என் நெஞ்சில் நிறைந்த அன்பு மருத்துவர் தம்பி இராமனாதனும் , நச் கதையில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்த காதல்கோ அருட்பெருங்கோ அவர்களின் மனமுவந்த அழைப்பினை எனக்கு கொடுக்கப்பட்ட ராமனது காலடிகளாய் மகிழ்வோடு ஏற்று இந்த பதிவு. ( ஆஹா! என்னே ஒரு மேடைப்பேச்சு நாகரீகம்! குஸ்ச்ப்பு... கத்துக்கம்மா.... ) When was the last time you did something for the first time? நேரமில்லாததாலும் பல டேக்குகளை சொதப்பி பல பதிவர்களிடம் துப்பு வாங்கியது படி இதனை செய்ய மனமில்லாததாலும் படம் மட்டும் போட்டுட்டேன். ஏன் பிடிச்சதுங்கற விளக்கம் சொல்லனுமாமில்ல?! அப்பாலிக்கா பின்னாடி வர்றேன். இப்பாலிக்கா சென்னை வண்டிக்கு ஓடறேன்! ==== இப்படம் பிடித்ததற்கான காரணமும் சொல்லிடறேன்... படத்தில் இருப்பது முதன்முதலில் கடற்கரையை கண்டு மகிழ்ந்த என் அக்கா பையனும் என் பெண்ணும். அவர்கள் "எவ்ளோ தண்ணி!!!" என கண்கள் விரிய முகம் மலரக்கேட்ட அந்த கேள்விமட்டும் என் கண்ணில் இன்னும் இருக்கிறது. ஆனால், அதுபோன்றதொரு பரவசத்தை நான் கடைசியாக எப்போது கைக்கொண்டேனென யோசிக்கையில்.. ப்ச்... வளர்ச்சியில் ரசம் போன கண்ணாடியாய் மாறிவிட்ட மனசு எந்த உணர்வுகள...