என் நெஞ்சில் நிறைந்த அன்பு மருத்துவர் தம்பி இராமனாதனும், நச் கதையில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்த காதல்கோ அருட்பெருங்கோ அவர்களின் மனமுவந்த அழைப்பினை எனக்கு கொடுக்கப்பட்ட ராமனது காலடிகளாய் மகிழ்வோடு ஏற்று இந்த பதிவு. ( ஆஹா! என்னே ஒரு மேடைப்பேச்சு நாகரீகம்! குஸ்ச்ப்பு... கத்துக்கம்மா.... )
When was the last time you did something for the first time?
நேரமில்லாததாலும் பல டேக்குகளை சொதப்பி பல பதிவர்களிடம் துப்பு வாங்கியது படி இதனை செய்ய மனமில்லாததாலும் படம் மட்டும் போட்டுட்டேன். ஏன் பிடிச்சதுங்கற விளக்கம் சொல்லனுமாமில்ல?! அப்பாலிக்கா பின்னாடி வர்றேன். இப்பாலிக்கா சென்னை வண்டிக்கு ஓடறேன்!
====
இப்படம் பிடித்ததற்கான காரணமும் சொல்லிடறேன்...
படத்தில் இருப்பது முதன்முதலில் கடற்கரையை கண்டு மகிழ்ந்த என் அக்கா பையனும் என் பெண்ணும்.
அவர்கள் "எவ்ளோ தண்ணி!!!" என கண்கள் விரிய முகம் மலரக்கேட்ட அந்த கேள்விமட்டும் என் கண்ணில் இன்னும் இருக்கிறது. ஆனால், அதுபோன்றதொரு பரவசத்தை நான் கடைசியாக எப்போது கைக்கொண்டேனென யோசிக்கையில்.. ப்ச்... வளர்ச்சியில் ரசம் போன கண்ணாடியாய் மாறிவிட்ட மனசு எந்த உணர்வுகளையும் நியாயமாய் பிரதிபலிப்பதில்லை தான். அதற்காக குழந்தைகளாக நாம் மாறமுடியுமா என்ன?
ஆளை அடித்து அரைநாள் உட்கார வைக்கிற ஒரு சிறுகதையும், கண்ணோரம் நீர்துளிர்க்கச் செய்யும் ஒரு நல்ல கவிதையும், யாருமே கவனிக்கவில்லை என்றதொரு எண்ணத்தில் நம்மை நடனமிடச்செய்யும் பாடலும், சுருதி சுத்தமாய் நம் சுயம் மறந்து கதறியலும் சக மனிதரின் துக்கமும், உடலும் உள்ளமும் சிலிர்க்க வெடிச்சிரிப்பாய் சிரிக்க ஒரு விசயமும் இந்த உலகத்தில் காணக்கிடைக்காத அரிதான பொருட்களா என்ன? ரசனைகளைத் தொலைத்த நல்லன தேடல் மறந்த மனதோரம் வேலிகள் புதைந்த வாழ்வில் மேற்சொன்னவை நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி வேறென்ன? :)
ஆகவே, Life is calling, Where are you? நான் என் காதுகளை இன்னும் அகலமாக திறந்து வைத்திருக்க முயல்கிறேன் :)
=====
TAG விதிகள்:
1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.
3 பேரை கூப்பிடனுமாம்ல?
1. கைப்புள்ள
2. தீபா
3. திலகபாமா
அப்பீட்டேய்!!!!

புகைப்படம் நல்லாருக்கு
பதிலளிநீக்கு/குஸ்ச்ப்பு... கத்துக்கம்மா.... )/
கேப் ல வெட்டின நல்ல கெடா :)
போட்டோ சும்மா துள்ளுது :)
பதிலளிநீக்குreactions super...
பதிலளிநீக்குஇப்படி impromtuவா குழந்தைகள எடுக்கற படங்களோட அழகே அழகு..
வஞ்சமில்லாம கலக்கிட்டீரு...
நன்னி!
//When was the last time you did something for the first time?//
பதிலளிநீக்குபடமும் இந்த வரியும் ரொம்பப் பொருத்தமா இருக்கு
இந்த புகைப்படத்திற்கு பின்னூட்டமிடாமல் செல்ல மனது வரவில்லை.
பதிலளிநீக்குகுழந்தைங்க முகத்தில என்ன சதோஷம். ரொம்ப நல்லா இருக்கு இளவஞ்சி.
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்குநண்பர்களே,
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி.
இப்படம் பிடித்ததற்கான காரணமும் சொல்லிடறேன்...
படத்தில் இருப்பது முதன்முதலில் கடற்கரையை கண்டு மகிழ்ந்த என் அக்கா பையனும் என் பெண்ணும்.
அவர்கள் "எவ்ளோ தண்ணி!!!" என கண்கள் விரிய முகம் மலரக்கேட்ட அந்த கேள்விமட்டும் என் கண்ணில் இன்னும் இருக்கிறது. ஆனால், அதுபோன்றதொரு பரவசத்தை நான் கடைசியாக எப்போது கைக்கொண்டேனென யோசிக்கையில்.. ப்ச்... வளர்ச்சியில் ரசம் போன கண்ணாடியாய் மாறிவிட்ட மனசு எந்த உணர்வுகளையும் நியாயமாய் பிரதிபலிப்பதில்லை தான். அதற்காக குழந்தைகளாக நாம் மாறமுடியுமா என்ன?
ஆளை அடித்து அரைநாள் உட்கார வைக்கிற ஒரு சிறுகதையும், கண்ணோரம் நீர்துளிர்க்கச் செய்யும் ஒரு நல்ல கவிதையும், யாருமே கவனிக்கவில்லை என்றதொரு எண்ணத்தில் நம்மை நடனமிடச்செய்யும் பாடலும், சுருதி சுத்தமாய் நம் சுயம் மறந்து கதறியலும் சக மனிதரின் துக்கமும், உடலும் உள்ளமும் சிலிர்க்க வெடிச்சிரிப்பாய் சிரிக்க ஒரு விசயமும் இந்த உலகத்தில் காணக்கிடைக்காத அரிதான பொருட்களா என்ன? ரசனைகளைத் தொலைத்த நல்லன தேடல் மறந்த மனதோரம் வேலிகள் புதைந்த வாழ்வில் மேற்சொன்னவை நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி வேறென்ன? :)
ஆகவே, Life is calling, Where are you? நான் என் காதுகளை இன்னும் அகலமாக திறந்து வைத்திருக்க முயல்கிறேன் :)
//நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி வேறென்ன?//
பதிலளிநீக்குகடல் மாதிரி உங்க கருத்தும் போக போக ஆழமாயிடுதுங்க...
அழகான படங்கள். குழந்தையின் முகத்தைப் பாருங்கள். அடடா... என்ன ஒரு கும்மாளம்.
பதிலளிநீக்குபுடிச்ச படம் போடச் சொன்னதுக்கு...
காமரால புடிச்ச படம்...
உங்களுக்குப் புடிச்ச படம்...
பாத்த எங்களுக்கும் புடிச்ச படமால்ல போட்டுட்டீங்க! :)
//ஆகவே, Life is calling, Where are you? நான் என் காதுகளை இன்னும் அகலமாக திறந்து வைத்திருக்க முயல்கிறேன் :)//
பதிலளிநீக்குஅமர்க்களம்...
//ஆளை அடித்து அரைநாள் உட்கார வைக்கிற ஒரு சிறுகதையும், கண்ணோரம் நீர்துளிர்க்கச் செய்யும் ஒரு நல்ல கவிதையும், யாருமே கவனிக்கவில்லை என்றதொரு எண்ணத்தில் நம்மை நடனமிடச்செய்யும் பாடலும், சுருதி சுத்தமாய் நம் சுயம் மறந்து கதறியலும் சக மனிதரின் துக்கமும், உடலும் உள்ளமும் சிலிர்க்க வெடிச்சிரிப்பாய் சிரிக்க ஒரு விசயமும் இந்த உலகத்தில் காணக்கிடைக்காத அரிதான பொருட்களா என்ன? ரசனைகளைத் தொலைத்த நல்லன தேடல் மறந்த மனதோரம் வேலிகள் புதைந்த வாழ்வில் மேற்சொன்னவை நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி//
பதிலளிநீக்குவணக்கம்.அற்புதமான வரிகள்,
அண்ணே, கேட்டதுக்கு ச்சும்மா நச்சுனு ஒரு படத்தப் போட்டிருக்கீங்க…
பதிலளிநீக்குகொழந்தைங்க சிரிப்பும், கடல் பின்னணியும் கலக்கல்!!!
தல அப்படியே மனசை அள்ளுது படம் ;)))
பதிலளிநீக்குஇளா, ஜீரா, சுட்ஜீ, கண்ணன், அருட்பெருங்கோ, கோபி,
பதிலளிநீக்குவருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
படம், குறிப்பு எல்லாம் சுத்த இளவஞ்சித்தனமா இருக்கு.
பதிலளிநீக்கும்ம்..