முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதிரிப் (புகைப்)படங்கள்



தலைகீழாகத்தான் இருக்கு உலகம்
காதலில் இருக்கையில்.

In Love, World is upside down!

மாட்டுக்கும் மனுசனுகும்
மவுசும் பவுசும்.

Chennai Sangamam 2009


எதிர்காலம் விற்பனைக்கு
நிகழ்காலம் கட்டணம்

Fortunately Unfortunate!

பாதியைக் காணோமேன்னுட்டு வருந்தறவன் இறந்தகாலம் தாண்டறதில்லை.
மீதி இருக்கேன்னுட்டு குஜாலாகறவன் தேங்கி நிக்கறதில்லை!

Those Early days... mmm...

மசினகுடியில் ஒரு மப்புகுடி... பாட்டிலு அவுட்டாப் ஃபோகஸ்ல இருக்கறதுக்கு காரணம்.. ஹிஹி...

Batchelors meet


ஹேங் ஓவர்..
கூழானாலும் குளித்துக் குடி
குவாட்டரானாலும் அளவாய் அடி

Hangover!!!


அடையார் இரட்சகர்...

Ghandinagar Church, Adyar


ரேபனுக்கா? கோல்கேட்டுக்கா?

Close-Up or Ray-Ban ?!


மதுரை தெப்பக்குளத்தினுள் ஒரு அமேசான் காடுகள்...

Madurai Temple Pool - A Google view :)


கட உள்...

Madurai Temple Statue

தனிமையில் தனி மயில்...

Loneliness in the Crowd

எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

கருத்துகள்

  1. //கட உள்.//

    எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!! //


    கலக்கல்

    :))

    தனிமையில் தனி மயில் சூப்பரூ

    எல்லாரும் ஒன் நிமிட்டு இங்க பாருங்கன்னு சொல்லி கூட எடுத்திருக்கலாம் அந்த ஸ்டில்லு :))))

    பதிலளிநீக்கு
  2. வாத்தி,

    கடைசி படம் சான்ஸே இல்லே!!! அட்டகாசம்... :)

    அதை எங்கன எடுத்தீங்க???

    பதிலளிநீக்கு
  3. அழகு..கோயிலில் போய் எடுக்கற படமெல்லாம் கூட கொஞ்சம் அழகு.. :)

    பதிலளிநீக்கு
  4. ஆயில்யன்,

    டாங்ஸ் :)

    // எல்லாரும் ஒன் நிமிட்டு இங்க பாருங்கன்னு சொல்லி கூட எடுத்திருக்கலாம் // எடுத்திருக்கலாம். ஆனா தனிமயிலின் சோகப்பார்வை கிடைத்திருக்காதே!? :)

    ராயல்,

    கடைசி படமும் உங்க ஊரு மதுர கோவில்ல எடுத்ததுதான். சுற்றுலா வந்த பசங்களை அவங்களுக்கு தெரியாம எடுக்கலாம்னு பார்த்தா.. ஒரு பய மட்டும் என்னை இப்படி மெரட்டிப்புட்டான்! :)

    முத்துலெட்சுமி,

    ஊக்கங்களுக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  5. எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

    ////

    நம்ம ஊரு பயலுக்கே இருக்குற குசும்பு தான்
    எல்லா போட்டோவும் நச்

    பதிலளிநீக்கு
  6. கடைசி படம் அருமை.

    தனிமயில் சோகம் கிடைச்சு இருக்காது சரி தான். அந்த சோகத்தை பொட்டிக்கு அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம். ஏமாத்திட்டிங்க..

    பதிலளிநீக்கு
  7. ஆசானே வழக்கம்f போல எல்லா படமும் கலக்கல் ;)

    ரேபனுக்கா? கோல்கேட்டுக்கா?,அமேசான் காடுகள், தனி மயில், கட உள்.. அட்டகாசம் ;)

    பதிலளிநீக்கு
  8. அமேசான் காடுகள்,//கட உள்.//

    எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!! நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. பாலா, நிலாம்மா, மாதேவி, கோபியார்,

    ஊக்கங்களுக்கு நன்றி! :)

    நாகைசிவா,

    // அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம்.//

    என்னய்யா சொல்லுதீரு?! போட்டோ ஒன்னு பிடிச்சுருக்கலாம்னுதானே? படம் புடிச்ச ஊரு மதுர... திரும்புங்கன்னு சொல்லியிருந்தா நான் பப்படம்தான்! :)

    பதிலளிநீக்கு
  10. //நாகை சிவா said...
    கடைசி படம் அருமை.

    தனிமயில் சோகம் கிடைச்சு இருக்காது சரி தான். அந்த சோகத்தை பொட்டிக்கு அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம். ஏமாத்திட்டிங்க..
    //
    ஆமாம் அண்ணாச்சி!

    சோகத்துக்கு சோகமும் ஆச்சு!

    சந்தோஷத்துக்கு சந்தோஷமும் ஆச்சு !!

    இப்ப எம்புட்டு பேரு சோகமா இருக்கோம் தெரியுதா....?!!

    :)))

    பதிலளிநீக்கு
  11. // ஹேங் ஓவர்..
    கூழானாலும் குளித்துக் குடி
    குவாட்டரானாலும் அளவாய் அடி //

    ஆஹா என்னா தத்துவம் என்னா தத்துவம்

    எல்லாப்படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  12. மூணாவது புரியரதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு எனக்கு - (கைரேகை எண்கணிதம் சாமுத்ரிகா பாக்க வரைக்கும்) கமென்டும் சூப்பர்.
    கடைசி இரண்டு காட்டு டைமிங் - எப்படி எப்படி அந்த இன்ஸ்டன்ட பிடிக்க முடியுது? செம டைமிங்.
    தெப்பக்குள அமேசான் - அமேசிங் கற்பனை :)

    பதிலளிநீக்கு
  13. வாத்தியார்,
    ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்தேன்.. வெறும் புகைப்படப் பதிவாவே போட்டுத் தள்ளறீங்க போலிருக்கு... photo blogஆ ஆக்கிட்டீங்களா! :(

    பதிலளிநீக்கு
  14. மக்கள்ஸ்,

    ஊக்கங்களுக்கு நன்றி! :)

    மதுரா,

    நன்றி! :)

    // எப்படி எப்படி அந்த இன்ஸ்டன்ட பிடிக்க முடியுது? //

    எப்படியாச்சும் ஒரு நல்ல ஸ்டில் கிடைக்கும்னு தோணிட்டா அங்கனயே தேவுடு காக்கறதுதான்! :)

    வாம்மா பொன்ஸ்!! நல்லா இருக்கறீங்களா?

    // photo blogஆ ஆக்கிட்டீங்களா! //

    ஹிஹி... இப்பவெல்லாம் புதுச்சா எழுதற அளவுக்கு புத்தி வேலை செய்யறதில்லை... புத்தி படமெடுக்க போயிருச்சு.. கொஞ்சநாளா அதுவும் தேக்கமாயிருச்சு.. கற்பனைவறட்சில மாட்டிக்கினுகீறேன்னு நினைக்கறேன் :)

    அட்லீஸ்ட், ப்ளாகுகளை படிச்சாவது நானும் ரவுடிதான்னு காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கறேன்! :)

    ஊருக்கு வந்தாச்சா?

    பதிலளிநீக்கு
  15. யப்பா. என்னா ப்ரெஷ்ஷா இருக்கு. மதுரையிலே பொறக்கலையே? :-(

    பதிலளிநீக்கு
  16. லக்கியாரே,

    // மதுரையிலே பொறக்கலையே? :-( //

    ஏனிந்த கொலைவெறி?! பல்லுல்ல பய எங்கன வேணாலும் பட்டாணி கடிக்கலாம்! சென்னை மைனரு நீர் பார்காததா?! :)

    பதிலளிநீக்கு
  17. ஒண்ணு தெரியுதுப்பா. காமிராவை நீங்க பிரியறதில்ல:)
    அடெங்கப்பா, எத்தனை எக்ஸ்ப்ரஷன்ஸ்!!!

    அந்தப் பொண்ணு பாய்ஃப்ரண்டைத்தேடுதோ என்னவோ.

    சரியாப் புடிச்சான் அந்தப் பையன் உங்களை. என்ன சவால் அவன் கண்களில்!!!!
    மொத்தமும் சூப்பர் இளவஞ்சி.

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப லேட்டான பின்னூட்டம்... இருந்தாலும் பரவாயில்லை... உங்க பதிவு எல்லாம் இப்பத்தான் படிச்சேன்... உடனே, அந்த புதின சாதம் செஞ்சேன்... soooopppperrrr போங்க...

    பதிலளிநீக்கு
  19. போட்டோக்களுக்கு பொருத்தமா கமெண்ட்ஸ்! அருமை! ​சென்ஷி - அவார்ட்ல உங்கள் அறிமுகம் கிடைச்சது
    சீக்கிரம் புலிட்சர் அவார்ட் வாங்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...