முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை!

Source: http://www.bigbrother.net/~heather/pictures/ButterflyArt1.gif

பேசுவதே புரியும் பொழுது
முகத்திலிருக்கும் இரு பட்டாம்பூச்சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கிறுகிறு

விடுமுறையில் தூதாக
பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா
எனக்கேட்டு அனுப்பிய
பட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை
புடவைகளுக்கடியில் பத்திரமாய்

என்னைவிட மாநிறமா
எனக்கையோடு கையொற்றி
முதன்முதலில் தொட்டபொழுது
முன்உணராத பட்டாம்பூச்சிகள்
என் அடிவயிற்றில்

பிறந்தநாள் பரிசென
நீ பிடித்துவந்து
நாம் பறக்கவிட்ட
விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த
நீலம்தெளித்த பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சிகளும் இப்படித்தான்
கலவிக்கொண்டே பறக்குமென
நீ சொன்னதை உணர்ந்ததினம்
நம் கலவியின் உச்சகணம்

சிலநாட்களே வாழ்ந்துமடியும்
பட்டாம்பூச்சிகளுக்குள்
பிரிவுத்துயர் இல்லையென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி முத்தம்

மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை

கருத்துகள்

  1. ம்ம்...ம்..ம்
    வீட்டம்மாவுக்கு என்று தனியா ஒரு பொழிப்புரை தயார்தானே..?

    பதிலளிநீக்கு
  2. கவிதை சூப்பர், போட்டோவும் அருமை.

    அதையெல்லாம் விட, தருமியின் கமெண்ட் சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
  3. கவிதை சூப்பர், போட்டோவும் அருமை.

    அதையெல்லாம் விட, தருமியின் கமெண்ட் சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
  4. பிரிவின் கனம்
    உண்மையின் வேதனையினை உணர்த்தும் கணம்

    உணர்வுகளின் வலி
    காணும் காட்சிகளிலும் தொடரும்
    தன் பதிவினை நிகழ்த்தி
    தவிர்க்கவே இயலாதபடி

    கவிதை நன்று இளவஞ்சி

    பதிலளிநீக்கு
  5. தருமி, சுரேஷ், எல்லோரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல.. ஆஹா... ஒரு குரூப்பாத்தான் அலையறாய்ங்கப்பா...

    மதுமிதா, உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நல்ல நிழற்படம். இளவஞ்சி உங்கள் பதிவின் urlஐ தினமலரில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா... அவிங்க என்னையும் விட்டுவைக்கலையா?? :)

    தகவலுக்கு நன்றி பத்மா அரவிந்த்!

    பதிலளிநீக்கு
  8. :-) தவறே செய்யா பட்டாம்பூச்சிகளின் மேல் கோபமா ..

    கவிதைத்துவமான சிந்தனைதான்...

    பதிலளிநீக்கு
  9. இளவஞ்சி கலக்கியிருக்கீங்க...... எப்படிய்யா உம்மால மட்டும் முடியுது..... ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  10. கவிதை அருமை இளவஞ்சி.

    தியாகராஜன் (THYAG)

    பதிலளிநீக்கு
  11. இனிமை . நன்று 11G அவர்களே ...:)
    shivatma

    பதிலளிநீக்கு
  12. //விடுமுறையில் தூதாக
    பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா

    பிறந்தநாள் பரிசென
    நீ பிடித்துவந்து
    நாம் பறக்கவிட்ட
    விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த
    நீலம்தெளித்த பட்டாம்பூச்சி


    சிலநாட்களே வாழ்ந்துமடியும்
    பட்டாம்பூச்சிகளுக்குள்
    பிரிவுத்துயர் இல்லையென
    விட்டுச்சென்ற கசந்த
    அந்த கடைசி முத்தம்

    மன்னிக்கவும்,
    நான் இப்பொழுது
    பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை//

    மேலே உள்ள வரிகள் நன்று. ரொம்ப ரசிச்சேன்

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். அருமை. உங்கள் வலைப்பூவை தினமலரில் பிரசுரித்துள்ளோம். இரண்டாம் பக்கம் வெளியாகி உள்ளது. தினமலர் வெளிநாடுகளில் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால், இன்டர்நெட்டிலும் நீங்கள் அதைப் படிக்கலாம்.
    http://www.dinamalar.com/2005oct07/flash.asp

    தினமலர், மதுரை.

    பதிலளிநீக்கு
  14. மக்களே! உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    shivatma - 11G யா? சீக்கிரமே உங்களுக்கு Dr & திருமா சந்திப்பு அமையக்கடவது! :)

    Nagarathinam,

    பிரசுரித்தமைக்கும் தகவலுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  15. //நான் இப்பொழுது
    பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை//
    இறுதிவரியில் கவிதையின் உச்சம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...