நீங்கள் ஓராண்டுக்கு மேலாக வலைப்பதிபவரா? ஆமாம். 100 பதிவுகளைக் கடந்தவரா? ஆமாம். சமீபத்தில் 2007ல் வேறு வழியில்லாமல் புதுபிளாகருக்கு மாற்றப்பட்டவரா? ஆமாய்யா ஆமாம்! அப்படிங்கறீங்களா?! அப்ப சரி! உங்க ப்ளாகருக்குள் லாகின் செய்யுங்கள்! Edit Post பகுதிக்குள் செல்லுங்கள். அனைத்து பதிவுகளையும் தேர்வு செய்யுங்கள். அனைத்திற்கும் சேர்த்து "New Label..."லை தட்டி ஏதேனும் ஒரு புது குறிச்சொல்லை சேருங்கள்( என்னது "உப்புமா" வா?! ). முடிந்தவுடன் அதே போல "Remove label.."லை தட்டி குறிச்சொல்லை நீக்கிவிடுங்கள். அவ்வளவுதான். நேராக தமிழ்மணத்திற்கு வாருங்கள். "இடுகைகளைப் புதுப்பிக்க " பகுதிக்குச் சென்று உங்க பக்கத்தின் சுட்டியை கொடுங்கள். அவ்வளவுதான் மேட்டர்... புதுபிளாகருக்கு மாறின பிறகு விடுபட்டிருந்த அத்தனை பதிவுகளும் புதிதாக தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விடும்! தமிழ்மணம் "இடுகைகள்" பகுதி முழுக்க உங்க பதிவுகளாக நிரப்பி ஒருநாள் வைரஸாக மாறிடலாம். இப்படிச் செய்வதால் இரண்டு வசதிகள்! ஒன்று, நமது பழைய பன்னாட்டுகளையெல்லாம் கிளறி மேலே கொண்டு வரலாம். இன்னொன்று இனிமேல்...
www.ilavanji.com