செய்யா பட்டாம்பூச்சிகளின் மேல் கோபமா ..
பதிலளிநீக்குகவிதைத்துவமான சிந்தனைதான்...
இளவஞ்சி கலக்கியிருக்கீங்க...... எப்படிய்யா உம்மால மட்டும் முடியுது..... ம்ம்ம்ம்
பதிலளிநீக்குகவிதை அருமை இளவஞ்சி.
பதிலளிநீக்குதியாகராஜன் (THYAG)
இனிமை . நன்று 11G அவர்களே ...:)
பதிலளிநீக்குshivatma
//விடுமுறையில் தூதாக
பதிலளிநீக்குபட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா
பிறந்தநாள் பரிசென
நீ பிடித்துவந்து
நாம் பறக்கவிட்ட
விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த
நீலம்தெளித்த பட்டாம்பூச்சி
சிலநாட்களே வாழ்ந்துமடியும்
பட்டாம்பூச்சிகளுக்குள்
பிரிவுத்துயர் இல்லையென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி முத்தம்
மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை//
மேலே உள்ள வரிகள் நன்று. ரொம்ப ரசிச்சேன்
தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். அருமை. உங்கள் வலைப்பூவை தினமலரில் பிரசுரித்துள்ளோம். இரண்டாம் பக்கம் வெளியாகி உள்ளது. தினமலர் வெளிநாடுகளில் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால், இன்டர்நெட்டிலும் நீங்கள் அதைப் படிக்கலாம்.
பதிலளிநீக்குhttp://www.dinamalar.com/2005oct07/flash.asp
தினமலர், மதுரை.
மக்களே! உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
பதிலளிநீக்குshivatma - 11G யா? சீக்கிரமே உங்களுக்கு Dr & திருமா சந்திப்பு அமையக்கடவது! :)
Nagarathinam,
பிரசுரித்தமைக்கும் தகவலுக்கும் நன்றி!
//நான் இப்பொழுது
பதிலளிநீக்குபட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை//
இறுதிவரியில் கவிதையின் உச்சம்.