முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புடிச்ச படமொன்னு போடனுமாமில்ல!?

என் நெஞ்சில் நிறைந்த அன்பு மருத்துவர் தம்பி இராமனாதனும், நச் கதையில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்த காதல்கோ அருட்பெருங்கோ அவர்களின் மனமுவந்த அழைப்பினை எனக்கு கொடுக்கப்பட்ட ராமனது காலடிகளாய் மகிழ்வோடு ஏற்று இந்த பதிவு. ( ஆஹா! என்னே ஒரு மேடைப்பேச்சு நாகரீகம்! குஸ்ச்ப்பு... கத்துக்கம்மா.... )

When was the last time you did something for the first time?



நேரமில்லாததாலும் பல டேக்குகளை சொதப்பி பல பதிவர்களிடம் துப்பு வாங்கியது படி இதனை செய்ய மனமில்லாததாலும் படம் மட்டும் போட்டுட்டேன். ஏன் பிடிச்சதுங்கற விளக்கம் சொல்லனுமாமில்ல?! அப்பாலிக்கா பின்னாடி வர்றேன். இப்பாலிக்கா சென்னை வண்டிக்கு ஓடறேன்!

====

இப்படம் பிடித்ததற்கான காரணமும் சொல்லிடறேன்...

படத்தில் இருப்பது முதன்முதலில் கடற்கரையை கண்டு மகிழ்ந்த என் அக்கா பையனும் என் பெண்ணும்.

அவர்கள் "எவ்ளோ தண்ணி!!!" என கண்கள் விரிய முகம் மலரக்கேட்ட அந்த கேள்விமட்டும் என் கண்ணில் இன்னும் இருக்கிறது. ஆனால், அதுபோன்றதொரு பரவசத்தை நான் கடைசியாக எப்போது கைக்கொண்டேனென யோசிக்கையில்.. ப்ச்... வளர்ச்சியில் ரசம் போன கண்ணாடியாய் மாறிவிட்ட மனசு எந்த உணர்வுகளையும் நியாயமாய் பிரதிபலிப்பதில்லை தான். அதற்காக குழந்தைகளாக நாம் மாறமுடியுமா என்ன?

ஆளை அடித்து அரைநாள் உட்கார வைக்கிற ஒரு சிறுகதையும், கண்ணோரம் நீர்துளிர்க்கச் செய்யும் ஒரு நல்ல கவிதையும், யாருமே கவனிக்கவில்லை என்றதொரு எண்ணத்தில் நம்மை நடனமிடச்செய்யும் பாடலும், சுருதி சுத்தமாய் நம் சுயம் மறந்து கதறியலும் சக மனிதரின் துக்கமும், உடலும் உள்ளமும் சிலிர்க்க வெடிச்சிரிப்பாய் சிரிக்க ஒரு விசயமும் இந்த உலகத்தில் காணக்கிடைக்காத அரிதான பொருட்களா என்ன? ரசனைகளைத் தொலைத்த நல்லன தேடல் மறந்த மனதோரம் வேலிகள் புதைந்த வாழ்வில் மேற்சொன்னவை நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி வேறென்ன? :)

ஆகவே, Life is calling, Where are you? நான் என் காதுகளை இன்னும் அகலமாக திறந்து வைத்திருக்க முயல்கிறேன் :)

=====


TAG விதிகள்:


1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.

3 பேரை கூப்பிடனுமாம்ல?

1. கைப்புள்ள
2. தீபா
3. திலகபாமா


அப்பீட்டேய்!!!!

கருத்துகள்

  1. புகைப்படம் நல்லாருக்கு

    /குஸ்ச்ப்பு... கத்துக்கம்மா.... )/

    கேப் ல வெட்டின நல்ல கெடா :)

    பதிலளிநீக்கு
  2. reactions super...

    இப்படி impromtuவா குழந்தைகள எடுக்கற படங்களோட அழகே அழகு..

    வஞ்சமில்லாம கலக்கிட்டீரு...

    நன்னி!

    பதிலளிநீக்கு
  3. //When was the last time you did something for the first time?//

    படமும் இந்த வரியும் ரொம்பப் பொருத்தமா இருக்கு

    பதிலளிநீக்கு
  4. இந்த புகைப்படத்திற்கு பின்னூட்டமிடாமல் செல்ல மனது வரவில்லை.

    பதிலளிநீக்கு
  5. குழந்தைங்க முகத்தில என்ன சதோஷம். ரொம்ப நல்லா இருக்கு இளவஞ்சி.

    பதிலளிநீக்கு
  6. நண்பர்களே,

    உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி.

    இப்படம் பிடித்ததற்கான காரணமும் சொல்லிடறேன்...

    படத்தில் இருப்பது முதன்முதலில் கடற்கரையை கண்டு மகிழ்ந்த என் அக்கா பையனும் என் பெண்ணும்.

    அவர்கள் "எவ்ளோ தண்ணி!!!" என கண்கள் விரிய முகம் மலரக்கேட்ட அந்த கேள்விமட்டும் என் கண்ணில் இன்னும் இருக்கிறது. ஆனால், அதுபோன்றதொரு பரவசத்தை நான் கடைசியாக எப்போது கைக்கொண்டேனென யோசிக்கையில்.. ப்ச்... வளர்ச்சியில் ரசம் போன கண்ணாடியாய் மாறிவிட்ட மனசு எந்த உணர்வுகளையும் நியாயமாய் பிரதிபலிப்பதில்லை தான். அதற்காக குழந்தைகளாக நாம் மாறமுடியுமா என்ன?

    ஆளை அடித்து அரைநாள் உட்கார வைக்கிற ஒரு சிறுகதையும், கண்ணோரம் நீர்துளிர்க்கச் செய்யும் ஒரு நல்ல கவிதையும், யாருமே கவனிக்கவில்லை என்றதொரு எண்ணத்தில் நம்மை நடனமிடச்செய்யும் பாடலும், சுருதி சுத்தமாய் நம் சுயம் மறந்து கதறியலும் சக மனிதரின் துக்கமும், உடலும் உள்ளமும் சிலிர்க்க வெடிச்சிரிப்பாய் சிரிக்க ஒரு விசயமும் இந்த உலகத்தில் காணக்கிடைக்காத அரிதான பொருட்களா என்ன? ரசனைகளைத் தொலைத்த நல்லன தேடல் மறந்த மனதோரம் வேலிகள் புதைந்த வாழ்வில் மேற்சொன்னவை நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி வேறென்ன? :)

    ஆகவே, Life is calling, Where are you? நான் என் காதுகளை இன்னும் அகலமாக திறந்து வைத்திருக்க முயல்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  7. //நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி வேறென்ன?//
    கடல் மாதிரி உங்க கருத்தும் போக போக ஆழமாயிடுதுங்க...

    பதிலளிநீக்கு
  8. அழகான படங்கள். குழந்தையின் முகத்தைப் பாருங்கள். அடடா... என்ன ஒரு கும்மாளம்.

    புடிச்ச படம் போடச் சொன்னதுக்கு...

    காமரால புடிச்ச படம்...
    உங்களுக்குப் புடிச்ச படம்...
    பாத்த எங்களுக்கும் புடிச்ச படமால்ல போட்டுட்டீங்க! :)

    பதிலளிநீக்கு
  9. //ஆகவே, Life is calling, Where are you? நான் என் காதுகளை இன்னும் அகலமாக திறந்து வைத்திருக்க முயல்கிறேன் :)//

    அமர்க்களம்...

    பதிலளிநீக்கு
  10. //ஆளை அடித்து அரைநாள் உட்கார வைக்கிற ஒரு சிறுகதையும், கண்ணோரம் நீர்துளிர்க்கச் செய்யும் ஒரு நல்ல கவிதையும், யாருமே கவனிக்கவில்லை என்றதொரு எண்ணத்தில் நம்மை நடனமிடச்செய்யும் பாடலும், சுருதி சுத்தமாய் நம் சுயம் மறந்து கதறியலும் சக மனிதரின் துக்கமும், உடலும் உள்ளமும் சிலிர்க்க வெடிச்சிரிப்பாய் சிரிக்க ஒரு விசயமும் இந்த உலகத்தில் காணக்கிடைக்காத அரிதான பொருட்களா என்ன? ரசனைகளைத் தொலைத்த நல்லன தேடல் மறந்த மனதோரம் வேலிகள் புதைந்த வாழ்வில் மேற்சொன்னவை நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி//
    வணக்கம்.அற்புதமான வரிகள்,

    பதிலளிநீக்கு
  11. அண்ணே, கேட்டதுக்கு ச்சும்மா நச்சுனு ஒரு படத்தப் போட்டிருக்கீங்க…
    கொழந்தைங்க சிரிப்பும், கடல் பின்னணியும் கலக்கல்!!!

    பதிலளிநீக்கு
  12. தல அப்படியே மனசை அள்ளுது படம் ;)))

    பதிலளிநீக்கு
  13. இளா, ஜீரா, சுட்ஜீ, கண்ணன், அருட்பெருங்கோ, கோபி,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  14. படம், குறிப்பு எல்லாம் சுத்த இளவஞ்சித்தனமா இருக்கு.
    ம்ம்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு...

குலசை தசரா 2009 - புகைப்படங்கள்

ம க்கா நீங்க போன வருசம் நான் போயிட்டு வந்து பீத்திக்கின குலசை ட்ரிப்பை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். அருமைத்தம்பி ஆதி க்கும் அவிங்க வீட்டாருக்கும் அபார நியாபக மறதி! போன வருசம் நாங்க ஒரு செட்டாப்போயி கொடுத்த ஹிம்சைகளை அப்படியே அழிலப்பரு போட்டு அழிச்சாப்படி மறந்துட்டாய்ங்க. அதோட இல்லாம இந்த வருசமும் 10 பேர ஜமாவோட நாலு நாளைக்கு டிக்கெட்டோட அழைப்பு வைச்சாப்படி ஆதி. விடுவனா?! போட்டோ புடிக்கறமோ இல்லையோ இளவட்டங்களோட ஒரு செட்டா வேளாவேலைக்கு கொட்டிக்கிட்டு கெணத்தடில ஆனந்தக்குளியல் போட்டுக்கிட்டு போரடிச்சா அங்கங்க குத்தவைச்சு பொங்கல் போட்டாப்படி நாலுநாள் எந்த இம்சைகளும் இல்லாம (பார்றா... ஒரு இம்சையே இம்சை என்கிறதே! ஆச்சர்யக்குறி! ) கேமராவும் கையுமா வாழ வைச்சதுக்கே அவருக்கு கொட்டிக் குடுக்கனும். இருந்தாலும் தமிழர் வழக்கப்படி ஒரு தாங்க்ஸ் மட்டும் மனசார சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாய்கினோம் :) இந்தமுறையும் செல்வபிரகாஷ் , ஜெய்சிங் , நாதன் போன்ற பெரிய புகைப்படக்காரர்களும் வந்திருந்தாங்க. அவங்க கூட ஜமா போட்டு சுத்துன பிஸ்துக யாருன்னா மாப்ள சீவியாரு , வினோத்து , கவுஜர் லக்ஸ் மற்றும் கோகுல் . இவ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...