முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹிஹி...

Image hosting by Photobucket

கருத்துகள்

  1. இந்த ப்ரொபைல் படம் நல்லா இருக்கே !!!, அது என்னங்க எந்த படத்துலயும் ஒரு திருட்டுமுழி ;-)

    பதிலளிநீக்கு
  2. NASA la வேலை பாக்குர சயின்டிஸ்ட் மாதிரி இருக்குப்பு.

    பதிலளிநீக்கு
  3. நல்லாத்தான் வந்திருக்கு. சரி வரஞ்சது யாரு? உண்மையச் சொல்லீருங்க.

    பதிலளிநீக்கு
  4. ஜெயசூர்யாக்கு கண்ணாடியும் ,பிரஞ்சு தாடியும் வச்சிட்டு இது தான் இளவஞ்சின்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன?

    பதிலளிநீக்கு
  5. இரண்டு கேள்விகள்.
    1. நீங்க வரைஞ்சதா?
    2. Self Portraitஆ?

    பதிலளிநீக்கு
  6. யாத்திரீகன்,

    //திருட்டுமுழி// மறுபடியும் ஹிஹி..

    கார்த்திக்,

    //NASA la வேலை பாக்குர சயின்டிஸ்ட் மாதிரி இருக்குப்பு...// எங்கப்பாரு எங்கம்மா மட்டும் இதைக்கேட்டிருந்தா!! ம்ம்ம் தன்மகனை சான்றோன்'மாதிரி' எனக்கேட்ட தாய்!! :)

    ஜோ, வீணா ஜெயசூரியாவை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க? :) அவரு என் அளவுக்கு இல்லை! ( ஆமா! அவருக்கு கொஞ்சம் முடி அதிகம்! :) )

    கைப்புள்ள,

    இந்த அளவுக்கு இல்லைன்னாலும் நானும் நல்லா படம் வரைவேனுங்க... கோழிமுட்டையை அச்சு அசலா அப்படியே வரவேன்! எங்க வாத்தியாரு எனக்கு இங்கிலீபீசு மார்க்கு போடும்போதெல்லாம் எனக்கு சொல்லிகூடுத்திருக்காரு!!!

    ஏஜெண்டு, ராகவன்,

    03'ல எங்க ஆபீஸிக்கு ஹிண்டுல வேலைபார்த்த ஒரு கார்டூனிஸ்ட் வந்திருந்தாரு(Prakash Sheety). அவருகிட்ட என் திருமுகத்தை காட்டுனதுல வந்த விளைவுதான் இது!

    பதிலளிநீக்கு
  7. photogenic face அப்டின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி கார்ட்டூனுக்குப் பாந்தமா இருக்கிற முகத்துக்கு என்ன பேருங்க?

    பதிலளிநீக்கு
  8. //கார்ட்டூனுக்குப் பாந்தமா இருக்கிற // தருமி சார்! நீங்க சொல்லறது மட்டும் உண்மையா இருந்தா சூப்பர்தான்! ஒலகத்துல பெரிய பெரிய மனுசங்களுக்குதான் இப்படி முகம் கார்ட்டூன் போடறதுக்கு ஏத்தாப்புல அமையுமாம்! அராபாத், காந்தி, இந்திரா.. இப்படி...( இந்த சுயபீத்தல்னு வந்துட்டா.. ஹிஹி.. )

    பதிலளிநீக்கு
  9. நான் சொல்வதெல்லாமே உண்மை; உண்மையைத்தவிர ஏதும் இல்லை... (ஸ்மைலி ஏதும் இங்கு கிடையாது-கவனிக்க!)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...