ஆன்மீகமும் அருமை தமிழிலக்கிய பாடல்களும் அதன் பொருள்விளக்கமும் என்று நிஜமாகவே மணந்துகொண்டு இருக்கும் தமிழ்மணத்தில் தமிழுக்கு தொண்டு செய்யாமல் இருந்துவிட்டால் அதன் பிறகு நான் வலைப்பதிந்து என்ன பயன்?
ராகவன், குமரன்... உங்களது பதிவுகளுக்கு இப்படியும் ஒரு கெட்டவிளைவு இருக்குமா என்ற பேரதிர்ச்சி உங்களை தாக்காமலிருக்க கந்தன் உங்களுக்கு அருள்புரிவாராக...
பெரிய மனசுவைச்சு மன்னிச்சுருங்க.. மயிலாரை விட்டு கொத்த விட்டுராதீகப்பூ!!!
'பத்து'ப்பாட்டு
ராகம்: கபோதி தாளம்: லோக்கல்
ஏஞ்சோக கதைய கேளு வலைக்குலமே!!!
நாலுநாளா வீட்டுக்குள்ள இருக்கமுடியல
கிச்சனோட கப்புரொம்ப தாங்கமுடியல
ஊருக்குபோன பொண்டாட்டிய திட்டமுடியல
எச்சத்தட்டு பாத்திரத்தை கழுவமுடியல
ஈமொய்க்க தட்டுங்க காய்ஞ்சுகெடக்குது
காபிடம்ளருல கரப்புங்க ஓடியாடுது
கரண்டில காளானு பூத்துக்கெடக்குது
ஆகமொத்தம் அடுப்படியே ஆடிக்கெடக்குது
மொதநாளு சாம்பாரு காரசாரங்க
அடுத்தநாளு ரசம்கூட ஓக்கேதானுங்க
நூடுல்ஸு ரெண்டுவேள பேஜாராச்சுங்க
தேடிவந்த பிஸ்ஸாவும் பீச்சிருச்சுங்க
ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது
எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது
அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது
குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது
அதிகாலையில பாலுவாங்க கண்ணுநோவுது
குனிஞ்சுநிமிந்து கூட்டும்போது முதுகுதெரிக்குது
நாலுகரண்டிக்கே முழு'விம்'மும் கரைஞ்சுபோகுது
ஜட்டிபனியனுங்க வீடுமுழுசும் பல்லைஇளிக்குது
வறசோத்துக்கு டொமெட்டோசாசு கொஞ்சம்ஓவரு
அஞ்சாநாளே அடிக்கிதுங்க லைட்டாஃபீவரு
கும்பிகாய்ஞ்ச என்நெலமை கிழிஞ்சநிஜாரு
கட்டுனவ இல்லைன்னா லைஃபேபேஜாரு
வருங்கால மணமகனே கொஞ்சம் காதைத்தொறப்பா
அடிபட்ட அண்ணன் சொல்லை நெஞ்சிலேத்தப்பா
சுடுசோறு ரசமாச்சும் வைச்சு பழகப்பா
கட்டையில போறமட்டும் கவலையில்லப்பா
எட்டுத்'தொகை'
ராகம்: வேறென்ன.. முகாரி தாளம்: வயித்துப்பாடு
சம்பளம்போட்ட அஞ்சாநாளு பாதியக்காணல
வாங்கிப்போட்ட ஃபிளாட்டுEMI கட்டிமாளல
கிரெடிட்கார்டு ரிமைண்டருகாலு கேக்கச்சகிக்கல
அதக்கட்ட அடுத்தலோனு சேங்சனாவல
ஆட்டோலோனில் காருஓட்ட மனசுமருகுது
பெட்ரோல்பங்ஃகில் நிறுத்தும்போது குலையறுக்குது
CTC கேக்கையில குஜாலாயிருக்குது
டேக்ஹோமு பார்க்கையில காத்துபோகுது
பத்துவருசமா TAXகணக்கு பூச்சிகாட்டுது
பேலன்சு பார்க்கையிலே மனசுநோகுது
"சம்பாதிச்ச காசையெல்லாம் என்னபண்ணற?"
எங்கப்பன் கேள்விக்கு பதிலுதெரியல
"பிடித்தம்போக அஞ்சாயிரத்துல குடும்பம் ஓடுச்சு"
எங்கம்மாவோட பிரம்மசூத்திரம் மண்டையிலேறல
சம்பாத்தியம் எதுக்குன்னு இன்னும் வெளங்கல
இருட்டுக்குள்ள குருட்டுவாழ்க்கை ஓட்டம் முடியல
- இலக்கியக்கபோதி இளவஞ்சி
இந்த பதிணென்கீழ்கணக்கு (10+8) பதிவை அறிவியல்/நுட்பம் என்று மிகச் சரியானபடி வகைப்படுத்திய நான் வாழ்க வாழ்க!!
பதிலளிநீக்குஇளவஞ்சி.......இளவஞ்சி.....எனக்குப் பேச்சே வரலையே.....முதுகுக்குப் பின்னாடி இருந்து எட்டிப் பாத்த மயிலார் கனஜோரா ரசிச்சிருக்காரு. ரொம்ப நல்லா இருந்ததுன்னு என்னைய விட்டே சொல்லச் சொன்னாரு. இந்தக் காலத்திலயும் புதுமையான இலக்கியம் வளக்கும் இளவஞ்சியாசானுக்குப் பாராட்டு சொல்லச் சொன்னாரு. சொல்லீட்டேனய்யா! நல்லாருந்தது.
பதிலளிநீக்குபட்டால் தான் தெரியும் பாவிமகனுக்கு
பதிலளிநீக்குபெண்டாட்டி இல்லாதது கெட்டால்தான் தெரியும் பையனுக்கு துணையில்லாது இல்லாதது
இல்ல நானும் எழுதிப் பார்த்தேன் அது வல்ல
ஹாஹாஹா. எதன்னு சொல்றது. அத்தனையும் அருமை. காலைலயே சிரிக்க வச்சதுக்கு நன்றி இளவஞ்சி.
பதிலளிநீக்குஎனக்கு ரொம்ப புடிச்சது,
//**அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது**//
//**நாலுகரண்டிக்கே முழுவிம்மும் கரைஞ்சுபோகுது**//
ஒரு இலக்கியமே
பதிலளிநீக்குஇலக்கியம்
படைக்கிறதே...
அய்யோ...கவித..கவித...
இப்படி ஒலக மகா காவியங்கள கணப்பொழுதில உருவாக்கும் உங்களுக்கு நம்ம மஞ்சத் துண்டு மகான் மூலமா ஒரு பட்டம் கொடுக்க ஏற்பாடு பண்ணீட வேண்டியது தான்.
மிக நன்று புலவரே !
பதிலளிநீக்குஎல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீங்க பின்னூட்டம் போட்ட போதே., இது வில்லங்கமாயில்ல இருக்குது?ன்னு நினைச்சேன். என் நம்பிக்கைய காப்பாத்திட்டிங்க நன்றி.
பதிலளிநீக்கு//ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது
எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது
அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது
குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது//
இன்னும் அஞ்சாறு மாசம் ஊர்லயே இருந்துட்டு வாம்மா.... தங்கச்சி.
எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீங்க பின்னூட்டம் போட்ட போதே., இது வில்லங்கமாயில்ல இருக்குது?ன்னு நினைச்சேன். என் நம்பிக்கைய காப்பாத்திட்டிங்க நன்றி.
பதிலளிநீக்கு//ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது
எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது
அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது
குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது//
இன்னும் அஞ்சாறு மாசம் ஊர்லயே இருந்துட்டு வாம்மா.... தங்கச்சி.
super ..........
பதிலளிநீக்குஅடப்பாவிகளா!
பதிலளிநீக்குஇந்த பதிவு என்ன "அறிவியல்/நுட்பம்" ஆ??!!
அப்படிச்சொல்லிக்கறதுக்கு எனக்கும் புல்லரிப்பாத்தான் இருக்கு.. ஆனா என்ன செய்ய?! இந்த மனசாட்சி...
ம்ம்ம்.. நகைச்சுவைக்கே நகைச்சுவை!!!
10 + இருக்கு.. ஆனா ஒரு பின்னூட்டமும் காணோம்!!
ராம்ஸ், எல்லாத்தையும் ஹைஜாக் பண்ணி உங்க பதிவுக்கு ஓட்டிக்கிட்டு போயிட்டீங்களா!!! :)
கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்... டாங்க.
பதிலளிநீக்குதலையில் அடித்துக் கொண்டு,
உஷா
நான் 11வது + போட்டேன். 1வது + (இல்லாட்டி 2வது +) போட்டதும் நானே. ஒன்னு வீட்டில. ஒன்னு ஆபிஸ்ல.
பதிலளிநீக்குஇவ்வளவு அற்புதமா ஒன்னும் விளங்காத மாதிரி எழுதுனா என்ன பண்றது? + மட்டும் போட்டுட்டுப் போகவேண்டியது தான். :-)
அப்புறம் நீங்க என்ன எழுதுனாலும் + போடறதுக்கு ஒரு நண்பர் குழாம் இருக்குன்னு நினைக்கிறேன். அவங்களும் படிக்காமலேயே + போட்டுட்டுப் போயிருப்பாங்க. எப்படி தெரிஞ்சதுங்கறீங்களா? எனக்கு அப்படி ஒரு அன்பர் கூட்டம் உண்டு. ஹிஹிஹி.
Ennaiyya aniyaamaa irukku oru '+' podduddu 'comment' kodutheenee...enge pochu..unga moderation-a paarunga ilavanji :-))
பதிலளிநீக்கு//"சம்பாதிச்ச காசையெல்லாம் என்னபண்ணற?"
பதிலளிநீக்குஎங்கப்பன் கேள்விக்கு பதிலுதெரியல//
தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்ன?:-))
எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீங்க பின்னூட்டம் போட்ட போதே., இது வில்லங்கமாயில்ல இருக்குது?ன்னு நினைச்சேன். என் நம்பிக்கைய காப்பாத்திட்டிங்க நன்றி.
பதிலளிநீக்கு//ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது
எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது
அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது
குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது//
இன்னும் அஞ்சாறு மாசம் ஊர்லயே இருந்துட்டு வாம்மா.... தங்கச்சி.
பின்னூட்டமே யாரும் இடவில்லை என்ற தங்கள் குறையை போக்க வந்த ஆபத்பாந்தவனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே ;-)
பதிலளிநீக்குநல்லாவும் இருக்கு இளவஞ்சி !!!
பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
பதிலளிநீக்குதலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ இலக்கிய தொடர்புடைய பதிவுன்னு நினைச்சா, வயிறு குலுங்க சிரிக்க வச்சிட்டீங்க இளவஞ்சி.
//இவ்வளவு அற்புதமா ஒன்னும் விளங்காத மாதிரி எழுதுனா என்ன பண்றது?//
பதிலளிநீக்குகுமரன்! ஹிஹி.. என்ன விளையாட்டு இது??
அப்படிப் போடு,
பதிலளிநீக்குஅஞ்சு மாதம் கழிச்சி வந்தா வீடு வீடாவா இருக்கும்? நாலு நாள்ல கப்பு அடிக்கிதுங்கராரூ :-)
ஆஹா! மறுபடியும் நாந்தேன் கொய்யானா?! ரொம்பநாளைக்கு முன்னால மாடரேசனை போட்டுட்டு அதைப்பார்க்காம பின்னூட்டம் வரலைன்னு அன்பு வாசக(!?) நெஞ்சங்களை கேட்டுட்டேனே?! என்னைக்குமே வராத போலிடோண்டு கூட வந்துபோயிருக்காப்புல...என்னே என் அறியாமை!!!
பதிலளிநீக்குஏஜெண்ட்டு அது நீர்தானா? உம்மால மட்டும் எப்படியா அடுத்தவர் பதிவுக்கே ஆப்புவைக்க முடியுது?! அதுசரி..ஏஜெண்ட்டுன்னா அப்படித்தான் போல!
ராகவன், சந்தோசம்.. இந்தவாரம் மயிலாருக்கு ஃபோரம்ல என்சார்பா ஒரு பிஸ்ஸா! :)
என்னார், அங்கனையும் அனுபவம் பேசுதா? கவலைய விடுங்க.. ஒரு சங்கம் போட்டுறலாம்!
சிவா, ஹிஹி.. இந்த இதுக்குத்தான் இங்க அடிக்கடி நான் வரனுங்கறது! நான் போட்ட மாடரேசன் எனக்கே மறந்துருச்சு! நன்றி...
சுதர்சன், அதான் என் ரேஞ்சு தெரிஞ்சு எனக்குநானே 'இலக்கியகபோதி'ன்ங்கற பட்டத்தை வைச்சிருக்கேனே! இதைவிட ஏன் என்னை கேவலப்படுத்தப்பாக்கறீங்க?? :)
ம்ம்ம்.. நற்கீரன் வாயால் புலவர் பட்டம்! :)
அப்டிப்போடு.. உங்க நல்ல மனசுக்கு என்னைக்கும் நல்லா இருக்கனும்!! :) உங்க வீட்டுக்காரருக்கு எங்க பொ.ஊ.அ.சங்கம்(பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பியோர் சங்கம்) உறுப்பினர் சலுகை கொடுக்கிறது!!! நீங்க தங்கச்சிக்கு சொல்லற தகவலை பார்த்தா கண்டிப்பா சேருவாருன்னு நம்பறோம்!! :)
உஷா, தலையில அடிச்சுக்கற நேரத்துல ரசத்துக்கு பெருங்காயம் தாளிச்சுப்போடுவாங்களாங்கற தகவலை கொஞ்சம் சொல்லுங்க!!!
ராம்கி! அனேகமா அது Global Questionன்னு நினைக்கறேன்! :)
பாலா! உங்களோட இந்த நல்ல மனசு இருக்கறவரை நான் எத்தனை டுபாக்கூர் இலக்கியம்வேனா படைக்கலாம் போல!! அடுத்தமுறை அடிவிழும்னு எனக்கு தெரியும்!!! :)
சிபி, இலக்கிய தொடர்புடைய பதிவா? இங்கனயா? வெளங்கீரூம்!!! :)
வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே!
இன்னாபா..? நீ இளக்கியம் எய்தினா மட்டும் வாணான்னுவமா இன்னா?
பதிலளிநீக்கு