அனிச்சையாய் திரும்பும் தலைகளின்
கீழ்வெட்டுப்பார்வைகள் சிதறிக்கிடக்கின்றன
அவ்வீட்டின் முற்றத்தில்
தெருவையடைத்து அவள் போட்டுச்சென்ற
கோலம் மிதிபட்டு சிதைந்து
வெறும் வண்ணத்தீற்றலாய்
பறிக்கப்படாத ஜாதிமல்லி
தரையில் உதிர்ந்து இன்னும்
மணம் பரப்பிக்கொண்டு
இருக்கிறது
இதுவரை இருந்த உறவுகள் மறந்து
தராதரங்கள் அலசப்படுகின்றன
தெருமுழுதும்
இரவில் கேட்கும் கேவல்கள்
சோகத்தை மீறிய அவமானத்தை
விழுங்க முயன்ற தோல்விகளை
ரகசியமாய் அறிவிக்கின்றன
எதிரியின் இழவுக்கும் துக்கம் கேட்கலாம்
வெறிச்சிடும் வீட்டில் பசித்த ஜிம்மியின்
ஊளைச்சத்தம் மட்டுமே
அவள் விட்டுச்சென்ற புடவைகளும்
பாட புத்தகங்களும் அங்கு
எதை உணர்த்தும் இனி?
நம்பத்தான் மறுக்கிறது மனது
எவனோ ஒரு பொறம்போக்கு
அந்த அழகுதேவதையை இன்னேரம்
அனுபவித்துக்கொண்டிருப்பான்
என்பதை
www.ilavanji.com
ஆகா! கெளம்பிட்டாங்கைய்யா!கெளம்பிட்டாங்க!
பதிலளிநீக்குஎன்னாச்சு இளவஞ்சி....ரொம்ப feel பண்ணி இருக்கீங்க!
இளவஞ்சி!
பதிலளிநீக்குஅந்த ஜிம்மியை மறக்க மாட்டீர்கள் போலுள்ளதே. ஆனால் இது நான் மறந்து விட விரும்பும் ஒன்றை எனக்கு திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. சிலவேளை இன்னொரு பதிவு பிறக்கலாம் இந்த ஜிம்மியை வைத்து.
அண்ணே, பட்டைய கிளப்புறீங்களண்ணே... கலக்கல்...
பதிலளிநீக்குவசந்தன் கேட்ட அதே கேள்வி... ஜிம்மிய விடமாட்டீங்களா?
மணி, Feeling எல்லாம் இல்லை. ஓடிப்போன ஒரு பெண்ணின் பக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு வயசுப்பையனின் மனநிலையில் இதை எழுதினேன்.
பதிலளிநீக்குவசந்தன்: மறக்ககூடியதா ஜிம்மிக்கும் எனக்கும் உள்ள பாசப்பிணைப்பு? :) மறக்காம ஜிம்மி பற்றிய உங்க பதிவையும் போடுங்க...
விஜய்:என்ன செய்வது? எங்க வீட்டுல இதுவரை இருந்த, இருக்கும் 4 பைரவர்களுக்குமே ஜிம்மினுதான் பேரு! அதனாலெ இது ஆகுபெயராகவே ஆகிடுச்சி :)
உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
எல்லாம் நல்லாத்தான் இருக்கு
பதிலளிநீக்குஆனா அந்த கடைசி ரெண்டு வரி
கொஞ்சம் கவிதையோட அழக கெடுக்குது.
மத்தபடி சூப்பர் கண்ணா சூப்பர்
இளவஞ்சி!
பதிலளிநீக்குநீங்கள் கேட்டபடி ஜிம்மி புராணத்த என்ர பதிவில போட்டிட்டன்.
அவள் விட்டுச்சென்ற புடவைகளும்
பதிலளிநீக்குபாட புத்தகங்களும் அங்கு
எதை உணர்த்தும் இனி?
இந்த வரிகளை ரொம்ப ரசித்தேன்.
(இந்த வரிகளுடன் கவிதை முடிந்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ என்று ஒரு சின்ன எண்ணம்).
கவிதையில் வரும் பக்கத்து வீட்டுப் பையன் அந்தப் பெண்ணின் வீட்டாருக்காகப் பரிதாபப்படுகிறாரா இல்லை பெண் தனக்கு கிடைக்கவில்லை என்று குமைகிறாரா?
பதிலளிநீக்கு//நம்பத்தான் மறுக்கிறது மனது
எவனோ ஒரு பொறம்போக்கு
அந்த அழகுதேவதையை இன்னேரம்
அனுபவித்துக்கொண்டிருப்பான்
என்பதை//
பொறம்போக்கு, அனுபவித்துக் கொண்டிருப்பான் என்ற சொற்கள் மட்ட ரசனையை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. அந்தப் பெண் விரும்பியவனுடன் தானே போயிருப்பா? அந்தப் பெண்ணின் மன நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் புரியும்
நல்ல கவிதையை கடைசி நான்கு வரிகள் சற்று தொய்வடையச் செய்து விட்டது. பக்கத்து வீட்டுக்காரனின் மனோபாவத்தோடு ஆரம்பிக்கப் பட்ட கவிதை லெட்டர் கொடுத்து நிராகரிக்கப் பட்ட ஒரு விடலைப் பயனின் புலம்பலோடு முடிகிறது.
பதிலளிநீக்குநண்பரே கோபித்துக் கொள்ள வேண்டாம். //அவள் விட்டுச்சென்ற புடவைகளும்
பாட புத்தகங்களும் அங்கு
எதை உணர்த்தும் இனி?//
இதோடு கவிதையை நிறுத்தியிருந்தால் கவிதை பெரிய்ய்ய பெரிய்ய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும்.
ரவிசங்கர்,
பதிலளிநீக்கு// கவிதையில் வரும் பக்கத்து வீட்டுப் பையன் அந்தப் பெண்ணின் வீட்டாருக்காகப் பரிதாபப்படுகிறாரா இல்லை பெண் தனக்கு கிடைக்கவில்லை என்று குமைகிறாரா? //
உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? :)
Manki, Nanda,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
கவிதை என்று எதையாவது எழுதிவிட்டு வாய்ப்புக் கிடைக்கும்போது அதை விலாவரியாக விளக்கிச்சொல்ல நான் என்றைக்குமே கூச்சப்பட்டது கிடையாது. ஆனால், இந்த பதிவிக்கு அப்படிச்செய்ய ஏனோ தோன்றவில்லை. அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே!
மனதில் மகிழ்ச்சி, சோகம், கோபம், வெறுப்பு என எதை ஏற்படுத்தினாலும் எனக்கு OK! :)))