பதிவுலக நண்பர்களுக்கு எப்படித்தான் நன்றி சொல்லறதுன்னு தெரியலை! என்னத்த எழுதறதுன்னு தெரியாம கோட்டி புடிச்சபடி நம்ம மக்கா எல்லாம் பேரரசு கிட்ட மாட்டுன பரத் குத்துப்பாட்டுக்கு ஆடுற கணக்கா கணக்கு வழக்கில்லாம வகைதொகையில்லாம அடிச்சாடுறதை காதுகளில் பொகையோடு படிச்சபடி இருக்கற என்னைய கூப்புட்டு புடிச்ச படம் போடுங்க.. புடிச்ச பதிவு ஒன்னு சொல்லுங்கன்னு சொல்லி என் வயத்துல பாலை வார்க்கறாக. அதை சாக்கா வைச்சே இந்த வருசம் ரெண்டு பதிவு தேத்திட்டேன்! :) இருந்தாலும் இந்த தொடர் வெளாட்டுக்குன்னு எழுதறது நெசமாவே தாவு தீருது!
அழைப்பு வைத்த தருமிசாருக்கு நன்றிகள்! போனவருசம் நான் எழுதுனதுல எனக்குப்பிடிச்சது எதுன்னு சொல்லனுமாம்.
எனது மூன்றாண்டு கால பதிவுலக வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் என் எழுத்துப் பணிக்கான (ஹிஹி.. ) கடின உழைப்பு என்பது கழுத தேஞ்சு கட்டெரும்பு ஆன... வேணாம் ரொம்ப பழசு... புரட்சித் திருமா தேய்ஞ்சு நடிகர் திருமா ஆன... வேணாம் வெவகார மேட்டரு... என்னாத்துக்கு எதுக மொகன? நேராவே சொல்லிடறேன்... 2005ல 50 பதிவுக... 2006ல 32 பதிவுக.. 2007ல 21 பதிவுக.. என்னா ஒரு வேகம்.. முன்னேத்தம் பாருங்க... இதுல இந்த வெளங்காத பதிவையும் ஞாபகம் வைச்சுக்கூப்பிட்ட வலைஞர்களுக்கு நன்றி!
எழுதுனதே 21! அதுல பாதி புகைப்பட பதிவுகள். இதுல எது எனக்குப்புடிச்ச பதிவுங்கறதெல்லாம் கொஞ்சம் ஓவரான கேள்விதான். இருந்தாலும் சுயபீத்தலுக்கு ஒரு வாய்ப்பு கெடச்சதை விட்டுட முடியுமா?
போன வருசம் மே மாசம் எழுதுன ரிசர்வேஷன் கதைதான் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஏன்னு சொல்லத் தெரியலை. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை அதை ஒரே ஃப்ளோல ஒரே சிட்டிங்கல மத்த எல்லாப் பதிவுக மாதிரிதான் அதையும் எழுதுனேன். இருந்தாலும் சொல்ல வந்த விசயத்தை குழப்பமில்லாம தெளிவா சொல்லமுடிஞ்சதுதான் அதில் எனக்கு கிடைச்ச சந்தோசம்னு நினைக்கறேன். :)
இக்குளியூண்டு பதிவு போடறதுக்கு எனக்கே ஒரு மாதிரி இருக்கு! அதனால எயித சரக்கில்லாத நேரத்தில் கைகொடுக்கும் புகைப்படத்தில் ஒன்றையும் மேல போட்டுகிறேன். இவிங்கெல்லாம் என்னோட மணப்பாறை சகாக்கள். ஜிம்மி உட்பட... "ஐஸ்பாய் வெள்ளாடலாம் வாங்கண்ணே"ன்னு கூப்டுகினு போயி முதுக பலுக்கிட்டானுவ...
அடுத்து கூப்பிட விரும்பும் 5 பேரு:
1. சுதர்சன் கோபால் - தம்பி இப்போல்லாம் இங்கிலீசு பிளாகு மட்டுந்தேன் எயிதுவேன்னு விடற பன்னாட்டு தாங்கலை! விட்டுருவமா?
2. ஜீரா - ஆளு ஸ்விஸ் போயி கொளுக்மொளுக்னு அம்சமா ஆயிட்டாப்புல.. சும்மாவே இந்தாளோட ஆட்டம் பெங்களூரூ தாங்காது!
3. ராமச்சந்திரன் உஷா - யக்கோவ்.... இப்ப நீங்க இருக்கறது துபையா.. மஸ்கிட்டா? அபிதாபியா?
4. துளசியக்கா - நீங்க எழுதறது எல்லாமே புடிச்ச பதிவுதான்.. இருந்தாலும் இதச்சொல்லி ஜகா வாங்காதீங்க...
5. இகொ - இன்னேரத்துக்கு இவரை பலபேரு கூப்பிட்டிருப்பாய்ங்க.. இருந்தாலும் என் சார்புல நானும்...
அவ்ளவ்தான் மேட்டரு!
வாத்தி,
பதிலளிநீக்குநமக்கு புடிச்சது என்னவோ வென்று வாடி மகளேதான்
ஆனாலும் வலைப்பதிவில் ரொம்ப ஆக்டிவா இல்லைன்னு காமிக்க எம்புட்டு கஷ்டப்படறீருய்யா!!
பதிலளிநீக்கு//2. ஜீரா - ஆளு ஸ்விஸ் போயி கொளுக்மொளுக்னு அம்சமா ஆயிட்டாப்புல..//
அவரு என் கிட்ட நெதர்லாந்துன்னு இல்ல சொன்னாரு! :)
//ராமச்சந்திரன் உஷா - யக்கோவ்.... இப்ப நீங்க இருக்கறது துபையா.. மஸ்கிட்டா? அபிதாபியா?//
அவங்க இருக்கிறது மோடியகம் அப்படின்னு இல்ல சொன்னாங்க.
//துளசியக்கா - நீங்க எழுதறது எல்லாமே புடிச்ச பதிவுதான்.. இருந்தாலும் இதச்சொல்லி ஜகா வாங்காதீங்க...//
நான் இவங்களை புடிச்ச படம் பதிவுக்கு கூப்பிட்டேன். அதே இன்னும் வரலை.
//5. இகொ - இன்னேரத்துக்கு இவரை பலபேரு கூப்பிட்டிருப்பாய்ங்க.. இருந்தாலும் என் சார்புல நானும்...//
கடைசியில் இ.வா. நாந்தேன் மாட்டுனேனாக்கும். சரி போடறேன். விரைவில். ஆனா அப்பவாவது வந்து 'படிச்சுட்டு' பின்னூட்டம் போடணும் சொல்லிட்டேன். :))
தங்கள் உத்தரவின் படி என் 2007 பதிவுகளைப் பற்றிப் போடத் தொடங்கியாயிற்று . (ஆமாம் தொடங்கத்தான் செஞ்சிருக்கேன், இன்னும் முடியலை!)
பதிலளிநீக்குஇளா,
பதிலளிநீக்குநன்றின்னேன்!
இகொ,
நான் வலைப்பதிவில் நெம்ப ஆக்டிவ்வா இருக்கேன்னு காட்டறதுக்காக இப்படி எழுதுனா நீங்க இல்லைன்னு காமிக்கறதுக்குன்னு சொல்லறீங்க! :) என்ன ஒலகமப்பா இது?!
கூப்பிட்டவுக பத்தின மேலதிக தகவல்களுக்கு நன்றி. உங்க சைடு வர்றேன்...
\\இருந்தாலும் சொல்ல வந்த விசயத்தை குழப்பமில்லாம தெளிவா சொல்லமுடிஞ்சதுதான் அதில் எனக்கு கிடைச்ச சந்தோசம்னு நினைக்கறேன். :)\\
பதிலளிநீக்குரைட்டு தல ;))
தல நம்ம இளா அண்ணே சொன்ன பதிவையும் படிச்சேன்.
பதிலளிநீக்குஆனா பாருங்க எனக்கு பிடித்த பதிவு அந்த ஒரு புள்ளி பதிவு தான். அதிலும் உங்களின் தனித்துவம் இருக்கும் தல.:)
வஞ்சியாரே போட்டாச்சு.
பதிலளிநீக்குமோடியின் ராஜ்ஜியத்தில் இருந்து,
உஷா
நான் விரும்பிப் படித்தது பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்தான்.
பதிலளிநீக்கு