இன்றோடு 19 நாட்கள் ஆகின்றன மேடலின் மெக்கேன் ( Madeleine McCann ) என்ற 4 வயது சிறுமி காணமல் போய்! போர்ச்சுகல் நாட்டிற்கு விடுமுறையைக் கழிக்க சென்ற இடத்தில் மே 3ம் தேதி மாலை வேளையில் பெற்றோர் இரவு உணவுக்காக சென்றிருந்த வேளையில் தங்கியிருந்த இடத்தில் இருந்து மாயமாய் மறைந்து விட்டாள். போன வாரம் தான் அவளுடைய நான்காவது பிறந்தநாள்!

பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, ரேடியோ என அனைத்து மீடியாக்களும் காணாமல் போன நாளிலிருந்து அலருகின்றன. 15 நிமிடங்களுக்கு ஒரு முறை
BBC,
Sky போன்ற முதன்மை தொலைக்காட்சிகளின் செய்திகளில் லேட்டஸ்ட் தகவல்கள் ஒளிபரப்பப்படுகிறது.
சுஜாதாவோட ஒரு கதைல அவர் பிரான்ஸ்ல் டீ-ஷர்ட் விலை அதிகமென்று ஒரு பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவரிடம் புலம்ப பதிலுக்கு அவர் உங்க ஊர்ல இதை விட குறைந்த தொகைக்கு இந்த குழந்தைய வாங்கினேன்னு சொல்லுவார். உயிர்களோட மதிப்பு நம்மூர்ல இதுதாங்க. என்ன செய்ய?
பதிலளிநீக்கு:((
பதிலளிநீக்கு:(
பதிலளிநீக்குஇளவஞ்சி, இங்க நெதர்லாந்துக்கு வந்ததும் இந்தச் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்தக் குழந்தை எங்கே போயிருக்கும்? கண்டிப்பாக யாராவது கடத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஐயா..திரும்பக் கொண்டாந்து விட்டுருங்கய்யா...
பதிலளிநீக்குநம்மூர் கதையே வயித்தெரிச்சலாச்சே. அடச்சீன்னு அலுத்துப் போச்சு.
பிரமாதமான பதிவு சார். நம்ம ஊர் கதை மீடியா பசிக்கு கொஞ்ச நாள் தீனி போட்டதோட சரி. இந்தியனுக்கு எதுவும் தன் வீட்டில் நடக்காதவரை கவலையில்லை.
பதிலளிநீக்குபதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குவணக்கம் இளவஞ்சி!
பதிலளிநீக்குஉள்நாடு,அயல் நாடு என்று இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை பளிச்சென்று சொல்லும் விதத்தில் உள்ளது பதிவு, நினைக்கையில் ஆயாசாமாக உள்ளது .
என்று திருந்தும் இந்த பாரத நாடு ,பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு இப்போது எல்லாம் டாஸ்மாக் பாருக்குள்ளேவே முடங்கிவிட்டது!